வெள்ளி, 24 ஜூன், 2011

reservation according to the edu.system: பாடதிட்டத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தேவை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பாடதிட்டத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தேவை: 
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

First Published : 24 Jun 2011 04:52:08 AM IST


சென்னை, ஜூன் 23: பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்விதிட்ட அடிப்படையில் ஒதுக்கீடு அளவை மாற்றி அமைத்தால், எந்தக் கல்வி திட்டத்தைப் பின்பற்றுவது என்பதில் தனியார் பள்ளிகள் தாமாகவே மனதை மாற்றிக் கொள்ளும் என்று அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  சமச்சீர் கல்வி என்பதை ஏற்றாலும், இப்போதுள்ள பாட திட்டங்கள் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று கூறி அதற்குத் தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் தாங்கள் வாங்கும் கூடுதல் கட்டணத்துக்கு, அதிக பாடங்கள் சொல்லித் தருகிறோம் என்று காரணம் கூறுவதற்காகவே இவ்வாறு கூறுவதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  எந்த பாட திட்டம் தரமானது என்ற சர்ச்சைக்குப் போகாமல் இதற்குத் தீர்வு காண அரசு ஒரு எளிய வழிமுறையைக் கையாள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.  2010-11-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 84 சதவீதம் பேர் மாநில பாட திட்டத்தில் பயின்றவர்கள். 14 சதவீதம் பேர் மெட்ரிக் பாட திட்டத்தில் பயின்றவர்கள். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1.4 சதவீதம் பேர். மீதிப் பிரிவினர் ஒவ்வொன்றிலும் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்.  பிளஸ் டூ தேர்வில் மாநில பாட திட்டத்தில் எழுதியோர் 99 சதவீதம். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் ஒரு சதவீதம் மட்டுமே என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் பிளஸ் டூ வகுப்பில் மாநில பாட திட்டத்துக்கு மாறினால் அவர்களின் கல்வி எளிதாகிவிடுகிறது. பிளஸ் டூ பாட திட்டங்களை ஓரளவுக்கு அவர்கள் 10-ம் வகுப்புக்கு முன்னதாகவே படித்துவிடுவதால், பிளஸ் டூ பயிலும் இரண்டு ஆண்டு காலம் அதைத் திரும்பத் திரும்ப படிப்பதாக அமைகிறது. எனவே மனப்பாட அடிப்படையிலான தேர்வு முறையில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது.  ஒரு சதவீதம் பேர் பங்கேற்கும் சி.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தொழிற் கல்வியில் 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது நியாயம்தானா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உயர்ந்த பாட திட்டங்களைப் படிப்பதால் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் முன்னிலை பெற்று ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எம்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களிலும் அதிக இடங்களைப் பெறுகிறார்கள். மாநிலத்திலும் அதிக இடங்களைப் பெற்றுவிடுகிறார்கள். இதனால் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என ஆசிரியர்கள் பட்டியலிடுகின்றனர்.  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநில பாட திட்டத்தின் அடிப்படையில் எழுதும் 84 சதவீத மாணவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, தொழிற் கல்வியில் 84 சதவீத இடங்களை அவர்களுக்கு ஒதுக்குமாறு ஏன் யாரும் கோரிக்கை விடுக்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் தொடராமல் போய்விட்டது. இதையே ஒன்றாம் வகுப்பில் இருந்து மாநில பாட திட்டத்தில் பயிலும் கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு என செயல்படுத்தினால் உண்மையாக சமூக நீதியைக் காப்பதாக அது அமையும் என்கிறார்கள்.  மாநிலப் பாட திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிக பாட திட்டங்களை படிக்க முடியாது என்று அதிகாரிகள் மற்றும் சில கல்வியாளர்கள் தாங்களாக முடிவு செய்து கொண்டு, எளிமையான பாடங்களை நிர்ணயித்திருக்கக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கிராம, நகர்ப்புற மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தைப் படிக்க முடியுமா என்று ஆய்வு எதுவும் நடத்தப்பட்டதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  ஒன்றாம் வகுப்பில் இருந்து பிளஸ் டூ வரை மாநில பாட திட்டத்தில் பயில்வோர், அகில இந்திய அளவிலான உயர் தொழில் படிப்புகளுக்கு எத்தனை பேர் தகுதி பெற்றனர் என்ற புள்ளி விவரமே அதிகாரிகளிடம் இல்லை என்பதில் இருந்தே இதில் அவர்கள் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகின்றனர் என்பது தெரியும் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருப்பதால் குழந்தைகள் ஒன்றாம் வகுப்புக்கு வரும்போதே 500 வரை எண்கள் சொல்வது, 100 வரை எண்கள் எழுதுவது போன்ற திறன்கள் இருக்கும். ஆனால் அரசுப் பள்ளிகளில் அப்படி இருக்காது. அதனால்தான் அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து சமச்சீர் கல்விக்கு தயாரித்த பாட திட்டம் தனியார் பள்ளிகளின் பார்வையில் தரம் குறைந்தவை போலத் தோன்றுகிறது என்று விளக்குகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.  கல்வி அதிகாரிகள் இதை சுட்டிக்காட்டி அதற்கேற்ப பாட திட்டத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனதால் இப்போது குறைகள் கூறப்படுகின்றன.  எனவே சமச்சீர் கல்வி என்பது முதல் வகுப்பில் இருந்து என்பதற்குப் பதிலாக எல்.கே.ஜி. முதல் என தொடங்கினால் அனைவரும் ஏற்கும் வகையில் இருக்கும் என்று யோசனை கூறப்படுகிறது.  ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் கற்றல் வேகம், அறிவு வளர்ச்சி அதிகம் உள்ளது எனும்போது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்குக் கற்பிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.  சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடப் புத்தகங்களையே பயன்படுத்தி, மொழிப்பாடங்கள், தமிழகப் பண்பாடு, கலாசார பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்யலாம் என்று ஆசிரியர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். இதைக் கற்பிப்பதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தால், எல்லா மாணவர்களும் எந்த பாட திட்டத்தையும் கற்றுவிட முடியும் என்று அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  ஒருவேளை, பொதுப் பாட திட்டத்தை உடனே செயல்படுத்த முடியாமல் போனால், 12ம் வகுப்பு வரை மாநில பாட திட்டத்தில் படிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் நியாயமான வாய்ப்பு மறுக்கப்படாத வகையில் 84 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.  
கருத்துகள்

மெட்ரிக் கலைத்திட்டம் , அரசுப்பள்ளி கலைத்திட்டம் என்பது எல்லாம் ஒன்றுதான் . மெட்ரிக் கலைத்திட்டம் சிறந்தது என்றால் மெட்ரிக் கலைதிட்டதிலியே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கவேண்டியது தானே . ஏன் அவர்கள் ஸ்டேட் போர்டு கலைதிட்டதிற்கு வருகிறார்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் . எல்லாம் ஏமாற்று வேலை .
By ராஜேந்திரன், தேனி
6/24/2011 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

article by pazha.nedumaran : தோழர்களுக்குத் தோள்கொடுப்போம்!

தோழர்களுக்குத் தோள்கொடுப்போம்!

First Published : 24 Jun 2011 03:45:55 AM IST


செய்லொணாக் கொடுமைகளுக்கும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் தொடர்ந்து ஆளாகி நலியும் ஈழத்தமிழர்களின் துயரமான நிலை குறித்து இந்தியாவின் சகல தேசிய இன மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு ஜூன் 18,19 ஆகிய நாள்களில் இயற்றியுள்ள தீர்மானம் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும்.  ஈழத்தமிழரின் பிரச்னை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே கவலைப்படுவதற்குரிய ஒன்று அல்ல. மாறாக, இந்தியா முழுவதும் கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னை என்பதை விளக்கும் வகையில் இந்தத் தீர்மானம் பொறுப்புணர்வோடும் தொலைநோக்குப் பார்வையுடனும் இயற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு.  இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டது குறித்து வெளிவந்துள்ள உண்மைகளை இந்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.  சர்வதேசச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் கொஞ்சமும் மதிக்காமல் தொடர் குண்டுவீச்சுகள் மற்றும் கொத்துக் குண்டுகள் வீசுதல் ஆகியவற்றின் மூலம் 45 ஆயிரம் தமிழர்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டது குறித்து விடியோ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதோடு, அரச பயங்கரவாதத்திலும் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.  இந்த உண்மைகளை மறைப்பதற்காகவே செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஐ.நா. பார்வையாளர்கள், நார்வே நாட்டு அமைதிக் குழுவினர் ஆகியோர் இலங்கைக்குள் வரத் தடை விதித்திருந்தனர். எனவேதான் அப்பாவி மக்களுக்கு எதிரான மிருகத்தனமான குற்றம் தன்னார்வ விசாரணை அமைப்புகளால் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் இலங்கையின் மொழிச் சிறுபான்மையினரை ஒழித்துக்கட்ட நடத்தப்பட்ட முயற்சிகள் அண்மையில் வெளியிடப்பட்ட ஆதாரபூர்வமான சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.  போரில் படுகாயம் அடைந்தவர்கள்கூட மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டதையும், ஏதும் அறியா அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, இலங்கையில் 2009 மே மாதத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்துப் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகவும் 2009-லேயே போர் முடிந்து விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், இன்றுவரை இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்னமும் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இது சட்டவிரோதமான சிறைத் தண்டனையாகும்.  எனவே, இந்த முகாம்களை மூடுவதோடு அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை விடுவித்து அவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கும், இந்திய உதவியோடு மேற்கொள்ளப்படும் அம்மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்துத் தகவல் சேகரிக்கச் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டுமென இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.  ஜூலை 7-ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசை வலியுறுத்துகிறது.  இலங்கை இனப் பிரச்னைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கக் கோரியும், இலங்கைத் தமிழர்களுக்கு அகில இந்திய அளவில் ஒருமைப்பாடு தெரிவிக்கும் நாளாக ஜூலை 8-ம் நாளைக் கடைப்பிடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நாளைக் கடைப்பிடிப்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயல்பட முன்வருமாறு இதர இடதுசாரி ஜனநாயகக் கட்சிகள், சக்திகள் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.  போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்தப்படுவதற்கும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அமைதியான வகையில் தீர்வுகாணவும், இந்தியா தனது தார்மிகக் கடமையை ஆற்றுமாறு இந்தியப் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த, ஒரு குழுவை அனுப்பவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.  இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் தீர்ப்பளித்துள்ளன.  உலகநாடுகள் பலவும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் வழி மொழியப்பட்டு ஒரு மனதுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவலையும், பதைப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களின் இயற்கையான உள்ளக் குமுறலை இந்திய அரசுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவுடன் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் பொறுப்புணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவுக்கு தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் நன்றிகூறக் கடமைப்பட்டவர்கள்.  உரிய வேளையிலும், உரிய காலகட்டத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சகல இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர் பிரச்னையில் சரியான திசைவழியைக் காட்டியுள்ளது.  ஏற்கெனவே கடந்த 2008-ம் ஆண்டு ஹைதராபாதில் கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரஸில் ஈழத்தமிழர் பிரச்னை குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தெளிவான தீர்மானம் நிறைவேற்றபட்டதை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.  பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனமக்கள் ஒன்றுகூடி வாழும் இந்திய நாட்டில் ஓர் அங்கமான தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அண்டைநாடு ஒன்றில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகும்போது, அது தமிழர்களை மட்டுமே கவலைப்படுத்துவதற்குரிய பிரச்னை எனக் கருதி பிற தேசிய இனமக்கள் பாராமுகமாக இருப்பது சரியன்று என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் அமைந்துள்ளது.  எனவேதான், ஈழத்தமிழர்களின் துயரம் சூழ்ந்த தருணத்தில் அவர்களின் விழிகளில் பெருகும் நீரைத் துடைக்க இந்திய மக்கள் அனைவரின் அன்புக் கரங்களும் நீளும் என்ற உறுதியைத் தெரிவிக்கும் வகையில் ஜூலை 8-ம் நாளை இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மக்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் நாளாகக் கடைப்பிடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ள முடிவு இந்திய அரசியலில் புதிய சிந்தனையும் கண்ணோட்டமும் பிறக்க வழி திறந்துள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமைக்கு ஆளாகி நலிந்த இந்திய மக்களையும் பிற கருப்பின மக்களையும் காப்பதற்காக ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடியது. அதன் விளைவாக, துன்பக்கேணியில் சிக்கித் தவித்த அம்மக்களுக்கு மீட்சி கிடைத்தது. கிழக்குவங்க மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபோது, இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மக்கள் மட்டுமா அவர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள்?  இந்திரா காந்தியின் தலைமையில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர்களுக்காகக் கிளர்ந்தெழுந்தனர். இந்தியப் படை அனுப்பப்பட்டு கிழக்கு வங்கத்தின் அடிமை விலங்கு தகர்த்தெறியப்பட்டது.  நேருவும், இந்திராவும் காட்டிய பாதையில் இருந்து அடியோடு விலகிச் செல்லும் மன்மோகன் அரசை இடித்துக் கூறித் திருத்துவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் தனது போக்கைத் திருத்திக் கொள்ளாவிட்டால், இந்திய மக்களை ஒன்றுதிரட்டி அதற்காகப் போராடுவதற்கும் தயங்கப் போவதில்லை என்பதை இத்தீர்மானத்தின் செயல்பகுதி எச்சரித்துள்ளது.  ஈழத் தமிழர்களோடு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டுமென்பதை வலியுறுத்தவே ஜூலை 8-ம் நாளை ஒருமைப்பாடு தெரிவிக்கும் நாளாக அறிவித்திருப்பது, இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தேசியக்குழு ஏற்கக் காரணமாக இருந்த தேசியச் செயலர் ராசா, தமிழகத் தலைவர்களான அ.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோரும் அவர்களின் ஆலோசனையை ஏற்ற அகில இந்தியத் தலைமையும் தமிழர்களின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.  தமிழ்நாட்டில் இயங்கும் பிற அகில இந்தியக் கட்சிகளின் தமிழகத் தலைவர்களும் தங்கள் தலைமைகளுக்கு இவ்விதமே சரியான நிலை எடுக்க உதவவேண்டும்.  ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தியாகப் பாரம்பரியமிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் மனிதநேய அமைப்புகளும் கைகொடுக்க வேண்டும். தோழர்களுக்குத் தோள் கொடுப்போம்; துணை நிற்போம். 

Singhala behaves like pirates: கடற்கொள்ளையர்களைப் போலச் செயல்படுகிறது இலங்கை கடற்படை: காங்கிரசு நா.உ.

திருவாளர்கள் இளமுருகு, கார்த்தி, இலட்சுமி நாராயணன் ஆகியோர் கருத்துகளை வழி மொழிகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கடற்கொள்ளையர்களை போல செயல்படுகிறது இலங்கை கடற்படை: காங்கிரஸ் எம்.பி.
First Published : 23 Jun 2011 05:40:05 PM IST

Last Updated : 23 Jun 2011 06:03:31 PM IST
ராமேஸ்வரம், ஜூன் 23- இந்திய மீனவர்கள் விவகாரத்தில் கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆருண் கூறியுள்ளார்.ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜே.எம். ஆருண் கூறியதாவது:சர்வதேச கடல் விதிமுறைகளின்படி, மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. இதனிடையே, கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்ளக் கூடாது.இலங்கை படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.1974-ல் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது.இவ்வாறு ஜே.எம். ஆருண் தெரிவித்தார்.
கருத்துகள்

இவர்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்றபொழுது, இராசபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்நதவர். இந்திய அரசாங்கத்தின் ஆதரவு தனக்கு எப்பொழுதும் உண்டு. அதுவும் காங்கிரசு அரசாங்கத்தின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்பதாலயே இலங்கை இனவெறி அரசு இதுபோன்ற செயல்களில் தைரியமாக செயல்படுகிறது. இவருடைய இப்பேட்டி, சாத்தான் வேதம் ஓதுகிறது.
By lakshminarayanan
6/23/2011 9:15:00 PM
J.M .Harron is lottery Business man, made money in all illegal business,done nothing for his Theni, dear Editor please dont publish the idiotic statements of any Congress Party People.only for the sake of simple publicity he has Spoken,done nothing against the war crime of Ceylon, Regards, Karthi
By karthi
6/23/2011 8:33:00 PM
சாதாரண குடிமகன் சொல்லலாம். ஆனா இதை சொல்ல ஒரு M .P கு வெட்கமில்லை?
By radhakrishnan
6/23/2011 7:18:00 PM
உங்க கட்சி தானே நாட்ட ஆளுது. முடிஞ்சா உங்க 'அன்னை'கிட்ட சொல்லுங்க. இல்ல பிரதமர்னு ஒருத்தர வச்சிருகிங்களே அவர்கிட்ட சொல்லுங்க. புள்ளையையும் கிள்ளி தட்டிளையும் ஆட்ட வேண்டாம். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி தமிழர ஏமாத்திகிட்டே இருப்பீங்க.
By இளமுருகு
6/23/2011 6:56:00 PM

இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவில் ஜெயலலிதா தலையிட முடியாது: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்- ஜூலை 24 , 2011 ] இந்திய மத்திய அரசாங்கத்துடனான இலங்கையின் இராஜதந்திர உறவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார். தமிழ் நாட்டு மக்களும் , முதல்வருமான செல்வி ஜெயலிதா அவர்கள் இந்தியர்கள் இல்லையா ? மன்மோகன் சிங் என்ன செய்கின்றாரோ ?
By ராமசாமி -மலாயா
6/23/2011 6:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 22 ஜூன், 2011

Prapakaran's family members are alive : பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்: இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக அடுத்துச் சொல்லப்படம் நாள் எந்நாளோ? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்:
இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

First Published : 22 Jun 2011 12:36:39 PM IST

Last Updated : 22 Jun 2011 12:43:23 PM IST

கொழும்பு, ஜூன்.22: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சி எம்பியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இறுதிப் போரில் நந்திக் கடலில் நிகழ்ந்த மோதலின்போது பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பம் பாதுகாக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்பன போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் தேதி இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் வெளியிடவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்லஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பின்னர் கடைசி மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் செய்தி வெளியானது. அவரது உடலின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டதாக அஸ்வர் எம்பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்


அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன் உள்ளதாகவும் இதை அறிந்த இந்திய இலங்கை மற்றும் சர்வேதேச உளவு நிறுவனங்கள்அங்கு தமது தேடுதலை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது பொட்டம்மான் உயிரோடு உள்ளதாக் வந்த தகவலை அடுத்து தற்போதுஇந்த தலைவர் கதையும் பெரும் பரப்பகாக பேச படுகின்றது . இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் அவர்கள் தமது குரல் வழி காணொளி ஊடாக மக்கள் மத்தியில் முக்கிய வரலாற்று சிறப்பு மிகு உரை ஆற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது . இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எனக்கு இந்த தகவல் இது முக்கிய நாடு ஒன்றில் நிறுத்தி வைக்க பட்டிருந்த புலிகளின் பத்து விமானம்களும் மாயமாக மறைந்ததும் அதன் பின் புலத்தில் இவர்களது செயல்பாடு உள்ளதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி இந்த போராளி இடம் கேட்டோம் பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள் அதனால் அரசியல் தீர்வு
By Pallavaram.T.Sampath
6/22/2011 3:46:00 PM
என்னமோ நடந்து மறைக்க பட்டுள்ளது, இதில் சோனியா மற்றும் ராகுலின் பங்கு என்ன ? ராஜபக்யே மட்டும் தனியாக ஒன்றும் செய்து இருக்க முடியாது
By mirudan
6/22/2011 3:33:00 PM
அண்ணன் கண்டிப்பாக வருவார், நமக்கு தமிழீழம் கிடைக்கும் . விழ விழ எழுஒம் ......
By சிலம்பு
6/22/2011 3:13:00 PM
tamilinam meendum puthuyir pera varuvar nam tamil thalaivan pudu pollivodu.
By saravanakumar
6/22/2011 2:37:00 PM
Mr. Azwer told the Media based in Colombo, that he actually meant to say that the government was looking after the family of former JVP leader Rohana Wijeweera and had made a mistake by saying Prabhakaran's family was alive. “I will be making a statement in Parliament today to clarify my statement. In the rush I had made a mistake”, he said.- Lanka guardian today.
By அவசரக் குடுக்கை
6/22/2011 2:17:00 PM
very good news
By udhayakumar
6/22/2011 2:04:00 PM
"SRI LANKA'S KILLING FIELDS" by Channel 4 - "விடுதலைப் புலிகள் தோற்க்கடிப்பட்டார்கள்" என்றுதான் கூறுகிறதே தவிர, தமிழர்கள் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான கேள்வியான "பிரபாகரன் கொல்லப்பட்டாரா?" என்பது பற்றி எதுவுமே கூறவில்லை. எப்படியோ? புலி ஆதரவாளர்களுக்கு ஒரு புது தெம்பு (ஆறுதல்) கிடைத்து இருக்கிறது.
By Abdul Rahman - Dubai
6/22/2011 2:04:00 PM
கிரிமினல் ராஜபக்ஷே மக்களை திசை திருப்ப செய்யும் முயற்சி இது, இன படுகொலை தொடர்பான பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி . தமிழின தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது மட்டும் உண்மையே .
By அன்புக்குமரன் . இந்தோனேசியா
6/22/2011 1:51:00 PM
சரி இறந்தவருக்கு ஏன் இன்னும் மரண செர்டிபிகாடே கொடுக்கப்படவில்லை... ..ஹி .ஹி..ஹி ..ஹி இந்த செய்தி பலருக்கு பேதி போகசெயும் இல்லையா?
By KOOPU
6/22/2011 1:48:00 PM
இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எமக்கு தந்த தகவல் இது பிரபாகரன் மறைவு உண்மையா பொய்யா அவன் இன்னும் உயிருடன் வாழ்கிறாரா இல்லை மறைந்து விட்டாரா இனிமேல் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கதி என்ன ? என பல வினாக்கள் எழுகின்றன? ... இவ்வாறு செய்திகள் வரும் நிலையில் பிரபாகரன் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது ம...ேலும் தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! மேலும் தமிழ் ஈழ தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் முக்கிய நாடு ஒன்றுக்குள் நுழைந்திருப்பதாகவும் அங்கிருந்தே புலிகளின் முக்கிய சிறப்பு தளபதிகளின் வழிகாட்டலில் சர்வேதச புலிகளின் வலை அமைப்பு இயங்கிவருகின்றது அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன
By Pallavaram.T.Sampath
6/22/2011 1:40:00 PM
it seems, taking wrong decisions, prabakaran might have decided to give up his life.
By balakrishnan
6/22/2011 1:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இலங்கைத் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: விக்கிரமபாகு

இக்குரல் மேலும்  ஓங்கி வளர்ந்து தமிழ் ஈழம் தனி நாடு என்பதை ஏற்கும் வகையில் குரலெழுப்பி வெற்றி காண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
இலங்கை தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: விக்கிரமபாகு
First Published : 22 Jun 2011 01:28:28 PM IST

Last Updated : 22 Jun 2011 01:29:47 PM IST
கொழும்பு, ஜூன் 22- இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.நவசம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அவர் கூறியிருப்பதாவது:வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. தமிழர்களின் குரல் ஒடுக்கப்படும் நிலையே தற்போது உள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ராணுவத்தினர் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்கத் தூதரிடம் ஏன் புகார் அளிக்கின்றனர் என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கேள்வி எழுப்புகிறார். ஈராக்கில் அமெரிக்காவின் செயல்பாட்டை இவர் ஆதரித்தார். ஆனால், பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட விதத்தை கண்டிக்கிறார். கோத்தபய ராஜபட்ச தான், இனவாத முகாமின் தலைவராக விளங்குகிறார்.இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்ன கூறியதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 4 கருத்துகள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே!, உங்களைப் போன்று நிறைய தமிழர்கள் இப்படி எண்ணினால் தமிழ் இனம் ஏற்றம் பெரும். உங்கள் கருத்துக்கள் அனைத்துமே அருமை!
By ராஜா செழியன்
6/23/2011 12:28:00 AM
கலி கதை எல்லாம் சிக்கி தோயப்டு தமிழ் மக்கள் இனி என்ன? மீண்டும் பேசுவார்த்யல்கு தயாரா இருக்கணும் அங்கே.
By TS
6/23/2011 12:13:00 AM
முதலில் தமிழர்களும் மண்ணின் மைந்தர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் . இதுவே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.
By gb
6/22/2011 3:35:00 PM

voting machine with receipt - introduced : வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீட்டு பெறும் முறை அறிமுகம்


