திங்கள், 15 மே, 2017

வந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை
வந்தவாசி   கவி இணையரின்

இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில்  அருவினை

  + 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று
வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள்  அருவினை
அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட  அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று  அருவினை புரிந்துள்ளனர்.
2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 –  11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் அதிக மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
   மு.வெ.நிலாபாரதி, தமிழ் -195, ஆங்கிலம் – 183, இயற்பியல் – 197, வேதியியல் – 200, கணிதம் – 198, உயிரியல் – 196 என மொத்தம் 1169 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
  மு.வெ.அன்புபாரதி, தமிழ் -191, ஆங்கிலம் – 188, இயற்பியல் – 197, வேதியியல் – 195, கணிதம் – 199, உயிரியல் – 195 என மொத்தம் 1165 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
   கவிஞர்கள் மு.முருகேசு, அ.வெண்ணிலா  இந்த இரட்டையர்களின் பெற்றோர் ஆவர்.
  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மு.வெ.அன்புபாரதி 495 மதிப்பெண்களும், மு.வெ.நிலாபாரதி 491 மதிப்பெண்களும் பெற்று, செய்யாறு கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்தத் தேர்வு முடிவு குறித்து அவர்களிடம் கேட்டபோது, “இருவருமே மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். அதற்காகக் கடந்த வாரம் நடைபெற்ற  தேசியத்தகுதி-நுழைவுத்தேர்வு(NEET)  -ஐ எழுதியுள்ளோம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த எங்களுக்கு, ம.ப.க.வா(CBSC) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொள்வதில் சற்றுக் கடினமாக இருந்தது. ஆனாலும், முயற்சி செய்து எழுதியுள்ளோம். அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்.” என்றனர்.
தமக்கை செல்வி மு.வெ.கவின்மொழி வழியில்  சிறப்பிடம் பெற்ற  மாணவ மணிகளுக்குப் பாராட்டுகள்!
பெற்றோர்க்கும்  பள்ளியினருக்கும் வாழ்த்துகள்!
– வந்தை அன்பன்

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்

  கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

 தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து விட முடியாது. கொல்லப்பட்ட 30,000 குழந்தைகளுக்கும், விதவைகளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் 90000 தமிழ்ப் பெண்களுக்கும், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும் நீதியைக் கேட்காமல் நாம் கடந்து விட முடியாது.
 அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து-சீனா-இலங்கை முதலான நாடுகளின் இணைந்து நின்று நடத்திய இந்த இனப்படுகொலையை தொடர்ந்து நினைவு கூர்வோம். நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம்.
  ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக 100 ஆண்டுகள் கடந்து இன்னும் கூடுகிறார்கள். (இ)யூதர்கள் 70 ஆண்டுகள் கடந்த பின்னும் தங்களுக்கு நடந்த இனப்படுகொலையை நினைவு கூர்கிறார்கள். தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்து 8 ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் நாம் மறந்து கடந்து விடுவோமா என்ன?
  குடும்பத்துடன் வாருங்கள். பல்லாயிரக்கணக்கில் கூடுவோம். ஏந்திப் பிடிப்பது மெழுகுவர்த்தியை மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக் கோரிக்கையையும் தான்.
-மே 17 இயக்கம்

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை

வைகாசி 04, 2048 / மே 18, 2017

மாலை 4.45

நூல்கள் வெளியீடு
பரிசளிப்பு
விருது வழங்கல்
மலர் வெளியீடு
(படங்களை அழுத்திப் பார்க்கவும்)

– ஏர்வாடியார்