சனி, 17 ஏப்ரல், 2010

நிதிப்பற்றாக்குறை குறித்து கவலை தேவையில்லை: ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதில்

First Published : 21 Mar 2010 12:00:00 AM IST

Last Updated : 21 Mar 2010 01:35:56 AM IST

சென்னை, மார்ச் 20: "தமிழகத்தின் ஒட்டுமொத்த 3.23 சதவிகித நிதிப்பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி}பதில் அறிக்கை:2009-2010 ஆம் ஆண்டு ரூ.1,024 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை என்பது 2009}2010 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டுத் தொகை. 2009}2010 ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின்படியான வருவாய்ப் பற்றாக்குறை ரூ.5,020 கோடியாக என்பது தான் சரியான தொகை. இந்த ரூ.5,020 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை தான் தற்போது 2010}2011ல் ரூ.3,396 கோடியாக வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் குறைந்துள்ளதே தவிர, வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என்று ஜெயலலிதா கூறியிருப்பது தவறான புள்ளி விவரமாகும்.ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசின் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றாலும், உலகப் பொருளாதார மந்த நிலையால் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவாலும்தான் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார தேக்க நிலையில் இருந்து மீள்வதற்காக மத்திய அரசு பல்வேறு வரிச்சலுகைகளை இந்த ஆண்டு அளித்தது. அதனால் அரசின் வருவாய் குறைந்ததும், பற்றாக்குறை அதிகமாக ஒரு முக்கியக் காரணமாகும்.2008}2009 ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று அறிவித்த மத்திய அரசு 2009}2010 ஆம் ஆண்டு 4 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது.2009-2010 திருத்திய மதிப்பீட்டின்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை 3.23 சதவிகிதம்தான். எனவே பற்றாக்குறை குறித்து கவலைப்படத் தேவையில்லை.விலைவாசியைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் உணவு மானியமாக இந்த நிதிநிலை அறிக்கையிலே மட்டும் ரூ.3,750 கோடி வழங்கப்பட்டுள்ளது.இதுபோல பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான்.பொது விநியோகத் திட்டத்துக்கு அரசு தரும் பணம், இந்த மாநிலத்திலே உள்ள ஏழை எளிய மக்களுக்குத் தான் பயன்படுகிறது.தேசிய நதிநீர் இணைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள் பற்றியெல்லாம், ஆளுநர் உரையிலேயே கூறப்பட்டுவிட்டது. அதைப் பார்க்காமல், நிதிநிலை அறிக்கையிலே இவைகள் இல்லை என்று கூறுவது தவறு.சட்டப்பேரவைத் தேர்தலை மனதிலே வைத்து தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று ஜெயலலிதா கூறியிருப்பது, ஏராளமான திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார் என்று தானே அர்த்தம். அதாவது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார்."நிலைகுலை' பட்ஜெட் என ஜெயலலிதா கூறியிருப்பது, அவர் நிலைகுலைந்த நிலையில் தான் இருப்பதைப் பற்றி இவ்வாறு சொல்லிக் காட்டியிருக்கிறாரோ என்னவோ?2009}ம் ஆண்டு இறுதியில் தொடக்க கூட்டுறவு வங்கிகள் ரூ.8,534 கோடி அளவில் கடன்களை வழங்கியிருந்தன. எனவே கிராமங்களில் கூட்டுறவு வங்கிகள் இல்லாமல் விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்பது சரியல்ல என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

பிறரை முட்டாளாகவும் தன்னை எலலாம தெரிந்தவராகவும் எண்ணும் மேதையே உம் கருத்து முதலில் உமக்கே பொருந்தும். எல்லாக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தாம் என்பதைத் தெரிவிப்பதில் தவறு இல்லை. அனைத்துக் கட்சித் தலைமைகளும் மாறினால்தான் விடிவு பிறக்கும் எனத் தெரிவித்ததிலும் எக் குற்றமும் இல்லை. பண்போடு எழுதக் கூறுவதற்கு மறுமுனையாளர் அதற்குரிய தகுதியோடு இருக்க வேண்டும் அல்லவா? எனவே, அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுளே@ மேதையாஎண்ணிக் கொள்ளும் பேதைகளை மன்னிக்கவும். வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:47:00 AM
சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கைசென்னை, ஏப். 16: சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. பதர் சயீத் கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தை பரீட்சார்த்த முறையில் சோதனை செய்துவிட்டு பிறகு நடைமுறைபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்த பிறகு சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும். எனவே சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். புதிய சட்டப் பேரவை கட்டடம் குறித்து தினமும் பெருமை பேசுகிறீர்கள். கட்டடம் மட்டும் பெரியதாக இருந்தால் போதாது. இந்தப் பேரவையில் மக்களுக்காக விவாதம் நடைபெற வேண்டும். ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். எனவே எங்களுக்கும் அதிக நேரம் வழங்க வேண்டும். எங்களால்தான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது என்று கூறிக் கொள்கிறீர்கள், ஆனால் இங்கே, பெண் உறுப்பினர்களுக்கு பேச உரிய வாய்ப்பு அளிப்பதில்லை.எதிர்க்கட்சி தொகுதி என்பதால் எனது திருவல்லிக்கேணி மீது அரசின் பார்வை படுவதே இல்லை. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், மீன் அங்காடி நவீனமயமாக்கம் என்று தொகுதிக்காக நான் கேட்டவை எதுவும் நடக்கவில்லை. சிங்காரச் சென்னை என்று சொல்லி குடிசைவாசிகளை நகருக்கு வெளியே அனுப்புகிறீர்கள். அவர்களுக்கு நகருக்கு உள்ளேயே மாற்று இடம் வழங்க வேண்டும். சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணியில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மக்களை வெளியேற்றும் அரசு, கால்நடைகளை வெளியேற்றுவதில்லை.போலி மருந்துகளோடு ஒப்பிடும்போது காலாவதியான மருந்துகள் பரவாயில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் காலாவதியான மருந்துகளால் உயிரிழப்புகள்கூட ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார் பதர் சயீத்.
கருத்துக்கள்

இதுதான் அதிமுகவின் நிலைப்பாடுஎன்றால் அக்கட்சி தமிழகத்தை விட்டுக் காணாமல் போனால் நல்லது.

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:15:00 AM
சிறைச்சாலைகளில் நூலகங்கள்: தங்கம் தென்னரசுசென்னை, ஏப்.16: "சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.​சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:​ திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெறும் நூலகப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.​"சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும். பொது நூலக இயக்கத்தின் கீழ் வாடகை கட்டடங்களில் செயல்படும் நூலகங்களுக்கு சொந்த நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.​ அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு, மதிப்பெண் அட்டவணைகளை சரிபார்க்கவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையறியவும் ஏதுவாக ரூ.20 லட்சம் செலவில் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.
கருத்துக்கள்

நல்ல திட்டம். பாராட்டுகள். (சிறைச்சாலைகளில் இப்பொழுதும் பள்ளிகளும் அதனால் நூலகங்களும் உள்ளன அல்லவா? )

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:08:00 AM
பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லாதது வெட்கக்கேடானது: மேயர்சென்னை, ஏப். 15: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெறாதது வெட்கக்கேடானது என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், மே 31}ம் தேதிக்குள் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வணிக சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த மேயர் பேசியது:கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள்தான், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் பிரதானமாக இடம் பிடித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆங்கிலம்தான் பிரதான இடம்பிடித்துள்ளது. ஜூன் 23}ம் தேதி கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் பிரதானமாக இடம்பெற வேண்டும். இதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படமாட்டாது. ஜூன் 1}ம் தேதி முதல் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்காத பெயர்ப் பலகைகள் அப்புறப்படுத்தப்படும் என்றார்
+++++++++++++++++++
இப் பொழுதாவது இந்த முடிவிற்கு வந்ததற்குப் பாராட்டுகள். சென்னை என்றி ல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடை முறைப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணைக்கிணங்க ஒரே பெயர்ப்பலகையில் தமிழும் ஆங்கிலமும் (தேவையெனில் பிற மொழியும்) 5: 3 : (2) என இருக்க வேண்டும். அரசு அலுவலகப் பெயர்ப் பலகைகளே அவ்வாறு இல்லை. எளிய முறையில் செயல்படுத்த பல வழிகள் உள்ளன. அவ்வாறு செயல்படுத்தாமல் ஆரவார அறிக்கைகளுடன் நின்று விடக் கூடாது. தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் அவல நிலையைப் போ க்க எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 2:55:00 AM

