வியாழன், 4 பிப்ரவரி, 2010

அண்ணாவின் 41-வது நினைவு தினம்:​ அரசியல் கட்சிகள் அஞ்சலி



சென்னை, ​​ பிப்.3:​ தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 41}வது நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.தி.மு.க. ​ சார்பில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரிலிருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி,​​ அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது.​ அங்கு முதல்வர் கருணாநிதி,​​ துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின்,​​ நிதியமைச்சர் க.​ அன்பழகன் மற்றும் மத்திய,​​ மாநில அமைச்சர்கள்,​​ தி.மு.க.​ நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க.: ​​ அ.தி.மு.க.​ சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் இ.​ மதுசூதனன் மற்றும் ஓ.​ பன்னீர்செல்வம்,​​ சி.​ பொன்னையன்,​​ டி.​ ஜெயக்குமார்,​​ மு.​ தம்பிதுரை,​​ கே.ஏ.​ செங்கோட்டையன்,​​ மைத்ரேயன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும் ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ,​​ திராவிடர் கழகத் தலைவர் கி.​ வீரமணி,​​ எம்.ஜி.ஆர்.​ கழகத் தலைவர் ஆர்.எம்.​ வீரப்பன்,​​ நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.​ சண்முகம் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.தே.மு.தி.க.​ தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதை உணர்ந்து தள்ளாத அகவையிலும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ஒரு தலைவர். பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சி என்ற நினைவுகூட இல்லாமல் அஞ்சலியைப் புறக்கணிக்கிறார் ஒரு தலைவி.அப்படியானால் பேரறிஞரின் அன்பர்கள் யாரைப் புறக்கணிப்பார்கள்? எல்லா நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கும் தலைவியைத் தொண்டர்களும் மக்களும் புறக்கணிக்கத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதை எப்பொழுது அவர் புரிந்து கொள்வார். தமிழகத்தின் தலையாய எதிர்க்கட்சி - முந்தைய ஆளும் கட்சி- நிலை இதுதான் என்றால் தமிழ் மக்களின் நிலையை என்னென்பது? எக்கட்சியாய் இருந்தாலும் கட்சிக் கொத்தடிமையில் இருந்து மக்கள் மீண்டால்தான் தமிழகம் வலிவும் பொலிவும் பெறும். உலகத் தமிழர்கள் வாழ்வுரிமை பெறுவர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக