சனி, 19 மே, 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்


குவிகம் இல்லம் – அளவளாவல்


வைகாசி 06, 2049 ஞாயிறு மே 20   நண்பகல் 11.00 – 1.00

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

முனைவர் வ.வே.சு. (மேனாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி)

அவர்களுடன் அளவளாவல்


அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

அரங்கம் அடைய

வியாழன், 17 மே, 2018

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

விருதினைப் பெற்ற சிங்களர் !

முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது.
சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது.
அந்தவகையில் சிங்களப் பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருதினையும், உயர் சட்டத்தரணி கரிகாலன் எசு. நவரத்தினம் அவர்களுக்கு  சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா) விருதினையும், பேராசிரியர் சபாநாயகம் தேவநாயகம் அவர்களுக்கு மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருதினையும், செல்வி சி.பொன் அமுதரசன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசிலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை எதிர்த்துப் போராடிவரும் வாழ்நாள் உறுதிப்பாட்டுக்காக முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
‘முனைவர் செனிவிரத்னா அவர்களைச் சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா( Dr Brian Senewiratne):
தமிழினத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்துத் தீரத்துடனும் பலநேரம் தனியொருவராகவும் முன்வந்து இயக்கம் நடத்தியுள்ளார். தம் சொந்தச் சிங்கள உடன்பிறப்புகளின் நல்வாழ்வில் எவ்வளவு அக்கறை கொண்டவரோ அதே அளவுக்குத் தமிழர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர் முனைவர் செனிவிரத்னா.
சிறிலங்காவில் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதையும், தமிழர்களின் சனநாயக அறப் போராட்டங்கள் அரசாங்க ஆதரவு பெற்ற இனவதைகளாலும் இராணுவப் படைகளாலும் அடக்கப்படுவதையும் கண்ட முனைவர் செனிவிரத்னா தமிழர்தம் உரிமைகளைக் காப்பதே வாழ்வில் தம் கடன் எனக் கொண்டார். அவர்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் நிகர்மை, கண்ணியம், இடர்காப்புடனும், பாகுபாடின்றியும் வாழும் உரிமைக்காகப் போராடிச், சிங்கள இனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகள், வாய்ப்பு வசதிகளை அவர்களும் துய்க்க வழி செய்வதைக் குறிக்கோளாக ஏற்றார்.
1972ஆம் ஆண்டு செனிவிரத்னா பெரதேனியா பலகலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருந்த நேரத்தில் அவருக்கு உறவுக்காரரான சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையர் பதவிக் காலத்தில் சிங்களக் காடையர்கள் தமிழர்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வேட்டையாடித் துரத்திய போது அந்தத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் செனிவிரத்னா. அவரே நகைச்சுவையாகக் கூறியது போல் ‘இரவுச் சுற்று’ சென்று (மருத்துவ மனையில் தொகுதி தொகுதியாகப் பார்வையிடுவாரே, அப்படி) கண்டித் தெருக்களில் அலைந்து, செத்துக் கொண்டிருந்த தமிழர்களை அள்ளி வந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தார்; உயிர்பிழைக்க முடியாதவர்களுக்குக் கண்ணியமான சாவு கிடைக்கச் செய்தார்.
இவரது தன்னளிப்பை அறிந்தேற்குமுகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேலவை உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
கரிகாலன் எசு. நவரத்தினம் :
கரிகாலன் 1958ஆம் ஆண்டு தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய போது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தார். அவ்வாண்டில் ‘தனிச்சிங்களம் – சிறி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா), வன்னியசிங்கம் போன்ற தமிழர் தலைவர்களோடு தளைப்படுத்தப்பட்டார். தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காகத் தளைப்படுத்தப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்ட முதல் போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
திரு கரிகாலன் தமிழர் போராட்டத்தில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டுத், தமிழர்களின் பெரும் அறப் போரட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்தார். இவற்றுள் ஒன்றாகிய 1961 அறப் போராட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைதிவழிப்பட்ட தமிழர் உரிமைக் கிளர்ச்சிகளால் மூன்று மாதக் காலம் அடியோடு முடங்கிப் போயிற்று. சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிநிலை அறிவித்து, கரிகாலனையும், எஸ்.ஜே,வி. செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்ற தலைவர்களையும் தளைப்படுத்தியது. அவர்களனைவரும் தெற்கில் பனகொடா எனப்படும் இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டனர். இருபது வயதுக் கரிகாலன்தான் சிறைப்பட்டவர்களிலேயே இளையவர். ஆறு மாதக் காலச் சிறைக் காவலுக்குப் பின் மற்றத் தலைவர்களோடு அவரும் விடுதலை செய்யப்பட்டார்.
கரிகாலன் சட்டத் தரணியாக உறுதியெடுத்துப் பொறுப்பேற்ற போது அவரைப் பாராட்டி வாழ்த்த  சா. சே. வே. செல்வநாயகம் அவர்களே நேரில் உச்ச நீதிமன்றம் சென்றதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் சட்டத் தாரணி ஆன பிறகு செல்வநாயகம்  முதலான தமிழர் தலைவர்களோடு நெருக்கமாக இருந்து செயல்பட்டார். தமிழர்தம் கோரிக்கைகள் குறித்தான  முதன்மை ஆவணங்களும் உடன்படிக்கைகளும் விவாதித்து வரையும் பணியில் அவரே நேரில் சா. சே. வே. செல்வநாயகத்துடன் நேரம் செலவிட்டார்.
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்ட போது, அவர் அம்மாணவர்களின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவராகி, தமக்கு வரக் கூடிய  பேரிடர்பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு உதவினார். நீதிமன்றங்களில் பொன். சிவகுமாரன், தங்கத்துரை, குட்டிமணி  முதலான தமிழ் இளைஞர்களுக்காக வழக்குரைத்தார். தங்கத்துரை தமக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது, கரிகாலனைப் போற்றித் தன் மகனுக்குக் கரிகாலன் என்றே பெயரிட்டார். தங்கத்துரையும் குட்டிமணியும் மேலும் 52 தமிழ் அரசியல் கைதிகளும் 1983 தமிழர் இனவதையின் போது வெலிக்கடைச் சிறைக்குள் சிங்களச் சிறைக் காவலர்களின் துணையோடு சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நாதம் ஊடகசேவை
TGTE
+1-212- 290- 2925

சுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி


சுனில் கிநானியும் சா.கந்தசாமியும்

 விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36

சுனில் கில்நானியும்  நானும்

      (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)


சிறப்புரை:சா கந்தசாமி

சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர்.

புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர்.

வைகாசி 05, 2049 /   19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி
திருஇராம் குழுமஅலுவலகம்               
மூகாம்பிகை வளாகம்                           
 சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
 ஆறாவது தளம்,   
  மயிலாப்பூர்      சென்னை 600 004

அனைவரும் வருக!
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு


தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு


செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.
தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
(DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR)
  • 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன் 2018-இல் வகுப்புகள் தொடக்கம்
  • பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்
  • தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி. ஆண், பெண் இருபாலாரும் சேரலாம். வயது வரம்பில்லை.
  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : வைகாசி 11, 2049 / 25-05-2018
  • பட்டயப் படிப்பு இருபருவங்கட்கும் சேர்த்து கட்டணம் உரூ.3500/- மட்டுமே
  • விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form
  • தொலைபேசி: 9444079926 9445103775
  • ஏற்கெனவே 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு!

இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!

செவ்வாய், 15 மே, 2018

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு!


பொம்மைச் செயல்திட்டம்

கொடுத்திருக்கிறது மோடி அரசு!


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

பெமணியரசன் அறிக்கை!

இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் – தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது.
“காவிரித் தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (4) பின்வருமாறு கூறுகிறது :
கேரளத்தின் பாணாசுர சாகர்கருநாடகத்தின் ஏமாவதிஏரங்கிகபினி,கிருட்டிணராசாகர்தமிழ்நாட்டின் கீழ்பவானிஅமராவதி மற்றும் மேட்டூர்ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில்அந்தந்த மாநிலம்தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்தஆணையம் கொடுக்கும்.
 இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதைஇப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்!
ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு  முன் உள்ள பிரிவு (9)(2) உறுதி செய்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கருநாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் ‘வழிகாட்டுதலையா’ செயல்படுத்தும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
அடுத்து, பின்வரும் பிரிவு (9)(14)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலைச் செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.
 1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்துவருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும்! புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கருநாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்!
இந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கருநாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது முதலான எல்லா நிலைகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது.
அடுத்து, பிரிவு (9)(18)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு அப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது!
காவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் அளவி(மீட்டர்) வைத்து விற்பனை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது.
கடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் அளிக்க முடியாததற்குக் காரணம் – நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கருநாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.
ஆனால், இன்று (14.05.2018) அளித்துள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் அளிக்க அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தை அளிக்க முடியாததற்குக் காரணம்அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமைவழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின்கூற்றே சாட்சியம்! இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்?
அதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று அளித்துள்ள கருநாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவையெல்லாம்ஏற்கெனவே பா..தலைமையினால் எழுதிக்கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று  அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்!
 பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும்,தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 76670 77075, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
==========================