சனி, 25 அக்டோபர், 2014

TCSF defends majority councillors position on Tamil genocide

TCSF defends majority councillors position on Tamil genocide

[TamilNet, Friday, 24 October 2014, 12:44 GMT]
Requesting an investigation into genocide serves to ensure that all possible violations of international law are appropriately identified and explored. Needless to say such a request does not prejudice OISL's investigation into other crimes including war crimes and crimes against humanity, said a statement from Tamil Civil Society Forum (TCSF) issued on Friday. "Tamils and their representatives also have a concomitant right to seek the intervention of the International Community to prevent and protect them from the commission of Genocide. The right to state and claim the above stems from their right to freedom of speech and expression enshrined in international human rights law," the TCSF statement further said.

"Tamils and their elected representatives have to articulate their positions with clarity and with the best interests of the Tamils in mind. They have the moral right to contribute and lead the discourse through which their issues could be addressed. Hence we are of the opinion that there are no cogent moral or legal reasons for the NPC to refrain from passing a resolution that: a) recognizes the past and present commission of Genocide against the Tamils, b) calls for an international investigation into Genocide, and c) requests international intervention to protect the Tamils from Genocide,” the TCSF statement added.

Full text of the statement follows:

Opinion on the Appropriateness of the Northern Provincial Council Passing a Resolution on Genocide
The Tamil Civil Society Forum issues this statement to state its position on the question of the appropriateness of the Northern Provincial Council passing a resolution identifying the crimes that were committed and those that continue to be committed against the Tamil people as amounting to the crime of Genocide. We release this statement having sought advice from lawyers competent to comment on International Law, where such advice was required and relevant.
  1. The UN Genocide Convention of 1948 aims to prevent and punish the commission of Genocide defined as the destruction of a national, ethnical, racial or religious group (Article 2 of the Convention) in whole or part. Genocide is also a jus cogens norm of Customary International Law. It cannot be disputed that Tamils fit within the definition of either a 'national' or 'ethnic' group or both.
  2. Genocide is a crime recognized in the Rome Statute of the International Criminal Court (Article 6) along with other categories of crimes such as War Crimes (Article 8) and Crimes Against Humanity (Article 7). Any investigation that inquires into the atrocities, that were perpetrated (and those that continue to be perpetrated) against Tamils needs to investigate all three categories of crimes identified above, including Genocide. Tamils and their representatives have a right to ask for the UN Office of the High Commissioner for Human Rights inquiry team on Sri Lanka (OISL) to investigate the crime of genocide in addition to an investigation into war crimes and crime against humanity. Requesting an investigation into genocide serves to ensure that all possible violations of international law are appropriately identified and explored. Needless to say such a request does not prejudice OISL's investigation into other crimes including war crimes and crimes against humanity. Neither the UN Secretary General's Panel of Experts report's silence on the crime of Genocide nor the text of the UN Human Rights Council March 2014 resolution prevent the OISL from investigating the crime of genocide.
  3. Tamils and their representatives have the right to form a legal opinion that the atrocities that were committed (and continue to be perpetrated) against them amounts to Genocide. There are sufficient, reasonable grounds to form such a legal opinion, such that this is not a spurious claim. Tamils and their representatives also have a concomitant right to seek the intervention of the International Community to prevent and protect them from the commission of Genocide. The right to state and claim the above stems from their right to freedom of speech and expression enshrined in international human rights law. Prevention and protection from Genocide are also duties that stem from the UN Genocide Convention and the emerging doctrine of the Responsibility to Protect. The self-characterization and identification of the crime to which they were subjected to, by the victim group, in no way prejudices an impartial inquiry into those crimes by any body that is empowered to do so. Hence, the identification of the crime that befell them as constituting genocide by Tamils in no way prejudices OISL's inquiry into the same.
  4. Further, there are innumerable examples of democratically elected bodies passing resolutions recognizing the commission of Genocide. The following are some examples:

    1. In August 2014 the Iraqi Parliament passed a resolution stating that ISIS's actions in Northern Iraq amounted to Genocide.
    2. In August 2014 the Pakistani Parliament passed a resolution stating that the Israeli attack on Gaza amounted to Genocide.
    3. President Abbas in his address to the UN General Assembly in September 2014 claimed that Israeli attacks on Gaza amounted to genocide. This was despite the fact that a Commission of Inquiry had been set up by the UN Human Rights Council to inquire into the violations by both sides in that conflict.
    4. A number of Parliaments around the world have passed resolutions recognising the Armenian Genocide including the European Parliament.

  5. Tamils and their elected representatives have to articulate their positions with clarity and with the best interests of the Tamils in mind. They have the moral right to contribute and lead the discourse through which their issues could be addressed. Hence we are of the opinion that there are no cogent moral or legal reasons for the NPC to refrain from passing a resolution that: a) recognizes the past and present commission of Genocide against the Tamils, b) calls for an international investigation into Genocide, and c) requests international intervention to protect the Tamils from Genocide.


Tamil Civil Society Forum
24 October 2014

The Tamil Civil Society Forum, founded in 2010, is a network of more than 100 civil society activists from across the North – East of Sri Lanka. For further information on this statement please contact V.Puvitharan, Attorney-at-Law. (puvitharanv@gmail.com, 0777321650), K.Guruparan, Attorney-at-Law (rkguruparan@gmail.com) or Fr. Elil Rajan (elilrajan@gmail.com, 0771446663)

Chronology:

Citing systematic SL intimidation, Ananthy urges more time from OISL

Citing systematic SL intimidation, Ananthy urges more time from OISL

[TamilNet, Friday, 24 October 2014, 06:53 GMT]
Northern Provincial Council (NPC) councillor and a direct eyewitness to the genocidal onslaught on Eezham Tamils in Vanni in 2009, Ms Ananthy Sasitharan, on Thursday urged the OHRC Investigation on Sri Lanka (OISL) to give more time for the people on the ground to send their submissions to the OISL. Ms Ananthy has requested to extend the time for submissions by one month or at least to the extent possible, citing the intense atmosphere of intimidation, threats and attacks against potential witnesses in the North and East. There is also a serious lack of communication on the process of submitting evidences, the councillor further said. Meanwhile, a planted section in the TNA that argues against Tamils demanding genocide investigation came out with a last minute statement this week, as eyewash, asking people to give evidence to the OISL.
There is also un-preparedness even in the sections that were spending much time eulogising the US resolution, in practically meeting the various obstacles coming from the Colombo government and in arranging the presentation of case-specific evidences in time, diaspora observers said.

Ananthy Sasitharan, who is still searching for the whereabouts of her husband, who was handed over to the SL military by the family at Mullaiththeevu, has appeared in front of the local commissions and has attended the UN Human Rights Sessions in Geneva. She has also made a submission to the OISL.

The combination of the atmosphere of fear and intimidations, attacks on Tamil activists, the enforced ban on foreigners travelling to the North, the lack of IT knowledge and facilities among the victims, have all contributed to create conditions on the ground which does not enable the Tamil people to participate with the OISL process in a meaningful manner, the NPC councillor said.

According to the OHCHR announcement, dated 01 August 2014, submissions to the OISL must be made before midnight, Geneva time, on 30 October 2014. “This is to allow the investigation team time to analyse all the information gathered before drafting its report. Drafting needs to be completed at least two months before the report is presented to the HRC in March,” the OHCHR has stated.

“Submissions should be sent in written form and must include the contact details of the author(s). Submitting entities/individuals should specify if the submissions – or parts of them - should be treated confidentially,” according to the Terms of Reference of the OISL. Submissions, which should not exceed 10 pages, may be in English, Sinhala and Tamil languages.

The Tamil National Peoples Front (TNPF) led by Gajendrakumar Ponnambalam and the grassroots oriented elected councillors of the TNA have been actively encouraging the people to submit their statements as affidavits that could be useful also for the future international investigations.

The latest request from the NPC councillor comes in the spate of recent attacks on Tamil activists working against the unlawful detention and the enforced disappearances of Tamils, Tamil journalists and potential witnesses of genocide throughout the North and East.

Ananthy Sasitharan, in her letter to the OISL, also noticed how previous international events that scrutinised the Sri Lankan state on grounds of Human rights violations have resulted in the Colombo government stepping up attacks and persecution of Tamils.

Colombo-New Delhi fundamentalism and US twist of national question

Colombo-New Delhi fundamentalism and US twist of national question

[TamilNet, Thursday, 23 October 2014, 23:37 GMT]
Genocidal Sri Lanka’s Bodu Bala Sena (BBS), a Sinhala-Buddhist fundamentalist organisation, has been received by India’s RSS, a partner in the ‘Hindutva’ Establishment in New Delhi, for ‘high level’ discussions to create a ‘Buddhist-Hindu’ alliance in South Asia, media reports said earlier this month. Obviously, the prime target of this move is the nation of Tamil-speaking people in the island, who are Saiva-Hindu, Christian and Muslim. While eyebrows are raised in several quarters over the unholy alliance, which is imperialist on one hand and genocidal on the other, many fail to see that the unfolding scenario is also effected by the USA twisting the Tamil national question in the island into a question of ‘religious minorities’, commented Tamil activists for alternative politics.

Further observations by the activists:

The US resolution passed in the UNHRC neither recognising the Tamil nation in the island against which a genocidal war was actually fought, nor even mentioning the name Tamil but talking of ‘religious minorities’, is a classic example of the twist of the truth, evasion of logical solutions but evocation of another set of devils needed for imperialist engineering.

Neither the LTTE nor any other militant organisation that came from Eezham Tamils was religious orientated. They all have steadfastly proclaimed secularism.

After branding them as ‘terrorists’, destroying them with a blanket denouncement of even the virtues achieved by the struggle, and detracting the historical realities of the long-existing national question that has reached genocide, both New Delhi and Washington directly or indirectly set a deviatory paradigm of religious confrontations, to weaken the affected people further.

The RSS reception to BBS, apart from its imperialist ambitions over the island as a whole, aims at destabilising the secular Dravidian foundations achieved by Tamils of Tamil Nadu and the Marxist orientation of the people of Kerala too.

The historical heritage of the multi-religious perspective and its linguistically unified nature in Tamil Nadu and Kerala is strikingly free from constrains seen in the rest of India.

South India can’t fall in line with the RSS outlook, which would eventually target South Indian Brahmanism too. A time will come for the people of Kerala also to denounce the M K Narayanan-Shiv Shankar Menon genre that served New Delhi, contributing to setting a despicably dangerous situation to its very region.

The BBS may think that the island is making another contact with the ‘Mauryan Empire’. An alternative look at history would tell that it was this outlook that prevented the Sinhala nation’s peaceful coexistence with the Eezham Tamil nation in the island as well as with other nations of shared heritage in the immediate neighbourhood of South India.

Shielding, denying and continuing the injustices of genocidal dimensions committed on the nation of Eezham Tamils, the paradigm started by imperialisms, especially by the New Delhi imperialism in South Asia, may find expansion to other regions also. BBS entering into an alliance programme with Myanmar’s 969 Movement is a small example.

As all paradigm-setting evil designs for the region ultimately pivots around denying the genocide committed on Eezham Tamils and denying the liberation of them as a nation in the island, ultimately it is that twin stand taken by the imperialisms that has to be targeted and addressed by peoples seeking peace in South Asia. Peoples in the southern part of South Asia have a special role to play.

The kind of talk coming from certain Tamil politicians in the island and certain activists in the diaspora that you would lose ‘audience’ in the so-called international community the moment you mention a separate state, is only playing second fiddle to the imperialisms that have long been misleading the struggle of Eezham Tamils by simulating a variety of ‘audience’ issues from time to time. So far, the Eezham Tamils ‘obediently’ caring the ‘audience’ issues ever since the British times has only led them to face genocide.

Related Articles:
25.08.14   ‘Hindutva’ needs edification from South
24.03.14   UNHRC resolution with weak mandate will not help Tamils, say..
18.06.13   BJP, RSS, Shiv Sena answerable to Dasgupta policy-line
04.06.13   BJP, RSS, Shiv Sena to meet Rajapaksa behind the back of New..
07.09.12   Congress, BJP, religiously sanctify genocide


External Links:
Daily Mirror: BBS wants Sri Lanka named ‘Sinhale’
XINHUA: Buddhist hardliners reject federal solution to Sri Lanka's ethnic issues
Business Standard: Lanka's BBS wants ties with RSS to form 'peace zone' in S Asia
Eurasia Review: Buddhist Radicalism in Sri Lanka and Myanmar: Differences in Motivations - Analysis

வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலட்சிய நடிகர் இராசேந்திரன் இயற்கை எய்தினார்.




இலட்சிய நடிகர் இராசேந்திரன்
 இயற்கை எய்தினார்.


 எசு.எசு.ஆர். என்ற அழைக்கப்பெற்ற சேடப்பட்டி சூர்யநாராயண(த்தேவர்) இராசேந்திரனான இலட்சிய நடிகர் தம் முடைய 86 ஆம் அகவையில் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
 கலையுலகில் இருந்து அரசியலில் கால் பதித்து வெற்றி கண்டவர். 1962 இல் தி.மு.க.சார்பில் தேனிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் முதல்முதலில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இலட்சிய நடிகர்தான். ஆனால், இன்றைக்கு அதுதான், ஒவ்வொரு நடிகரையும் தமிழக முதல்வராகக் கனவு காணும்அளவிற்கு உயர்த்தி விட்டது.  1970 முதல் 1976 வரை தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க.வில் சேர்ந்த பின், 1981 இல் ஆண்டிப்பட்டிச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 எசு.எசு.ஆர் தி.பி 1959 / கி.பி. 1928 சனவரியில் பிறந்தார். குறைந்த அகவையிலேயே 5-ஆவது வகுப்பை முடித்த இவருக்கு 6-ஆவது வகுப்பில் சேர்வதற்கு மேலும்  ஓராண்டு காத்திருக்க வேண்டி வந்தது.  வீ்ட்டில் வீணாக இருக்க வேண்டா எனக் கருதிய தந்தையின் நண்பர், இவரை,  புளியமாநகரில்  சிறுவர் நிறுவனத்தில் (பாய்சு கம்பெனியில்) சேர்த்தார். அங்கு `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

  மாயவரம் கிருட்டிணமூர்த்தி தியாகராச பாகவதர் என்னும் எம்.கே. தியாகராச பாகவதர் நடித்த சிந்தாமணி படம் 1937 இல் வெளிவந்து பெரும் வரவேற்பயைும் வெற்றியையும் பெற்றது.  எசு.எசு.ஆர். மனத்தில் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்கதை இவர் படித்த பள்ளியில் நாடகமாகப் போடப்பட்டது. அப்பொழுது இவரே கதாநாயகனாக நடித்து முதல் பரிசு பெற்றார். நாடகத்தை நடத்திய ஆசிரியர் அழகும் நடிப்புத்திறமையும் உள்ளமையால், திரை உலகிற்குச் சென்றால் புகழ் பெறலாம் என்றார். அவரே, தன் செலவில் மதுரைக்கு அனுப்பி நாடக நிறுவனத்தில் சேரவும் வைத்தார்.

  மதுரைக்கு சென்ற எசு.எசு.ஆர். டி.கே.எசு. நாடக அவையில் சேர்ந்தார். அங்கு  முதலில் "சிவலீலா'' நாடகத்தில் காவலாளி வேடமே கிடைத்தது. அதன் பிறகு "மகாபாரதம்'' நாடகத்தில் சகாதேவ னாக நடிக்கத் தொடங்கினார். (இதில், திரௌபதியாகப் பெண் வேடத்தில்  நடித்தவர் ஏ.பி.நாகராசன்.)

 தன் மகனைத் தன்னைப்போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்பதே இவரின் தந்தை கொண்டிருந்த இலட்சியம்.  எனவே, நாடக நடிகனாக இவர் மாறியது பிடிக்காமல் இருந்தார். ஆனால், அவரே இவரது நடிப்பைப் பார்த்துப் பாராட்டினார்.  எனவே, எசு.எசு.ஆர். மேலும் ஊக்கத்துடன் நடிப்பில் கருத்து செலுத்தினார்.

 நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது  தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். 19-11-1943 இல் ஈரோட்டில் `சந்திரோதயம்' நாடகத்தை நடத்த அறிஞர் அண்ணா வந்திருந்தார்.  அறிஞர் அண்ணாவிற்கு எசு.எசு.ஆர்.தான் ஒப்பனை செய்தார். இதன் மூலம் அறிஞர் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாருடனும் தொடர்பு ஏற்பட்டுத் தன்மதிப்பு, பகுத்தறிவு முதலான கொள்கைகளில் ஈடுபாடு காட்டினார்.
 திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கேற்ப அபிபமன்யு என்னும் படத்தில் அபிமன்யுவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால்,  டி.கே.எசு.நாடகக்குழுவின் ஒப்பந்தப்படி மேலும் 7 மாதம்  நடிக்க வேண்டி யிருந்ததால் வாய்ப்பு பறிபோனது. (இப்படத்தில் அபிமன்யுவாக எசு.எம்.குமரேசனும் அருச்சுனனாக எம்ஞ்சியாரும் நடித்தனர்.)

 அதன் பிறகு சேலம் மூர்த்தி பிக்சர்சின் "ஆண்டாள்'' படத்தில் எசு.எசு.ஆர். "இன்ப உலகிலே மன்மதன் பூங்கனை'' என்ற பாடலைப் பாடி பின்னணிப்  பாடகராக அறிமுகமானார்.
 பைத்தியக்காரன் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துத் திரையுலகில்  நடிப்புத்துறையில் காலடி எடுத்து வைத்தார். என்றாலும் நேசனல் பிக்சர்சு பெருமாள் (முதலியார்), ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து உருவாக்கிய "பராசக்தி''  தான் இவரது முதல்படமாகப் புகழ் தந்தது. கலைஞர் கருணாநிதி திரைக்கதை  உரையாடலை எழுதிய இந்தப் படத்தில் சிவாசிகணேசனுடன், எசு.எசு.இராசேந்திரன் புதுமுகமாக   ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் அறிமுகமானார்.  நடிகர்திலகம் போலவே தெளிவாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் சிறப்பாகப் பேசியதால் அனைவராலும் கவரப்பட்டார். 
 
நாடகம் மூலம் திரையுலகிற்கு வந்தவர்களுக்கு நாடகம்மீது தணியா வேட்கை இருக்கும். இலட்சிய நடிகருக்கும் அந்த வேட்கை இருந்தது. எனவே, “எசு.எசு.ஆர். நாடகமன்றம்  தொடங்கினார்.  அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'', "சந்திரமோகன்'',  கலைஞர் மு.கருணாநிதி எழுதிய "அம்மையப்பன்'' ஆகிய நாடகங்களையும் நடத்தினார். இவர் நாடகங்களில் அறிமுகமாகித் திரை உலகில் புகழ் பெற்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், எம்.என்.இராசம், முத்துராமன், மனோரமா. சீலா ஆகியோராவர்.

  திரைப்படங்களில் இலட்சிய நாயகனாக நடித்ததுடன்  வாழ்க்கையிலும் இலட்சியத்தைக் கடைப்பிடித்தார். புராணப் படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் நல்ல வாய்ப்புகளை இழந்தாலும் இலட்சிய நடிகர் என்று பெயர் பெற்றுப்புகழடைந்தார்.

புலவர் அ.கு.வேலன் ஆக்கத்திலும் இயக்கத்திலும் இலட்சிய நடிகர்  நடித்து வெளிவந்த தை பிறந்தால்  வழி பிறக்கும் பெருமளவு வெற்றி பெற்றது. இதனால். அ.கு.வேலன் அருணாசலப் படநிலையத்தை  அமைத்தார். இதுபோல் கோபாலகிருட்டிணன் இயக்கத்தில் நடித்த சாராத பெரும் வெற்றியைத்தந்து அவர் சாரதா பட நிலையத்தை அமைத்தார். இலட்சிய நடிகர் நடித்து  1957 இல் வெளிவந்த முதலாளி படம் மூலம் முக்தா  சீனிவாசன் இயக்குநரானார்.
தங்கரத்தினம், அல்லி, மேனாள் முதல்வர் செயலலிதாநடித்த மணிமகுடம் முதலான படங்களுக்குக் கதை உரையாடல் அமைத்து இயக்கியுள்ளார்.  துன்பம்தீராதோ முதலான திரைப்படப்பாடல்களும் எழுதி உள்ளார்.

 
 ஆசை அலைகள், ஆலயமணி, அல்லி, அல்லி பெற்ற பிள்ளை, அம்மையப்பன், ஆனந்தி, அன்பு எங்கே, அவன்பித்தனா?, தெய்வப்பிறவி, தெய்வத்தின்  தெய்வம், இளமை, இரட்டை மனிதன், காக்கும் கரங்கள், கை கொடுத்த தெய்வம், கைதியின் காதலி, கல்யாணிக்குக் கல்யாணம், காட்டுரோசா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, குமுதம், மகனே கேள், மாமியார் மெச்சிய மருமகள், மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, மணப்பந்தல், மணிமகுடம், மனோகரா, மறக்கமுடியுமா? முதலாளி, முத்து மண்டபம், நானும் ஒரு பெண், நாட்டுக்கு ஒரு நல்லவன், நீங்காத நினைவு, ஓடி விளையாடு பாப்பா, பச்சை விளக்கு, படித்த மனைவி, பணம், பணம் பந்தியிலே, பராசக்தி, பழனி, பெண்ணை வாழ விடுங்கள், பெற்ற மகனை விற்ற அன்னை,பெற்ற மனம், பிள்ளைக் கனியமுது, பூமாலை, பூம்புகார், பிரசிடெண்டு பஞ்சாச்சரம், புதுமைப் பெண், புதுவயல், இராசா தேசிங்கு, இராசாளி, இராசாஇராணி, இரத்தக் கண்ணீர், சங்கிலித் தேவன், சாரதா, சிவகங்கைச் சீமை,  சொர்க்கவாசல், சிரீ ஆண்டாள், தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, தங்கரத்தினம், தங்கத்தின் தங்கம், தேடிவந்த செல்வம், தேடிவந்த தெய்வம், தேடிவந்த திருமகள், தீக்குச்சி, திருடர்கள் சாக்கிரதை,  உல்லாசப் பயணம், உத்தமி பெற்ற இரத்தினம், வானம்பாடி, வழிகாட்டி, வழி பிறந்தது, வீரத்தளபதி வேலுத்தம்பி, முதலான  100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான  தேசிய விருது பெற்றது.
நடிகர், இயக்குநர்,  திரைப்பட உருவாக்குநர், பின்னணிப் பாடகர், திரைப்பாடலாசிரியர், எனப்பலவகைகளிலும் திரைப்படத்தில் ஆட்சி செய்து வந்தார்.

தமிழக அரசின் பாகவதர் விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது, குடியரசுத் தலைவர் விருதுகள் முதலான பல்வேறு விருதுகளை  இலட்சிய நடிகர் பெற்று இருக்கிறார்.
இவர் முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக பதவி வகித்தார்.
தமிழ் ஒலிப்பில் தனி முத்திரை பதித்துக்கணீர் குரலில் மக்களைக்கவரந்த இலட்சிய நடிகர்  சே.சூ.இரா. என்னும் எசு.எசு.ஆர்.மறைவிற்குத் திரை உலகம் கண்ணீர் வடித்து இன்றைய பிற்பகல் படப்பிடிப்பையும் நிறுத்தித் தன் அஞ்சலியைத் தெரிவித்துள்ளது.  தலைவர்களும் இரங்கலுரை தெரிவித்துள்ளனர். திரை நேயர்கள்  நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அகரமுதல இதழும் தன் 
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

thamizhil_padippoam01
  தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே!
 தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின் கீழ் 2006-2007 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து படிப்படியாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு வகுப்பு என்ற முறையில் வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது. இதனைப் பள்ளிக் கல்வியமைச்சரும் கல்வித்துறை அதிகாரிகளும் வெவ்வேறு நேர்வில் தெரிவித்துள்ளனர்.
இனி மத்தியப் பள்ளிகளுக்கும் இதே நிலைதான்!
 இச்சட்டத்தின் கீழ் வராத, மத்திய அரசு வாரியப் பள்ளி முதலான அனைத்துப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ்மொழியானது கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழக அரசு இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது(பள்ளிக்கல்வித்துறை அரசாணை பல்வகை எண் 145 நாள் புரட்டாசி 2, 2045 / 18.09.2014).
அரசு தெரிவிக்கும் நடைமுறை
 இதன்படிப் பின்வரும் முறையில் தமிழ்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும். (முறையே கல்வியாண்டும்   நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வகுப்புகளும்)
2015-16 —– 1
2016-17 —– 1, 2
2017-18 —– 1,2,3
2018-19 —– 1,2,3,4
2019-20—— 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை
2020-21—— 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை
2021-22—— 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை
2022-23—— 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
2023-24 —– 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை
2024-25 —– 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை
இவ்வாண்டு முதலே அனைத்து வகுப்புகளில் தமிழ் வேண்டும்!
ஒரே ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் தமிழை அறிமுகப்படுத்தாமல் தி.மு.க. அரசு செய்த தவறு, அ.தி.மு.க. அரசாலும் பின்பற்றப்படுகிறது. மூவாண்டில் அனைவருக்கும் தமிழ் கற்பிக்கலாம். எனினும், அவ்வாறு விரும்பாவிட்டால் எளிய முறையில் அனைத்து வகுப்பினருக்கும் இவ்வாண்டே தமிழ் அறிமுகப்படுத்தலாம். தமிழே படிக்காமல் இருப்பதற்கு முதல் வகுப்புநிலையிலாவது தமிழ் படிப்பது மேலல்லவா? அதற்கு இவ்வாண்டு அனைத்து வகுப்புகளிலும் முதல் வகுப்பிற்கான பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு, இரண்டாம் வகுப்பில் இருந்து அனைவருக்கும் இரண்டாம் வகுப்புப்பாடம், அதற்கு அடுத்த ஆண்டு மூன்றாம் வகுப்பிலிருந்து அனைவருக்கும் மூன்றாம் வகுப்புப் பாடம் என்ற படிநிலைகளில் தமிழ் மொழிப்பாடம் இருக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால், 2023-24ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புவரை எல்லா வகுப்புகளிலும் அந்தந்த வகுப்பிற்கேற்ற பாடம் நடைமுறையில் இருக்கும். அடுத்த இரண்டாண்டுகளில் தமிழ் படிக்காதவர் யாருமில்லை என்ற நிலை தானாகவே வந்து விடும். இதனைத் தனித்தனியே குறிப்பதாக இருப்பின் பின்வருமாறு கூறலாம்.
பின்பற்ற வேண்டிய நடைமுறை
 2014-2015 : 1 முதல் 12 வரை முதல் வகுப்புப் பாடம்
2015-2016 : முதல் வகுப்பிற்கு முதல் வகுப்புப் பாடம்;
2 முதல் 12 வரை இரண்டாம் வகுப்புப் பாடம்
2016-2017 : முதல் வகுப்பிற்கு முதல் வகுப்புப் பாடம்,
2 ஆம் வகுப்பிற்கு இரண்டாம் வகுப்புப்பாடம்; 3 முதல் 12 வரை மூன்றாம் வகுப்புப் பாடம்
2017-2018 : 1-1, 2-2, 3-3;
4 முதல் 12 வரை நான்காம் வகுப்புப்பாடம்
2018-2019 : 1-1, 2-2, 3-3, 4-4;
5 முதல் 12 வரை ஐந்தாம் வகுப்புப் பாடம்
2019-2020: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5;
6 முதல் 12 வரை ஆறாம் வகுப்புப் பாடம்
2020-2021: 1-1, 2-2, 3-3, 4-4, 5 -5, 6-6;
7 முதல் 12 வரை ஏழாம் வகுப்புப் பாடம்
2021-2022: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7;
8 முதல் 12 வரை எட்டாம் வகுப்புப் பாடம்
2022-2023: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8;
9 முதல் 12 வரை ஒன்பதாம் வகுப்புப் பாடம்
2023-2024: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9;
10 முதல் 12 வரை பத்தாம் வகுப்புப் பாடம்
2024-2025: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9, 10-10;
11, 12 ஆம் வகுப்புகளுக்கு 11 ஆம் வகுப்புப் பாடம்
2025-2026: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9, 10-10; 11-11, 12-12
என எல்லா வகுப்புகளிலும் அந்தந்த வகுப்பிற்குரிய பாடம்.
இடைக்கால ஏற்பாடாக ஒரே நிலைப் பாட அறிமுகம் தவறல்ல!
 மேல் வகுப்பு மாணவர்களை முதல் வகுப்பிற்குரிய தேர்வை அல்லது குறைவான வகுப்பிற்குரிய தேர்வை எழுதச் சொல்வது சரியா என்று எண்ணலாம். தமிழே அறியாமல் மாணவர்கள் படிப்பை முடிப்பதைவிடக் குறைந்த நிலையிலாவது தமிழ் பேச, எழுதத் தெரிந்தவர்களாக வருவது சிறப்பு என்று எண்ண வேண்டும்.
 அல்லது பொதுத் தேர்வான பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் குறைவான தரத்திலான பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் செய்வதால் தமிழை முதல்பாடமாக முன்னரே எடுத்துப் படித்து வருபவர்களுக்கும் இவர்களுக்கும் சமனிலை இருக்காதே என்றும் எண்ணலாம். இப்பொழுது அயல் மொழி எடுத்துப்படிப்பவர்கள் அத்தகைய குறைவான தரத்திலான பாடத்திட்டத்தில் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெற்று வருகின்றனர் எனவே, அதற்கு இது பரவாயில்லை.
தீர்விற்கான இரு வழிகள்
 இதனைத் தீர்க்க இரு வழிகள் உள்ளன. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற முறையிலான பாடத்திட்டத்தை முதல் 5 வகுப்பிற்கு ஒரு நிலை, 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை, 9,10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை 11,12 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை என அறிமுகப்படுத்தலாம்.
அல்லது தகுதித் தேர்விற்கோ பணித் தேர்விற்கோ கருதிப்பார்க்கும் பொழுது தமிழ்மொழியை முறையாக மொழிப்பாடமாக எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 10 விழுக்காடு மதிப்பெண்ணைச் சேர்த்து, மொத்தமாகக் கணக்கிட வேண்டும். இம்முறையை 2026 ஆம் ஆண்டுவரை நடைமுறைப் படுத்தினால் போதும். இதனால் தவறு ஒன்றும் இல்லை.
  ‘அறிவியல் தமிழ்’ பாடத்திட்டச்செயலாக்கம் என்னவாயிற்று?
இந்தநேரத்தில் ஒரே ஆண்டிலேயே எல்லா வகுப்பிலும் தமிழ்ப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் செயலற்றுப் போனதையும் நினைவில் கொள்ள வேண்டும். “தமிழ்நாட்டில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தமிழ்மொழி கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாதென்பதை எங்கள் ஆட்சியில் உறுதிப்படுத்துவோம் என்று சொல்லிக் கொள்கிற வகையில் அதிமுக ஆட்சியில் ”அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை முதலமைச்சர் செயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்” என அ.தி.மு.க.வினரால் போற்றப்பட்ட திட்டம் என்னவாயிற்று?
2003, 2004 கல்வி ஆண்டு முதல் அனைத்துவகைப் பள்ளிகளிலும் இளமழலை முதல் +2 வரை மற்ற பாடங்களுடன் ‘அறிவியல் தமிழ்’ என்ற பாடத்தை கற்பிக்க ஆணையிட்டு அதற்கென பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
நடைமுறைப் படுத்தப்படாமல் போனது ஏன்?
 2012இல், அப்போதைய முதல்வரான செயலலிதாவும் சட்டமன்றத்தில் தெலுங்கிலேயே பேசும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விடையாக, “தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் கட்டாயம் தமிழ் படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கருநாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திரத்தில் தெலுங்கு மொழியிலும்தான் படித்தாக வேண்டும் என்னும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ்படித்தாக வேண்டும் என்று எதிர்ப்பது முறையல்ல” என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் முந்தைய இவரின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் போனது ஏன்?
கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை
 கல்வித்துறையின் முறையான செயல்பாடு இன்மையால்தான் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே, முதலில் இவ்வாணையைச் செயல்படுத்தாத கல்வித்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்விநிலையங்கள் தமிழ் கற்பிப்பதில் முழுமையான ஆர்வம் காட்டும். கல்வித்துறையினரும் தமிழ்நாட்டில் தமிழ் கற்பிக்கப்படச் செய்வது தங்கள் கடமை என உணர்வர். இப்போதைய சட்டத்தையும் எந்த அளவிற்கு மேம்படுத்தித் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழில்லா நிலை இல்லாத நிலையை உருவாக்குவர்.
தமிழகக்கல்வியகங்களில் தமிழே வேண்டும்!
எனவே, செயற்பாடுகளில் குறையில்லா வகையிலும் மேற்குறித்தவாறு இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்பினரும் தமிழ் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியும் தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழ் இருக்க ஆவன செய்ய வேண்டும்.
அன்னைத்தமிழைப் படிப்போம்!
அன்னைத்தமிழில் படிப்போம்!
tamilstudyG.O.page01 tamilstudyG.O.page02
ஐப்பசி 2, 2045 / அக். 19, 2014
 இதழுரை
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png