திங்கள், 1 பிப்ரவரி, 2010

இலங்கை கடற்படைத் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர்களின் வலைகள் மூழ்கடிப்பு



ராமேசுவரம், ஜன. 31: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகில் இருந்த வலைகள், பலகைகளை இலங்கை கடற்படையினர் கடலில் முழ்கடித்தனர்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை (ஜன.30) சுமார் 600 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோம். இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது 2 போர்க் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், எங்கள் படகுகளை மடக்கிப் பிடித்தனர். ஜோசப், செல்வம், சேசு, சேகர் உள்ளிட்ட 10 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளைப் பிடித்து, அவற்றில் இருந்த மீன்பிடி வலைகள், பலகைகளை அரிவாளால் வெட்டி கடலில் மூழ்கடித்தனர். மீன் பதப்படுத்தும் ஐஸ் பெட்டிகளையும் கடலில் வீசினர். நாங்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களையும் அள்ளிச் சென்றனர். நாங்கள் அனைவரும் வெறும் படகுகளுடன் சனிக்கிழமை இரவு கரைக்குத் திரும்பினோம். இதனால் ரூ. 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இந்தத் துயரங்கள் தொடர்வதற்கு 6 காரணங்கள்தாம் இருக்க முடியும். 1.) தமிழர்கள் இந்தியக் கூட்டமைப்பில இல்லை என்ற உறுதியான நம்பிக்ககை மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 2.) தனனுடைய ஏவலைத்தான் சிங்களப்படையினர் செய்கிறார்கள் என்ற மன நிறைவு மததிய அரசிற்கு இருக்க வேண்டும். 3.) தான் என்ன செய்தாலும் வெத்துவேட்டுத் தமிழக அரசு ஒன்றும் சொல்லாது; எதுவும் செய்யாது என்ற உறுதிப்பாடு மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 4.) தமிழ் நாட்டில் சிறுபான்மையராக ஆகிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மேலும் இல்லாதொழிப்பதையே மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். 5.) இன உணர்வும் மனித நேயமும் அற்ற தமிழர்களை அழிக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தனி யரசு ஒன்றும் இல்லையே என்ற துணிச்சல் மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 6.)எப்பொழுதாவது வீராவேசமாகப் பேசினாலும் எப்பொழுதும் தமிழ மக்கள் கொத்தடிமைகளே என்ற பட்டறிவு தந்த பாடத்தை நன்கு படித்திருக்க வேண்டும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 3:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Important incidents and happenings in and around the world

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக