சனி, 22 நவம்பர், 2014

இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’


இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’

53ithazhurai_nandri02
  ‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம்.
  ‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது.
  நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலான படைப்புகள், அனைவரையும் கவர்ந்துள்ளன.
  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் வெளிவந்த படைப்புகள் – குறிப்பாக இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள் – அனைவராலும் பாராட்டப்படுகின்றன. ‘அகரமுதல’ மின்னிதழில் நடுகற்கள் குறித்துத் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.
இதன் கட்டுரையாளர் திரு ச.பாலமுருகனுக்குவல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழின்
ஆவணி 23, 2045 / செப்.8,2014 வார வல்லமையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது ‘அகரமுதல’ மின்னிதழுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் சேர்ப்பதாக உள்ளது.இந்த நேரத்தில் வல்லமை குழுவினருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 53ithazhurai_nandri01
திரு வைகை அனிசு தொல்லியல், மரபியல் சார்ந்த செய்திகளைத் தருவது அயலகத்தவராலும் போற்றப்படுகிறது. இதழில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் நேர்வுகளும் உள்ளன.
  அகரமுதல் இதழ் படைப்புகள், வலைத்தளங்களிலும் மடலாடல் குழுக்களிலும் மின்னஞ்சல்களிலும் முகநூலிலும், நட்பு வளையத்திலும்(தமிழரின் முகநூல்) பகிர்முகத்திலும்(டுவீட்டர்) பகிரப்படுகின்றன.   இவை மூலமாகத் தவிர நேரடியாகத் தளத்திற்குச் சென்று ‘அகரமுதல’ மின்னிதழ் படிப்போரும் கணிசமான அளவில் உள்ளனர்.
  இவ்வாண்டு படைப்புகள் எண்ணிக்கையும் படிப்போர் படைப்பாளர் எண்ணிக்கையும் மேலும் பெருக வேண்டும்.
  ஒரே நேரத்தில் பல மின்னிதழ்களுக்கும் படைப்புகள் அனுப்புவது அல்லது பிற தளத்தில் வெளிவந்த படைப்புகளை அனுப்புவது என்பதைச் சிலர் கடைப்பிடிக்கின்றனர். அவற்றுள் மிகச்சிலவே வெளியிடப்படுகின்றன. கடந்த காலப் படைப்புகள் எனில் நாளும் வெளியான இதழின் பெயரும் குறிப்பிட்டு அனுப்பினால் வெளியிடலாம். ஆனால், நிகழ்காலத்தில் அவ்வாறு வெளியிடுவது ஏற்றதாக இராது. எனவே, அவர்கள் பொறுத்தருள வேண்டும்.
  பலர் “புதுக்கவிதை அனுப்பட்டுமா” எனக் கேட்கின்றனர். அயற்சொல் கலப்பு இல்லாமல் அனுப்புமாறு வேண்டியதும் பின்வாங்கி விடுகின்றனர். புதுக்கவிதை என்றாலே இலக்கணத்திற்கு முரணான தமிழ்த்தூய்மையைச் சிதைக்கின்ற வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நல்ல தமிழ் மரபைப் போற்றும் கவிதைகள் அனுப்புமாறு கவிவாணர்களுக்கு வேண்டுகிறோம். அறிவியல் கட்டுரை அனுப்ப முன்வருவோரிடம் தமிழ்க்கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றதும் அவர்களும் கட்டுரைகளை அளிக்க முன் வருவதில்லை. தமிழ் ஆர்வத்துடன் அறிவியல் கட்டுரைகள் படைப்போர் தமிழ்க்கலைச்சொற்களையே பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
  பலர் அனுப்பும் படைப்புகள் சீருருவில் இன்மையால்   நேரம் வீணாகின்றது. எனவே, சீருருவில் படைப்புகளை அனுப்புமாறும் வேண்டுகின்றோம்.
  பெரும்பான்மையான தமிழ்த்துறையினரும் தமிழ் அமைப்பினரும் கணிணிப் பயன்பாடு அறியாதவராக அல்லது கணிணியில் தமிழைப் பயன்படுத்த அறியாதவராக உள்ளனர். இந்த நிலை மாற மாற, அகரமுதல மின்னிதழும் வளர்ச்சியுறும்.
  விழாக்களில் ‘அகரமுதல’ மின்னிதழைக் குறிப்பிட்டுப் பாராட்டிவரும் விழா அமைப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், சந்திப்புகள் வாயிலாக அகரமுதல மின்னிதழைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி என்றும் உரித்தாகும்!
   படைப்புகள் அனுப்பியும் பகிர்ந்தும் மேலும் வளர்ச்சிப்பாதையில் ‘அகரமுதல’ மின்னிதழை நடைபோடச் செய்ய அனைவரையும் வேண்டுகிறோம்!
அன்னைத்தமிழில் அனைத்தையும் அளிப்போம்!
அகரமுதல மின்னிதழை வளர்ப்போம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 53ithazhurai_nandri03