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை மீறி, அவர்களை அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அசாம் கவர்னர் வழிகாட்டியுள்ளார்.அசாம் மாநிலத்தில் கி.பி.,15ம் நூற்றாண்டில், சங்கரதேவர் என்பவரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ சம்பிரதாயத்தில், அதன் வழிபாட்டிடத்தில் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் வழி பாட்டிடத்தில் பெண்கள் நுழைவதில்லை.

சமஸ்கிருத மொழியில் வல்லுனரான, அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், மாநிலத்திலுள்ள பல 'சாத்ரா' என்ற வழிபாட்டு அரங்கில் வழிபட்டுள்ளார். அவர் கடந்த 4ம் தேதி, பார்பேட்டா என்ற இடத்திலுள்ள சாத்ராவுக்குச் சென்றபோது, அந்த இடத்துக்கு வெளிப்புறத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.பின்னர் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், சாத்ராவின் உயர்மட்ட அதிகாரியைச் சந்தித்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிறுவிய சங்கரதேவரோ அவரது சீடர் மாதவதேவரோ, இவ்விதம் வழிபாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை குறிப்பிட வில்லை என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டினார்.

சாத்ரா அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப் பட்டப்போதும் கூட, பெண்களே இந்த வழிபாட்டு அறையில் நுழையாமல் இருந்தனர் என்று கூறினார். பின்பு கவர்னருடன் 20 பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர்.மறுநாள், ஐந்து பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர். அதில் ஒருவர் 51 ஆயிரம் ரூபாயையும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு பெண் நாலாயிரத்து 800 ரூபாயையும் காணிக்கையாக அளித்தனர்.

அசாமின் பிரபல இலக்கியவாதியும், ஞானபீட விருது பெற்றவருமான மமோனி ரைசன் கோஸ்வாமி, கவர்னரைச் சந்தித்து வரலாற்றுச் சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
மா தவம் ( பெருந்தவம்) செய்தவன் மாதவன்; சங்கு அறுக்கும் தொழில் புரிபவன் சங்கரன். எனவே, இவை நல்ல தமிழ்ச் சொற்களே. தேவர் என்பதும் நல்ல தமிழ்ச் சொல். தேவர் அனையர் கயவர் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவரும். தேவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். எனவே, சமயத் தலைமைப் பொறுப்பில் தேவர்கள் இருந்ததில் வியப்பில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் வந்த பின் அமைந்த அரசியலமைப்பு. நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்களே. ஆனால், அரசமைப்பால் இந்தியர்கள். இன்றைய சூழலில் இந்த அரசமைப்பு சிதைவு படக் கூடாது என்பது உண்மைதான். அதே நேரம் நாம் தமிழர்கள் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.எனவே, நண்பரே உண்மையைப் புரிந்து கொள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 20:19:15 IST
சரியான வழிகாட்டு முறை... நன்றி...
by H நாராயணன்,Hyderabad,India 15-04-2010 20:03:52 IST
திருவள்ளுவன் சொல்வது மிகவும் சரி நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் எங்கள் உயிர்
by pms அப்துல்ரகுமான் ,dubai,India 15-04-2010 14:23:35 IST
ஹலோ mr திருவள்ளுவன்,என்ன சொல்றிங்க மாதவா அண்ட் சங்கரா இந்த ரெண்டு பெரும் தமிழ் பேர் இல்லையே! 2000 வருஷத்திற்கு முன்ன திருக்குறள் ' ஆதி பகவன் முதற்றே உலகு ' என கூறுகிறது ! தமிழ் என் தாய்மொழி, ஹிந்து என் மதம்! தெரிந்துகொள்! இந்தியன் என்று சொல்வோம் ! ஜெய் ஹிந்த்!
by ka விஜயகுமார்,singapore,India 15-04-2010 09:40:15 IST
சங்கரத் தேவர் , மாதவத் தேவர் என்னும் பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழர்கள் அசாமில் செல்வாக்குடன் வாழ்ந்தமையைக் காட்டுகின்றது. இந்தியக் கண்டம் முழுவதும் பரவியிருந்த தமிழ் மொழியும தமிழ் இனமும் அழிவைச சந்தித்ததன் காரணம் பிற மொழிச் சொற்களைக்கலந்து மொழிக் கொலை புரிந்து புதிய மொழிகள் உருவாக வழி வகுத்ததே! இனியேனும் மொழிக் கொலையைத் தடுப்போம்! நம மொழி காப்போம்!
நம் இனம் காப்போம்!
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 03:10:32 IST

Human Intrest detail news

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் ஒருவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கள்ளக் குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிப்பவர் பாஞ்சாலை (51). இவரது கணவர் நடராஜன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பாஞ்சாலையின் நான்கு மகன் களில், இருவருக்கு திருமணமாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவில் ஊக்குனராக இருந்து, பெண்கள் வங்கி கடனுதவி பெற உதவி வருகிறார். இவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி முடித்து சாதித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்து முழுவதையும் தலைகீழாக எழுதியுள்ளார். இதனை கண்ணாடி எதிரில் வைத்து பார்த் தால் மட்டுமே, நேராக படிக்க முடியும்.நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
தலைகீழாக அல்லது இடவலமாக எழுதும் கிறுக்குத்தனத்தை எப்படிச் சாதனை என்று சொல்ல முடியும்? திருக்குறள் பரவலுக்கான ஆக்கபூர்வச் சாதனை எதுவும் செய்திருக்கலாமே! வேலையில்லாதவன் பூனை முடியை மழிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அருள்கூர்ந்து இப்படிப்பட்ட அறியாமைச் செயல்களைச் சாதனை என்று சொல்லி ஊக்கப்படுத்த வேண்டா.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
by I. Thiruvalluvan,chennai,India 16-04-2010 05:17:52 IST
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா.
by palani,abudhabi,UnitedArabEmirates 16-04-2010 01:01:05 IST
1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ள உங்கள்ளுக்கு என் வாழ்த்துக்கள் .
by m prasanth,nellai,India 15-04-2010 21:20:59 IST
Nice Mummy - I see you in the news paper. I hope once you can done this - I am very happy to get a news. Our prayer is with you. For your, Loveable sons..,
by S அபுதாகிர்,Dubai,UnitedArabEmirates 15-04-2010 19:18:13 IST
I am really surprised that except one or two everyone is praising her act. Please come out of this idoicy. Make the best use of your mind and intellect to understand the meaning behind scriptures like Thirukkural for your growth. Thiruvullavar would have ashamed and felt really sad of this act. Bharathiar would have sung, 'Nallathor veenai seithane, athai nallankeda puzhuthiyil erivadhando'. This act is a shame to Tirukkural. Please stop supporting such kinds of acts which would only promote false beliefs on meaningful scriptures.
by Ramesh,NewJersey,UnitedStates 15-04-2010 18:59:51 IST
நல்ல முயற்சி வாழ்த்துகள்
by A jeyanthi,Madurai,India 15-04-2010 18:44:06 IST
மேலும் பல முயற்சிகள் மேற் கொள்ளவும், இந்த முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவன் திரிகூடபுரம் village
by Great thrikoodapuram,Thrikoodapuram,India 15-04-2010 18:17:36 IST
Why cant Our TamilNadu Chief Minister will honor this Lady to attend TamilSemMozhli Manadu at coimbatore.
by N SenthilKumar,Dubai,UnitedArabEmirates 15-04-2010 16:56:34 IST
தங்கள் செயல் வியக்கதக்கது... பாராட்டும் விதமாகவும் உள்ளது .. இளைஞர்களுக்கு தங்கள் செயல் ஒரு உற்சாகத்தை அளிக்கிறது... உங்கள் புகழ் மேலும் வளர வாழ்த்துக்கள் ..
