வெள்ளி, 26 அக்டோபர், 2018

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்!

உலகத்திருக்குறள் மையம்

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்


ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை

27.10.2018 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,

சென்னை

பெயர் சூட்டுநர்:

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

க.தமிழ்ச்செல்வன்

முனைவர் இரா.மதிவாணன்

இலக்குவனார் திருவள்ளுவன்


திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா

நண்பகல் 12.00

சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

வியாழன், 25 அக்டோபர், 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

அகரமுதல

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை /

26.10.2018 மாலை 6.30

பாரதிய வித்தியா பவன், சென்னை

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு

சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த

இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம் 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் 
இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :
 கவிஞர் யாழினி முனுசாமி 

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்

தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்

பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019

அகரமுதல

 பிரித்தானியா தமிழர் பேரவையின்

உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.

 பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி  மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் பலதடுப்பரண்களை உருவாக்கித் திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் தொடர்ச்சியான செயற்பாடு  முதன்மைக்காரணமாக அமைந்து வருகின்றது.
 இதில் குறிப்பிடத்தக்கவை
  1. கொடூரத் தடுப்பு முகாம்களைத் திறந்து விடு, “Unlock the Concentration Camps in Sri Lanka”
  2. அவர்கள்உயிரோடு உள்ளனரா?, “Are they Alive?”
  3. பன்னாட்டுத் தற்சார்பு உசாவல், “International Independent Investigation”
  4. நிலப் பறிப்பை நிறுத்து, ” Stop the Land Grab”
  5. ஐரோப்பாவின் வரிச் சலுகை ஏற்றுமதியை நிறுத்து, “Stop GSP+”.
  6. தண்டனையின்றித் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, “Continuing Genocide with Impunity”
போன்ற விழிப்புணர்வுப் பரப்புரை நடவடிக்கைகள், பல்வேறு அரசியல் தந்திரச் செயல் திட்டங்கள் மூலம் இலங்கை அரசினை உலக நாடுகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தமை, தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான அழுத்தத்தினைத் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு (APPG T) ஐ.நா போன்றஅமைப்புக்களினூடாக மேற்கொண்டமை மற்றும் தமிழர் பகுதிகளில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற புத்த விகாரைகள்தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு இலங்கை அரசின் தொடர்ச்சியான பண்பாட்டு இனவழிப்பினை ஆவணப்படுத்தி ஐ.நா. வில் வெளியிட்டமை போன்ற பல செயற்பாடுகள் முதலானவை.
உங்கள் பகுதியிலுள்ள உள்ளூர் தமிழர் பேரவைகளின் தேர்தல் தொடர்பான தகவல்கள் கீழ் உள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளில் இணைந்து தாயகத்தின் விடிவுக்காக அரசியல்  தந்திர வழி முறைகளில்உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பதிவு அலுவலகம் :
பிரித்தானியத் தமிழர் பேரவை, அலகு 1, ஃபவுண்டேயின் வணிக மையம், அகல் வரிசை, (ountayne Business Centre, Broad lane,) இலண்டன் ( N15 4AG)
பேசி+44(0)20 8808 0465

தேர்தல் அட்டவணையைத் தளத்தில் காண்க.

வலைத்தளம்www.britishtamilsforum.org
மின்வரிinfo@britishtamilsforum.org
சுட்டுரை: https://twitter.com/tamilsforum
சங்கீத்து(Sangeeth)
பி.த.பே.ஊடக ஒருங்கிணைப்பாளர்(BTF Media Coordinator)

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

அகரமுதல

ஐப்பசி 10, 2049   சனிக்கிழமை

27-10-2018 மாலை 6 மணி

சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580

‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘

சிறப்புரை:  புதுவை  திரு  இராமசாமி

 . . . . தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

சமகாலக் கதைகள்      – பதிப்பாளரின் பார்வையில்

 சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்


அரங்கம் அடைய

விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்


அகரமுதல

ஐப்பசி 08, 2049  / 25-10-2018 வியாழக்கிழமை

மாலை5.45 மணி

கிளை நூலகம்,
7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,  
சாபர்கான் பேட்டை, சென்னை

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்

சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்

தொடர் உரை :- முனைவர்  வே சு

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205

நூலகம் அடைய

 

புதன், 24 அக்டோபர், 2018

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்!

அகரமுதல

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.


ந,முத்துசாமி
(வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07,  தி.பி. 2049  / 24.10.2018)

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால்  புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார்.
சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை  ஒப்படைத்தார்.
கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர்  அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது.  இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு அறக்கட்டளை, பிரான்சின் கலைபண்பாட்டு அமைப்பான அலயன்சு பிரான்சே(alliance francaise), கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.
  தெருக்கூத்து முதலான கலை வளர்ச்சியிலும் கலைஞர்களை உருவாக்குவதிலும்  முதன்மை இடம் பெறும் இவ்வமைப்பில் பயிற்சி பெற்றோர் பலர் திரைத்துறையிலும் ஒளிவிடுகின்றனர்.நாசர், தலைவாசல் விசய், சண்முகராசன்,கலைராணி, விசய் சேதுபதி, விமல், விதார்த்து, தேவி, மீனாட்சி, குரு சோமசுந்தரம், பசுபதி, சியார்சு, செயராவு, செயக்குமார், கருணாபிரசாத்து, ஆனந்து சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் செ.பாபு, போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவரது படைப்புகள் வருமாறு:-
சிறுகதைத் தொகுப்பு – நீர்மை
நாடகங்கள்:
காலம் காலமாக
அப்பாவும் பிள்ளையும்
நாற்காலிக்காரர்
சுவரொட்டிகள்
படுகளம்
உந்திச்சுழி
கட்டியக்காரன்
நற்றுணையப்பன்
ந.முத்துசாமி நாடகங்கள் (21 நாடகங்கள்,ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு)
கட்டுரைத் தொகுப்பு:
அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)
சங்கீத நாடக அகாதமியின் விருது(2000),  ‘ந.முத்துசாமி கட்டுரைகள் நூலிற்கான சிறந்த நூல் விருது(2005), இந்திய அரசின் தாமரைத்திரு விருது(பத்மசிரீ-2012) முதலான சிறப்புகளைப் பெற்றுள்ளார்.
 தெருக்கூத்துக்கலையின் காவலராக விளங்கிய ந.முத்துசாமியின் மறைவிற்கு அகரமுதல – மின்னிதழின் இரங்கல்கள்!