வியாழன், 17 நவம்பர், 2022

பிரபாகரன் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

 அகரமுதல


விடுதலைப் பேரொளி பிரபாகரன் 68ஆவது பிறந்த நாளையொட்டிச்

சென்னை மாநகர அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டி!

முதல் பரிசு: உரூ.50,000/-

இரண்டாம் பரிசு: உரூ.25,000/-

மூன்றாம் பரிசு:உ ரூ.10,000/-

மேலும் 5 ஆறுதல் பரிசுகள்

நாள்: 26.11.2022

மாநகர் சென்னையில் மறத்தமிழ் வளர்க்கும்

மாணவர் – மாணாக்கியருக்கு அன்பு வணக்கம்!

பிரபாகரன் என்பது பெயர் மட்டுமில்லை.

அது விடுதலையின் முகவரி.

அச்சமின்மையின் அக வரி.

பிரபாகரன். ஆவேசம் பொங்க உரையாற்றுகிற பேச்சாளரில்லை. அரிதினும் அரிதான அவரது உரைகளில் சொல்மாயங்கள் இருந்ததில்லை. ஆனால், அவரது சொற்கள் ஒவ்வொன்றும் தமிழீழ மக்களின் உணர்வைப் எதிரொலித்தன. தூய்மையினும் தூய்மையான உண்மை ஒவ்வொரு சொல்லிலும் இருந்தது. அதனால்தான் தமிழினத்தின் அடையாளமாகவும் தமிழர் எழுச்சியின் வடிவமாகவும் திகழ்கிறது அந்த மாவீரனின் பெயர்.

ஆர்ப்பாட்டமாகப் பேசி ஆரவாரங்களை அறுவடை செய்து கொண்டிருக்காமல்

அமைதியாகவும் பொறுமையாகவும் ஒரு நதி போலவே நகர்ந்தது பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை.

பிரபாகரன் கடந்த பாதைகளில் மென்மையான மலர்கள் தூவப்பட்டிருக்கவில்லை…

கற்களும் முட்களுமே நிறைந்திருந்தன!

அந்த நிலையிலும் அறம் சார்ந்த மறம் என்கிற நிலையிலிருந்து அணுவளவு கூட

விலகிவிடவில்லை அந்த மாவீரன்.

பிரபாகரனின் 68ஆவது பிறந்தநாளையொட்டிப் பேச்சுப் போட்டியாக நடத்தப்படுகிற இந்த நிகழ்வு, பிரபாகரன் என்கிற விடுதலை விருட்சத்தை இளைய தலைமுறையினர் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான முயற்சி.

பேச்சுப் போட்டியில் பங்கேற்பதற்கான நடைமுறைகள்:

1. இது சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் – மாணாக்கியர்களுக்கான போட்டி மட்டுமே!

2. பங்கேற்க விரும்பும் மாணவர் – மாணாக்கியர் தங்கள் பெயர்களைக் கீழ்க்காணும் எங்களது புலன (WhatsApp) எண் அல்லது மின்னஞ்சலில் பதிவு செய்ய வேண்டும்.

3. பெயர்களைப் பதிவு செய்யும்போது பயிலும் கல்லூரி – துறை போன்ற விவரங்கள்,

பெற்றோர் பெயர்களுடன் கூடிய முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்லூரி அடையாள அட்டையின் ஒளிப்படி – போன்றவை தேவை.

4. தகுதிச் சுற்று, இறுதிச் சுற்று என்று இரண்டு கட்டமாகப் போட்டி நடைபெறும். தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மாணவர்களின் தொடர்பு எண் அல்லது மின்னஞ்சலுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.

5. தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுவோர், கார்த்திகை 10 /நவம்பர் 26-ஆம் நாள் (26.11.2022, சனிக்கிழமை) சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்பர்.

6. தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறிவிக்கப்படும்.

7. கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் அடங்கிய தகுதி வாய்ந்த நடுவர் குழு ஒன்று மாணவ

மாணாக்கியரின் பேச்சுத் திறனை மதிப்பிடும். நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.

கல்லூரி வளாகங்களைத் தமிழால் இழைப்போரே!

உணர்வால் தமிழரை இணைக்க வருக!

தமிழீழ ஆதரவுக் கலைஞர்கள் – இளைஞர்கள் – தொழிலாளர்கள்

புலன / அலைபேசி எண்: 9841 906290, மின்னஞ்சல் முகவரிprabha68official@admin
குவிகம் சிறுகதைப் போட்டி

 அகரமுதலமுதல் பரிசு உரு. 5000/

இரண்டாம் பரிசு உரூ. 3000/

மூன்றாம் பரிசு உரூ. 2000/

கதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 15.12.2022

கதைகள் 700 முதல் 1200 சொற்களில் இருக்க வேண்டும்.

magazinekuvikam@gmail.com மின்வரிக்குச் சொற்கோப்பாக அனுப்ப வேண்டும்.

