ஞாயிறு, 31 ஜனவரி, 2010

வீட்டுமனை வாங்குவோர் கவனத்துக்கு...



சென்னை, ஜன.29: வீட்டுமனை, அடுக்குமாடி வீடு வாங்குவோர் ஏமாறாமல் இருக்கும் வகையில், 044}28592828 என்ற தொலைபேசியிலும், www.consumer.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.இந்த வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.இது தொடர்பாக அரசு கூறியிருப்பது:புதிய வீட்டு மனைகள், அடுக்கு மாடி வீடுகள் வாங்கும் நுகர்வோர்கள், பொய்யான வாக்குறுதிகளைப் பெறுவது, ஏமாற்றப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். எனவே, வீட்டுமனை, அடுக்கு மாடி வீடு போன்றவற்றை வாங்கும் முன், தேவையான ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். தவிர, வீட்டு மனை வாங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் செயல்படும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் வரும் 30}ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு மேலே சொன்ன தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துக்கள்

What about the South Chennai Housing Coop Society, Vadapalani, which has duped the buyers in their MUDICHUR MAHANAGAR PROJECT?

By Emandavan
1/30/2010 6:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக