கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் சிங்கள மொழி கற்பபிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வடக்கில் தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழி கற்பிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

பத்து நாள் விசேட பயிற்சித் திட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.