சனி, 21 ஏப்ரல், 2012

Where are our children? Scream of the parents

இதயமுள்ளவர்களிடம் அழுதால் இரக்கத்தில் தாங்களும் அழுதாவது துயரத்தில் பங்கேற்பார்கள்.எங்கிருந்தோ இயக்கும்  நாடகப்பாத்திரங்க்ள அழுகை குறித்துக் கவலைப்படவா போகிறார்கள்? வருத்தத்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்க பிள்ளைங்க இருக்காங்களா? இந்தியக் குழுவிடம் தமிழர்கள் கதறல்

First Published : 21 Apr 2012 11:19:49 AM IST


கொழும்பு, ஏப். 21 :  இலங்கையில்  போர் முடிவுற்ற பிறகு அங்குள்ள நிலைமையை ஆராய சென்றுள்ள நாடாளுமன்றக் குழுவிடம், மெனிக்பார்ம் முகாமில் வாழும் மக்கள், விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை எல்லாம் காணோம். அவர்கள் உயிரோடு இருக்கிறாங்களா,  இல்லையான்னே தெரியலை. எங்க பிள்ளைகளை மீட்டுத்தாங்க என்று கதறி இருக்கிறார்கள். மேலும், அங்கு வாழும் பெண்கள், தங்களுக்கு இலங்கை அரசாங்கம் அளிக்கும் புழுத்துப் போன அரிசியைக் கொண்டு வந்து காட்டி இதனை எப்படி சமைத்து சாப்பிடுவோம் என்று கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த இலங்கை அதிகாரிகள், நல்ல உணவுப் பொருட்களைத்தான் தருகிறோம் என்று வாய்க்கூசாமல் நாடாளுமன்றக் குழுவிடம் கூறியுள்ளனர்.

மண்டியிடச் சென்ற சுசுமா

எல்லாரும் எங்கள் பக்கம்தான் என இறுமாப்பைக்காட்ட அழைத்திருப்பான் கொலை வெறியன் பக்சே.நாங்களும் உங்கள் கூட்டாளியாகத்தான் இருப்போம் என உறுதியளிக்க மண்டியிடச் சென்றுள்ளார் சுசுமா சுவராசு. பிற உறுப்பினர்களுக்குத் தன்மானம் இருப்பின் இனி அவர் தலைமையில் குழுவில் இருக்கமாட்டோம் எனக் கூற வேண்டும். ஆனால், பரிசு மயக்கத்தில இருப்பவர்களுக்கு உணர்வு எங்கே இருக்கும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

ராஜபக்சேவை தனியாகச் சந்தித்த சுஷ்மா சுவராஜ்

First Published : 21 Apr 2012 11:11:42 AM IST

கொழும்பு, ஏப். 21 : வெள்ளிக்கிழமை மாலை இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்கூட்டியே நேற்று காலை சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.நாடாளுமன்றக் குழுவினருக்கு ராஜபக்சேவுடன் சனிக்கிழமை விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதனை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்து செய்யுமாறு கூறியிருந்தனர்.இந்த நிலையில்தான், சுஷ்மா சுவராஜ் நேற்று காலை ராஜபக்சேவை தனிமையில் சந்தித்து அவர் அளித்த காலை விருந்தில் கலந்து கொண்டுள்ளார். சக இந்தியக் குழுவினரை தவிர்த்து விட்டு சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவைச் சந்தித்திருப்பது மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் நடந்திருக்குமா என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து:தனியாக சந்தித்ததால் சர்ச்சை

சொல்கிறார்கள்

"சாப்பிடத் தோணாது!' 


உணவுப் பண்டங்களை புகைப்படம் எடுக்கும், "புட் போட்டோ கிராபி' துறையைச் சேர்ந்த அருண்: புகைப்படத்தை பார்த்ததுமே, அதில் காட்டப்பட்டுள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம், மக்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த உணவுப் பொருளின் தன்மை, சுவை, அளவு ஆகிய விவரங்களை, பார்வையாளர்களுக்கு, போட்டோ சொல்லணும்; அதுதான் சிறந்த, "புட் போட்டோகிராபி!' ஒரு முறை மீன் வறுவலை புகைப்படம் எடுக்கும் போது, அழகிற்காக, அதை வாழை இலையால் சுற்றி வைத்து, போட்டோ எடுத்தேன். அந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, ஓட்டலுக்கு வந்த பலர், அதே போல் மீன் கேட்க, ஊழியர்களுக்கு வேலை அதிகமாகி விட்டது. விளம்பரத்தில் உள்ளதை, மக்கள் அப்படியே எதிர்பார்க்கின்றனர் என்பதை, மறந்துவிடக் கூடாது. போட்டோ ஷூட் பெரும்பாலும், ஓட்டலில் தான் நடக்கும். போட்டோ எடுப்பதற்கு, உணவு அரைவேக்காட்டில் இருக்க வேண்டும். அது சாப்பிடும் பக்குவத்தில் இருந்தால், புகைப்படம் எடுப்பதற்குள், அதன் அழகை இழந்து விடும். செப் தரும் உணவை, அழகுபடுத்தியவுடன், வேலை ஆரம்பமாகும். உணவை, 30 டிகிரி முதல், 45 டிகிரி வரையான கோணங்களில் தான் புகைப்படம் எடுக்க வேண்டும். ஐஸ் கிரீம் வேகமாக உருகிவிடும் என்பதால், அதை புகைப்படம் எடுப்பது, கொஞ்சம் சிரமமான காரியம். சில நேரங்களில், ஐஸ்சிற்கு பதிலாக, உருளைக்கிழங்கை பயன்படுத்துவோம். குளிர்பானங்கள் டம்ளருக்குள் மோதி வெளியே தெறிப்பது போன்ற புகைப்படம் எடுப்பதற்கு, ரொம்பவே மெனக்கெட வேண்டும். விதவிதமான உணவு வகைகள் கிடைத்தாலும், எங்களுக்கு அதை சாப்பிடத் தோணாது. அது, அரைவேக்காட்டில் உள்ள உணவு. ஷூட்டிற்காக அதைப் பலர் கையால் தொடுவர் என்பதையெல்லாம் தாண்டி, அந்த உணவுப் பொருட்களை நாங்கள் ஒரு பொருளாகத்தான் பார்க்கிறோம்.

cartoon about kalaignar stand on eezham

தினமலர்