சனி, 6 நவம்பர், 2010

மீனகம் 2 ஆம் ஆண்டுத் தொடக்கம்:

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே வணக்கம்
தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று
தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித
குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின்
உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி"
என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம்.
இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை
ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ்
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே
என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும்
சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன்
சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக
தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல்,
மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய
உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம்
தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாகப் பார்வையிட்டு தங்களின் கருத்துகளைப் பதிந்துவரும்
இலக்குவனார் திருவள்ளுவன்
மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது
நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள்,
குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.
நன்றி

காந்தரூபன்

மீனகம் தளம்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM <http://www.meenakam.com/>
WWW.MEENAGAM.ORG <http://www.meenagam.org/>

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


-கருத்துக்கள்‎(1)‎
 
வெளியிடு
தமிழ்க்காப்பு அமைப்பு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களைப் பிற அமைப்புகளும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்க்காப்பு அமைப்புகளின் முயற்சியால் 6.11.2010 அன்று நடைபெறும் ஒருங்குறி அவையத்தில் முடிவெடுக்கப்பட இருந்த இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட கிரந்தஒருங்குறிப் புகுத்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்றும் அடுத்து வரும் ஆண்டில் பிப்.26 நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்று அறிந்தேன். தொடங்கும் பொழுதே வெற்றியுடன் தொடங்கியுள்ள தமிழ்க்காப்பு அமைப்புகள் தொடர்ந்து முயன்று நிலையான தீர்வைக் காண வேண்டும்.
ஈழக்கதிர் தி 11/5 இந்த இடுகையை நீக்கு பதிலளி

« முந்தைய  அடுத்து »

தாயாரைப் பார்க்க பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு


கொழும்பு, நவ.5: பிரபாகரனின் சகோதர சகோதரிகளை இலங்கைக்குள் வரவிடுமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திவயின சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இலங்கை இணைய தளங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததால், இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களுடன் இவர்கள் சந்திக்க உள்ளனர் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களுக்கு அனுமதி வழங்குவதை நிராகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக்கூட முடியாது என வினோதினி தெரிவித்திருந்ததாகவும் திவயின சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

சிங்கள அரசு தன் இயற்கைக்கேற்ப இருவருக்கும் நுழைவிசைவு மறுத்துள்ளது. தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் உடன்பிறப்புகள் தங்களின் பற்றையும் பரிவையும் ஆசையையும் அன்பையும் துறந்து அமைதி காத்தலே நன்று. ஒரு வேளை நுழைவிசைவு கொடுத்து விட்டுப் பின்னர் இடர்தருவதை விட மறுத்துள்ளது நன்று என்றே எண்ண வேண்டும். தங்கள் தாயார் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் உள்ளார் என எண்ணாமல் போர்க்களத்தில் வீர மரணத்தை எதிர்நோக்கி உள்ளதாகப் 
பெருமையுடன் பொறுமை காக்க வேண்டும். ஆறுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 8:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Mr. Observer, can you please explain why Ms. Indira Gandhi supported LTTE and gave training to them to fight against SriLanakn Govt. India has taken a ride on Srilankan Tamils in the name of eleminating LTTE. Cunningness may succeed at times but not ever.
By நாடோடி
11/6/2010 7:25:00 PM
well said obserber. 100% agree with you.Why these people are interested in Indian politics ot tamilnadu.These refugees are Credit card fraudlers and they should be kept away from India.
By vai.gopalsamy
11/6/2010 5:19:00 PM
I think the persons who are writing against Indian Government and supporting the Terrorist Organisation are from Sri Lanka. These guys went for job there and after several years they are asking a share from their mother land calling it freedom. BULLS SHIT. These guys have to flushed out from Indian soil as they are a constant threat to India and moreso they are traitors
By Observer
11/6/2010 4:22:00 PM
endru thaniyum intha sudantira thagam... we shall prevail.. tamils will unite to acheive free and independant tamil eelam the goal of the great martyrs who had been ruthlessly killed by genocidal killer and his jalar asupprters in india.. long live eelam, long live tamil
By durai
11/6/2010 3:05:00 PM
ஒரு தீவரவாதிக்கும் நமக்கும் என்ன உரவு இதைஎல்லாம் ஏன் போடரீங்க
By Observer
11/6/2010 1:44:00 PM
MANAOHARAN...FROM RAMASAMY NAICKER TO WALKING CORPSE KARUNANIDHI ARE FOLLING YOU...BECAUES ALL YOU ARE UNEDUCATED FOOLS SHIT IN PUBLIC....GO .GO COLLECT YOUR FREE TV..FREE LIQUOR..FREE DRESS..FREE WIFE SOON TALAIVER WILL OFFER FREE FISRT NIGHTS...
By KOOPU
11/6/2010 1:33:00 PM
ஹிட்லரிடம் அகிம்சையும் ஜன நாயக பயங்கரவாதிகளிடம் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. உலகில் எதுவும் நிலையானது இல்லை. சிறிய நாடுகள் விடுதலை பெற்றது பெரிய நாடகளிடமிருந்துதான். சுதந்திர உணர்வு இந்தியாவின் சொத்தல்ல! அது ஒரு பறவைக்கு கூட உண்டு. முயற்ச்சி தொடரும் ஈழம் மலரும்!
By Unmai
11/6/2010 11:55:00 AM
கொடுங்கோலன் மகிந்தாவின் ஆட்சி வீழ்த்தப்படுவேண்டும், புலிகளின் தலைமையில் ஈழம் மலரவேண்டும்.
By தஞ்சை ராஜு
11/6/2010 11:36:00 AM
இந்த அம்மா கிட்டே கொஞம் கவனமா இருக்கனும். முன்னெ இப்படிதான் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற் அனுமதிக்கவில்லையென்ட்ரு. மத்திய அரசு அனுமதித்தவுடன் பல்டி அடித்தது. இதை வச்சி தமிழ்னாட்டு அரசியல்வாதிகள் ஸ்டன்ட் அடிப்பாங்க
By manoharan
11/6/2010 10:21:00 AM
yes vinodini say no rong nitcham talaivar varuvar
By kumar
11/6/2010 9:43:00 AM
Agree with Koopu and Thiruvalluvan. In a sense SL Govt is better than spineless, merciless Indian Govt which deported the old lady at the airport. If Gandhi is alive he would have commited suicide after witnessing these incidents
By Sankaran
11/6/2010 9:38:00 AM
ATLEAST SINHALA GOVT..REFUSED THEIR ENTRY..LOOK WHAT POVERTY INDIA AND WALKING CORPSE KARUNANIDHI DID....FIRST GAVE THIS OLD WOMAN VISA BUT WHEN SHE ARRIVED THEY HAVE DEPORTED HER....
By KOOPU
11/6/2010 1:18:00 AM
PRABAHARAN.WHAT IS YOUR REAL NAME..YOU HAVE NO BACK BONE TO WRITE USING YOUR OWN NAME.....AFTER ALL YOU ARE AN INDIAN TAMIL SLAVE..THATS ALL..DO YOU KNOW WHER IS CANADA ..AND..NORWAY?
By KOOPU
11/6/2010 1:16:00 AM
Yov ilakku, You always make a nive figure about you,You all greedy foreign refugees are the cause of all these problems.To extend your stay for luxurious slave refugee life you gave the life of innocent people.Why cannot you go and meet your leaders mother.Because you people think your life should be safe.But innocent people who gave life and their father mother,brother ,sisters whocares
By prabakaran
11/6/2010 1:07:00 AM
வெட்ககெடு. மனிதாபமன்மட்ரசெயல் வினொதினி சொன்னதில் எந்த தப்பும் இல்லை தலைவர் வருவார்
By palaniappn
11/6/2010 12:55:00 AM
It shows the attidude of the rajapakse government, it is not taking any step for peaceful settlement rather tries to subdue Tamil voice, the repurcusion of it will be faced by the sinhala nation........do not tell Tamils for the cause you had multiple option and you are not able to use either of them......the next time what ever happens even if it means killing of another PM / CM in TN tamil people will whole heartedly stand behind the tigers to fight and liberate Tamil people in Ellam.....Vazhga Ellam....Vazhga Tamil.......
By Vetri
11/6/2010 12:34:00 AM

தினமணி முதலிட வாசகர் கருத்துகள்

விபரீத விளம்பரங்கள்


சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரம் இப்போது,​​ நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.அதாவது,​​ நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும்விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில்,​​ மக்களின் மனதை -​ சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர் விளம்பர நிபுணர்கள்!​ ​விளம்பரம் என்பது "முதலில் பார்க்க வைக்க வேண்டும்,​​ பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும்,​​ பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்'.​ இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.ஆனால்,​​ நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன.​ பேச வைக்கின்றன,​​ ஆனால்,​​ வாங்க வைக்கின்றனவா?​ சந்தேகம்தான்.​ காரணம் பல.​ அவற்றுள் ஒன்று,​​ இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.சம்பந்தமே இல்லாத காட்சிகள்,​​ சம்பந்தமே இல்லாத உரையாடல்கள்,​​ சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள்,​​ எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர்.​ இது ஒரு புதுவகை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.அதிலும்,​​ குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள் இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும்,​​ இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் வெளியானது.​ அதில்,​​ படுத்திருக்கும் நிலையிலிருக்கும் பெண்ணைத் தழுவுவார் ஓர் ஆண்.​ சிறிது நேரத்தில் அந்தப் பெண் இரு சக்கர வாகனமாக மாறுவார்.​ இப்படியாக காட்சிப்படுத்தப்பட்டு ஒளிபரப்பான அந்த விளம்பரம்,​​ மகளிர் இயக்கத்தினர் எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு நிறுத்தப்பட்டது.இப்போது திரையரங்குகளில் பிஎஸ்என்எல் விளம்பரம் ஒன்று திரையிடப்படுகிறது.​ ஒரு பெண் வேண்டுமென்றே போடப்பட்ட அல்லது காட்டப்பட்ட அரைகுறை ஆடைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருப்பார்.​ அருகிலுள்ள ஆணுடன் நெருக்கமாக இருப்பார்.​ திடீரென ஏதோவொன்றைச் சொல்லி அவரைத் துரத்திடுவார்.​ நின்று கொண்டிருப்பவரை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்வார்.​ காரணம் அவரிடம் "3 ஜி செல்போன்' இருக்கிறதாம்.​ எதற்காக இப்படிக் காட்ட வேண்டும்?இதை 3 ஜி செல்போன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்று சொல்லிவிட முடியுமா?​ அல்லது 3 ஜி வைத்திருப்பவரெல்லாம் அருகிலுள்ள பெண் தன்னை விளம்பரத்தில் வருவதைப்போலவே அழைத்து நெருக்கமாக அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று கருதிக் கொண்டால் என்ன ஆவது?​ பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக மாறிவிடும்.முன்பெல்லாம் தனியார் நிறுவனங்கள்தான் இதுபோன்ற விளம்பர உத்திகளில் களம் இறங்கின.​ இப்போது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்படி இறங்கியிருக்கிறது.அதேபோல, ​​ பிஎஸ்என்எல் விளம்பரங்கள் எதுவும் தமிழில் தயாரிக்கப்படுவதில்லை.​ எல்லாமும் ஹிந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு,​​ சில நேரங்களில் மட்டும் போனால் போகட்டுமென்று தமிழில் "டப்' செய்யப்பட்டு வெளியாகின்றன.இத்தனைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டுக்காரர்.​ அதிலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்தவர்.​ எப்படியிருக்கிறது கூத்து?​ நல்லவேளையாக பெரியார் உயிருடன் இல்லை!விளம்பர உத்திகள் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.​ அதேபோல,​​ அரசுத் துறை நிறுவனங்கள் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தி தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழிலை நடத்த வேண்டும்.​ அதனால் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்ல,​​ அவற்றால் நாட்டுக்கே பாதுகாப்பு,​​ பெருமை,​​ வளர்ச்சி எல்லாமும்.அதேநேரத்தில் இதுபோன்ற கொடுமைகளை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?இன்னொரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது.​ உடலில் பீய்ச்சிக் கொள்ளும் வாசனைத் திரவிய விளம்பரம் அது.​ அதைப் போட்டுக்கொண்டு நடக்கும் ஆணுடன் தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொள்கிறார்கள்.​ இதென்ன அபத்தம்?இந்தியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளாயிற்று.​ பெரும்பாலானோரிடம் கணினி,​​ மடிக்கணினி,​​ நவீன செல்போன்கள்.​ பொருளாதாரப் புள்ளிகள் யாருக்கும் தெரியாமல் ஏறுகின்றன,​​ இறங்குகின்றன.​ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்க முடியாது,​​ விண்வெளிக்கும் சென்றுவிட்டோம்.பெண் விஞ்ஞானி,​​ பெண் முதல்வர்,​​ பெண் காவலர்,​​ பெண் பிரதமர்,​​ பெண் குடியரசுத் தலைவர்,​​ பெண் ஆலோசகர்...​ இருந்தென்ன பயன்?​ பெண்களை அபத்தமாக விளம்பரப் பொருளாக்கும் மடமை மட்டும் இன்னும் மாறவில்லை.பொருளைப் பற்றிய விவரங்களை மக்களிடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நேர்மை,​​ விற்பனையாளர்களிடமும்,​​ விளம்பர நிபுணர்களிடம் அற்றுப் போயிருக்கிறது என்பது புரிகிறது.​ ​ ஆனால்,​​ இதையும் தாண்டி பொதுவாக எவற்றையெல்லாம் தாமாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அடிப்படைத் தரமும்கூட ஆளுவோரிடம் குறைந்திருக்கிறது என்பதை என்னவென்று சொல்ல?
கருத்துகள்

பெண்களை முதன்மைப்படுத்தி விளம்பரங்கள் வந்தால் தவறு அல்ல. ஆனால், பெண்களைக் கொச்சைப்படுத்தித்தான விளம்பரங்கள் வருகின்றன. அவற்றைப் பெண்களே சுவைத்துப் பார்க்கின்றனர். விளம்பரத்திலும் அறம் தேவை! ஒழுக்கம் தேவை! நன்முறை தேவை! அவற்றைப் பா.செயப்பிரகாசு சுட்டிக்காட்டியுள்ளதற்குப் பாராட்டுகள். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!

தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!

இந்தியா முழுவதிலும் எந்தவொரு கூட்டம் என்றாலும்,​​ அது அரசியல் மாநாடாக இருந்தாலும் அல்லது தெருமுனைக் கூட்டம் என்றாலும்கூட,​​ ஊழல் என்கிற சொல் இல்லாமல் நடத்த முடியாது.​ ஆனாலும் ஊழல் என்பதைப் பற்றிப் பேசாமல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்தீர்மானம் போட்டுக்கொண்டு நடத்தியது போலத்தான் இருந்தது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம்.இந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ளவர்களான கட்சித் தலைவி சோனியா காந்தி,​​ பொதுச்செயலர் ராகுல் காந்தி,​​ பிரதமர் மன்மோகன் சிங் மூவருமே சமீபகாலமாக மக்கள் மன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்பெக்ட்ரம்,​​ ஆதர்ஷ்,​​ காமன்வெல்த் போன்ற மகா ஊழல்கள் பற்றியே பேசாமல்,​​ எளிய மக்கள் ​(ஆம்ஆத்மி)​ பற்றியும் ஏழைகளுக்கான நலஉதவித் திட்டங்கள் பற்றியும்தான் பேசினார்கள்.​ ஊழலை ஒரு பிரச்னையாகவே இவர்கள் கருதவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.​ ​இந்தியாவில் அறிவுஜீவிகள் முதல் டீக்கடையில் அமர்ந்திருக்கும் சாதாரண மக்கள் உள்பட பேசுகிற மூன்று முக்கிய ஊழல்கள்,​​ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்,​​ ஸ்பெக்ட்ரம் ஊழல்,​​ மும்பையில் நடைபெற்றுள்ள வீடுகட்டும் நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அமைச்சர்களுக்கும் தொடர்புடைய நிலஒதுக்கீடு முறைகேடுகள்.​ இந்த மூன்றிலும் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லாமல் இல்லை.​ ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற ஊழலுக்கு முக்கிய காரணம் கல்மாதி என்றாலும் அவர் வெறும் பினாமிதான்.​ இந்த ஊழலின் பணத்தை உறிஞ்சிய வாய்க்கால் வழி காங்கிரஸில்தான் என்பது ஊரறிந்த உண்மை.​ மகாராஷ்டிர மாநில ஊழலிலும்கூட தற்போது அம்மாநில முதலமைச்சர் சவாணுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.​ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்,​​ கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர் ஆ.​ ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ இதில் காங்கிரஸ் தன்னை கறைபடியாத கையாகக் காட்டிக்கொண்டாலும்,​​ அமைச்சர் ராசா ஒரு பேட்டியின் போது ஆத்திரத்துடன் குறிப்பிட்டதைப் போல,​​ பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்பதில் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.இந்த மூன்று பெரும் ஊழல்களிலும் காங்கிரஸ் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.​ இது யாருடைய தவறு,​​ இதனால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்ன,​​ இதை எப்படிப் போக்குவது,​​ கூட்டணிக் கட்சிகளால் தாங்கள் சுமக்க நேரும் சிலுவைகள் உண்டென்றால் அதற்குத் தீர்வு என்ன,​​ இதற்காக ஆட்சியை இழக்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைச் செயற்குழுவில் பேசி,​​ கொள்கை முடிவுகள் காணப்பட்டிருக்க வேண்டும்.​ ​ஆனால்,​​ இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் யாருமே இதைப் பற்றியெல்லாம் ​ பேசவில்லை.​ இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது.​ அவர் சொல்லியிருக்கிறார் -​ காங்கிரஸ் என்பது வெறும் சாதாரணக் கட்சி அல்ல.​ காங்கிரஸ் கட்சிதான் நவீன இந்தியாவை உருவாக்கியது.​ காங்கிரஸ் போன்ற சிறந்த கட்சி இந்தியாவுக்குத் தேவையாக இருக்கிறது.​ காங்கிரஸ் எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ அந்த அளவுக்கு தேசம் வலிமை பெறும்.வலிமை என்று எதைச் சொல்கிறார் மன்மோகன் சிங்?​ ஊழலால் கிடைக்கும் பண பலத்தையா?​ புரியவில்லை.​ எல்லாம்வல்ல இறைவனைப்போல அங்கிங்கெனாதபடி இந்தியா முழுவதும் எங்கும் வியாபித்து நிற்பது ஊழல் மட்டும்தான் என்பது உலகறிந்த உண்மை.​ மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,​​ 1985-ம் ஆண்டு மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்,​​ அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் 15 பைசாதான் பயனாளியைச் சென்றடைகிறது என்று வருத்தப்பட்டுப் பேசியது,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்,​​ ராகுல் காந்திக்கும் தெரியாவிட்டாலும்,​​ உடனிருந்த சோனியா காந்திக்கும்,​​ மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்காது.​ இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இந்த 15 பைசாவை 16 பைசாவாகவாவது உயர்த்த முடிந்திருக்கிறதா என்பதையாவது பிரதமர் இந்த மாநாட்டின்மூலம் நாட்டுக்குத் தெரிவித்திருக்கலாம்.​ சுதந்திர இந்தியாவில் அதிகமான ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான் என்கிற முறையில்,​​ உலகத்திலேயே மிக அதிகமான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டிருப்பதற்குக் காங்கிரஸ் பொறுப்பேற்காமல் இருக்க முடியாது.​ காங்கிரஸ் மாநாட்டில் ஊழலைப்பற்றிப் பேசவே வேண்டாம் என்று நினைத்து ​ செயல்பட்டிருப்பது,​​ பூனை கண்ணை மூடினால் ​ உலகம் இருண்டுவிடும் கதையாக அல்லவா இருக்கிறது?​ ​ ​நரகாசுரனை கொன்றழித்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.​ இந்தியாவின் இன்றைய நரகாசுரன்-​ ஊழல்தான் என்று யாராவது பிரதமரிடமும்,​​ சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் சொன்னால் தேவலாம்.​ முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்திருக்கிறார்கள்.​ வாழ்க சோனியா காந்தியின் காங்கிரஸ்!
கருத்துகள்

தினமணியின் எதிர்பார்ப்பு தவறானது. ஊழலில் திளைப்பவர்கள் எவ்வாறு அவற்றை வெளிப்படையாகப் பேசுவார்கள் எனத் தினமணி எதிர்பார்க்கிறது? காங். எதிர்க்கட்சியாக இருந்தால் அப்பொழுது பிறரின் ஊழல்கள் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். கூட்டுக் கொள்ளைக்காரர்கள் தங்கள் பங்கைக் குறித்துத் தனியாகத்தான் பேசிக் கொள்வார்கள்.ஊரறிய மேடை போட்டுப் பேச மாட்டார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:52:00 AM
பேஷ் பேஷ். நன்னா சொன்னேள் போங்கோ !!! வாயிலே தீபாவளி இனிப்பு போடணும்.
By kuppanna
11/5/2010 3:50:00 AM
ஓய் தினமணியாரே!!! என்ன மொத்த இந்தியாவையே முழுங்கிட்டமாதிரி பேசுரீரு,அந்தக்காலமும் வரும் , முழுங்குவானுங்க மொத்த இந்தியாவையும்,அப்போது ஓட்டு போட்ட மக்கள் திருவோடு தூக்கிட்டு அலையும் நாளும் ,இந்த அரசியல் நாதாரிகள் சுவிஸ்வங்கி பணத்துடன் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியயவிலோ கனடாவிலோ செட்டில் ஆவார்கள்,அப்போதுதான் நம்மக்களும் உணருவார்கள் ,அதுவரர தலையங்கம் எழுதாமல் இருய்யா. பயமாவது இல்லாமல் இருக்கலாம்.
By ஏழை
11/5/2010 3:47:00 AM
All the responsibale newspapers , the opposition parties, must bring this to the common man
By Narayanan
11/5/2010 3:44:00 AM
ஐயா தினமணியாரே, மன்மோஹன் சிங் சொல்வதை கேட்டு சிரிக்கவேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் அவர் தலை சிறந்த காமெடியனாக மாறி நாள் பல ஆகிவிட்டது,வடிவேலுவையும்,விவேக்ககயும்,ஏன் நாகேஷையும் கூட விஞ்சும் அபார ஆற்றல் அவருக்குதான் உண்டு,என்ன பண்ண? நம் இந்தியாவின் தலையெழுத்து இப்படிஆகிவிட்டது,
By குசும்பன்
11/5/2010 3:37:00 AM
காங்கிரஸ் கட்சிதான் ஊழலுக்கு முன்னோடி. நேருவின் காலத்திலிருந்தே ஊழல் தொடங்கிவிட்டது. ஆ. ​ ராசா மட்டுமே குற்றவாளி என்றால் மேன்மோகன் சிங் எப்போதே அவனை நீக்கியிருக்க முடியும். அனால் அவ்வாறு செய்யாதது இதில் பெரியதலைகள் சம்பந்தப்படிருப்பதை காட்டுகிறது. ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணம் தேர்தல் செலவுகளுக்கும் சுவிஸ் வங்கிகணக்குகளுக்கும்தான் போய்ச்சேருகிறது. ஏழை மக்களின் பணம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதற்கு ஒரு வரம்பே கிடையாது. இந்தியா சூப்பர்பவர் ஆகப்போவது ஊழலில்தான்.
By சிவா
11/5/2010 1:34:00 AM
ஊழலில் கரைந்து போனதை காங்கிரஸ் கமிட்டி விவாதிக்க மறந்தது மக்களை ஏமாற்றத்தான்! இது ராகுலுக்கான எதிர்கால வாய்ப்பை கெடுக்கும் என்பது நிச்சயம்.
By ஆரிசன்
11/5/2010 1:08:00 AM
இந்தியாவின் சாபக்கட்டலை காங்கிரஷ் கட்சி.. நாட்டு நலனில் அக்கரை இல்லாத திமுக,காங்கிரஷ் ஆலுவது இந்திய மக்கலின் தலை எழுத்து. இனி ஆன்டவன் தான் காப்பாட்ர வென்டும்.
By suresh.s
11/5/2010 12:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English