இதழுரை

 ஐப்பசி 30, 2045 / நவ.16, 2014

 http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png


இதழாளர் மாநில மாநாடு, 2014

இதழாளர் மாநில மாநாடு, 2014

53jounalist_conference05

இதழுலுலக வரலாற்றில் இடம் பெற்ற

முதல் மாநில மாநாடு

அனைத்து இதழியல் தோழர்களே..!
ஊடக நண்பர்களே..!!
தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிருவாகிகளே…!!!
ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தைத் தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.!
அனைவருக்கும் தமிழ்நாடு இதழாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார வாழ்த்துகளையும், மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்றில் ஒரு புதுக் கல்லாக நாம் நமது 14- ஆவது மாநில மாநாட்டை இதழ் உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம்.
மறைந்த தோழர் இரவீந்திரதாசு முதலான மறைந்த இதழாளர்களுக்கு இரண்டு (2) நிமிட அமைதி(மவுனம்)  கடைப்பிடிக்கப்பட்டது.
மறைந்த தலைவர் தோழர் இரவீந்திரதாசு அவர்களின் அருள்வாழ்த்துடன் நம்மால் பெரும் போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் மத்தியில் நடத்தப்பட்ட முதல் மாநில மாநாடு இதுவேயாகும்.
தென்கோடிப் பகுதியான குற்றாலத்தில் 08.11.2014 சனிக்கிழமையன்று, குற்றாலம் திருமுருகன் மண்டபத்தில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களாலும், அகில இந்தியத் தலைவர்களாலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
மாநாட்டுத் தொடக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக நம் சங்க அ.இ.த. கொடி எசு.என். சின்கா முன்னிலையில் குடியரசுத்தலைவர் விருது பெற்ற இல்டன் பதின்- மேனிலைப்பள்ளி முதல்வர்   ஆர்.சே.வி. பெல் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகில இந்தியத் தலைவர்கள், பல்வேறு அரசியலாளர்கள், ஏராளமான சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஏற்றிவைக்கப்பட்ட அக்கொடி நம் சங்கப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகப் பட்டொளி வீசிப் பறந்தது.
மாநாட்டின் அடுத்தகட்ட தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
பல்வேறு கதம்ப மாலையாக பல்வேறு துறை அறிஞர்களால் அரங்கமும், மேடையும் அலங்கரிக்க நெல்லை பரமசிவம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நமது மாநிலத் தலைவர் தோழர்.டி.எசு.ஆர்.சுபாசு அவர்கள் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
அகில இந்திய இதழாளர் சங்கத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா கேரள மாநிலத் தலைவர் இராசன், செயலார் சம்சுதீன், கருநாடக மாநிலத் தலைவர் கௌடா, செயலாளர் பாசுகரரெட்டி, புதுவை மாநிலத் தலைவர் திரு. எம்.பி.மதிமகராசா, செயலாளர் பழனிச்சாமி, மது ஒழிப்பு அமைப்பின் தலைவர் சசிபெருமாள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்)முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நூர் முகமது (தேசியச் செயற்குழு உறுப்பினர்) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திரு.பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமிஇ.ஆ.ப. ‘நீதியின் குரல்’ சி.ஆர்.பாசுகரன், அமெரிக்க நாராயணன், கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் பெரைரா, மெகா தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆதவன், இதழாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் பி.மாரியம்மாள், ‘தென்காசி’ இ.அ.வங்கி முதன்மை மேலாளர் பாபு சுந்தரம், ‘தென்காசி’ செய்தியாளர் மன்றத் தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டின் சிறப்பம்சமாக “பத்திரிகையாளார் குரல்” சிறப்பிதழ் அகில இந்தியத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா அவர்கள் வெளியிடக் கலைஞர் தொலைக்காட்சிப் பொது மேலாளர் திரு.பெரைரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மறைந்த இதழளார்களான தலைவர் தோழர்.டி.எசு. இரவீந்திரதாசு படத்தை தோழர். எசு.என்.சின்காவும், திறனாய்வுத் தென்றல் தி.க.சிவசங்கரன் அவர்கள் படத்தைப் பழ.நெடுமாறன் அவர்களும், ‘நெல்லை’ இராமகிருட்டிணன் அவர்கள் படத்தை மெகா தொலைக்காட்சி ஆதவன் அவர்களும், தென்காசி (உ)லோகநாதன் படத்தைக் கலைஞர் தொலைக்காட்சிப் பொது மேலாளர் திரு.பெரைரா அவர்களும் திறந்து வைத்தனர்.
மறைந்த இதழாளர் தோழர்.’நெல்லை’ உட்லேண்ட் இராமகிருட்டிணன் குடும்பத்திற்குரிய குடும்ப நிதி, தேசியத் தலைவர் எசு.என்.சின்கா அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் செய்தியிதழ்களின் பங்கு சிறப்பானது. நாட்டில் மாற்றமும், மறுமலர்ச்சியும் நம் போன்ற இதழாளர்களால் மட்டும் கொண்டுவரமுடியும், உலக மொழிகளுக்கு அப்பால் இதழாளர்களால் மட்டுமே மக்களே ஒருங்கிணைத்து உயர்த்த முடியும். இதழாளர்கள்தான் அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக அமைய முடியும், அரசின் குறைகளை எடுத்துரைக்கும் இதழாளர்கள்தான் மக்களின் தொண்டர்கள் என்பன போன்ற கருத்துகள் அரங்கில் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பேருந்து, மூடுந்து, தொடர்வண்டி, வானூர்தி மூலம் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டு அரங்கையே தம் கைத்தட்டல்கள் மூலம் அதிரச் செய்தனர். அரங்கில் அமர இடமில்லாமல் அதைச்சுற்றியுள்ள தாழ்வாரப் பகுதியும் நிரம்பி வழிந்தது. காண வியப்பாக இருந்தது.
மாநில நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு   ஒன்றுபட்ட கை தட்டல்களுடன் ஏற்கப்பட்டன.
திருப்பதியில் கொடுத்த அறிந்தேற்புச் சான்றிதழை அனைத்து மாவட்ட உறுப்பினர்கள் அறியும் வகையில் அகில இந்தியத் தலைவர் தோழர் எசு.என்.சின்கா அவர்கள் காட்சிப்படுத்தி மகிழச் செய்தார்.
மாநாட்டிற்காக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கிடையே நமக்கென நேரத்தை ஒதுக்கி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்துத் தலைவர்களுக்கும், ‘தென்காசி’ சண்முகம் நன்றி தெரிவித்துக்கொண்டார். நாட்டுப்பாடலுடன் கூட்டம் இனிதே முடிந்தது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1)   தமிழ்நாட்டில் இதழாளர்களுக்கெனத் தனி நல வாரியம்
ஒன்று அமைக்கப்படவேண்டும்.
2)   மாக்கவி பாரதி பிறந்த நாளான திசம்பர் 11- ஐ இதழாளர் நாளாக அரசு அறிவிக்க வேண்டும்.
3)   இதழ்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினர்கள், இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள்,
இதழாளர் நலச் சங்கங்களின் சார்பாளர்களைக் கொண்ட
“நிலைக்குழு” (STANDING COMMITTEE) ஒன்றை அரசு தரப்பில் அமைக்க
வேண்டும்.
4)   இதழாளர்களுக்கு சில மாவட்டங்களில் மட்டுமே,
வீட்டுமனைஉரிமை ஆவணங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் வட்ட அளவில் உள்ள இதழாளர்கள் முதலான
அனைவருக்கும் நல்கை விலையிலோ, இலவசமாகவோ வீட்டுமனைகள்
வழங்கப்படவேண்டும்.
5) அரசு அலுவலகங்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியலாளர்கள்
போன்றோர் அனைத்து இதழாளர்களையும் பாகுபாடின்றிக்
கண்ணியமாகவும், தோழமை உணர்வோடும் நடத்தவேண்டும்.
6) அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் சிறந்த மருத்துவ உதவி இதழாளர்களுக்கும் கிடைக்கவேண்டும்.
7) தென்காசியைத் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்.
8)   மாவட்ட அளவிலான அனைத்து இதழாளர்களுக்கும் இலவசப் பேருந்து பயணச் சலுகைகளை வழங்கவேண்டும்.
9) தமிழகத்தில் உள்ள அனைத்து இதழாளர்களுக்கும் அரசு நல்கை விலையில் அல்லது விலையின்றி வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும் என்பன முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தோழமையுடன்
(அல்லா பகேசு)
தலைமை நிலையச்செயலாளர்,
அலைப்பேசி எண்: 98407 04576

குறிப்பு:
மாநாட்டு நிதியாகத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் உரூபாய் 10,000 காசோலையும், சேலம் மாவட்டம் 2,500 உரூபாயும் திருவண்ணாமலை மாவட்டம் 10,000 -உரூபாயும் வழங்கினார்கள்.

SL presidential election to be held on January 08, 2015

SL presidential election to be held on January 08, 2015

[TamilNet, Friday, 21 November 2014, 16:16 GMT]
The Sri Lankan presidential election will be held on January 08, 2015, according to the gazette notification issued by the SL Election Commissioner Mahinda Desapriya on Friday.

According to officials of the SL department nominations for the presidential race are to be called on December 08, news sources in Colombo said.

Maithripala Sirisena, the SL Minister of Health and the General Secretary of the Sri Lanka Freedom Party (SLFP) has announced on Friday that he will be confronting Mahinda Rajapaksa at the upcoming elections.

Sirisena has vowed to abolish the executive presidential system within one hundred days after assuming office and to appoint the Opposition Leader Ranil Wickremesinghe as the Prime Minister, news sources in Colombo said.

Chronology:

Maithiripala Sirisena of SLFP emerges as common opposition candidate contesting Rajapaksa

Maithiripala Sirisena of SLFP emerges as 

common opposition candidate contesting Rajapaksa

[TamilNet, Friday, 21 November 2014, 11:17 GMT]
The main opposition United National Party (UNP) in the South on Friday decided to support Maithiripala Sirisena as the common candidate of the opposition to contest the upcoming Presidential election against the SL President Mahinda Rajapaksa. Currently, Mr. Maithiripala Sirisena is holding the post of Minister of Health in the Rajapaksa cabinet and the General Secretary of the Sri Lanka Freedom Party, a constituent of the ruling United Peoples Freedom Alliance (UPFA).
Maithiripala Sirisena
Maithiripala Sirisena
 
UNP Assistant General Secretary Akila Viraj Kariyawasam said the members of the UNP’s G-20, which was set up to take decisions on the presidential election, made this decision when they met Friday morning.

He said a final decision would be taken at the party’s Working Committee meeting Friday evening.

Mr.Maithiripala Sirisena addressing a media conference Friday morning said that he would be the presidential candidate of the Common Opposition.

He further stated that the SL Opposition Leader Ranil Wickremesinghe would be appointed as the Sri Lankan Prime Minister in the event he emerges victorious.

The press conference is also attended by former President Chandrika Bandaranaike Kumaratunga, UPFA parliamentarians Prof. Rajiva Wijesinghe, Minister of Fisheries Dr. Rajitha Senaratne, Arjuna Ranatunge, Wasantha Senanayake, M.K.S. Gunawardene and Duminda Dissanayake.

The 18th amendment to the constitution infringes the rights and freedom of the “people of Sri Lanka,” Sirisena said. “Corruption and injustice has gripped the country while Law and order has fallen,” he said.

"We worked hard to set up People's Alliance and the UPFA. We helped to be victorious. But, after the war the situation was not much healthy," he further said.

It was rumored that the minister had earlier rejected an invitation to address the Sri Lanka Freedom Party (SLFP) news conference scheduled to be held at the party headquarters in Darley Road, news sources in Colombo said.

Chronology:

Recent books on regions of Tamil Eelam

Recent books on regions of Tamil Eelam

[TamilNet, Friday, 21 November 2014, 10:40 GMT]
Four voluminous books have recently been published on the Batticaloa, Trincomalee, Vanni and Jaffna regions of the country of Eezham Tamils. The publications, resulting from the efforts and contributions of Eezham Tamils in the island and in the diaspora, show the rise of a new generation as well as the conviction of the old generation in documenting the history and culture of the regions and people of Tamil Eelam with a geographical sense of attachment. The political geographic nuance of the publications subtly responds to the New Delhi–Washington–Colombo genocide partners’ denial of territorial and historical sovereignty claim of the nation of Eezham Tamils in the island. On the other hand, the publications implicitly impel the Eezham Tamils of the various regions in the island to understand the milieu and needs of one another in strengthening the nation with new equations.
Noolaham


The 640-page publication, “Aayvuk Kadduraik Koavai,” brought out by Noolaham Foundation in 2014 is a compilation of academic papers read at the Tamil Documentation Conference 2013 in Colombo.

Edited by a young generation of academics under the guidance of veterans, the articles in the publication generally cover all sections of Tamil-speaking people in the island, but there is a refreshing focus on the cultural heritage of the East, particularly Batticaloa. The articles also show the rise of a new academic generation that is capable and rigorous in research.
Trinco


The 1002-page publication “Thirukoneswaram,” that has come in February 2014 is a compilation of valuable literature on the temple at Trincomalee.

Edited by K. Arulsubramaniam and published by the Trincomalee temple management board (Thirukonamalai Alaya Paripalana Sabai), the publication includes the reprint of four old Tamil historiographical literatures on the Trincomalee region: Thadchana Kailaasa Puraa’nam, Thiruk-karaisaip Puraa’nam, Thirikoa’naasala Puraa’nam and Koa’neasar Kalveddu. It also contains the reproductions of the three earlier consecration (Kudamuzhukku) numbers of the temple: 1953, 1981 and 1993.
Vanni


“Vanni Varalaa’rum Pa’npaadum” (Vanni: History and Culture), is a 655-page compilation of academic articles published by K. Suntharalingam, a diaspora Eezham Tamil based in Norway.

The publication, having articles on archaeology, history, environment, demography, industries, language, literature, religion and culture of Vanni, written by well-known academics, is more extensive and authentic than any publication that has hitherto come on Vanni, says Professor S. Pathmanathan in his foreword to the compilation. Many aspects of information on Vanni that cannot be found elsewhere could be seen in this book, he adds.
Tourism book


Professor P. Pushparatnam of the University of Jaffna has authored and published a 280-page book in English on Tourism and Monuments of Archaeological Heritage in Northern Sri Lanka.

Released in Jaffna this month, the book elegantly printed in art paper with lively colour photographs and location maps aims at promoting cultural tourism in the northern part of the island. But it also consciously documents the antiquity and continuity of the region’s history and heritage, keeping their unique context in the island in mind.