இரண்டாம் முறை வாக்காளர்கள் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுவதற்குத் துணை நிற்கும்.  பதிவுச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும் என்று  இருந்தாலும் அதைக் கொண்டு வந்து காட்ட வேண்டும் அல்லது வேறு வகையில் பார்க்குமாறு காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தப்படலாம். எனவே,முதல் முறையே சரியானது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீட்டு பெறும் முறை அறிமுகம்

First Published : 22 Jun 2011 05:48:17 AM IST


மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் ரசீதை அளிக்கும் கருவியின் செயல்பாட்டை தில்லியில் செவ்வாய்க்கி
புது தில்லி, ஜூன் 21: வாக்குப் பதிவு மின்னணு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் சீட்டு பெறும் புதிய இயந்திரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.  இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி சோதனை முறையில் 5 இடங்களில் மாதிரி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.  மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க., பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.  இந் நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இரண்டு வகைகளை தேர்தல் ஆணையம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.  இது குறித்து கூடுதல் தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியது:  சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற இயக்குநர் பி.வி. இந்திரேசன் தலைமையிலான நிபுணர் குழு அளித்த யோசனைகளின்படி இரண்டு வகையான இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் இயந்திரத்தில் பிரிண்டர் சீல் வைக்கப்பட்ட கண்ணாடி மேஜைக்குள் இருக்கும்.  வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது பொத்தனை அழுத்தியவுடன் கண்ணாடியில் 5 வினாடிகளுக்குத் தெரியும். பின்னர் பிரிண்டரில் உள்ள சீட்டு தானாக வாக்குப் பெட்டியில் போய் விழுந்துவிடும்.  இரண்டாவது முறையில் பிரிண்டர் வெளிப்படையாக இருக்கும். வாக்காளர் பொத்தானை அழுத்தியவுடன் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் சீட்டு வரும். அதை எடுத்து சரிபார்த்து வாக்காளர் வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.  இந்த புதிய முறை தொடர்பாக ஜூலை 20 முதல் 25-ம் தேதி வரை 5 தொகுதியில் மாதிரி தேர்தல் நடத்தப்படும் என்றார்.  

Ban-ki-moon re elected: ஐநா பொதுச்செயலராகப் பான் கி-மூன் ஒருமனதாகத் தேர்வு

பாராமுகம், அலட்சியம்,ஒரு தலைச்சார்பாக அடக்குமுறைப் பக்கம் சாய்தல், வல்லாண் அரசுகளுக்கு அடி பணிதல் முதலான பண்புகளால் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தமைக்கு உடந்தையாக இருந்தைமைக்குப் பரிசாகப் பதவி நீட்டிப்பு. இனியும் தொடரட்டும் இனப்படுகொலைகள்!வலிமை குறைந்த நாடுகளும்  ஒடுக்கப்படும் மக்களும் மேலும் நலியட்டும்! என் செய்வது? பன்னாட்டு அவை என்பது அதிகாரமிக்க நாடுகளின் அவையாக மாறிவிட்ட பின்பு நாம் என்ன செய்யமுடியும்? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஐநா பொதுச்செயலராக பான் கி-மூன் ஒருமனதாக தேர்வு

First Published : 22 Jun 2011 10:11:36 AM IST

Last Updated : 22 Jun 2011 10:18:28 AM IST

ஐநா சபை, ஜூன்.22: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி-மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் பான் கி-மூன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி-மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பான் கி-மூன் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். பாதுகாப்பு சபையும் அவருக்கு ஆதரவு அளித்தது.தன்னை மீண்டும் பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுத்து மிகப் பெரிய கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாக பான் கி-மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.