சனி, 8 ஜனவரி, 2022

குவிகம் நகைச்சுவை நிகழ்ச்சி – நடத்துபவர்: சுவாமிநாதன்

 அகரமுதல




மார்கழி 25, 2052 / 09.01.2022

ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

நுழைவு எண் 619 157 9931
கடவுச் சொல் /  Passcode:  kuvikam123   

அல்லது
 
https://bit.ly/3wgJCib

குவிகம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துபவர்:  சுவாமிநாதன்

 

வெள்ளி, 7 ஜனவரி, 2022

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு கவிஞர் மு.முருகேசிற்கு

 அகரமுதல

2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு கவிஞர் மு.முருகேசிற்கு



2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு(பால சாகித்திய புரசுகார்) விருது பெற குறும்பாக் கவிஞர் மு.முருகேசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேசு இப்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

   இவர் 10 புதுக்கவிதை, 9 குறும்பாக்(ஐக்கூ) கவிதை நூல், 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் முதலான 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 குறும்பா(ஐக்கூ)க் கவிதை நூல், 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.

   மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேசு, தமிழில் குறும்பா/ஐக்கூ கவிதைகளை ஓர் இயக்கம் போல் பரவலாகக் கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மு.முருகேசு எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான சிறார் இலக்கிய/பால சாகித்திய புரசுகார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.

   இவ் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேசு கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் புதிய உத்துவேகத்தைத் தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிகளுக்கு அளிக்கிறேன்” என்றார்.

விருதாளர் பேசி : 94443 60421


உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்

 அகரமுதல

உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்

23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணி

சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில்  சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ) சட்ட விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிக் கலந்து கொண்டு   சிரீகிருட்டிணா அரங்கில் இருக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்











திருச்சி சமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் முப்பெரு விழா

 

அகரமுதல



முப்பெரு விழா

திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று 'முப்பெரும் விழா' நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய "இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . ." நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன.

கல்லூரியின் செயலர் - தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர். ஐ.அரங்கநாதன், தமிழ்ச்சங்க அமைச்சர் திரு.பெ.உதயகுமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். கவிஞர் நி.அமிருதீன் எழுதிய 'இலைகளின் மௌனம் கவிதைகளாய்' கவிதை நூலை வெளியிட்டு, கல்லூரிச் செயலர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் திரு. து.பிரபாகரன் அவர்கள் நூலை அறிமுகம் செய்தார். சமகாலப் பாதிப்புகளும் சமூக பிரக்ஞைகளும் தன்னைக் கவிதை எழுதத் தூண்டின என ஏற்புரையில் நூலாசிரியர் நி.அமிருதீன்  குறிப்பிட்டார். தமிழ்த்திரைப்பட வசனங்கள் தொடர்பாடல் திறன்களை வளர்க்க எங்ஙனம் உதவுகின்றன என்பதை உரிய சான்றுகளுடன் நகைச்சுவை ததும்ப ஆளுமைப் பயிற்சியாளர் திரு வெ.தேவராசு சிறப்புரை யாற்றினார்.

 

தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் -மாணவர்களின் துறை சார்ந்த கல்வியியற் செயற்பாடுகளுக்குக் கல்லூரி நிருவாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என முதல்வர் முனைவர் சை. இசுமாயில் முகைதீன் தலைமையுரையில் குறிப்பிட்டார். கல்லூரி நிருவாகக் குழுப் பொருளாளர் ஆசி எம்.சே. சமால் முகமது. துணைச் செயலாளர் முனைவர் க. அபுதுல் சமது, மதிப்பில் இயக்குநர் - உறுப்பினர் முனைவர் கா.ந. அபுதுல் காதர் நிகால் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் அ. முகமது இபுராகீம், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம். முகமது சிகாபுதீன், விடுதி நிருவாக இயக்குநர்கள் முனைவர் கா.ந. முகமது பாசில், செல்வி ச. ஆசிரா பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.

முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் கலைப்புல முதன்மையர் முனைவர் அ சையத்து சாகீர் அசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் திரு.க. இமதாதுல்லா  நன்றியுரை நவின்றார். நிகழ்ச்சியில் சங்கமம் ஆசிரியர் கருத்தரங்கம், மாணவர் படைப்பரங்கம் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்கள்,ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பிறதுறைப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 


வியாழன், 6 ஜனவரி, 2022

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

 அகரமுதல




உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033)

தமிழர் திருநாள்

திருவள்ளுவர் புத்தாண்டு

வாழ்த்தரங்கம்

 

தமிழே விழி !                                                                                                தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

இணைய உரையரங்கம்:

மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022

காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: செல்வி வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

கவியுரை:

பாவலர் மு.இராமச்சந்திரன்தலைவர்,  தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

கவிஞர் முனைவர் கோ.கலைவேந்தன்தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம்

புலவர்.பழ.தமிழாளன், இயக்குநர், பைந்தமிழியக்கம்

 புலவர் அ. துரையரசி

முனைவர் தாமரை, தலைவர், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம்

சிறப்புரை:  முனைவர் முகிலை இராசபாண்டியன்

மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி 

அன்புடன் 

தமிழ்க்காப்புக்கழகம்  &  இலக்குவனார் இலக்கிய இணையம்



புதன், 5 ஜனவரி, 2022

More should be done for Tamil in TNPSC exams: Scholar

 

More should be done for Tamil in TNPSC exams: Scholar



The Tamil Nadu government’s initiative to make a Tamil paper mandatory in the Tamil Nadu Public Service Commission (TNPSC) examinations is quite welcome, says  Ilakkuvanar Thiruvalluvan, president, Tamil Protection Association. But more should be done, he says, suggesting the inclusion of the ancient grammar text, Tholkappiyam. Below are excerpts from an interview he gave to inmathi.com

“I am doubly delighted at the Tamil Nadu government’s initiative, which will be conducive to the creation of a situation that guarantees government jobs only to those with knowledge of Tamil. This will put an end to the trend of Tamils being neglected on their own soil owing to non-Tamils occupying the higher echelons of power and creating a gap between the people and the government.

This government must go all-out to stem the trend of people from other States taking away job opportunities from local Tamils. To achieve this, not only the Tamil Nadu government but also the Union government, government agencies, nationalized banks, public sector units and private sector must all come up with an order mandating knowledge of Tamil for all competitive exams for jobs in the state.

This will go a  long way in fulfilling  the plan to make Tamil the official language entirely in letter and spirit.  I had put forward these ideas at a workshop held by TNPSC experts in the 1990s.

Tamil and Tamils boast of a 3,000-year-

 old classical grammar text Tholkappiyam. 

But, it is unfortunate that it finds no place in the primary syllabus.

Tamil and Tamils boast of a 3,000-year-old classical grammar text Tholkappiyam.  But, it is unfortunate that it finds no place in the primary syllabus. Even at graduate and postgraduate levels, it is studied only by way of a grammar paper and a culture paper.  The TNPSC examination committee members seem to have totally neglected Tholkappiyam in the Tamil papers with an ulterior motive.  It can hardly be constructed as an omission by oversight. Tholkappiyam is not only a book of grammar but also a guide for life.

Referring to the inclusion of 19 chapters from Tirukkural in the TNPSC syllabus, Thiruvalluvan wondered at the logic. “Generally, the chapters are selected based on their serial numbers which can be divided by five,” he said, wondering at the selection of 19 chapters at random 19.

“Once in two years, 25 chapters from Tirukkural can be included in the TNPSC syllabus so that the candidates, who keep writing the exams undeterred by failures, will become highly familiar with the Tamil classical work,” he said.

Referring to the Sanskrit paper in the TNPSC syllabus, Thiruvalluvan said it had probably been included during the previous regime itself.  If there are exclusive papers for every Indian language, then Sanskrit paper can be justified.  “For those going to work in Tamil Nadu, if selected through the competitive exams, is the knowledge of an artificial language necessary? The Centre has already launched a campaign to popularize Sanskrit. Should Tamil Nadu chip in with its mite on this count? The Tamil Nadu government must intervene immediately to ensure the removal of Sanskrit paper from the TNPSC exam syllabus.”

The Centre has already launched a campaign

to popularize Sanskrit.

 Should Tamil Nadu chip in with its mite on this count?

As regards the history papers for the examination, Thiruvalluvan said that the syllabus should be structured in such a way as to ensure that Tamil civilization and Tamil history get precedence and also ensure that Sangam literature is not just read for namesake, but deeply. The anti-Hindi agitations are of historic and historical eminence. Hence they must figure in the syllabus. In English language paper too, Tamil history  should find its due slot, he noted.

On the Tamil script, Thiruvalluvan said, “The history of Tamil script as presented is per se wrong. Tamil grammar texts assert that all Tamil letters are of ancient origin. Except for minor alterations, the Tamil script has undergone no great changes. Letters found on epigraphs can hardly be considered as an evolution of Tamil script. Such changes are not found in palm-leaf manuscripts.”

The lesson on the evolution of the Tamil script is wrong and should be removed from the TNPSC syllabus, he said.



ஞாயிறு, 2 ஜனவரி, 2022

2022 இல் குவிகம் என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனைகள்

 அகரமுதல


மார்கழி 18, 2052 / 02.01.2022

ஞாயிறு மாலை 6.30

இணையவழி அளவளாவல் நிகழ்வு

2022 இல் குவிகம் என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனைகள்



நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்

நிகழ்வில் இணைய
கூட்ட எண்  / Zoom  Meeting ID:

 619 157 9931
கடவுச் சொல் /  Passcode:

 kuvikam123   

அல்லது
 https://bit.ly/3wgJCib

நம் வலை youtube இணைப்பு
https://bit.ly/3v2Lb38

 



திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா, கோவை

 

அகரமுதல


மார்கழி 18, 2052 / 02.01.2022

ஞாயிறு காலை 9.30

திராவிட இயக்கத் தமிழர் பேரவையில்

தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா

மாநகராட்சி கலையரங்கம்,இர.ச.புரம்(ஆர்.எசு.புரம்),

கோயம்புத்தூர்

தலைமை : பொள்ளாச்சி மா.உமாபதி

முன்னிலை :

 கோவை மாவட்டத் திமுகச் செயலாளர்கள்

சி.ஆர்.இராமச்சந்திரன்,

கோவை நா.கார்த்திக்கு,

 பையா ஆர்.கிருட்டிணன்,

 மருதமலை சேனாதிபதி,

மருத்துவர் கி.வரதராசன்

வாழ்த்துரை :

அமைச்சர் வி.செந்தில் பாலாசி,

மேனாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி,

 திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் இரா.வெண்மணி,

திராவிடன் அறக்கட்டளைத் தலைவர் கோவை பாபு 

நோக்க உரை : காசு.நாகராசன்

 நிறைவுப் பேருரை;  சுப.வீரபாண்டியன்

அழைப்பில் மகிழும்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை