சனி, 22 ஆகஸ்ட், 2009

அட்டவணை வாழ்க்கை...!



விஞ்ஞானம் முன்னேறிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது யாருக்குமே போதவில்லை. குறிப்பாக, இக்கால பள்ளிக் குழந்தைகளுக்கு நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத்தான் செய்கிறது. பள்ளிக்கூடம், பாடப் புத்தகம், தொலைக்காட்சி, தூக்கம் இவற்றோடே நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. இவற்றைக் கடந்து சிந்திக்க நினைத்தாலும் பிள்ளைகளுக்கு நேரம் இருப்பதில்லை. "பொருள் தேடி' ஓடும் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளுக்கான நேரத்தை பெற்றோர் அட்டவணை போட்டுத் திட்டமிடுகின்றனர். நகரம், கிராமம் என்ற வித்தியாசத்தையெல்லாம் கடந்து இக் கால குழந்தைகளின் மீது பெற்றோர் திணிக்கும் சுமைகள் அதிகம். காலையில் கராத்தே வகுப்பு, நீச்சல், நடனம், பள்ளி முடிந்து வந்தபின்னர் டியூசன், கம்ப்யூட்டர் பயிற்சி, ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் என வரிசைவைத்து பிள்ளைகளை அனுப்புகின்றனர். இந்த தனிப்பயிற்சிகளால் நிறைய பலன் கிடைக்கும் என்றாலும், அவர்களுக்கே தெரியாமல் ஒரு பெரும் இழப்பையும் மாணவர்கள் சந்திக்கின்றனர். ஆம்... புத்தக வாசிப்பு எனும் அருமையான பழக்கத்தை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர். இப்போது முப்பது-முப்பந்தைந்துகளில் இருக்கும் இளைஞர்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏறத்தாழ அனைவருக்குமே வாசிப்புப் பழக்கம் அறிமுகமாவது ஆகியிருக்கும். அறிவுத்தேடலின் விளைவாக கதை, இலக்கியம், நாடகம், சிறுவர் இதழ்கள் என தேடித் தேடிப் படித்தவர்கள் ஏராளம். நூலகத்தில் காத்திருந்து நல்ல நல்ல நூல்களில் மூழ்கிப் போனவர்கள் பலர். ஆனால், இக் கால மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கக் கூட பெற்றோருக்கு மனமில்லை. பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறே இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது இந்த எண்ணத் திணிப்பு இருக்கக் கூடாது. அரிதிலும் அரிதாக வாசிப்புப் பழக்கம் உள்ள மாணவர்களையும் கண்டித்து, பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்வது தவறான முன்னுதாரணம். சிறு வயதிலேயே குழந்தைகளை நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் பெற்றோருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மாதாந்திர பட்ஜெட்டில் மஞ்சளில் ஆரம்பித்து மாங்காய் தொக்கு வரை இடம்பெறுகிறது. ஆனால், எத்தனை வீடுகளில் புத்தகங்கள் வாங்குவதற்கு என தனியாக பணம் ஒதுக்குகின்றனர்? இத்தனை எதற்கு... செய்தித்தாள் வாங்காத பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா? வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் இன்றைய போட்டி உலகத்தை மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'. இண்டர்நெட் மையங்களுக்கு "சாட்டிங்' செய்ய நாள் தவறாமல் செல்லும் இளைஞர்கள், நூலகத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. இப்போதெல்லாம் நூலகங்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவற்றிலும் நூலகங்கள் இருந்தும் செயல்படாத நிலையிலேயே உள்ளன. இதனால், சிறந்த இலக்கிய நூல்கள், கதைகள், சரித்திர நூல்களின் அறிமுகம்கூட தற்போதைய மாணவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. வாய்ப்புக் கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இவற்றைப் படிப்பதற்கு விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், சினிமா என பிற பொழுதுபோக்கு அம்சங்கள் விழுங்கிவிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில், சென்னை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் சற்று ஆறுதலைத் தருகிறது. விழாக்களில் பரிசுப் பொருள்களுக்குப் பதிலாக புத்தகங்களைக் கொடுக்கலாம் என்பது சிறந்த யோசனை. இதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பிள்ளைகள் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவர்களை நூலகத்தில் உறுப்பினராக பெற்றோர் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு வாசிப்பின் மீது நிச்சயம் ஆர்வம் பிறக்கும். புத்தகங்களைப் படிக்கப் படிக்க, எழுத்தாற்றலும் கைகூடும். வாசிப்பு என்பது பொழுதுபோக்குவதற்கான பழக்கம் அல்ல; அக, புற வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

(தினமணியில் பதியவில்லை)

அருமையான கட்டுரை. மனப்பாடக் கல்வி முறையும் அட்டவணை வாழ்க்கையும் தொலைநதால்தான் நல வாழ்க்கையைக் காண இயலும். அதற்கேற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதுடன் பெற்றோர்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக எண்ணி வளர்க்க வேண்டும். -- இலக்குவனார் திருவள்ளுவன்





