வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்திற்கு துக்கநாள்

பதிந்தவர்_கனி on February 4, 2010
பிரிவு: செய்திகள்

சிறிலங்காவின் 62வது சுதந்திர தினம் இன்றாகும். 1948ம் ஆண்டு இதுபோன்ற ஒரு தினத்தில் பிரித்தானிய அரசிடமிருந்து சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

இவ்வருட சிறிலங்காவின் சுதந்திர தினநிகழ்வுகள் கண்டி சிறீதலதா மாளிகை வளாகத்தினுள் நடைபெறுவதற்கு ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றது. கண்டியில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் 62வது சுதந்திர நாளை ஒட்டி விசேட பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுபோல், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்டி நகரை சுற்றியுள்ள சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. நீண்ட காலமாக சிறீலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளை தமிழ் மக்கள் புறக்கணித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 9 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக