சனி, 24 நவம்பர், 2018

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம், பொன்விழா, சென்னை

அகரமுதல

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்

பொன்விழா, சென்னை

கார்த்திகை 10, 2049 திங்கள் 26.11.2018

மாலை 5.30

இரசிய கலாச்சார மைய அரங்கம், சென்னை 18

விருதுகள் வழங்கு விழா


சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

அகரமுதல

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் 

அறிமுக நிகழ்ச்சி


சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில்‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார்.
’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக் காண முடியும் என்பதை இந்த நூலின் மூலம் சிறப்பாக விளக்குகிறார். இதுபோல் இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கிய உலகில் அவரது பயணம் இன்னும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில்  இதழாளர் முதுவை இதாயத்து, திருச்சி சாவித்து முதலான பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 23 நவம்பர், 2018

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44


கார்த்திகை 08, 2049  சனி

24.11.2018 மாலை 6.00

 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44

ஓவியக்கலைஞன் அமுதோன்

பன்முகக்கலைஞன் சுரேசு சீனு


வியாழன், 22 நவம்பர், 2018

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு

அகரமுதல


பேரன்புடையீர்,
வணக்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும்
 இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  இம்மாதம்
 கார்த்திகை 09, 2049  ஞாயிற்றுக்கிழமை
25-11.2018 அன்று கிழக்கு நேரம் 
இரவு 9:00 மணி 
முதல் 10:00 மணிவரை 
பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளதுஇம்மாத  இலக்கியச்சொற்பொழிவுக் கூட்டத்தில் 
 ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்  என்ற 
தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் 

சிறப்புப் பேச்சாளர்,
பேராசிரியர் பாஇறையரசன்

[தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)]. 

இந்த இலக்கியக்கூட்டத்தில் 
நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு 
இலக்கிய இன்பம் பெற
 அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

அகரமுதல

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 

23.11.2018  மாலை  06.30 மணி 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

 கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில்
கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் 
சிறப்புரை  :  முனைவர் இராமோகன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்
தகுதியுரைசெல்வி யாழினி 
 உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்
இலக்கியவீதி
  திரு. கிருட்டிணா இனிப்பகம்

புதன், 21 நவம்பர், 2018

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா
தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்:

கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018

பிற்பகல் 5 மணிக்கு

(635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும்.
கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல்  கார்த்திகை 11 / 27.11.2018  வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணிமனையில்

மாவீரர் வணக்க நிகழ்வுகள் இடம்பெறும்.

கார்த்திகை 23.11.2018 சைவ ஆலயங்களிலும்,
25.11.2018 கிறித்தவ தேவாலயங்களிலும்

மாவீரர் நினைவு வணக்க வழிபாடுகள் நடைபெறும்.

கார்த்திகை  11 / 27.11.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை
(765 BRITANNIA R.D WEST (HEART LAND) UNIT 2 இல் அமைந்துள்ள
மிசிசெளகா கொடை மையத்தில்(MISSISSAUGA DONOR CENTER இல்)
மாவீரர் நாள் நினைவுகளோடு
குருதிக் கொடை வழங்கப்படும்.
மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளில் இணைந்து எம் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதோடு
அவர்கள் கனவு மெய்ப்பட உறுதி எடுப்போம்.