ராஜீவ் காந்தி
உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகள் ராணுவமயமானது. "48 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் ராணுவம் வசமாகும்' என்று பிபிசி வானொலியின் செய்தியில் நிருபர் மார்க்துலி தெரிவித்தார். இச்சூழல் குறித்து விடுதலைப் புலிகள் 1987-இல் வெளியிட்ட "இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்னையும்' என்ற வெளியீட்டில் கூறியிருப்பதாவது: "ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ்குடா நாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியதுடன் வடக்கிலும் கிழக்கிலும் பெரிய அளவிலான ராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டது. வடக்கில் மட்டும் இருபதினாயிரம் துருப்புகள் வரை யுத்தத்தில் குதித்தன. எமது கொரில்லா அணிகள் பல்வேறு அரங்குகளில் சிங்கள ஆயுதப்படையினரை எதிர்கொண்டு வீராவேசத்துடன் போர்புரிந்து வந்தன. ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் நாம் எதிரியைச் சமாளித்துக் கொண்டிருந்தோம். எதிரியின் ஆகாயக் குண்டு வீச்சுகள், பீரங்கி மோட்டார் செல் தாக்குதல்களிலும் ராணுவ வெறியாட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மடிந்தவண்ணம் இருந்தனர். இந்த இக்கட்டான யுத்தச் சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவியை நாடினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு இலக்காகி வருகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, எமது மக்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யுமாறு நாம் பாரதத்திடம் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்தோம். எமது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாகக் கூறிக்கொண்ட பாரதம் மெüனமாக இருந்தது. நாம் கோரிய ஆயுதப்படையின் விவரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்ற முக்கிய ராணுவத் தகவல்களைச் சேகரித்து "ரா' அதிகாரி உண்ணிக்கிருஷ்ணன் இலங்கை அரசிற்குச் சமர்ப்பித்தார். பின்னர் உண்ணிக்கிருஷ்ணன் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் சிங்கள ராணுவம் தனது போர் உபாயங்களை வகுத்து, ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியா எந்த வகையிலும் இனி போராளிகளுக்கு உதவாது என்ற நம்பிக்கையில் இருந்த சிங்கள அரசு, மக்கள்மீது கணக்கில்லாக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் மக்கள் உண்ண உணவும், உயிருக்குப் பாதுகாப்புமின்றி துன்பத்துக்கு ஆளாகி மேலும் அகதிகளானார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து, இலங்கையின் தற்போதைய கொடுமைகளைக் கண்டித்தும், யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்குமாறும், மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளவாறு பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை "ஒரு தடை ஆயுதமாகப்' பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்திக் கூறியும் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் இலங்கைத் தமிழர் கட்சிகளும், போராளி இயக்கங்களும் கலந்துகொண்டன. ஐ.நா. மன்றத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டபோது, இது ஒரு பிரச்னை என்று பேசப்பட்டதேயொழிய, பொருளாதாரத் தடையை நீக்குவதற்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைப் பலரும் கண்டித்தனர். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பை உடனே வழங்க வேண்டும் என்றும், "டிசம்பர் 19-ஆம் தேதிய முன்மொழிவுப்படி' உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்க வகைசெய்ய வேண்டும் என்றும் செய்தி அனுப்பினார். இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில் "எரிபொருள் தடையை நீக்கும்படி' வேண்டுகோள் விடுத்தார். இவ்வளவு கோரிக்கைகளுக்கும் எந்தப் பலனும் இல்லை; ஜெயவர்த்தனா கேளாக்காதினராக, தான் விரும்பியதை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் வெடித்த குண்டு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அப்போது ஜெயவர்த்தனா, "அரசோ, போராளிகளோ யாரோ ஒருவர் வெற்றி பெறும்வரை யுத்தம் தொடரும்' என்று பிரகடனம் செய்தார். அவரின் அறிவிப்பை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. தனது சொந்த நாட்டில் தனது சொந்தப் பிரஜைகளின் மீதே தொடுக்கின்ற யுத்தம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமரிசிக்கப்பட்டது. ஐந்து மாதத் தடை காரணமாக யாழ் பகுதிக்கு எந்த மருத்துவப் பொருள்களும் செல்லவில்லை. உயிர்காக்கும் ஆக்ஸிஜன்கூடக் கிடைக்கவில்லை. இதனாலும் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் குண்டுகளுக்கு அஞ்சி கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலைக்கும் சிலர் கொழும்புக்கும் சென்றனர். இதில் கொழும்பு தவிர மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற இத்தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள்கூடத் தப்பவில்லை. எங்கு சென்றால் குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்று நம்பி மக்கள் கூட்டம் சென்றதோ அங்கே எல்லாம் குண்டுவீச்சு நடைபெற்றது. சிங்களக் கட்சிகள் பலவும் மெüனமாக இருக்க, ஸ்ரீலங்கா மகாஜனக்கட்சி முதன் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தது. இதன் தலைவர் விஜய குமாரணதுங்கா இந்தியா சென்று தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். தொண்டமான் "நடுவர் பாத்திரம் என்ற நிலையிலிருந்து இந்தியா விடுபட்டு, நீதி வழங்கும் தீர்வொன்றை உடனே அளித்து, தமிழ்மக்களைக் காக்கவேண்டும்' என்று அறிக்கை விட்டார். ஈழமே தீர்வென்று கூறிவந்த உலகத் தமிழ் இளைஞர் மன்றத் தலைவர் இரா. ஜனார்த்தனம், இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், லோக்தள் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுத் தலைவர், இலங்கையின் மீது ராணுவ வளையம் அமைக்கவேண்டும் என்றும் திராவிடக் கழகச் செயலாளர் கி.வீரமணியும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறனும் இந்திய அரசாங்கம் தேவையான, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கைப் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்,"தனது பிரஜைகளைக் கொன்றுகுவிக்கும் நாட்டுக்கு உதவிசெய்வது ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். இலங்கைக்கு உதவி புரியும் நாடுகள் தங்களது உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்!' என்றும் வலியுறுத்தினார். இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் பெரும் தவறுகள் நேர்ந்துள்ளதாக தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பெரும் யுத்தம் ஒன்றை ராஜீவ் காந்தியின் பேரில் நடத்தி வந்தன. இதன் பாதிப்பில் ராஜீவ் காந்தி உழன்று கொண்டிருக்கையில் இலங்கை அரசின் "ஆபரேஷன் லிபரேஷன்' என்கிற யாழ்ப்பாணம் மீட்பு நடவடிக்கை ஏற்படுத்திய விளைவுகளும் சேர்ந்து, அவருக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
கருத்துக்கள்

தினமணி இணையப் பொறுப்பாளருக்கு : நேற்றைய தினமணியில் 82 இணையப் பகுதியில் வெளியிடவில்லை. இன்றாவது வெளியிடப்படும் என எதிர்பார்த்தால் இன்றும் வரவில்லை. நேற்று விடுபட்டுப்போன செய்திப் பகுதிகளையும் கட்டுரைப் பகுதிகளையும் உடன் வெளியிட வேண்டுகிறேன். ஆசிரியருக்கு மடல், இன்றைய நிகழ்ச்சி, பிற செய்திகள் என எல்லாமும் ணையப் பக்கத்தில் வாசிக்க வழி செய்ய வேண்டுகிறேன்.

