சனி, 6 அக்டோபர், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஏ.ஏ.எச்.கே.கோரி

அகரமுதல

 அட்டோபர் 21, 2049 ஞாயிறு 7.10.2018 மாலை 4.00

குவிகம் இல்லம்
ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை,
தியாகராயர்நகர், சென்னை 600 017

திரு ஏ.ஏ.எச்.கே.கோரி

– இன்றும் மயக்கும் அன்றைய திரைப்படப்பாடல்கள்


வெள்ளி, 5 அக்டோபர், 2018

சமூகநீதித் தமிழ்த் தேசம்! – வெள்ளி விழா

அகரமுதல

புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018,  மாலை 5.00

காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை

சமூகநீதித் தமிழ்த் தேசம்!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
வெள்ளி விழா
திலீபன் நினைவேந்தல்

 கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே! 
கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின்சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து!
 மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழிதுப்புரவுப் பணிக்கு எந்திரப்பொறிகளைப் பயன்படுத்து!
 பொது (நீட்டு ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடுஇந்தியஉயர்கல்வி ஆணையத்தைக் கைவிடு!
தமிழீழ இன அழிப்பில் 1983 தொடங்கி இன்று வரை இந்திய அரசின்குற்றப்பங்கு குறித்துத் தற்சார்பு விசாரணை நடத்து!
எமது இயக்கத்தின் கால் நூற்றாண்டு விழா வெற்றிபெற அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டுகிறோம். விழாவின் வெற்றி என்பது நாங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளின் வெற்றியாகும். இதைச் சாத்தியமாக்கவும் மக்கள் வாழ்வுரிமை மீட்கவும் தமிழர்களாய் அணிதிரண்டு வந்து கோரிக்கைகளுக்கு வலுசேர்க்க அழைக்கிறோம்.
மையம் கலைக்குழு பறை
கண்காணிப்பின் இருள்வெளி கல்லூரி மாணவர்கள் நாடகம்
நீ ஆண் நீ பெண் –  நாடகம்
சுப்ரமணிய ஆசான் குழு சிலம்பம்

தோழர் தியாகு சிறப்புரை
தோழர் வே பாரதி விழா உரை

– சுதா காந்தி
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
9865107107, 8667692976, 9940660299

புதன், 3 அக்டோபர், 2018

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

அகரமுதல

துபாயில் உணவின்றித் தவித்து வரும்

தமிழகத் தொழிலாளர்கள்

 ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர்.

மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம்

ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை

இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர்.
தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால் பேருந்து நிலையம் முதலான இடங்களில் தங்களது பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவிட விரும்புவோர்

058  990 3314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

கே.கே.எசு.ஆர். < aurosun@gmail.com >
தரவு
முதுவை இதாயத்து

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

அகரமுதல


புதுச்சேரியில்

இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.
தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில்புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர்அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்பொ.கு.உறுப்பினர் விலாசினி தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செய்தியாளர் சிவராசன்   நன்றிகூறினார்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

அகரமுதல

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018

மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை

புதுவைத் தமிழ்ச்சங்கம்

படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார்
இராவணகாவியச் சொற்பொழிவு 10 :

பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்


– பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

ஓமானில் பாரதி விழா

அகரமுதல

ஓமானில் பாரதி விழா

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்!
என்ற பாரதியின்  கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா?  ஆம்!
கடந்த புரட்டாசி 4, 2049  (20-9-2018) வியாழன் மாலை  ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம்,  மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது!
எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,
பாரதியை ஓமான் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
 இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மசுகட்டு தமிழ் மக்களைக்  கட்டிப்போடும் தந்திரம் பாரதிக்கு மட்டுமே உண்டு!  அப்பப்பா! என்ன நடை!  என்ன பாவனை! என்ன தோற்றம்!  பாரதியே மீண்டும் வந்து விட்டானோ என்ற உணர்வை அனைவருக்கும் தந்தது இசைக்கவியின் ஒப்பற்ற தியாகத் தோற்றமான ‘பாரதி’!
அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஈடு கொடுத்து, செல்லம்மாவாகவே மாறினார் என் அன்புச் சகோதரி திருமதி தருமா இராமன்!
குவளை கிருட்டிணமாச்சாரியாராக நடித்த விசய் சிவா, தன்னுடைய ஓய்வற்ற நிகழ்வுக்கிடையே, இதற்கெனவே மெனக்கெட்டு வந்து, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்!
அது மட்டுமா, அன்பு மகன் விவேக பாரதி, விட்டல் நாராயணன், பரமேசுவரன், கதிரவன்(சன்) தொலைக்காட்சி புகழ் சிரீ கணேசு, தீபா, கிருத்திகா, ஒப்பனைக் குமார், ஒளிவிளக்கு சார்லசு, மேடை அமைப்பிற்கு யுவராசு என அனைவரும் அவரவர் பணியில் மிளிர்ந்தனர்.
இதற்கு இசை அமைத்த என் அன்பு இளவல் வீணை வித்துவான் பரத்வாசு இராமன் தொடப் போகும் உச்சத்திற்கு அளவே இல்லை எனலாம்!
பாரதியார் பாடல்களுக்கு நடன அமைப்பச் செய்த திருமதி. இரேவதி சுந்தர் உழைப்பு அளவிட முடியாதது!
இவர்களோடு இணைந்து நடித்த உள்ளூர்ப் பங்களிப்பாளர்கள் தூள் கிளப்பினார்கள்!
இந்நிகழ்வை,
மசுகட்டில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான சுரேசமீ, நடத்தி வரும் திருக்குறள் பாசறை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது!  கவிஞரோடு துணை நின்ற கவிஞரின் மனைவி இரேவதி, குழ்நதைகள் சனனி (அனுசா), மீரா (அஞ்சனா), மற்றும்  சுரேசு, சேகர், ஆனந்தி  முதலான அத்துனை நண்பர்களும், விளம்பரதாரர்களும் இந்த நிகழ்வை ஒரு வெற்றித் திருவிழாவாகவே மாற்றியிருந்தனர்.
பாரதியின் கனவான அயல்நாடு செல்லவேண்டும் என்பது, ஓம் எனும் நாமத்தோடு தொடங்கும் ஓமானில் நிறைவேறி இருக்கிறது என்றால்,
கனவு மெய்ப்படும் என்ற  மெய் வாக்கின் உண்மை விளங்கும்!
– சுரேசமீ