by m mahendran,salem,TN,India 15-04-2010 16:45:23 IST
Life go to back ., excellent, this is example.
by n vengudupathi,coimbatore,India 15-04-2010 16:44:26 IST
குட் நீங்க எப்பவும் sweet16
by N ரமேஷ்,coimbatore,India 15-04-2010 16:38:26 IST
தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
by a எழில்,sankarapuram,India 15-04-2010 16:27:12 IST
அம்மா பஞ்சாலை நடராஜன் உமக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள். மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு பெண்மணி எனது தமிழ் மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என் தமிழ் தாய் திருக்குறள் பாஞ்சாலை அவர்களே. நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எனது பாராட்டுக்கள்!
by S Senthilmurugan,Singapore,Singapore 15-04-2010 16:16:32 IST
நல்ல முயற்சி மேடம். உங்களால் உங்கள் சுற்றத்தினர் இன்ன பிற துறைகளில் நற் பயன் அடைவர். நன்றி.
by நந்த குமார்,chennai,India 15-04-2010 15:51:17 IST
This is excellent job.Keep it on.
by T Murugadas,Singapore,Singapore 15-04-2010 15:43:28 IST
It's Realy GOOD.
by s சேதுராமன்,Mohali,India 15-04-2010 15:27:29 IST
சாதனைக்கு வயது தடை அல்ல ஏய் சீரியல் பெண்களே இதை கொஞ்சம் படிங்கள்
by s subramani,trichy-pudukkottai,India 15-04-2010 14:59:25 IST
இந்த விஷயம் திருவள்ளுவருக்கு தெரியுமா அக்கா
by kr திருப்பதிராஜா ,konnathanpatti,India 15-04-2010 14:29:40 IST
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் திருக்குறளை இடவலமாக எழுதியதற்கு பதிலாக தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் உண்மை பொருளை தங்கள் பிள்ளைக்கோ அல்லது தங்களை சுற்றி வசிக்கும் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துருந்தால் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
by b.s. thiripurasundari,kumbakonam,India 15-04-2010 13:16:53 IST
என் தாய் நாட்டின் தமிழ் மகளே உன்னை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.படிக்காத எங்கள் ஊரை சார்ந்த இந்த பெண்மணி செய்த சாதனையால் நான் மிகவும் பெருமையடைகிறேன். பாலா... குவைத்.
by Bala,Poottai-sankarapuram.,India 15-04-2010 13:14:56 IST
this shows how you are respecting tamil and kural. You have dishonoured the tamil law book. Take it back
by R பிரின்ஸ் ,dubai,UnitedArabEmirates 15-04-2010 13:05:42 IST
இதனால் என்ன பயன் மற்றவர்களுக்கு, இதை விட நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கும்போது!
by K செல்வம்,KALLAKKURICHI,India 15-04-2010 12:33:55 IST
நேரா எழுதுனாலே படிக்கிறதுக்கு கஷ்டம் நம்ம ஆளுங்களுக்கு; இதுல தலைகீழா எழுதுனா கேக்கவே வேண்டாம்! முயற்சிய கொற சொல்லலே, இருந்தாலும்ம்..
by S பாலா ஸ்ரீனிவாசன் ,Chenna,India 15-04-2010 12:19:56 IST
பாராட்டுக்கள்.இதுபோன்று உண்மையிலேயே தமிழில் திறமை உள்ளவர்களால் தான் தமிழ் வாழ்கிறதே தவிர தமிழை தன்னுடைய செல்வங்களுக்காக மக்களின் மூலம் தனது பொருட்செல்வத்தை பெருக்கி கொள்ளும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிப்பது எப்போது?
by k anjanenjan,dubai,UnitedArabEmirates 15-04-2010 12:12:16 IST
Great Job. But what is the purpose of doing so. Not able to understand. If this great time consuming dedicated work, leads for next step her creativity remains for ever. Is it something like a negative film image. Any way appreciate her work. If it is any other country they would have exhibited her work in a closed glass room and kicked-of a thiruvalluvar museum. Not a bad idea to post to our CM and display at valluvar kottam for ever.
by SV Vel,Tokyo,Japan 15-04-2010 11:56:35 IST
அட்டகாசம்
by K Godfather ram,Tirupur,India 15-04-2010 10:19:51 IST
நீங்க டிவி சீரியல் எல்லாம் பார்க்க மாட்டீங்களா?
by m சிலம்பரசன் சேகுவேரா,தோஹா,India 15-04-2010 10:18:20 IST
அம்மா பாஞ்சாலை நடராஜன், அவர்களே என்னவென்று பாராட்டுவது - பத்தே பத்து குறளைக் கூட மனப்பாடம் செய்யமுடியாது , என்னால் கணக்கு என்றாலே அலர்ஜி விஞ்ஞானம் என்றால் விடு ஆளை என்று ஓடிஒளிந்த பள்ளிக் காலத்தில் என் ஆசிரியர் ஐயாத்துரை தலையில் அடித்துகொள்வார் என்னதான் ஆகுமோ என்று. ஆனால் அதற்கு மாறாக இன்று உங்களை போலவே ஒரு குறிப்பிட்ட துறையில் மிளிருகின்றேன் . இதில் உள்ளிருக்கும் ரகசியம் என்னவென்றால் - எதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகமோ அவருக்கு முறையான பயிற்சியின் மூலம் அதை வெளிகொனருதல் வேண்டும். மற்றொன்டும் இங்கு குறிப்பிட வேண்டும் - இதுபோன்ற தனியியல்பு உடையவரை இளைய வயதிலேயே அடையாளம் கண்டு விஞ்ஞானிகளும் இயக்கங்களும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாட்டை சுற்றி பார்க்க வருவதுபோல் - வெள்ளையன் இவர்களை கொள்ளையடித்து சென்றுவிடுவான். தமிழன் பிறப்பாலே தலைச்சிறந்த அறிவாளி , பெரும் ஆற்றல் படைத்தவன். வாழ்க உங்கள் தனித்திறன் , பிறருக்கும் இதனை போதித்து - குரள் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுங்கள்
by ponn nanthan,pekan,pahang,Malaysia 15-04-2010 10:11:43 IST
இது தலைகீழ் அல்ல. இடவலம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
by dhaamu,muscat,India 15-04-2010 10:06:35 IST
பேஷ்! என் வாழ்த்துக்கள்! இவர் திருக்குறளை இட வல மாய் எழுதி உள்ளார்! நமது அரசியல் தமிழ் தலைவர்கள் தலை கீழாய் பயன் படுத்துகிறார்கள்!! என்னே விந்தை!!
by TA Elayalvar,Chennai,India 15-04-2010 09:47:02 IST
அம்மா திருக்குறளை நேராக எழுதவே நன்கு படித்தவர்களுக்கு கூட எத்தனை மணி நேரம் ஆகும் என்று தெரியாது. அன்னல் நீங்கள் தலை கீழாக.......நோ சான்ஸ் . நானும் கள்ளகுறிச்சி தான்...இதில் எனக்கும் பெருமை...
by A shankar,male,Maldives 15-04-2010 09:27:51 IST
பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் திருக்குறள் அமைப்புக்கள் இவரை பாராட்டி இன்னும் ஊக்குவிக்கவேண்டும்.
by MU ANBAZHAKAN,thirukoilr,India 15-04-2010 08:59:30 IST
VERY GOOD WORK DONE BY THE LADY. EVEN MUCH EDUCATED PEOPLE WILL NOT TRY TO DO THIS COMPLICATE JOB. WE HAVE TO APPRECIATE HER FOR HER DEEP RESPECT TO THE THIRUKKURAL THE WORLD FAMOUS BOOK. I AM VERY PROUD TO BE A CITIZEN OF KALLAKURICHI.
by K GNANASEKARAN,TRICHY,India 15-04-2010 08:27:12 IST
வாழ்த்துக்கள் அம்மா...
by Raja v,Woodlands,Singapore 15-04-2010 08:10:25 IST
வாழ்த்துக்கள்...... உங்கள் முயற்சி மதிக்கப்படவேண்டும் ஆனால் நம்நாடு நம்மை மிதிக்க பார்க்கும் தயங்காதீர் முயற்சி செய்துகொண்டே இருங்கள்.... நன்றி....
by P RAJU,MARINABAY,Singapore 15-04-2010 07:45:43 IST
கடினமான இந்த முயற்சிக்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
by muthukumar,Mysore,India 15-04-2010 07:31:57 IST
she is really great i appreciate
by a arun,singapore,Singapore 15-04-2010 07:20:46 IST
என் தாய் நாட்டின் தமிழ் மகளே உன்னை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். நீவிர் வாழ்க பல்லாண்டு. இதே போல் இன்னும் பல சாதனைகள் படைக்க உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பல்லாண்டு வாழ வாத்துகிறேன்.
by N Bala,Singapore,Singapore 15-04-2010 06:52:25 IST
படிக்காத எங்கள் ஊரை சார்ந்த இந்த பெண்மணி செய்த சாதனையால் நான் மிகவும் பெருமையடைகிறேன்.
by k murugan,Kallakurichi,,India 15-04-2010 06:46:44 IST
What is the point in writing Tirukkural in the reverse order. I believe nature has given the mind and intellect to use it wisely. This is neither useful to her nor to the people who are interested to read Tirukkural. She could have better used her time to understand and follow 1% of Tirukkural. At least she should have understood the following Tirukkural, before wasting the precious time. This kural is under the heading: பேதமை. மையல் ஒருவன் களிதற்றார் பேதைதன் கையொன் றுடைமை பெறின். - 832 . நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்த பேதையின் கையில் ஒரு பொருளும் (திருக்குறள்) கிடைத்துவிட்டால் பித்து பிடித்தவர்கள் கள்ளை குடித்து விட்ட கதையாக விடும். Dinamalar or for that matter any media should stop publishing these kind of articles. Or else so many stupid copy cats would follow.
by ரமேஷ்,NewJersey,UnitedStates 15-04-2010 06:34:25 IST
Hats off...good thought....well done.
by ப கேசவன்,சிங்காபூர்,Singapore 15-04-2010 06:33:29 IST
சூப்பர், உங்களுடைய எண்ணத்திற்கு பாராட்டுகள்
by tom,usa,India 15-04-2010 05:40:48 IST
ஆம் கருணாநிதி முதல் எல்லோரும் மனனம் செய்யவும் பரிசு பெறவும் தான் திருக்குறள். பின்பற்றுவதற்கு அல்ல. தொடரட்டும் இந்த ஏமாற்று வேலை.
by v veeran,india,India 15-04-2010 05:13:58 IST
HATS-OFF TO THE LADY. EVEN MORE PEOPLE THEY DONT ABOUT THE THIRUKURAL. BUT SHE WRITTING IN REVERSE MEANS GREAT THING. I CONGRAGLATE HIM TO DO MORE THINGS LIKE THIS IN IS LIFE.THANKU,
by து.செந்தில்குமார் ,vellore,India 15-04-2010 04:54:35 IST
எச்செல்லேன்ட் வொர்க்
by T.G பிரேம்குமார்,OverlandPark,UnitedStates 15-04-2010 03:55:25 IST
அதிகம் படிக்காவிட்டாலும் என்ன ஒரு முயற்சி, சாதனை! தமிழில் மீது உள்ள ஆர்வத்திற்கும் திருக்குறளில் மீது கொண்ட பற்றிற்கும் எனது வாழ்த்துக்கள்.
by நா ஜெயராமன் ,Suva,Fiji 15-04-2010 02:15:28 IST
மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு பெண்மணி எனது தமிழ் மண்ணில் முக்கியமாக என்னுடைய வட்டாரத்தில் பிறந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். நன்றி என் தமிழ் தாய் திருக்குறள் பாஞ்சாலை அவர்களே. மிக்க நன்றி. நானும் ஒரு கல்லை மனவாட்டியே
by p vasu,villupuram,India 15-04-2010 00:57:56 IST