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2009 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணருக்கு சர்வதேச விருது



லண்டன், ஆக. 21: இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணரும், "சுலாப்' சுகாதார இயக்க நிறுவனருமான பிந்தேஸ்வர் பதக், 2009 ஆம் ஆண்டுக்கான பெருமைமிகு "ஸ்டாக்ஹோம் வாட்டர்' என்ற சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் சேவைக்கான இந்த விருது நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஸ்டாக்ஹோம் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பிந்தேஸ்வர் பதக்கிற்கு இந்த விருதை சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் வழங்கினார். இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, பிந்தேஸ்வர் பதக் பேசியது: முறையான சுகாதார வசதியை அளிப்பதன் மூலம் அனைவரும் குறிப்பாக, பெண்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். சிசு மரணத்தையும் குறைக்க முடியும். சுத்தமான தண்ணீரும், சுகாதாரமும் கிடைத்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடல்நலம் மேம்பாடு அடையும் என்றார் அவர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009




ஈழச் செய்திகளை பிரசுரிக்கத் தயங்கும்
தமிழ் நாட்டுப் பத்திரிகைகள்
பிரசுரித்த திகதி : 20 Aug 2009

தமிழக அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்தது தமிழக பத்திரிகைகள் ! தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை தவிர்த்து வருகிறது.

இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி தடை விதித்துள்ளது. அதை தமிழன் ஆட்சி செய்யும் தமிழகம் ஏற்று செயல்படுத்தி வருகிறது. சிங்கள அரசின் கொடுங்கோள் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து, உடமைகளை இழந்து அகதிகளாய் தவித்து வருகின்றனர். அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தில் இருந்து, வை.கோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், ராமதாஸ் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட அமைப்பை பற்றி செய்தி விளம்பரம், பத்திரிகை தொலைகாட்சிகளில் வெளியிடுவதும் சட்டப்படி குற்றம், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அன்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகைகளை மிரட்டியுள்ளது.

அதனால் திருமாவளவன் நடத்திய எழும் தமிழ் ஈழம் பற்றிய செய்தியையும், பெரியார் திராவிடர் இயகம் நடத்தி மாநாடு குறித்த செய்தியையும் தமிழக பத்திரிகைகள் புறகனித்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கூறும் செய்திகளை மட்டும் பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி மக்களைக் காக்கக் கோரி லண்டனிலிருந்து கவனயீர்ப்புப் பயணம்
பிரசுரித்த திகதி : 20 Aug 2009

தமிழ் நாட்டில் 1986ம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன்(MGR) முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரால் ஆசிவழங்கப்பட்டு, உலக சமாதானம் மற்றும் அணுவாயுத ஒழிப்பு தொடர்பாக சைக்கிளில் உலகப் பயணம் மேற்கொண்ட த.சீனிவாசராவ், இரா. ஞானசேகரன் ஆகிய இருவரும் தற்போது, வன்னி மக்களை விடுவிக்கக் கோரி உலகளாவிய ரீதியில் கவனயீர்ப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

இதுவரை சைக்கிளில் 120 நாடுகளைச் சுற்றி வந்த இவர்கள், இதுவரை சுமார் 600,000 மைல்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விருவரும் தற்போது பிரித்தானியாவில் தங்கியிருந்து, தமது கவனயீர்ப்பு உலக சுற்றுப் பயணத்தைப் பற்றி புலம் பெயர் தமிழர்களுக்கு விளக்கி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து காரில் முதலில் நோர்வே செல்லும் இவர்கள், பின்னர் பல ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்கா, கனடா சென்று இறுதியில், ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சிறப்பு மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளனர்.

பல நாடுகள், பல நகரங்கள், மற்றும் சிறு ஊர்கள் ஊடாக இவர்கள் பயணம் தொடரவிருக்கிறது. சுமார் 50 நாடுகள் ஊடாக 100,000 கிலோ மீட்டர் இவர்கள் பயணம் தொடரவிருக்கிறது. 2010ம் ஆண்டு நீயூயோக் நகரில் உள்ள ஜ.நா தலைமைச் செயலகத்தில் இவர்கள் பான் கீ மூனைச் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக் கணக்கான மைல்கள் இவர்கள் பயணிக்கவிருப்பதால் செல்லும் இடமெல்லாம், வன்னி மக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை இவர்கள் பரப்ப இருக்கிறார்கள். இதற்கான பிரத்தியேக கார் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பயணம் ஒரு வெற்றிப் பயணமாக அமைய அதிர்வு இணையம் வாழ்த்துகிறது.

வன்னி மக்களின் துயர்தீர இவ்விருவரும் எடுத்துள்ள புதிய முயற்ச்சிக்கு நாமும் தோளோடு தோள்கொடுப்போம்.

ஈழம்: உள்ளும் புறமும் எழும் குரல்



"ஈழப்போர் 4' முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி நடத்துவார் என்று சுட்டிக்காட்டப்பட்ட செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவின் இணையதளக் கட்டுரைகளில் அந்த இயக்கத்தின் அடுத்தகட்டப் பயணம் பற்றிய விளக்கங்களை பத்மநாதன் அளித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மவுனிக்கச் செய்து அரசியல் ராஜதந்திரப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது என்பது அதன் தலைவர் முள்ளிவாய்க்காலில் வைத்து எடுத்த தீர்மானம் என்று அழுத்தமாகக் கூறும் பத்மநாதன், இரண்டு முக்கிய சர்வதேச நிலைமைகளைக் கவனப்படுத்தியுள்ளார்: 1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது லட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது. 2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வர வேண்டும் என்பதிலும் அனைத்துலகும் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவைத் திரட்டுவது சாத்தியமற்றதாகவிருந்தது''. இந்தப் பின்புலத்தில், "தமிழீழ விடுதலைப் போராட்டம்' எதிர்கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில்கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது. இந்த அரசியல் ராஜதந்திரப் பாதையை முன்னெடுக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குப் பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்'' என்றும் பத்மநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார். ஐரோப்பிய யூனியனில் செயல்படும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை ஜெர்மனியில் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையாகும். வன்னியிலிருந்து ராணுவ நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டு முள்கம்பி வேலிகளுக்குள் ராணுவம் சுற்றி வளைத்துள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதற்குரிய நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் புனர்வாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; முகாம்களில் உள்ளவர்களில் குற்றவாளிகளென இலங்கை அரசு அடையாளம் காட்டுபவர்களை நீதி விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்; முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களை மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்; சர்வதேச உதவிகள் அந்த மக்களின் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கிய நான்கு தமிழ் மருத்துவர்களையும் முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்; ஏற்கெனவே அகதிகளாக உள்ள முஸ்லிம் தமிழ் மக்களையும் சமகாலத்தில் தத்தம் இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என்ற தீர்மானங்களை உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு ஒத்துழைக்குமாறு அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது. விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றது. இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்' என்ற வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று கோடிட்டுக் காட்டினர். கூடவே "இலங்கை இனப்பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும்' என்றும், "இலங்கை அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்' என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டமைப்பையும் அதனது ஆட்சிக்குழுவைத் தோற்றுவித்து நடைமுறைப்படுத்தும் பாதையையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்குழு அதேவேளையில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்துமென உறுதி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ராஜதந்திரத் தீர்வு என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளபோதிலும், இவற்றில் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்படவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது. ஈழத்தமிழர் தேசம், தமிழர் தேசியம், தாயகம், தனித்துவமான சுயநிர்ணயம் என்ற வாசகங்களில் இது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியதே. தமிழ் ஈழம் என்ற கோட்பாடு இந்த இயக்கங்களின் இருப்புக்கு அடிப்படையானது. எனினும் அது நீண்டகால லட்சியம் என்ற அளவில் மட்டும் தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடிக் கோரிக்கையாக அரசியல் தீர்வு முன்வந்துள்ளது என்பது ஒரு நல்ல அம்சம். ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைகளை எழுப்புகின்றன. வவுனியாவில் உள்ள முகாம்களில் 60 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை முன்னுரிமை அடிப்படையில் சொந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறும் இலங்கை அரசு, அவர்களின் குடும்பத்தாரை மட்டும் முகாம்களிலேயே நீடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இத்தகைய முதியவர்களில் 400 பேர் மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற, மற்றவர்கள் குடும்பத்தோடு முகாம்களிலேயே அல்லல்படுகின்றனர். இதே முகாம்களில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்க முன்வரும் தன்னார்வ அமைப்புகளுக்கும் இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. மாறாக, 13 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர்வாழ்வு முகாம் அமைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. இது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பதற்கான ஏற்பாடாகத் தெரிகிறது. 180 நாள்களுக்குள் முகாம்களில் உள்ளவர்களை மீள் குடியமர்த்துவோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணி கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபட்ச, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஐரோப்பாவை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்தவர்களைக் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண்டுகளும், ஒரு நூற்றாண்டு காலம் கூடப் பிடித்திருக்கிறது என்று பேசியுள்ளது இந்த இழுத்தடிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான அரசுப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்: ""போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது. தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சகவாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் அவர். சிங்கள இனவாதத்தின் குரலாகச் சித்திரிக்கப்படுகிற ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பேச நேரிட்டுள்ளது என்பது அங்குள்ள சற்றொப்ப மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் மனிதப் பேரவலத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் துயர் துடைப்புப் பணியும் அவர்கள் முகாம்களிலிருந்து சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்படுவதும் இலங்கை அரசின் முன்னுள்ள அவசர அவசியக் கடமை. கடுமையான சர்வதேச நிர்பந்தம் இருந்தால் ஒழிய ராஜபட்ச அரசு இதில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அக்கறையுடனும் செயல்படும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையில் ""13-வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக'' அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், தமிழர் வாழும் பகுதிகளில் தனி மாநிலம் என்பதையோ, சுயாட்சி அதிகாரம் என்பதையோ ஏற்க முடியாது என்றும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுக்க இயலாது என்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வை நோக்கி ராஜபட்ச அரசு அடியெடுத்து வைக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இந்தப் பின்னணியில் இலங்கைக்கு உள்ளும் புறமுமாக அரசியல் தீர்வை வலியுறுத்தி எழுந்துள்ள குரல்களும் இதுகுறித்து இந்திய அரசின் தலையீடு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய அரசு தன் செயல்பாட்டில் வேகத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டியதை வலியுறுத்துவனவாக உள்ளன. மன்மோகன் சிங் அரசு இத்திசையில் இனியேனும் பயணிக்குமா?
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போருக்கு
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை



சென்னை, ஆக.20: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எல்டிடிஈயினரை தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறது என்றார். இது மேலும் தொடர்ந்தால் அவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.இருதினங்களுக்கு முன் சென்னையில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுரை ரயில்நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது வெட்கக்கேடானது என்றார்.தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இக்கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

. . . . . . . . . . . சிலர் மனித நேயமின்றிச் செய்தித்தாள்களில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் நக்கிப்பிழைப்பதற்காகவும் தமிழர்க்கு எதிராகப் பேசுவதைத் தடை செய்ய வேண்டும். இப்பொழுது இப்பேச்சில் இடம் பெற்ற்வர் ( அவர் பெயரைக குறிப்பிட்டாலே பாவம் வந்து ஒட்டிக் கொள்ளும்) தன் முன் எழுத்துகளில் 'ஈ.வெ.' என வருவதை எடுத்துவிட வேண்டும். நாளும் மடியும் தமிழ் ஈழ மக்களுக்காகக் குரல் கொடுப்போர் யாராயினும் வாழ்க! வீரமும் ஈரமும் கொண்ட விடுதலைப் புலிகள் வெல்க! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் வாழ்க! தமிழ் ஈழம் வெல்க! ஈழ-இந்திய உறவு ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2009 3:38:00 AM
போச்சுடா! ஐயா, தன் இருப்பைக் காட்ட மீண்டும் உளறத் தொடங்கிவிட்டாரா? அருளிலிருந்து முத்து வரை பலரும் கேட்டுள்ள முறையான கேள்விகள் சரிதான். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு அதற்கு எதிராகப் பேசுவோர் மீது நீதி மன்ற வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழர் நலனுக்கு எதிராகப் பேசுபவர்களை உடனே நாடு கடத்த வேண்டும். சிங்களர்களில் மனித நேயம் மிக்கவர்களே, 100 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் மோசமாக இருந்த சூழல் பெரு வெள்ளத்தால் மிகவும் மோசமாகி விடடதாகவும் போர் முடிந்து விட்டது என்ற பின் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வைப்பது முறைகேடானது என்றும் ஏறத்தாழ 40,000 பேருக்கு மேற் பட்டவர்கள் உணவு, மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டமையாலும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டமையாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இன அடிப்படையில் படுகொலை செய்வது மிகவும் கொடூரமானது என்றும் பேசி வரும் பொழுது . . . . . . . . .( தொடர்ச்சி காண்க) -இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2009 3:37:00 AM

its great mistake of karunanithi,who always brought the ' kuppai ' to ' goburam '.now the kuppais all together talking about the congress leaders, u all see in forth coming days this thiruma will make comments about kalaignar also. naai vaalai nimirtha mudiyathu. before vaiko then ramdoss now this vc thiruma,all the proud will go to karunanithi. ada pongadaa. tamilaam eelamaam, mannaggatti.

By unmai vilambi
8/21/2009 12:59:00 AM

When MK Ghandi declared 'Sattamarupu iyakam' and 'quit india movement' British also threatned like this. British also banned all movements. Does that stop india's freedom?. He just barks..It can be ignored.

By Muthu
8/21/2009 12:02:00 AM

thirumavalavan the greatest leader srilankan tamilanikku safety god. so elango don,t speak your mouth first close you try go to tamilnadu

By k.veeramani
8/20/2009 11:50:00 PM

Mudhalil naam Indian endra unarvu indha Thirumavukku varattum. Pinnar avar Thamizhan endru solli kollattum. Puligal panathai abes panna paakiraara Thiruma

By s.arul
8/20/2009 11:48:00 PM

தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதால் என்ன தவறு என்பதை முதலில் விளக்குங்கள். தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு எதிராக பேச உரிமை இருக்குமேயானால், ஆதரித்து பேசுவதற்க்கும் உரிமை உண்டு. காந்தி கொலைக்கு பிறகு R.S.S இயக்கம் தடைதன் செய்யப்பட்டது, அந்த இயக்கத்தை ஆதரித்து பேசியதால்தான் அந்த தடை பிறகு நீக்கப்பட்டது. “வரலாற்றை மறைக்க முடியாது”

By Ramnath
8/20/2009 11:31:00 PM

இந்தியாவில் முதலில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் காங்கிரஸ் தான். It's Leadership has ignored the voice of millions of people in Tamilnadu and is responsible for a mass genocide in the island. Is there a legal way to ban Congress or it's leadership in Tamilnadu? அதுவே நாட்டை ஆளும் போது விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதில என்ன தவறு. விடுதலைப் புலிகள் இயக்கம் எதற்காக தடை செய்யப்பட்டது. முதலில் அதற்கு சரியான காரனம் சொல்ல முடியாமா இளங்கோ? நாட்டின் பாதுகாப்பிற்க்கும், இறையாண்மைக்கும் குந்தம் விளைவிக்கும் நூற்றுகனக்கான இயக்கங்கள் ஓட்டுவங்கிக்காக சுதந்திரமாக உலாவும்போது, யாரோ ஒரு தனி மனிதனின் சாவுக்காக எங்கோ உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழன் மீது தடைவிதித்ததற்க்கு இந்த அரசு வெட்கித்தலை குனியவேண்டும்.

By Karthi
8/20/2009 11:29:00 PM

சூடான செய்தி: நார்வேயின் ஐ. நா. தூதர் மோன ஜூல் ஐ. நா. செயலாளர் பான் கீ மூனின் செயல்பாட்டினை, குறிப்பாக இலங்கை விடயத்தில், கிழிகிழியென்று கிழித்துள்ளார். பான் கீ மூனை "திறமையற்றவர்", "தகுதியில்லாதவர்" என்று வர்ணித்துள்ளார். பான் கீ மூனுக்கே இந்த நிலைமை என்றால், இளங்கோவன் எம்மாத்திரம் ? இவன் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் கார் ஓட்டுபவன்.

By தமிழன்
8/20/2009 11:24:00 PM

திருமவலாவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பண்ணின ஆட்டூழியாத்தை பார்த்தீர்களா?. இவரும் ராமதாஸ் போல ஒரு விச செடி. உடனே அழிக்கவேண்டும். இல்லை என்றால் ஆபத்து.