தொடர்பிற்கு – 97910 69435 / பகிரி 944 2525 191

இதழில் வெளியிடப்படும் பிற கதை ஒவ்வொன்றிற்கும் உரூ. 1000/ வழங்கப் பெறும்.
கருநாடகத்தில் மாணவர் போட்டிகள்

 

அகரமுதலதமிழ்ப்புத்தகத் திருவிழா

மாணவர்க்கான போட்டிகள்

கருநாடகம்

கார்த்திகை 04, 2053 / 20.11.2022இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில்

 அகரமுதல


மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்

தமிழ்க்காப்புக் கழகம்

வலைத்தமிழ்த் தொலைக்காட்சி, அமெரிக்கா

இலக்குவனார் இலக்கிய இணையம்

இணைந்து இணைய வழியாக நடத்தும்

பேராசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

கார்த்திகை 04, 2053 / 20.11.2022 ஞாயிறு மாலை 6.00 மணி (இந்திய நேரம்)

அ.எண்: 94503360817

கடவுச் சொல்: 123123

நிகழ்ச்சித் தலைமை: பாவரசு வதிலை பிரதாபன்

மகிழ்வுரை: முனைவர் கோ.பெரியண்ணன்

தொடக்கவுரை: கவிஞர் குமாரசுப்பிரமணியன்

கருத்தரங்கத் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

சிறப்பு விருந்தினர்: புலவர் செந்தலை கெளதமன்

கருத்தரங்கம்

இலக்குவனார் சங்க இலக்கியப் பணி: முனவைர் கு.நாகம்மாள்

இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரைப் பணி: கவிச்செம்மல் ஆரோக்கியச்செல்வி

இலக்குவனாரின் குறள்நெறிப்பணி: முனைவர் கார்முகில் பழனிசாமி

இலக்குவனாரின் தமிழ்க்காப்புப்பணி: கவிஞர் பாபு சசிதரன்

இலக்குவனாரின் இதழ்ப்பணி: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ச்சுவை பருக இணைய வழி இணைக!

அன்புடன் அழைக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள்

 அகரமுதல


 


ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான

கட்டுரைப் போட்டி முடிவுகள்

உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டி முடிவுகள் வருமாறு:

முதல் பரிசு: முனைவர் தாமரை, திருச்சி

இரண்டாம் பரிசு: முனைவர் தானப்பன், புதுதில்லி

மூன்றாம் பரிசு:  முனைவர் வதிலை பிரதாபன்

முதல் பரிசிற்கான உரூ. 5,000 / தொகையில் கட்டுரையில் சில பிறமொழிச்சொற்கள் இடம் பெற்றிருந்தமையால்,  உரூ 2,000/  பிடிக்கப்பட்டு இருவருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு பெறுநர்

எழுத்தாளர் ஞானப்பிரகாசன்

திருவாட்டி புனிதா சிவக்குமார்

இரண்டாம் பரிசு பெற்ற முனைவர் தானப்பனின் கட்டுரையில் சில கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பெற்றமையால் பரிசுத்தொகை மூவாயிரம் உரூபாயில் உரூ.ஐந்நூறு பிடிக்கப்பட்டு பங்கேற்பாளர் ஒருவருக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்பெறுகிறது.

அவ்வாறு பரிசு பெறுநர்

ஆரணி பாலு (எ) கு.பாலாசி

இவர்களுக்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாளான கார்த்திகை 1 இல் / 17.11.2022 அன்று கூகுள் செலுத்துகை வழிப் பரிசுப் பணம் அனுப்பப்படும்.

பரிசுப் புரவலர்கள்

மேனாள் முதல்வர் முனைவர் மதியழகி

இலக்குவனார் மன நல மருத்துவமைனத் தலைவர் மரு.செல்வமணி தினகரன் ஆகியோருக்கு நன்றி.

கவிஞன் தமிழ்க்காதலன்

செயலாளர், தமிழ்க்காப்புக் கழகம்

திங்கள், 14 நவம்பர், 2022

கி.ஆ.பெ.விசுவநாதம் & சி.இலக்குவனார் பிறந்த நாள் விழா

 அகரமுதல


தமிழியக்கம்
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்
இணைந்து வழங்கும்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &
செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவது
பிறந்த நாள் விழா


கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணி
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்
வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127


தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்
சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்
நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு


புதிய, திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் :👇 

தமிழியக்கம்
முத்தமிழ்க் காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் (124)
செந்தமிழ்க் காவலர் 
சி. இலக்குவனார் (114)
பிறந்தநாள் விழா  

நாள் : 17.11.2022,வியாழன்,
காலை 10.00 மணி 
இடம் : விஐடி பல்கலைக்கழகம், சென்னை வளாகம் 

தலைமை : 
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

நிகழ்ச்சி நிரல்

10.00 - 10.02 மணி 
தமிழ்த்தாய் வாழ்த்து 

10.02 - 10.07 மணி 
வரவேற்புரை : 
திரு. மு. சுகுமார்
மாநிலச் செயலாளர், தமிழியக்கம்
 
வாழ்த்துரை :
10.07 - 10.12 மணி 
திரு. மு. சிதம்பர பாரதி
தென்தமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்

10.12 - 10.17 மணி 
முனைவர் கு. வணங்காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம் 

10.17 - 10.24 மணி 
புலவர் வே. பதுமனார்
பொருளாளர், தமிழியக்கம் 

10.24 - 10.34 மணி 
கவியருவி அப்துல்காதர்
பொதுச் செயலாளர், தமிழியக்கம் 

10.34- 10.44 மணி 
நெகிழ்வுரை :
திரு. க.சிறீகாந்த்
இயக்குநர்,
இந்திய தேசியக் கல்வி நிறுவனம் 

10.44 - 11.04 மணி 
தலைமையுரை :
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

11.04 - 11.24 மணி 
சிறப்புரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்

11.24 - 11.27 மணி 
நன்றியுரை : 
முனைவர் பெ. சசிரேகா
சென்னை மண்டலச் செயலாளர் 
தமிழியக்கம்

11.27 - 11.37 மணி 
விஐடி பல்கலைக்கழகம் (சென்னை)
தமிழியக்க உறுப்பினர்கள்
அய்யா வேந்தர் அவர்களோடு
குழுவாக நிழற்படம் எடுத்தல்