வியாழன், 20 மே, 2010

காட்டுக் கள்ளிப் பூ


இலங்கை சர்வதேச திரைப்பட விழா: தமிழ்த் திரையுலகம் புறக்கணிப்பு


சென்னை,​​ மே 19:​ இலங்கையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது.​ இது குறித்து தமிழ்த் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் புதன்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம்:கடந்த வருடம் ஏராளமான தமிழர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது சிங்கள அரசு.​ அந்த மரண ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.​ தங்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தப் போரின் நடமாடும் நினைவுச் சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தங்களுக்கு ஆதரவை முழுவதும் தெரிவிக்கும் வகையில் வரும் ஜூன் 4,5,6 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது.​ ​​ இந்த புறக்கணிப்பு முடிவுக்கு ஹிந்தி,​​ தெலுங்கு,​​ கன்னடம்,​​ மலையாளம் உள்ளிட்ட இந்திய திரையுலகினர் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.​ ​​ தான் செய்த சதி வேலைகளை மறைத்து குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு தமிழ்த்திரை உலகின் ஒட்டு மொத்த புறக்கணிப்பு பாடமாக அமையட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​
கருத்துக்கள்

இந்தியாவின் சார்பில் போரை நடத்தினோம் என்றது சிங்களம். கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் போரை நிறுத்த திட்டமிட்ட பொழுது இந்தியாதான் அனைவரையும் அழிக்கச் சொன்னது என்றும் அறிவித்தது சிங்களம். இத்தகைய இந்தியம்தான் அயர்லாந்திலும் அடுத்து கொரியாவிலும் நடத்த அறிவித்து ஏற்பாடுகள் செய்த இந்தத் திரைப்பட விருது விழா வணிக ஒப்பந்த முகாமைக் கொழும்பில் நடத்த செய்துள்ளது. நம்மை ஆளும் கொலைகாரக் கட்சியைகத் தட்டிக் கேட்க வழியற்ற நாம் சுற்றி வளர்த்துப் பேசிக் கொண்டுள்ளோம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்துத்திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களும் கொலைவெறி வெற்றி விழாவைப் புறக்கணிக்கச் செய்து பிசுபிசுத்துப் போகச் செயவதன் மூலம் வெற்றி காணலாம். எனவே, அறிவிப்புடன் நில்லாது பிற மொழிக் கலைஞர்களையும் வணிக நிறுவனங்களையும் சந்தித்து புறக்கணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வெற்றி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2010 2:29:00 AM

Ruling congress party still helping to kill Tamils in Sri Lanka. TAMIL NADU GOVERNMENT ALSO STILL SILENT

By cholan
5/20/2010 1:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 19 மே, 2010

முள்ளிவாய்க்கால்-​ நெஞ்சம் மறக்குமோ?

முள்ளிவாய்க்கால். ​ நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.​ மே 16-ம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.​ மீண்டும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிதான் என்பது உறுதியாகிறது.​ அன்று நள்ளிரவில் சிங்கள ராணுவம் தனது கொலைவெறித் தாக்குதலை எப்போதும் இல்லாத வேகத்துடன் தொடங்கியது.மே 17,​ 18,​ 19 ஆகிய மூன்று நாள்களில் வான் வழித் தாக்குதல்,​​ கனரக ஆயுதங்களிலிருந்து பொழியும் குண்டுமழை,​​ கடலில் உள்ள போர்க் கப்பல்களிலிருந்து எறிகணை வீச்சு என மக்கள் தப்பிக்க இயலாத வகையில் தாக்குதல் தொடர்கிறது.​ அங்குமிங்கும் ஓடி பதறித் துடித்தபடி பெற்ற குழந்தைகளை அணைத்தவண்ணம் தாய்மார்கள் அலறிச் சாகிறார்கள்.​ எங்கும் மரண ஓலம்.​ அந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கிறார்கள்.​ படுகாயத்துடன் எழுந்து ஓடமுடியாத நிலையில் கீழே கிடந்தவர்கள் சிங்கள ராணுவத்தினரால் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள்.​ உலக வரலாற்றில் இப்படியொரு வெறித்தனமான இனப்படுகொலை நடைபெற்றதேயில்லை.​ போர் குறித்த ஜெனீவா ஒப்பந்தங்களை இலங்கை ராணுவம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்தது.​ குறிப்பாக போரின் இறுதி ஐந்து மாதங்களான ஜனவரி முதல் மே 2009 வரை ஆன காலக்கட்டத்தில் மிகக்கொடூரமான போர்க் குற்றங்களையும்,​​ மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை.​ அரசு அறிவித்த பாதுகாப்பு வளையங்கள்,​​ ராணுவம் அறிவித்த தாக்குதல் அற்ற வளையங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும்,​​ ராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும்,​​ அதன் விளைவாக மக்கள் மட்டுமல்ல,​​ மக்களுக்குத் தொண்டு செய்ய வந்த மருத்துவர்களும்,​​ தொண்டர்களும் கொல்லப்பட்டார்கள்.​ ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள்.​ வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள்,​​ நாபாம் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள ராணுவம் பயன்படுத்தியது அம்பலமாயிற்று.​ எரிந்த காயங்களுடன் ஏராளமான மக்கள் ஓடிவந்தபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதை உறுதி செய்தார்கள்.​ உயிரற்ற உடல்களில் காணப்பட்ட காயங்களும் இதை உறுதிசெய்தன.​ தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டும் ராணுவத்தினரின் வெறி அடங்கவில்லை.​ தமிழர் பகுதிகளிலிருந்த குடியிருப்புகள்,​​ மருத்துவமனைகள்,​​ பள்ளிகள் மற்றும் கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.​ தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழித்ததன் மூலம் மீண்டும் அங்கு தமிழர்கள் தலையெடுக்கவிடக்கூடாது என்பதே அவர்களின் எண்ணமாகும்.÷போர் முடிந்த பிறகு ஐந்து மாத காலத்துக்கு மேலாக வன்னிப் பகுதியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்.​ முகாம்களில் அதிகமான எண்ணிக்கையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பான உணவு,​​ நீர்,​​ சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகினர்.​ இம்முகாம்களுக்குள் நடைபெற்ற கொடுமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாத வகையில் அடியோடு மறைக்கப்பட்டன.​ ஐ.நா.,​​ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இம்முகாம்களில் நுழைய அனுமதிக்கப்படவேயில்லை.​ முகாம்களிலும்,​​ அழிக்கப்பட்ட கிராமங்களிலும் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் ராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை.​ மனித குலத்துக்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிப்பிடப்படும் இது.​ ​ கருக்கலைப்பு,​​ குடும்பப் பெருமைக்கு இழுக்கு,​​ அவமானம்,​​ மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.÷உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தபோது,​​ அவர்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ச,​​ தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் துணையுடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.​ தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்த முகாம்களில் பார்வையிட்டு அளித்த அறிக்கை ராஜபட்சவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.​ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,​​ உலக ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச,​​ கருணாநிதி அனுப்பிய குழுவை மட்டும் பார்வையிட அனுமதித்ததன் ரகசியம் புரியாதது அல்ல.÷உலக நிர்பந்தத்தின் விளைவாக முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பியபோது அதிர்ச்சி அடைந்தார்கள்.​ அவர்களின் குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு இருந்தன.​ அவர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள்.​ இருக்க இடம் இல்லாமலும்,​​ தொழில் செய்ய முடியாமலும் அவர்கள் படும் அவலம் சொல்ல முடியாதது ஆகும்.​ தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தீவிரமாக நடைபெறுகிறது.​ கடற்கரையோர கிராமங்களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.​ தமிழ் மீனவர்கள் கடற்பக்கம் செல்லவிடாமலேயே தடுக்கப்பட்டுள்ளனர்.​ சொந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழவழியின்றித் தவிக்கின்றனர்.இலங்கையில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் 16 வரை கூடி நடத்திய விசாரணையின் முடிவில் மேலே கண்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை உறுதி செய்துள்ளது.÷அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசச் சட்டப் பேராசிரியரான பிரான்சிஸ் பாய்ல் பின்வருமாறு கூறியிருக்கிறார்.​ 1948-ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இனப்படுகொலை உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது இலங்கை மீது "ஹேக்' சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.​ அந் நீதிமன்றம் அவசர விசாரணை நடத்தவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.​ இது நடக்குமா?​ நடக்கக்கூடியதா என்ற ஐயம் எழுகிறது.​ ஏன் என்றால் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா உள்பட பல நாடுகள் சிங்கள ராணுவத்துக்கு ஆயுத உதவியும்,​​ பொருளாதார உதவியும் செய்து வருகிற நாடுகள்.​ இனப்படுகொலைக்குத் துணை நின்ற நாடுகள்.​ இந்த நாடுகள்,​​ இத்தகைய புகாரை இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செய்ய முன்வராது.÷இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு வல்லரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.​ இந்தியா,​​ சீனா,​​ பாகிஸ்தான்,​​ ஈரான்,​​ ரஷியா போன்ற வல்லரசுகள் சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உதவிக்கொண்டிருந்தன.இப்போது மட்டுமல்ல,​​ கடந்த காலத்திலும் வல்லரசுகளின் நடவடிக்கைகள் இப்படித்தான் அமைந்தன.20-ம் நூற்றாண்டின் நெடுகிலும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இனப்படுகொலைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.÷1948-ம் ஆண்டில் ஐ.நா.​ பேரவையும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும்,​​ தண்டிப்பதற்குமான சிறப்பு மாநாடும் இணைந்து ஒரு முடிவெடுத்தன.​ இந்த மாநாட்டின் இறுதியில் செய்யப்பட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் இனப்படுகொலை குறித்து சம்பந்தப்பட்ட ஐ.நா.​ அமைப்புகளிடம் முறையீடு செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.​ இனப்படுகொலையைத் தடுப்பதற்கும்,​​ தவிர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை ஐ.நா.​ பட்டயத்தின்படி எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது.​ 1968-ம் ஆண்டில் ஐ.நா.வின் ஆதரவில் நடைபெற்ற மாநாட்டில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவைகளின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளை,​​ ​ இனப்படுகொலை குற்றத்துக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.​ ஆனால் எதுவுமே நடக்கவில்லை.÷2003-ம் ஆண்டு ஜனவரியில் சுவீடன் பிரதமர் ரிச்சர்டு பிரஸ்வர்டு தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடி இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.​ இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதை விசாரிப்பதற்காக உடனடியாக ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்றும்,​​ இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அப்போது ஐ.நா.வின்.​ செயலாளராக இருந்த கோபிஅன்னான் அறிவித்தார்.​ இன்றுவரை அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றுவிட்டது.​ ஒவ்வொரு காலகட்டத்திலும் வல்லான் வகுத்ததே வாய்க்காலாக இருக்கிறது.​ ஒவ்வொரு வல்லரசும் ஒவ்வொரு சமயத்தில் இனப்படுகொலையாளருக்குத் துணையாக நிற்கின்றன.​ எனவேதான் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய வல்லரசுகள் ஒப்புக்காக தங்கள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு நின்று விடுகின்றன.​ இனப்படுகொலை உலகில் எந்த நாட்டில் நடந்தாலும் அதை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவோ சர்வதேச சமூகம் அடியோடு தவறிவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.​ ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கண்டித்த மேற்கு வல்லரசுகள் அதைத் தடுத்து நிறுத்த முன்வராததற்கு இந்தியாவின் முட்டுக்கட்டைகள் முக்கியமான காரணமாகும்.​ ஏனென்றால் அந்நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தை.​ இந்தச் சந்தையை இழந்து தங்கள் வணிக நலன் பாதிப்படையவிட மேற்கு வல்லரசுகள் தயாராக இல்லை.÷கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களும்,​​ 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் உயிரிழந்துள்ளனர்.​ 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.உள்நாட்டிலேயே 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு முகாம்களிலும்,​​ காடுகளிலும்,​​ சாலையோரங்களிலும் அவல வாழ்க்கை நடத்துகின்றனர்.​ மொத்தத்தில் இலங்கையில் தமிழினத்தை மீண்டும் தலையெடுக்க விடாதபடி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது.​ இந்நிலையில் அந்த மக்கள் ஐ.நா.வையோ,​​ உலக வல்லரசுகளையோ நம்பியிருக்கவில்லை.​ உலகம் முழுவதிலுமிருக்கிற தமிழர்களையே நம்பியிருக்கிறார்கள்.​ தங்களின் சகோதரத் தமிழர்கள் ஒருபோதும் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் குற்றுயிரும் குலைஉயிருமாக நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.​ முள்ளிவாய்க்கால் மண்ணில் நம்முடைய சகோதரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகக்கூடாது.​ அந்தக் கொடூரமான கொலை நிகழ்ச்சிகளை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது.​ ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் அது சினத்தீயாக பற்றி எரியவேண்டும்.​ அதை ஒருபோதும் அணைய விடக்கூடாது.​ இந்த சினத்தீ எதிரிகளையும்,​​ துரோகிகளையும் சுட்டெரிக்கும்.​ ஈழத் தமிழர்கள் அவர்களின் சக்திக்கும் மேலான தியாகம் புரிந்துள்ளனர்.​ அவர்கள் அனுபவித்த துயரங்களும் அனுபவிக்கிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றியுள்ளன.​ தங்களது தலைமுறையிலேயே தங்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.​ அதற்காகச் சகல பரித்தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.​ அவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?
கருத்துக்கள்

நடுநிலை என்ற போர்வையில் வஞ்சகமாக இந்தியா நடந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தாலே போதும். தங்கள் இலக்கை ஈழத் தமிழர்கள் விரைவில் அடைவர். நெஞ்சுக்கு நெஞ்சு என நாம்ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் ஈழத்தமிழர்களின் விடுதலை பற்றி உரைத்து உலகம் முழுவதும் தமிழ் ஈழத் தேவையை உணரச் செய்ய வேண்டும். அரசியல் கொத்தடிமையிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நெடுமாறன் ஐயா போன்றோர் பின்னால் அணிவகுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சிங்கப்பூர் சொல்லும் பாடம்!

சிங்கப்பூர் சொல்லும் பாடம்!கடந்த வாரம் வெள்ளி,​​ சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும்,​​ நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் ​ நடத்தின.​ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கத் தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.​ கருத்தரங்கின் விவாதப் பொருள் "வாழ்வியலில் இலக்கியம்'.வந்திருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் பலர்,​​ இலக்கியம் மிகவும் நீர்த்துப்போய்,​​ புதினங்கள்,​​ சிறுகதைகள்,​​ மரபுக் கவிதைகள்,​​ எல்லாமே சிதைந்து நீர்த்துப் போய்விட்டதாக வருத்தப்பட்டனர்.​ சிறுகதைகள் என்பது ஒரு பக்கக் கதைகள் என்றாகி,​​ போஸ்ட் கார்ட் கதைகள்,​​ ஸ்டாம்புக் கதைகள் என்றாகிவிட்டது என்று ஆதங்கப்பட்டனர் பலர்.​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும்,​​ மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது.​ ​பன்னாட்டுக் கருத்தரங்குக்கு வெளிநாட்டில் கூடியிருந்த தமிழறிஞர்கள்,​​ பெருவாரியான தமிழகத்தின் மூத்த தலைமுறையினர் தங்களது மனதிற்குள் வெம்பி வெதும்பும் பிரச்னையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.​ "தமிழ் படிப்பதால் வேலை கிடைக்குமா?',​ "தமிழ் படிக்காவிட்டாலோ,​​ தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்?',​ "மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர,​​ அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அனைவருமே தாங்களோ,​​ தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ,​​ வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை.​ இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம்,​​ மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும்,​​ அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்!பன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,​​ வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து,​​ சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது.​ சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில்,​​ அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு,​​ கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன்,​​ தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.சிங்கப்பூர் நகரிலுள்ள "ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது.​ இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம்.​ வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர்.​ அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.​ இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.​ கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள்.​ இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள்.​ படித்தவர்கள்.சீனர்கள் மட்டுமல்ல,​​ மலாயர்களும் சரி,​​ தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.​ இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.சீனர்களைப் பொறுத்தவரை,​​ அவர்களுக்கு மொழி,​​ அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது.​ தாய்மொழியில் எழுதவும்,​​ பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள்.​ நாகரிகத்தின் அடையாளமாக,​​ சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது.​ ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும்,​​ பேசவும்,​​ படிக்கவும் தரப்படுகிறது.​ உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ,​​ அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு,​​ அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமா?​ சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும்,​​ பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள்.​ நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள்.​ ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல.​ அவர்கள் மட்டுமல்ல,​​ ஜப்பான் பிரதமர்,​​ ஜெர்மானிய அதிபர்,​​ ரஷிய அதிபர்,​​ பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.சிங்கப்பூருக்கே வருவோம்.​ சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.​ ஆங்கிலம் படிக்க வேண்டும்,​​ உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது.​ அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.​ தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர,​​ தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.​ கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில்,​​ எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள்.​ இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ,​​ மெட்ரிகுலேஷனோ,​​ மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும்.​ குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு,​​ அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால்,​​ எழுத்துக்கு ஏது இடம்?​ எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம்?​ இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே...​ நமது அன்னிய மோகம்,​​ சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதா?தமிழைக் காப்பாற்ற சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது...​ ஹும்...
கருத்துக்கள்

THIS IS A CUSRSE TO TAMILNADU TAMILS. I AM LIVING IN EUROPE FOR THE PAST 15 YEARS. I HAVE SEEN TAMILS FROM PONDICHERRY, TAMILNADU AND TAMIL EELAM. OUT OF THESE EELAM TAMILS SEND THEIR CHILDREN COMPLUSORLY TO LEARN TAMIL ONCE IN A WEEK. EVEN AT THE END OF THE YAER AN EXAMN IS CONDUCTED AND CERTIFICATES ARE AWARDED. BUT IN FRANCE THERE ARE LOT OF PONDICHERRY TAMILS BUT NONE OF THEIR CHILDREN SPEAKS TAMIL OR WRITES TAMIL. EVEN MANY OF THEIR CHILDREN HAVE FRENCH NAMES. THEN HOW CAN THESE CHILDREN SPEAK AND WRITE OUR MOTHER TOUNGE. THE MENTALITY SHOULD CHANGE. DON'T ASK ME WHY I WRITE IN ENGLISH BECAUSE OUR TAMIL SOFTWARES ARE DIFFCULY TO USE.

By Paris EJILAN
5/19/2010 4:43:00 AM

SINGAPORE GOVT PROMISSED US NOT TO REDUCE WEIGHTAGE OF MOTHER TOUNGE "INCLUDING TAMIL" IN THE SCHOOL CURRICULAM. BUT IN YOUR ARTICLE HOW SINGAPORE CELIBRATE TAMIL NOT COVERED. ONE THING IS TRUE IS - NOWADAYS SUN TV IS SPOILING SINGAPORE'S PURE TAMIL. - RAVI FROM SINGAPORE

By RAVI
5/19/2010 4:43:00 AM

IN SINGAPORE PARLIMENT IT IS POSSIBLE TO SPEAK IN TAMIL...ALL ROAD SIGNS AND INSTRUCTIONS ABOUT SERVICES ARE IN PURE THAMIL....BUT WHAT IS THERE IN DAMIL NADOO..PEOPLE SPEAK TAMINGILAM....WRITE IN TAMINGLISH...DELHI PARLIMENT MP S CANT SPEAK TAMIL ..BUT WALKING CORPSE IS ORGANISING SEMMARI CONFERENCE..WHAT A THAMASHA...???

By KOOPU
5/19/2010 3:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்

தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்

பவானி, மே 17: கோயில்களில் நடைபெறும் வழிபாட்டை தமிழ் மொழியில் தமிழர்களின் தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பவானியில் நடைபெற்ற தெய்வத் தமிழ் மூன்றாவது மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானியில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்பட 100 ஐம்பொன் திருமேனிகள் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தெய்வத் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலையில் தமிழ் வழியில் அர்ச்சகர் பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பாராட்டும், தமிழ் வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. தமிழர்கள் தாய்மொழியான தமிழ் நெறிப்படியே வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வடமொழி வழிபாடாகவும், யாகம் சார்ந்த வழிபாடாகவும் உள்ள கோயில் வழிபாட்டை மாற்றி, ஆகம வழிபாடு தமிழர்களின் தமிழ்நெறி வழிபாடு என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நிகழ்ச்சியில், பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் அ.தியாகராஜன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, சென்னை தமிழ் வழிபாட்டு மையத் தலைவர் மு.பெ.சக்திவேல் முருகனார், பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் குணசேகரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பேசினர். மேலும், வாழ்வியல் சடங்கு என்ற தலைப்பில் பெங்களூர் மதன்முரளி, கல்வியில் தமிழ் என்ற தலைப்பில் மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் சென்னியப்பனார் உள்ளிட்டோர் சிறப்புறையாற்றினர். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், பூம்புகார் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிவாசக்ர் அருட்பணி மன்றச் செயலர் குமாரலிங்கம் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தமிழக மக்களின் வழிபாட்டுரிமைகளை ஆரிய நோக்கில் பார்த்துத் தீர்ப்பு கூறுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு தமிழர்கள் தம் தாய்மொழியில் தன்னைத்தமிழில் பாடுமாறு வேண்டிய இறைவனை வணங்குவதே முறை என்பதைத் தெளிவாக விளக்கி அனைத்துக் கோயல்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே நடைபெற வகை செய்ய வேண்டும். மக்கள் விருப்பத்தில் குறுக்கே நிற்க உச்ச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்பதை உணர்த்தி வரும் மாநாட்டு நாளுக்கு முன்னராக மற்றொரு அவசரச்சட்டம் மூலம் தமிழ் வழிபாடு மட்டுமே தமிழ் நாட்டில் இருக்க வகை செயய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:46:00 AM

Kadavulae illai enbavan marrum pagutthari partri pesupavan mattumae kovilil evvaru archanai martrum poojai seiyavendum endru pesuvan. Aanal avan churchkalil aangila/french padalkal padi vazhipaduvathaiyo alladhu masoothikalil arbia mozhikalil othuvathiyo patri pesuvatharkku thunivillatha mundangal.

By kovilnesan
5/18/2010 10:32:00 PM

Why not change the Gods themselves as Karunanidhi, Stalin, Alagiri, Kanimozhi, Dhayalu, Kushbu, Jayalalitha (sorry this name is already vadamozhi sami) etc. etc. and make all the DMK MLAs and MPs as archakas so that they can get additional income by chanting potri thirunamamgal, besides their existing jobs at Parliament and Assembly praising the Tamil Gods?! The Christian Fathers will also join hands happily!!(e.g. praising of Kanimozhi by a Father)

By Sambirani
5/18/2010 5:50:00 PM

It is long since I have stopped going to temples in Tamilnadu. I pray in my house itself, which is more convenient and calm to concentrate. If each and every bakthan starts this way, there wont be any problem at all. Gods will be happier. Here one thing everybody should understand - the hyms are more important in worshipping.

By Annonymous
5/18/2010 5:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஈழப் படுகொலை ஓராண்டு நிறைவு: ஒவ்வொரு துளியிலும்...தலையங்கம்: 19.05.2009தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு தினங்களுக்கு முன்பே, "துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே. சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம். தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும். விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.
கருத்துக்கள்

தாய்மண்ணை மீட்கப் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து இந்த அளவிற்கு வேறு யாரும் எழுதியிருக்க முடியாது. எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுகள். இந்திய அரசும் அதிகாரிகளும் செய்த வஞ்சனைகளும் தமிழக அரசியல் வாதிகளின் இரண்டகமும் இந்த அழிவினை ஏற்படுத்தின என்பதை வரலாறு பதிவு செய்வதுடன் காலம் தக்க தண்டனையையும் இவர்களுக்கு வழங்கும். வருங்கால வரலாறு மனிதகுலப்பகைவர்களாக இவர்களைப்பற்றிப் படித்தறியும்.வரலாறு அறியாதவர்களும் பண்பாடற்றவர்களும் கைக்கூலிகளும் என்ன சொன்னாலும் தமிழ் ஈழத்தின் கொடி உலக அரங்கில் பறக்கும நாள் வரும்! அப்பொழுது தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள்! இந்திய மாயையிலும் சிங்கள வெறியிலும் சிக்குண்டு சீரழியும் தமிழ் அப்பொழுது தனிநிலை பெற்று உலக நாடுகளில் கோலோச்சும். அன்புன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:38:00 AM

ALL READERS ONE THING PLS UNDERSTAND,, SL Govt, hired some Tamil people all over world,, They are working under SL govt secret inteligence dep.,,their main duty to create confusion as well as break the unity among TAmils,, they do for money and other benefits for their family in SL,,recently Italian police arrested these kind of people. RAVI , TAMIL & ALSO TAMIL might be among them, So do not give any importance to his comments,, He is already sold

By Kumar
5/19/2010 4:26:00 AM

பாமரன், தொழில் செய்வது பத்திரிக்கைகளின் நோக்கமோ, தர்மமோ அல்ல. மனித உரிமைகளை காப்பதுவும், சமூக சீர்திருத்தமுமே நான்காவது தூணின் கடமையாக இருக்க முடியும். நீங்கள் ஒரு பத்திரிக்கையை மிரட்டுவது சரியல்ல.

By தமிழ் அடிமை
5/19/2010 1:15:00 AM

tamil traitors karunanithi, thiruma and ramadoss. These people should be deported to srilanka

By aram
5/19/2010 1:10:00 AM

ரவி, Tamil, உங்களைப் போன்ற இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை.

By தமிழ் அடிமை
5/19/2010 1:02:00 AM

Well said. Great Editorial

By malar
5/19/2010 12:01:00 AM

Dinamani, Really your service is the greatest in the tamil world as Tamil Nadu tamils are not speaking truth and no one intrested to see other human being killed without sense Just Tamil Nadu Tamils are seeing the fun when own blood brother dying in front of them So you are really great Thanks a lot and GOD will wish you you

By charlas
5/18/2010 11:24:00 PM

பச்சை தமிழன், சிகப்பு தமிசன், உசந்தான், இன்னும் பிற புலி வால்களுக்கு, இன்னிக்கு நல்ல சாப்டீங்களா? முதல் வருஷம் திவசம் உங்களுடை பங்கர் குசுவன் பிரபாகரனுக்கு. கீரிமலை போய் திவசம் குடுத்து அந்தியேட்டி பண்ணாததுக்கு ஒரு கறிசோறு செஞ்சு சாபிடிருபீங்க!! ஹில்லரி கிளிண்டன் கப்பல் அனுப்பவான்னே சொல்லியே அத்தனை மக்களையும் கிளிநொச்சியில் இருந்து பேய் காட்டி முள்ளி வாய்க்கால் வரைக்கும் இழுத்து அடிச்சு கொன்னு போட்ட உங்கள் தலை கண்டிப்பா வந்து உங்களுடை மர மண்டைகளுக்கு சந்தனம் தடவி விட வருவான்.

By Also Tamil
5/18/2010 10:53:00 PM

தமிழக அரசியல்வாதிகள் பலர் செய்த துரோகத்தை விட ஈழ செய்திகளை இருட்டடிப்பு செய்து மீடியாக்கள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.

By raja
5/18/2010 9:54:00 PM

Yes, Yes, yes......,

By Sekar
5/18/2010 9:49:00 PM

//இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை// IS THIS DINAMANI'S STATEMENT ABOUT THE INDIAN TAMIL PEOPLE AND THE INDIAN POLITICIANS? OR THIS IS PERSONAL OPINION OF THE WRITER OF THIS ARTICLE?. PLEASE CLARITY THIS IS IMPORTANT. YOU ARE DOING BUSINESS IN TAMILNADU, EATING AND DRINKING TAMIL PEOPLES FOOD AND WATER. PLEASE THINK!!!!

By Paamaran
5/18/2010 9:48:00 PM

OUR GREAT HOMMAGE TO ALL OUR GREAT TAMIL FREEDOM FIGHTERS WHO GAVE THEIR SOUL AND BLOOD FOR THE LIBERITY OF OUR MOTHERLAND. ALSO WE SHOULD PRAY FOR THE INNOCENT TAMILS WHO WERE KILLED BY SINGALAVA GOVT WITH THE HELP OF UNION INDIAN GOVT. THERE IS NO ONE IN THE WORLD WHO IS 100% CORRECT. WHATEVER DONE IN THE PAST WHETHER GOOD OR BAD THEY ARE DONE ONLY FOR THE GOOD OF TAMIL NATIONS. WHAT WE MUST UNDERSTAND IS THAT ETTAYAPPANS SHOULD BE REMOVED AND KEPT AWAY AT ANY COST. SEE ETTAYAPPANS LIKE KARUNA AMMAN, PILLAYAN, DOUGLAS..... THESE TRAITORS HAVE SOLD US FOR "JUST" MONEY AND POWER. WE WILL FORGET THE PAST AND UNITED TOGETHER WE WILL CHASE OUT THE INVADERS. LONG LIVE FREEDOM. LONG LIVE TAMIL EELAM. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
5/18/2010 8:51:00 PM

the fine editorial...long live dinamani

By avudaiappan
5/18/2010 8:11:00 PM

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளி வரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

By ராஜசிம்ம பல்லவன்
5/18/2010 8:02:00 PM

Continued: Unless ThamizhNadu and ThamizhEzham Thamizhs realize they are compatriots only time and the bay separated them, the dream of a greater Thamizh Nation will be a long and arduous one. As long as the betrayers like karunas (both MK and Vinyagamoorty Muralitharan) and anti-nationals like jeya are among us, Thamizh Nation is very very difficult to achieve.

By Raja
5/18/2010 7:23:00 PM

Well written impartial view of the event after the first anniversary. karuna and his entire team are responsible for this act against humanity. Even at this ripe age this old man did not show remorse for his deeds. Well, how can you expect good deeds from this pseudo-athiest? National Leader Prabakaran also made mistakes by ruthlessly eliminating dissents, which could have been handled more maturely. Of course, betrayers like karuna amman do not need any sympathy if they are done with. Our leader sacrificed his own kids besides himself in the war for our freedom and independence. He fought for 70 Million Thamizhs. No one can belittle that sacrifice. LET US SALUTE OUR FREEDOM FIGHTERS AND VOW THEIR SACRIFICE FOR THAMIZH NATION WILL NOT GO IN VAIN. Unless ThamizhNadu and ThamizhEzham Thamizhs realize they are compatriots only time and the bay separated them, the dream of a greater Thamizh Nation will be a long and arduous one. As long as the betrayers like karunas (both MK and Vinyagamoo

By Raja
5/18/2010 7:19:00 PM

100% TRUE THANKS MR. Prabakaran we will not forget your great job

By T.prabakaran
5/18/2010 6:43:00 PM

WHAT EVER THE MERITS OF LTTE AND PIRABAKARAN,LTTE WAS RESPONSIBLE FOR IRRESPONSIBLE MURDERS OF TAMIL LEADERS RESULTING IN A VACUUM AFTER ELIMINATION OF LTTE LAST YEAR. NOW RAJAPAKSE IS FILLING UP TAMIL AREAS OF NORTH AND EAST WITH SINGALESE. WHY LTTE ALLOWED IT TO DETERIARATE TO THE PRESENT? THERE IS PURPOSE IN APPEALING TO INDIAN GOVERNMENT TO INTERFERE FOR A FAVOURABLE SETTLEMENT FOR TAMILS. IT WILL NOT SERVE ANY PURPOSE IF HATE CAMPAIGN IS CARRIED OUT AGAINST INDIA BY PEOPLE WHO ARE EMOTIONALLY CARRIED AWAY BY THE PROPAGANDA OF PRO LTTE ELEMENTS IN TAMILNADU. IT WILL NOT SECURE A BETTER FUTURE FOR THE SUFFERING TAMILS OF SRILANKA.WHAT DINAMANI EXPECTS IN PROVOKING ARTICLES. lATE SIVARAMAN WOULD NOT HAVE LIKED IT.

By Tamilian
5/18/2010 5:37:00 PM

உண்மையை ஏற்றுகொள்கிற பக்குவமோ, மனப்பான்மையோ இந்த புலிகளுக்கு எப்பவுமே இருந்ததில்லை. அவர்கள் செய்த அனைத்தையும் அவர்கள் உணர மறுக்கிறார்கள், உலகில் இவர்கள் மட்டும் தான் கச்டபடுபவர்களை போல ஒரு மாயையை உண்டு பண்ணுகிறார்கள், இயற்கையின் சீட்ட்ரத்தில் எத்தனையோ நாடுகள் அழிந்து போகின்றன. நீ உழைத்து உன் குடும்பத்தை காப்பாற்ற போகிறாய். அதற்க்கு எதற்க்கடா இந்த கோழை வெறி. ஏனென்றால் நீங்கள் உழைத்து வாழ விரும்பாதவர்கள், இப்படி அப்பாவி மக்களை நீங்களே பணய கைதிகளாக்கி கொன்று , அவர்களை காப்பதுபோல் உலகமெல்லாம் சென்று நிதி வாங்கி வெளி நாடுகளில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஈழத்திலுள்ள அப்பாவிகளோ நீங்கள் தான் தெய்வம் என்றெண்ணி அரசாங்கத்தை எதிரியாக நினைத்து தங்கள் வாழ்வை அழித்துகொண்டிருக்கிரார்கள்.

By tamil
5/18/2010 4:19:00 PM

Ravi அவர்களே உங்கள் கருத்துக்களை பல முறை பார்த்துருக்கிறேன்.. தாங்கள் பதிகின்ற கருத்துக்கள் எந்த பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் காணாத ஒன்று.. இந்த கருத்துக்களை எதன் அடிப்படையில் பதிகிறீர்கள் என்று விளக்கம் தர முடியுமா??.. அனைவரும் புரிந்து கொள்வார்கள்..

By Anniyan
5/18/2010 4:06:00 PM

பாவம் புலிகள்! அவர்கள் செய்த கொலைகளைக் கூட ஒப்புக்கொள்ள முடியாத கோழைகள்! ராஜீவ் காந்தி, அமிர்தலிங்கம், பத்மநாபா ....... இவர்களெல்லாம் எப்படி இறந்தனர்???? 'எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவதென்ப திழுக்கு'. இப்போது தெரிகின்றது ஒரு கோழையின் மரணம் எப்படி நடந்தது என்று!!!!!!!

By Ravi
5/18/2010 4:03:00 PM

உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் அரசியல்வாதிகளும் தினமும் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் பின்னால் பணம் கொடுத்தால்தான் கூட்டம் சேர்கிறது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒருவரையும் பார்க்காமல் எப்படி இளைஞர்கள் அனைவரும் அவரின் பின் அணிவகுத்து போர்க்களம் செல்கிறார்கள். பேசாமல் பேசும் பெருந்தலைவனின் ஆளுமைத்திறன் அத்தகையது.

By நவீன் சென்னை
5/18/2010 4:02:00 PM

ரவி அவர்களே! நன் உங்களுக்கு சொல்லி இருக்கேன்? பதவி ஆசை அமிர்தலிங்கத்னத பற்றி எழுத வேண்டாம் என்று

By usanthan
5/18/2010 4:01:00 PM

மீதி இருக்கும் அப்பாவி மக்களையும் இந்த புலி கூட்டம் கொன்று விடும். சாவு என்பது நிச்சயம். புலி கூட்டம் கொன்றால் நீ கோழை ஆகிவிடுவாய். ஆதலால் நீ நாடு விட்டு நாடு பொய் எலி கூட்டம் போல் வாழாதே. ஈழத்தில் நிம்மதியாகே வாழு, உன் வாழ்க்கை மெருகேறும். உன் சந்ததி உன்னை வாழ்த்தும். இல்லை என்றால் உன் சந்ததி திருடனாய் எதாவது ஒரு அண்டை நாட்டில் உன் குழ பெருமையை கெடுத்துகொண்டிருப்பான். புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் நூறு சதவிகிதம் திருடுவதும், ஏமாற்றுவதும் அதுவும் உழைத்து வாழும் தமிழ் மக்களை ஏமாற்றுவதும் லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் இருந்திருந்தால் நேரில் கண்டிருக்க முடியும். இவர்களுக்கு எந்த இந்திய தமிழனும் உதவ கூடாது.

By Tamil
5/18/2010 4:01:00 PM

அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு வட்டுக்கோட்டையில் வைத்து 1978 இல் அளித்த வாக்குறுதி தனித் தமிழீழம் என்பது. தந்தை செல்வா காந்திய வழியில் எல்லாம் போராடி சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு சாத்வீக வழியில் உரிமை தரமாட்டார்கள் என்ற பின் அவரே தனித் தமிழீழத்தை முன் மொழிந்தார். அதை அமிர்தலிங்கம் தேர்தல் வாக்குறுதியாக்கி 1978 இல் சிறீலங்கா நாடாளுமன்றுக்கு மக்களால் பெருமளவு வாக்குகள் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்..! அதன் பின் அவர் மக்களுக்கு தமிழீழம் காண என்ன செய்தார்..????! எதுவுமே இல்லை. 1987 இல் இந்திய இராணுவம் தமிழ் மக்களை புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் படுகொலை செய்தபோது அதை அங்கீகரித்து நின்றவர் அமிர்தலிங்கம். இந்தியப் படையினர் மக்களைக் கொன்ற போது.. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்திய உளவு நிறுவனம் காட்டிய பதவி ஆசைக்கு ஆசைப்பட்டு சொந்த மக்களையே கொலை செய்யத் தூண்டியவர். புலிகள் யார்.. அமிர்தலிங்கத்துக்கு வாக்குப் போட்ட அதே தமிழ் மக்களின் பிள்ளைகள் தான். தமிழீழத்தை காந்திய வழியில் பெற முடியாது என்று தந்தை செல்வா இனங்காட்டிய பின்.. சிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில்

By usanthan
5/18/2010 3:48:00 PM

சிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில் மக்களின் உரிமையின் அக்கறை கொண்ட புரட்சிகர இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் வழிவந்தவர்களே புலிகள். அவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. தமிழீழ மக்களின் சொந்தக் குழந்தைகள். புலிகளை அழிப்பது என்பது தமிழ் மக்களை அழிக்காமல் நடக்காது. இதை உணர அமிர்தலிங்கம் போல் சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண.. வாழ்வியல் உண்மையை உணரத்தெரிந்திருந்தால் போதும். ஆனால் சட்டம் படித்திருந்த அமிர்தலிங்கத்துக்கு பதவி ஆசை சொந்த மக்களின் பிள்ளைகளை எதிரியாக்கிக் காட்டியது. புலிகளை அழிக்க வேண்டும் என்று இவரே சொல்கிறார். இதற்கு புலிகள் என்ன பயங்கரமாகக் கேட்டார்கள். அவர்களும் தமிழீழம் தான் கேட்கிறார்கள். நீங்களும் அதைத்தான் கேட்டீர்கள். ஆனால் நீங்கள் மேடையில் பேசி வாக்குகள் வாங்கியதோடு தமிழீழத்தைக் காற்றில் பறக்க விட்டீர்கள். ஆனால் புலிகள் உயிரைக் கொடுத்து உரிமையை காக்க களத்தில் நின்றார்கள் நிற்கிறார்கள். அமிர்தலிங்கத்தை சுட்டது புலிகள் அல்ல. அவரால் ஏமாற்றப்பட்டு.. வாழ்விழந்து போன ஒரு மனிதன் சுட்டான். அமிர்தலிங்கத்தின் சட்டப்படிப்பு அவரின் சட்டப்பையை நிர

By usanthan
5/18/2010 3:48:00 PM

திரு. தினமணி ஆசிரியர் அவர்களே! யார் எப்படிப் போனால் என்ன? தமிழினம் சீரழிந்தால் என்ன? என்று இருக்கும் பத்திரிக்கைகளின் மத்தியில் உண்மைனய கட்டுரைகள் மூலமூம் கார்ட்டூன்கள் மூலமூம் தெரிவித்த உங்கள் பணிக்கு மனதாராக பாராட்டுக்கள் உங்கள் இந்த உன்னதமான முயற்சி வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க தமிழீழ தலைவர்! வெல்க தமிழீழம்!! தினமணிக்கு எங்கள் பணிவான நன்றிகள்!

By usanthan
5/18/2010 3:42:00 PM

"இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை" Well said, unmai sudum!

By shiva
5/18/2010 3:38:00 PM

MR. RAVI, YOU SHOULD BE A PAID SERVANT OF RAM. DON'T LIVE WITH THIS MONEY, IT WILL BE A CURSE TO YOUR WHOLE GENERATION. IT IS CLEAR THAT RAJABAKSHE IS TRYING TO ELIMINATE TAMILS FROM THE ISLAND, MADLY, RUTHLESSLY INDIA IS HELPING FOR THAT.

By Useless Tamilian
5/18/2010 3:16:00 PM

உலக ஈழத் தமிழர்கள் புலிகளின் அழிவுக்கு இந்தியாவின் செயலே முக்கிய காரணமென்று கருதி இந்தியாவை பழி வாங்கப் போகிறார்கள் என்று வெளி வரும் செய்தியால் கோபத்தை விட மன வருத்தமே மிகுதியாக இருக்கிறது..''பழி வாங்கும்'' கொள்கைக்கு தேவையற்ற செயலை பழைய தவறிலின்று திருந்த பெற்று கொள்கையை விட்டு விலகாத வண்ணம் செயல் புரிய வேண்டும் என்று அனைத்து தமிழர்களின் கருத்தாக இருக்கிறது.. ஈழத் தமிழ் தேசத்தில் இந்திய தூதரகமும், இந்திய தேசத்தில் ஈழத்தமிழின் தூதரகமும் அமைய வேண்டும் என்பது எந்த சுய லாபத்தையும் எதிர் பார்க்காமல் அனைத்து தமிழர்களின் கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை.. இப்படிக்கு ஈழ தேசத்தை தன் வாழ்நாளைக்குள் காணத் துடிக்கும் ஒரு திமிழன்..

By Anniyan
5/18/2010 3:15:00 PM

தினமணியே! இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிய அறிவுஜீவி யாரோ? புலிகளால்தான் ஈழத்தமிழராகிய எமக்குக்கிடைத்திருக்க வேண்டிய அத்தனை அரசியல் தீர்வுகளும் இல்லாமலே போனது என்பது தெரியாதா? சிங்களஅரசு தன்னையும் அறியாமல் தமிழ்மக்களுக்கு செய்த நல்ல விடயம் புலிகளை வேரோடு அழித்ததுதான். தமிழினத்தில் தலைமைதகுதியுள்ள எவருமே இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் தன்னுடைய அமைப்ப்பைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், கோழைத்தனமாக படுகொலை செய்தவர் பிரபாகரன். இன்று தமிழினம் தலைமையற்ற இனமாக இருப்பதற்கு யார் காரணம்? சிங்களஅரசா? அமிர்தலிங்கம் கொல்லப்பட்டவுடன், முன்னாள் பிரதமர் சிறீமாவோ சொன்னார். கடவுளே! சிங்களஇனத்தைக் காப்பாற்றி விட்டாய் என்று! அது இரண்டுவகையான அர்த்தம் கொண்டது. ஒன்று! சிங்களவன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்பது. மற்றது, அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதால் இனி சிங்களஅனத்திற்கு ஆபத்து இல்லை என்பது. ஒரு சிங்கள தலைவருக்கிருக்கின்ற அறிவு கூட தமிழினத்தின் மத்தியில் பத்திரிக்கை நடத்துகின்ற தினமணிக்கு இல்லாமல் போனது ஏன்??????

By Ravi
5/18/2010 2:50:00 PM

தமிழ் ஈழம் கிடைக்கும் வரை புலிகள் பிறந்துகொண்டு இருப்பார்கள்...சிங்கள, இந்திய நாய்களே...13 கோடி தமிழனும் புலிதான் முடிந்தால் அழித்து பாருங்கள் துரோகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் வென்றதில்லை...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும்...கருனாக்களின் அழியும் காலம் தூரத்தில் இல்லை... வீரப்பாண்டியனுக்கு ஒரு எட்டப்பன்,, பிரபாகரனுக்கு இரு கருணாக்கள் என்று நம் குழந்தைகளுக்கு போதிப்போம்.... இந்த கருனாக்களின் சந்ததிகளை அடியோடு ஒதுக்கி வைப்போம்... ஒரு இந்தியனாய் வாழ்வதைவிட இல்லாமல் இருப்பதே மேல்....

By TAMIZHINIAN
5/18/2010 1:57:00 PM

sir, kudoes to you and your paper. I wish and pray each and every tamilian should read it and possess it as a treasure. the last para is a gem of the editorial. it is unbiased and it evokes not only a sympathy to the organisation which fought for 33 long years and buried alive mainly because of their strategy adopted at the behest of collaborators penetrated by indian intelligence agency. the dmk which is boasting itself to be the champion of global tamils' causes is to be ashamed of its over and covert assitance remdered tp tje UPA government by feigning to the goings on in the island nation and not intervening with the government where and when required. Now it is dissipated and routed, there is no movement called tigers. it is yet pity and the UPA govt. has extended ban to the buried organisation. The transnational ogvernment is being perceived to be the answer. My only worry the peopleof tamilnadu have to identify this tamil traitor and see that they do not come to power agai

By marathamilan
5/18/2010 1:05:00 PM

sir, kudoes to you and your paper. I wish and pray each and every tamilian should read it and possess it as a treasure. the last para is a gem of the editorial. it is unbiased and it evokes not only a sympathy to the organisation which fought for 33 long years and buried alive mainly because of their strategy adopted at the behest of collaborators penetrated by indian intelligence agency. the dmk which is boasting itself to be the champion of global tamils' causes is to be ashamed of its over and covert assitance remdered tp tje UPA government by feigning to the goings on in the island nation and not intervening with the government where and when required. Now it is dissipated and routed, there is no movement called tigers. it is yet pity and the UPA govt. has extended ban to the buried organisation. The transnational ogvernment is being perceived to be the answer. My only worry the peopleof tamilnadu have to identify this tamil traitor and see that they do not come to power agai

By pacchaitamilan
5/18/2010 1:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்