By Akathi tamilan
8/20/2009 10:31:00 PM

www.engaltheaasam.com ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க விடுதலைப்புலிகள் பணம் பயன்பட்டிருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீலங்கா அமைச்சர் ஒருவர். அப்துல் ரஷாத் என்ற ஸ்ரீலங்கா அமைச்சர், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த்தின் படங்களை தயாரிக்க விடுதலைப்புலிகளின் பணம் பயன்பட்டிருக்கிறது என்றார். விடுதலைப்புலிகளின் பணம் நேரடியாக ரஜினிகாந்திற்கு செல்லவில்லை என்று சொன்ன அவர், லண்டனில் இருக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவருக்கு இந்த பணம் சென்று அவர் மூலம் அந்த பணம் ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க பயன்பட்டிருக்கிறது என்றார். மேலும் தமிழ்நாட்டில் வைகோவின் ம.தி.மு.க.,மற்றும் ராமதாஸின் பா.ம.க., ஆகிய கட்சிகளும் விடுதலைப்புலிகளிடமிருந்து பணம் பெற்றிருக்கின்றன என்றார் அவர்.

By Akathi tamilan
8/20/2009 10:30:00 PM

vada machi evk.. seruppala adi vangi sethuduva.. thamilanuku ethiraha kutai kulappathe... thamil elathulla setha ayiram ayiram tamilankku nee padil solannnum!! sudanthira elam adainthe thiruvom.. tamilan ondu pattal.. ulagam athirum.. unnaipola ula thirutu mundaingalai muthalil olikkannum.

By pandi
8/20/2009 9:33:00 PM

elangovan u r a STUPID U R A MAT

By PRABHAKARAN EAN THALAIVAN
8/20/2009 9:29:00 PM

தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதால் என்ன தவறு என்பதை முதலில் விளக்குங்கள். தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு எதிராக பேச உரிமை இருக்குமேயானால், ஆதரித்து பேசுவதற்க்கும் உரிமை உண்டு. காந்தி கொலைக்கு பிறகு R.S.S இயக்கம் தடைதன் செய்யப்பட்டது, அந்த இயக்கத்தை ஆதரித்து பேசியதால்தான் அந்த தடை பிறகு நீக்கப்பட்டது. “வரலாற்றை மறைக்க முடியாது”

By சோழன்
8/20/2009 9:28:00 PM

PODA....EVARU PERIYA PARUPPU...SOLLA VANDHUTTAR

By SAITHAI KITTU
8/20/2009 9:07:00 PM

Quater Govindha - Yennathu ithuuu - Appu Vecchum putthi varalaya

By Shankar
8/20/2009 9:06:00 PM

அ ஆஆஆ..குணத்தை இழந்தே‌ன்! காங்கிர‌ஸ்‌சில செர்ந்தே‌ன்! தமிழன் என்பதை மரந்தே‌ன்! ஈரொடு தொகுதியையும் இழந்தே‌ன்! வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏதெ...ஏதெ...ஏதெ....!!!!

By Rathakkaneer THONDAN
8/20/2009 9:05:00 PM

இவன் இப்படி பேசித்தான் தோத்தான். பட்டும் தெளியளியே.இபா இப்படி பேசி ராஜ்ய சபை போக பார்க்கிறான் போல.

By sivanesan
8/20/2009 8:46:00 PM

DAI Elangovan , rAJAPAKSE'S AGENT. You bloody stupid go and read a book " State with In Stae" by ex KGB (Soviet lady) . Rajiv , sonia , soni's mother and Rahul so for got 2 BILLION US Dollars as commission for weapon procurement from 1984 until now. Dont talk about security and iraiyanmai. This family looted the whole coutry of 2 Billion Dollars ( Almost 10000 crores) . This is known looting by this family. They betrayed india.Elangovan to be beaten by cheppal and hard shoe.

By Arumainayagam
8/20/2009 8:17:00 PM

Elangovan should be hanged for insulting the feelings of TAMILS...

By Slave of HINDIA
8/20/2009 8:13:00 PM

EVK IS VERY BOLD PERSON TALK ABOUT THE TRUTH.

By Guru
8/20/2009 8:12:00 PM

MANY NON TAMILS ARE ACTIVELY IN TAMIL NADU POLITICS. ELANGOVAN IS FROM KARNATAKA VIJAY KANTH AND VAIKO ARE FROM ANDHRA ORIGIN EVEN THE EVR PERIYAR HAILS FROM KARNATAKA WHY TAMILS ARE BEING CHEATED BY OTHER LINGUISTIC PEOPLE. A KANADA MAN HAS NO RIGHT TO TALK ABOUT TAMILS OR LTTE. HE HAS TO PACK UP TO KARNATAKA. WE SHOULD NOT ENCOURAGE NON TAMILS IN TAMIL NADU POLITICS.

By M. Annamalai
8/20/2009 8:06:00 PM

Unnai antha thevadiyal mahal soniyavukku ninaivu paduththa ippadi nee kathaipapathu valakkam thane. Thevadiyal mahal killed rajiv so i do not know why she payed her respect at his statue.

By reg
8/20/2009 8:05:00 PM

ஐயா அரசியல்வாதி! நீர் ஈரோட்டில் படுதோல்வியடந்ததை நினைவில் வைத்துக்கொண்டு பேசும்!

By ராஜசிம்ம பல்லவன்
8/20/2009 8:02:00 PM

www.engaltheaasam.com இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி.யை நாடு கடத்துமாறு இந்திய விசாரணை முகவரமைப்புகள் கோரிக்கை விடுக்கும் சாத்தியம் உள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள "உண்மைக் கதை'யைக் கண்டுபிடிக்க இந்த வலியுறுத்தலை இந்திய விசாரணை முகவரமைப்புகள் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக "டெக்கான் றெரால்ட' பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிருடன் இருக்கும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் பத்மநாதனாகும். 1991 இல் தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட சதியாளர்களுக்கு இடவசதி வழங்கியதில் பத்மநாதன் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக அறியவருவதாகவும் தமிழ் நாட்டிற்குப் பல தடவைகள் அவர் வருகை தந்ததாகவும் புலி உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும் வட்டாரங்கள் கூறியுள்ளன. பத்மநாதனுக்கு பிடியாணை பிறப்பித்த பின்னர் பத்மநாதனைத் தேடப்படும் குற்றவாளியென்று இன்ரர்போல் அறிவித்திருந்தது. குற்றச்சத

By Akathi tamilan
8/20/2009 7:55:00 PM

BARKING DOGS ARE NOT FIT FOR HUNTING. DONT BOTHER ABOUT THIS BARKING DOG. L.T.T.E. ARE FREEDOM FIGHTERS. THEY WANT TO LIBERATE THEIR MOTHERLAND FROM THE INVADERS. THIS BARKING DOG HAS BEEN PACKED OFF IN THE LAST ELECTION. HE DID NOT LEARN ANY LESSON FROM IT. DONT BOTHER THIS DOG.

By Paris EJILAN
8/20/2009 7:53:00 PM

www.engaltheaasam.com ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க விடுதலைப்புலிகள் பணம் பயன்பட்டிருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீலங்கா அமைச்சர் ஒருவர். அப்துல் ரஷாத் என்ற ஸ்ரீலங்கா அமைச்சர், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த்தின் படங்களை தயாரிக்க விடுதலைப்புலிகளின் பணம் பயன்பட்டிருக்கிறது என்றார். விடுதலைப்புலிகளின் பணம் நேரடியாக ரஜினிகாந்திற்கு செல்லவில்லை என்று சொன்ன அவர், லண்டனில் இருக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவருக்கு இந்த பணம் சென்று அவர் மூலம் அந்த பணம் ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க பயன்பட்டிருக்கிறது என்றார். மேலும் தமிழ்நாட்டில் வைகோவின் ம.தி.மு.க.,மற்றும் ராமதாஸின் பா.ம.க., ஆகிய கட்சிகளும் விடுதலைப்புலிகளிடமிருந்து பணம் பெற்றிருக்கின்றன என்றார் அவர்.

By Akathi tamilan
8/20/2009 7:51:00 PM

திருமவலாவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பண்ணின ஆட்டூழியாத்தை பார்த்தீர்களா?. இவரும் ராமதாஸ் போல ஒரு விச செடி. உடனே அழிக்கவேண்டும். இல்லை என்றால் ஆபத்து.

By ஸ்னேக் பாபு
8/20/2009 7:49:00 PM

திருமவலாவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பண்ணின ஆட்டூழியாத்தை பார்த்தீர்களா?. இவரும் ராமதாஸ் போல ஒரு விச செடி. உடனே அழிக்கவேண்டும். இல்லை என்றால் ஆபத்து.

By ஸ்னேக் பாபு
8/20/2009 7:48:00 PM

திருமவலாவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பண்ணின ஆட்டூழியாத்தை பார்த்தீர்களா?. இவரும் ராமதாஸ் போல ஒரு விச செடி. உடனே அழிக்கவேண்டும். இல்லை என்றால் ஆபத்து.

By ஸ்னேக் பாபு
8/20/2009 7:48:00 PM

திருமவலாவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பண்ணின ஆட்டூழியாத்தை பார்த்தீர்களா?. இவரும் ராமதாஸ் போல ஒரு விச செடி. உடனே அழிக்கவேண்டும். இல்லை என்றால் ஆபத்து.

By ஸ்னேக் பாபு
8/20/2009 7:46:00 PM

First, rectify the mistake of Chidambaram's fraudulent victory in Sivaganga and blame others.Were you not keeping quiet during Chennai corporation election violences and burning of three employees of Madurai Dinakaran Office?

By subramanian
8/20/2009 6:59:00 PM

அ ஆஆஆ..குணத்தை இழந்தே‌ன்! காங்கிர‌ஸ்‌சில செர்ந்தே‌ன்! தமிழன் என்பதை மரந்தே‌ன்! ஈரொடு தொகுதியையும் இழந்தே‌ன்! வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏதெ...ஏதெ...ஏதெ....!!!!

By Rathakkaneer THONDAN
8/20/2009 6:39:00 PM

இந்தியாவில் முதலில் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் காங்கிரஸ் தான். அதுவே நாட்டை ஆளும் போது விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதில என்ன தவறு. விடுதலைப் புலிகள் இயக்கம் எதற்காக தடை செய்யப்பட்டது. முதலில் அதற்கு சரியான காரனம் சொல்ல முடியாமா இளங்கோ? நாட்டின் பாதுகாப்பிற்க்கும், இறையாண்மைக்கும் குந்தம் விளைவிக்கும் நூற்றுகனக்கான இயக்கங்கள் ஓட்டுவங்கிக்காக சுதந்திரமாக உலாவும்போது, யாரோ ஒரு தனி மனிதனின் சாவுக்காக எங்கோ உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழன் மீது தடைவிதித்ததற்க்கு இந்த அரசு வெட்கித்தலை குனியவேண்டும்.

By ரசிகா
8/20/2009 6:35:00 PM

mudalil india vai inumum surandi kondirukum inda congressai dan thadai saianum. adhai pannadadal dan, avan avanum idu madiri pesa kilambitanga.

By shiva
8/20/2009 6:32:00 PM

ஆமா இவன் காங்கிரசு இவன் அம்மா அதிமுக அவன் புள்ள?ஏண்டா நாங்கெல்லாம் குருடன் என்று முடிவே பண்ணிட்டிங்களா?எல்லாம் தெரியும்டா உங்க குடும்பமே இவேரா வைத்து வந்தவர்கள் மற்றபடி எந்த துப்பும் உனக்கெல்லாம் இல்லை ..நி ஒரு நாள் நல்ல செமத்தியா அடிவாங்கப் போராய?பார்த்து பத்திரமா பொண்டாட்டியே பாத்துக்கோ! இல்லன்னா புலி துக்கிட்டு போயிரும்? காங்கிரஸ் என்றாலே இனி அடி விழும் பார்த்துக்கோ!

By கிராமத்தான்
8/20/2009 6:26:00 PM

nall kelvi ketinga ajmer ali. Aana iduku roshapattu elangovan pondra aalunga thookula thongi saagamaatanunga. Anda alavukku soodu, soranai avanuku illai. Election timela ippadi thaan avan avanukke appu vachikitan. Innum thirundatha jenmam anda elagovan.

By senthil kumar
8/20/2009 6:09:00 PM

EVKS belong to AP. He has no rights to talk about tamils. We need to send him to AP

By kumar
8/20/2009 6:05:00 PM

This guy needs to be send out from Tamil Politics, if he managed to exist congress should be rejected. With out understanding the sentiment of his own people how this idiot seems to behave for few penuts, shame on him, shame he brings to periyar

By sakthivel
8/20/2009 6:02:00 PM

eela thamilarkaluku ivvalu kodumai nadanthum antha kodumaikkellam kaaranamaa iruntha congrs kaaranaium DMK kaaranaium votu pohtu jeyikka vakkiraanungkale intha tamil naatu tamilanunga,,ivanunggu innum evlo kena pu.....ya iruppaanunga..veena pona aattu manthainga...tupeeeeiii...

By logantamil
8/20/2009 5:56:00 PM

மிஸ்ட‌ர் இல‌ங்கோவ‌ன் இதே திருமா புலிக‌ளை ஆத‌ரித்துபேசியே வெற்றிபெற்ருள்ளார் ஆனால் நீங்க‌ள் புலிக‌ளை ஆத‌ரித்தவ‌ரிட‌ம் தோற்றுள்ளீர்க‌ள் முடிந்த்தால் உங்க‌ள் தொகுதியில் உள்ள‌ அனைவ‌ருக்கும் மிர‌ட்ட‌ல் விடுங்க‌ளேன் நீங்க‌ள்தான் பெரிய‌ மாவீர‌னாயிற்றே அன்னே ரொம்ப‌ ஆடாதீங்க‌ நானும் திமுக‌, க‌ங்கிர‌ஸ் அனுதாபிதான் அதுக்காக் என்னுடைய‌ இன‌த்தை எந்த‌வித‌திலும் விட்டுகொடுக்க‌முடியாது. அய்யாவின் குடும்ப‌த்தில் பிற்ந்த‌தைத‌விர‌ உங்க‌ளுக்கு வேரு எந்த‌ த‌குதியும் கிடையாது. நாங்க‌ கேள்விகேட்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு விடைதெரியாம‌ல் ஓட‌வேன்டிவ‌ரும் ந‌ல்ல‌த‌ல்ல‌ நாக்கை அட‌க்குங்க‌ள். எம்.ஜெ.அஜ்மீர்அலி

By M.J.AJMEERALI
8/20/2009 5:51:00 PM

ஈ.வி.கே.எஸ் இளங்கோவnukku 1000 gold coins கொடுக்க வேண்டும் becoz அவர் ரௌடி போல செயல்பட நினைக்கிறார்.இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.அவர் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

By aNWaR
8/20/2009 5:47:00 PM

தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதால் என்ன தவறு என்பதை முதலில் விளக்குங்கள். தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு எதிராக பேச உரிமை இருக்குமேயானால், ஆதரித்து பேசுவதற்க்கும் உரிமை உண்டு. காந்தி கொலைக்கு பிறகு R.S.S இயக்கம் தடைதன் செய்யப்பட்டது, அந்த இயக்கத்தை ஆதரித்து பேசியதால்தான் அந்த தடை பிறகு நீக்கப்பட்டது. “வரலாற்றை மறைக்க முடியாது”...Well said சோழன்..These guys will make changes in rules only for their own convienience..REAL IDIOT!!!

By Martin Selvam
8/20/2009 5:42:00 PM

இதெல்லாம் ஒரு பொழப்பு, இப்படியெல்லாம் ஒரு பொறப்பு!

By காங்கிரஸ் THONDAN
8/20/2009 5:28:00 PM

EVK.. You are a bloody fool!! You don't have any qualification to talk against tamil freedom fighters!! Tamil Elam will be free soon from throkigal like you, karunas, selfish jayas. We will gather behind leaders who support Elam like ''Thamil Ena Thalaivan-Nedumaran'' to get our freedom.. You will see that if you are alive&living behind sonia's saree.

By durai
8/20/2009 5:23:00 PM

தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவதால் என்ன தவறு என்பதை முதலில் விளக்குங்கள். தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு எதிராக பேச உரிமை இருக்குமேயானால், ஆதரித்து பேசுவதற்க்கும் உரிமை உண்டு. காந்தி கொலைக்கு பிறகு R.S.S இயக்கம் தடைதன் செய்யப்பட்டது, அந்த இயக்கத்தை ஆதரித்து பேசியதால்தான் அந்த தடை பிறகு நீக்கப்பட்டது. “வரலாற்றை மறைக்க முடியாது”

By சோழன்
8/20/2009 5:23:00 PM

evs elangovan.. you belong to bofors/nagarwala/sonia mafia group.. u should be banned from entering tamilnadu first and packed off to hide in delhi durbar. Tamils will chase you out and like ur minded anti tamils. Valga Tamil, Velka sudantira tamil elam!!

By guna
8/20/2009 5:19:00 PM

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ரௌடி galukku முகமூடிகளை இலவசமாக வழங்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

By உயர் நீதிமன்றம்
8/20/2009 5:15:00 PM

EVKS = SOB

By kumar
8/20/2009 5:11:00 PM

கர்நாடகக்காரனெல்லாம் தமிழகத்திலிருந்து தமிழனை மிரட்டுகிறான் காலத்தின் கோலமடா.....

By arul
8/20/2009 5:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்