வியாழன், 4 பிப்ரவரி, 2010

ராஜபட்சவை கொல்ல சதி:​ பிரிகேடியர் உள்பட 37 ராணுவத்தினர் கைது



கொழும்பு, ​​ பிப்.​ 3: இலங்கை அதிபர் ராஜபட்சவை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர்,​​ கர்னல் உள்பட 37 பேர் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.​ சிறப்பு போலீஸ் படை அவர்களை கைது செய்துள்ளது.இத் தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி,​​ அரசு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இவர்கள் பிடிக்கப்பட்டனர்.​ தேர்தலின்போது ராஜபட்சவை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி குறித்து கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொன்சேகா அலுவலகத்திலிருந்து ஆயுதங்களும் பணமும் கொழும்பில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ இது தொடர்பாக 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ கைது செய்யப்பட்டவர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸôர் விசாரித்து வருகின்றநர்.​ இந்த சதி விசாரணை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேரையும் போலீஸôர் தேடி வருகின்றனர்.இதற்கிடையே அதிபர் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
கருத்துக்கள்

சதித்திட்டத்தை அடுத்த அணி எப்பொழுது நிறைவேற்றும்? சேகோ ஆட்சிக்கு வந்திருந்தால் இது போன்று பக்சே கூட்டத்தினர் சதி செய்ததாக ஒரு பகுதியினர் கைது செய்யப் பட்டிருப்பர். கொடூரக் கொலையை விதைத்தவர்கள் கொடூரக் கொலையை அறுவடை செய்யும நாள் தொலைவில் இல்லை.

நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 2:14:00 AM

I am sure there is indian involvement in this and China is not going to keep quiet. Now India & China will beworking covertly keep their fovourates in power in Sri Lanka. Eelam Tamils should sit back and watch the retribution.

By Ram Chetty
2/4/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக