சனி, 3 ஜூலை, 2010

தமிழ்ப்பெயர் சூட்டிய கவிஞர் தமிழ்இன உணர்வாளரிடம் கேட்கிறார் ஆகாசு கவிஞர் யாரென்று? என்ன பொருள்? ஆதர்சக்கவிஞர் எனக் கேட்க எண்ணினாரோ! முன்னோடி/ வழிகாட்டி/ முன்முறை/என்னும் சொற்களில் ஒன்றைப் பயன்படுத்தக்கூடாதா? அயற்சொற்களைக் கலந்தால்தான் தமிழ்ப்பாவலன் என்னும் மூட நம்பிக்கையை ஒழிபபீர்களாக! தமிழில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுதுவீர்களாக! அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++
vathilai praba
இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுவது யார்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

First Published : 03 Jul 2010 12:25:00 AM IST


சென்னை, ஜூலை 2: இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா?இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ""ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

ரண்டு தலைவர்களின் கருத்துகளையும் ஏற்போம்! எனவே, இருவரும் இன்றைக்கு இனப்படுகொலையைத தடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. கட்சிக் கொத்தடிமையில் இருந்து தமிழக மக்கள் மீண்டழுந்து விழித்துணர்ந்து இன நலன் பேணுவார்களாக! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-பன்னாட்டு உறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/3/2010 4:24:00 AM
dei molla maari innumuma intha oor unna nambhuthu?
By navin guru
7/3/2010 4:01:00 AM
துரோகி துரோகி கருணாநிதி துரோகி 1) பிரபாகரனை விசாரணைக்கி ஒப்படைக்க செல்வது சரி.மருத்துவத்துக்குவந்த தாயவே துரத்தியடித்த துரோகி.த.வி.பு.இந்.நுளை விடகூடாது?.இன்று புலிகள் இல்லாத ஈழதமிழரை புலி என்று கூறி சிறையிலடிக்கிறாயே துரோகி.ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்? 4இலட்சம் தமிழர் வன்னியில் இருந்தபோது இராயபக்ச‌ நாராயணன் சிவசங்கர் மேனன் பிரனாப் முகர்ச்சி அவர்களுடன் சேர்ந்து வெறு 77பேர்தான் வன்னியில் உள்ளனர் என்று நீயும் கூறி மிகுதி தமிழருக்கு உணவும் அனுப்பாமல் மிகுதி தமிழரை
By பண்டார வன்னியன்
7/3/2010 3:45:00 AM
கொல்ல நினைத்தாயே துரோகி! .த.வி.பு.மக்களை இரானுவ கேடயம்! துரோகி இதை நீயும் தானே கூறினாய்? .த.வி.புகளால் எனது உயிருக்கு ஆபத்து என்று நீ விட்ட அறிக்கையை மறந்தாயா துரோகி! தமிழ்நாட்டின் சட்டசபையின் அனைத்துகட்சி தீர்மானத்தை குழிதோண்டிபுதைத்தவன் நீ தான் துரோகி. 26.06.09 அன்று அ.தி.மு.கா.ஜெயக்குமாரால் ஈழதமிழர் படுகொலையை விசாரிக்க‌ சர்வதேச நீதி விசாரணை தேவை என்று சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தை தி மு கா ஆளுடையப்பனனை கொண்டு நிராகரித்து மகிந்த இராயபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தாயே யார் துரோகி நீ துரோகி 03.05.09 அன்று மிக கடுமையாக ஈழ தமிழன் கொல்லப்பட்டு காயங்களுடன் மருந்து கொடுத்துதவி செய்யுங்கள் என்று கத்டிய குரல் உலக நாடுகளுக்கு கேட்டது உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் போய் ஓய்வெடுத்து நாடகமாடினா(நா)யே துரோகி. இந்தியாவின் வெளியுறவு கொள்கை தான் என்னுடைய கொள்கை என்று
By பண்டார வன்னியன்
7/3/2010 3:44:00 AM
பகிரங்கமாக அறிக்கை விட்டாயே துரோகி. பிரித்தானிய வெ.து. ஓடிவந்து உன்னிடம் கேட்டதே. ஒரோ ஒரு அறிக்கை விடுங்கள் நாங்கள் ஈழ‌ தமிழரை காப்பாற்றுகிறோம் என்று விட மறுத்தாயே துரோகி. மகளை கொண்டு தமிழனின் பிணமாலை சுமந்தவனுக்கு பொன்னாடை போத்தி அழகு பாத்தாயே துரோகி .தமிழனுக்கு ஜெயலலிதா செய்த துரோகங்கள் 1வீதம் நீ தமிழனுக்கு செய்த துரோகங்கள் 99வீதங்கள் நீ ஆயிரம் செம்மொழி மகாநாடு நடத்தலாம் நீதமிழனுக்கு செய்த செய்கின்ற துரோகங்கள் மறைந்து விவோ மறைக்கப்படவே முடியாது துரோகி துரோகி துரோகி கருணாநிதி துரோகி வரலாறு தமிழனால் அழியவில்லை தமிழன் என்று கூறி வந்தேறிகளால் அழிக்கப்பட்டுள்ளது. நீ தமிழனுக்கு செய்த துரோகங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள் அதற்கான காலங்கள் கடந்துவிடவில்லை அதை விடுத்து மோலும் மோலும் ஆரியரும் திராவிடரும் சிங்களவரும் தமிழனை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் 12 கோடி தமிழரால் பதிலடிதரமுடியும் திருந்துங்கள் எதிரி துரோக கூட்டங்களே திருந்துங்கள்
By பண்டார வன்னியன்
7/3/2010 3:43:00 AM
Mr. RAJA mentioned rightly,, I am happy Tamil people now many Tamils know JJ and MK are ANTI TAMILA and corrupt to core. DMK and ADMK NEVER liked Great Prabhakaran to run a corrrption FREE , real secular, strong and peacefull country.If it happens TN people will start thinking then it will affect their future,, so with Sonia they killed freedom fighters, innocents and destryed the Eelam. Now when I see their condition and SL army further crushing them, really tears comes in my eyes,, moral anger raise,, Ohh God punish these traitors,, plssssss One request to all support SEEMAN and read naamtamilar.org
By kumar
7/3/2010 3:38:00 AM
விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ முகாங்களை அதிகரித்தும் பலப்படுத்தியும் வருகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்திற்கு அண்மித்தாக போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் புனர்வாழ்வு முகாம்கள் இயங்குகின்றன. அவற்றை இலக்கு வைத்துக் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. போர்க் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறும் அரசிற்கு இனப் பிரச்சனைக்குரிய தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் இன்னும் புலிகள் தலைமறைவாகச் சிறு குழுக்களாக காடுகளுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்றர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்படுகின்றார்கள்.
By கரிகால்சோழன்
7/3/2010 2:29:00 AM
Ah stupid you. Let me mention the word you once mentioned "Saljappu" (what it means?). Do not show Saljappu here. Everbody knows jj is anti-Thamizh and anti-National, but you are worse than a Traitor. Everyone expected that you were going to stop the war, save innocent lives and push back the invaders to their land. But because of your greediness for Power and safegaurd your family interests, you pawned our nation's interest at the feet of stupid sonia and hindikarans. No true Thamizh will ever vote for you or for your family members. You better get out of Thamizh Nation. Do not use Ezham to settle scores with your arch rival. Both jj and you are crimnals in God's court and you guys sure go to hell.
By Raja
7/3/2010 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 2 ஜூலை, 2010

ஐ.நா.  குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும்: ஜெயலலிதா

First Published : 02 Jul 2010 01:15:35 AM IST


 சென்னை, ஜூலை 1: இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை, குழு ஒன்றை அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு அரசும், முதல்வர் கருணாநிதியும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் ஐ.நா. சபை ஆதரவு கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை தலைவரின் இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபட்ச அரசு குற்றம் செய்யவில்லை என்றால், ஐ.நா. குழுவை இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், ராஜபட்ச அரசு செய்த கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகமில்லை.÷கருணாநிதி மீது குற்றச்சாட்டு: இலங்கையில் போர் முடிந்த 19.5.2009-ம் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.  போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியதை தமிழக மக்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள தமிழர்களும் நம்பினார்கள். போர் முடிந்து விட்டது என்று நம்பி, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தவர்கள் மீது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இரண்டே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  போர் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்காத அப்பாவி மக்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனால், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொல்ல, இலங்கை அரசுக்கு கருணாநிதி உதவி செய்திருக்கிறார்.  எனவே, ராஜபட்ச சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான்.  ஐ.நா. சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அ.தி.மு.க. குழு அவர்களைச் சந்திக்கும். கருணாநிதி போர் குற்றவாளி என அறிவிக்கத் தேவையான ஆதாரங்களை ஐ.நா. குழுவிடம் அ.தி.மு.க. அளிக்கும்.  சதிச் செயல்களால் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்காக இதையாவது நாம் செய்ய வேண்டும். இதைத்தான் நம்மால் செய்ய முடியும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


சோனியா முதலான தலைவர்களையும் மன்மோகன்சிங், பிரணாப் முதலான ஆட்சிப்பொறுப்பாளர்களையும் , நாராயணன் முதலான அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் இவரது நிலைப்பாட்டை நிலையானது என்று கருதலாம். இல்லையேல் அரசியல் நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுதித்தந்தவர்கள் பிறரைச் சேர்க்காமல் இருந்தாலும் அவர்கள் சேர்த்து இவர் எடுத்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மை எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தேர்தல் நேரத்தில் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதாக அறைகூவிய எதிர்க்கட்சித் தலைவியே! ஈழச்சிக்கலைத் தேர்தல் கருவியாகக் கருதாமல் வாழவேண்டிய மூத்த இனம் வஞ்சகத்தால் மடியும் அவல நிலையில் இருந்து காக்க வேண்டிய கட்டாயக் கடமை எனக் கருதிச் செயல்படுக! உள்ளுணர்வுடன் உண்மையாகத் தமிழ் ஈழம் அமைய, தமிழர்தாயகம் உரிமையுடன் திகழப் பாடுபட்டீர்கள் என்றால் உலகம் உங்கள் பின்னால் அணிவகுக்கும்.இல்லையேல் உங்கள் தொண்டர்கள்கூட உங்கள் பேச்சை நம்ப மாட்டார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2010 4:12:00 AM

நீங்க விஷயம் புரியாம பேசுறீங்க அம்மா !...ஒரு குண்ட போட்டு ராஜபட்சே ஒரே நேரத்துல லட்சக்கணக்கான தமிழர்கள கொன்னுபுட்டாறு ! எதோ விதிப் பயன் அப்படின்னு நெனச்சு மனச கல்லாக்கிக்கிட்டு கிடந்துடலாம் !!! அனால்...இந்த மேப்படியார் இருக்குறாரே ...நீங்க வீரமான பொம்பளை பேர சொல்லிப் புட்டீங்க! நாங்கெல்லாம் பயந்து போயி கெடக்குறோம் ! கெட்டசாதிப் பய தொந்தரவு கொடுப்பான்!....அந்த மோசக்காரப் பய தமிழன சாகவும் விட மாட்டேங்குறான் ....வாழவும் விட மாட்டேங்குறான் ....அப்படியே ரத்தத்த சுரக்க சுரக்க ..உறிஞ்சிக்கிட்டே இருக்குறான் !கடவுளா பாத்து இரக்கப் பட்டு....அவன் கதைய முடுச்சு ....தமிழ் இனத்துக்கு என்றைக்கு ஒரு நல்ல சேதியைக் கொடுத்து தீபாவளி கொண்டாடச் சொல்லப் போறாரோ தெரியல !!!! @ rajasji
By rajasji
7/2/2010 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 30 ஜூன், 2010

நேபாள நாட்டின் மருமகள்

First Published : 30 Jun 2010 12:00:00 AM IST


நேபாள நாட்டின் மருமகள் ஆகிவிட்ட மனீஷா தற்போது இந்தியாவில்தான் இருக்கிறார். தனுஷின்  "மாப்பிள்ளை' படத்துக்காக ஜூலை 15-க்கு மேல் தமிழகத்துக்கு வருகிறார். பின் பாலிவுட்டின் கால்ஷீட்டுகளை முடித்து விட்டுத்தான் நேபாளம் செல்கிறார். இதன் பின்தான் சினிமா பற்றிய அடுத்தக் கட்டத்தை அறிவிக்க இருக்கிறாராம்.
கருத்துக்கள்

மேனாள் நேபாளத் தலைமையமைச்சருக்கு உறவினரான மனிசா கொய்ரலா ஒருநேபாளப் பெண். அதனை யறியாமல் நேபாள மருமகள் என்று குறிக்கப்பெற்றுள்ளது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அடுத்து செய்ய வேண்டியது என்ன?

First Published : 29 Jun 2010 01:43:08 AM IST


உலக அளவில் தமிழின் சிறப்பை அறியச் செய்யவும், தமிழர்களின் பெருமைகளை விளக்கவும் மாபெரும் தமிழ் மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டுப் பலரும் இம் மாநாட்டில் பங்கேற்றுப் பெருமை சேர்த்ததை நன்றியுள்ள தமிழன் மறக்கமாட்டான். இத்தனை சிரமங்களும் எதற்காக? தமிழின் தொன்மையைப் பறைசாற்றுவதற்கும், பிற மொழிகளில் இல்லாத சிறப்புகளை எடுத்துக்கூறவும்தான். இப்படிப்பட்ட நிலையில் தமிழின் வளர்ச்சிக்கும், அதைப் பாதுகாப்பதற்கும் நாம் செய்ய வேண்டிய பணிகள் போதுமானதா என யோசிக்க வேண்டும். இனிமேல்தான் நாம் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். தமிழ் வாழ்கிறதா?  தமிழன் வாழ்கிறானா? இதுவே நம் கேள்வி. இன்று அரசுத் துறைகளாகட்டும், தனியார் துறைகளாகட்டும் 90 சதவிகிதம் பேருக்கு தமிழ் குறித்த அடிப்படை அறிவு இல்லை என்றே கூறலாம். பேச்சு, எழுத்து வழக்குகளில் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பெரும்பாலான படித்தவர்களிடம் காணப்படும் குறை லகரம், ழகரம் எங்கு பயன்படுத்துவது என்பதுதான். இன்னும் சிலரோ ர, ற பயன்படுத்துவதையும், ன, ண பயன்படுத்துவதையும் அறியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை, மருத்துவம், பொறியியல், கணிப்பொறித் துறைகளில் வல்லுநர்களாகத் திகழும் தமிழர்களுக்கு அறவே தமிழ் தெரியாத நிலையை என்னென்பது?  கடந்த திமுக ஆட்சியில், தமிழுக்கென்றே தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டார். அது பின்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது அந்தத் துறைக்கு அவசியம் வந்துள்ளது.  செம்மொழி மாநாடுதான் முடிந்துவிட்டதே, இனி தமிழ் தானாக வளரும் என யாரும் எண்ணி அமைதியாக இருந்துவிடக் கூடாது என்பதே நம் கவலை. எனவே, உடனடியாக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இனி தீவிரம் காட்ட வேண்டும்.  ஒவ்வொரு துறையிலும் ஆவணங்கள், சுற்றறிக்கைகள், வருகைப் பதிவேடு உள்ளிட்டஅனைத்துமே தமிழில் கட்டாயம் இருக்குமாறு உத்தரவிட வேண்டும். தினம் ஒரு குறள் மாதிரி, தினம் ஒரு தமிழ் நூல், காப்பியம், புராணம் என்ற ரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.  இதற்கு ஊடகங்கள், பத்திரிகைகளின் பங்களிப்பைத் தாராளமாக நாடலாம். அனைத்துப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி, நீதிபோதனை, கைத்தொழில் பாடவேளையை ஒதுக்குவது போல, தமிழ் சிறப்பு வகுப்பைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம்.இப்போது ஆங்கிலம், தமிழ் என இரு பாடவேளைகள் உள்ளதைத் தவிர்த்து முழுக்க முழுக்க இலக்கணம், இலக்கியம், தமிழறிவு சார்ந்த பாடங்களைப் போதிக்கும்படிச் செய்யலாம். இதற்கு மதிப்பெண் தர வேண்டியதில்லை.  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் என்ற கோஷத்தை மட்டுமே அறிந்துள்ளோம். அதை நிஜமாக்கும் வகையில் தமிழ் நூலகத்தைத் தீவிரமாக்கி, அங்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள், தமிழறிஞர்களை வைத்து வகுப்புகள், போட்டிகள் நடத்தச் செய்யலாம்.  இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச பரிசுகள், அன்பளிப்புகள் ஆகியவற்றை நல்ல தமிழ் நூல்களாக மலிவு விலையில் அச்சிட்டு வழங்கலாம். தங்கள் நிறுவன விளம்பரப் பைகளை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே அச்சிட்டு வழங்கலாம். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் குறள்களை மட்டுமே எழுதிவைப்பதைத் தவிர்த்து இலக்கியம் தொடர்பான வாசகங்களை எழுதச் செய்யலாம்.  விடுமுறை நாள்களில் பைபிள் வகுப்புகள், கணினி, விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதைப்போல தமிழ் இலக்கணம், தமிழ்க் காப்பிய அறிமுகம், தமிழ் பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிகளை நடத்தலாம். இதற்காக அரசே நிதி உதவி செய்யலாம் அல்லது வியாபார நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடலாம்.  பிரபல தலைவர்களுக்குப் பாராட்டு விழா, நன்றியறிவிப்பு விழா என்றெல்லாம் வீணாகச்  செலவழிப்பவர்கள் அதைத் தமிழுக்காகச் செலவிடலாம். இலவசமாகத் தமிழ் நூல்களை வழங்கலாம். அன்னதானம் வழங்குவதைப்போல நூல்தானம் வழங்கலாம்.  முன்பெல்லாம் தமிழ் வளர்க்க உதவியவை திருமண, பிறந்தநாள் விழாக்கள்தான். அன்று  திராவிட இயக்கத்தின் இளம் பேச்சாளர்கள் தமிழில் சொற்சிலம்பம் விளையாடுவார்கள். இன்று அவை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டன.  பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் என்றெல்லாம் தமிழ் மணந்தது. வளர்ந்தது. இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னேதான் அனைவருடைய முக்கால்வாசி ஆயுளும் வீணாகிறது.  இன்றைக்கு 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் தமிழில் சரளமாக முழுமையாக பேச, எழுத அறிந்தவர்கள். இன்றைக்கு 40 வயதானவர்களை எடுத்துக் கொண்டால் பலர் தமிழில் வெற்றிடமாக இருக்கிறார்கள். எனவே, மலிவு விலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களை அச்சடித்து விநியோகிக்கலாம். ஊடகங்கள் வழியே நாடகம், சித்திரங்களாகத் தமிழ்க் காப்பியங்களை மீண்டும் வெளிக்கொணரலாம். ஆங்காங்கே தமிழ் மன்றங்களைத் தொடங்கி கவியரங்கம், தமிழ் இலக்கிய அரங்கம் போன்றவற்றை நடத்த வேண்டும்.    முன்பெல்லாம் கோயில் விழாவாகட்டும், பள்ளி விழாவாகட்டும் இலக்கிய நாடகங்கள் நடைபெறும். இன்று அனைத்தும் பழங்கதையாகி விட்டது. எனவே, தமிழை வளர்க்க மறுமலர்ச்சி அவசியம்.
கருத்துக்கள்


தமிழை வளர்க்க வலியுறுத்தும் கட்டுரையிலேயே கோசம், நிசம் என்றுஎ ல்லாம் எழுதினால் தமிழ் எவ்வாறு வளரும்? தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழில் பேசுங்கள்; தமிழில் பயிலுங்கள்; தமிழ் தானாக வளரும். கட்டுரையாளர்கள் எப்படி எழுதியிருந்தாலும் பிற மொழிச் சொற்களைத் திணிக்கும் போக்கு ஊடகங்களில் உண்டு.தினமணியாவது அதற்கு மாறாகப் பிற மொழிச் சொற்களைக் களைந்து நல்ல தமிழில் கட்டுரைவர ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்திய பிரிவினை சக்திகளுக்கு கனடா இடமளிக்காது: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 29 Jun 2010 12:00:00 AM IST

Last Updated : 29 Jun 2010 03:21:04 AM IST

டொரன்டோ, ஜூன் 28: இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளை கனடா ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். ÷ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க டொரன்டோ வந்துள்ள பிரதமர், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் பேச்சு நடத்தினார். இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது:÷சீக்கிய சமுதாயத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் கனடாவிலிருந்து செயல்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய சக்திகளை கனடா அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது.÷கனடாவில் உள்ள சீக்கியர்கள் மிகவும் வளமாக வாழ்கின்றனர். கனடாவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கை முறை மாறிவிட்டது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புபவர்கள். கனடாவின் மிகச் சிறந்த குடிமக்களாக வாழ்கின்றனர்.÷இவர்களில் ஒரு சிறு பிரிவினர் பிரிவினை சக்தியாக உருவெடுத்துள்ளனர். இது சீக்கிய சமுதாயத்துக்கு உடன்பாடானதல்ல. இந்தியாவுக்கெதிரான இத்தகைய சக்திகளின் செயல்பாடு ஒருபோதும் எடுபடாது. ஏனெனில் இந்தியாவுடன் கனடாவுக்கு மிக நெருங்கிய நட்புறவு உள்ளது என்றார் மன்மோகன்.÷இத்தகைய பிரிவினை சக்திகள்தான் தங்கள் மீதான கருப்புப் பட்டியல் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் இத்தகைய சீக்கிய பிரிவினைவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.÷உலகிலேயே மிகவும் கோரமான விமான விபத்து சீக்கிய பிரிவினை சக்திகளால் 1985-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் அமைப்பு சீக்கிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த 329 பேரும் உயிரிழந்தனர். சமீபத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்த 25-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.÷சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங், மேலும் குறிப்பிடுகையில், மதத்தின் பெயரால் இத்தகைய பிரிவினை சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகள் வேறு நாடுகளில் செயல்படுவதையும் ஏற்க முடியாது. உலகில் பன்முக கலாசார பின்னணியில் ஒருங்கே வாழும் சூழலில் இதுபோன்ற பிரிவினை சக்திகளுக்கு இடமில்லை. ÷பிரிவினை சக்திகளுக்கு கனடா மண்ணில் இடமளித்துவிடக்கூடாது என தெரிவித்ததற்கு, இது போன்ற பிரிவினை சக்திகளை ஒடுக்குவதற்கு வலுவான சட்டம் உள்ளதாக ஹார்ப்பர் தெரிவித்ததாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
கருத்துக்கள்


கனடா அனுமதிக்காது எனக் கனடா நாட்டுத் தலைவர்தானே அறிவிக்க வேண்டும்? மொழிபெயர்ப்பில் தவறா? அல்லது தவறாகத்தான் தலைமையமைச்சர் பேசினாரா? கனடா அனுமதிக்கக் கூடாது என்றோ கனடா அனுமதிக்காது என எதிர்பார்ப்பதாகவோ கனடா அனுமதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவோ கூறுவதுதானே சரியாக இருக்கும். இவ்வாறு கூறியதுதான் தவறாக வந்துள்ளதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:27:00 AM
1.கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
By easta
6/29/2010 12:25:00 AM

2. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
By easta
6/29/2010 12:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

மாநாட்டுச் செலவு ரூ.68 கோடி: முதல்வர் தகவல்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=263913&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bae%u0bbe%u0ba8%u0bbe%u0b9f%u0bcd%u0b9f%u0bc1%u0b9a%u0bcd+%u0b9a%u0bc6%u0bb2%u0bb5%u0bc1+%u0bb0%u0bc2.68+%u0b95%u0bcb%u0b9f%u0bbf%3a+%u0bae%u0bc1%u0ba4%u0bb2%u0bcd%u0bb5%u0bb0%u0bcd+%u0ba4%u0b95%u0bb5%u0bb2%u0bcd
First Published : 29 Jun 2010 12:54:00 AM IST


கோவை, ஜூன் 28: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நேரடியாக ரூ.68.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.243 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பங்கேற்றனர். கலை, இலக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் அன்றைய தினம் மாலையில் நடந்த இனியவை நாற்பது ஊர்திகள் அணிவகுப்பை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  ஜூன் 24 முதல் 26 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொதுக் கண்காட்சியை நான்கு நாள்களிலும் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  தினமும் 13 மணி நேரம் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.  மாநாட்டுச் சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்ட கட்டுரையாளர்களுக்கு 3 ஆயிரத்து 200 மலர்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 300 மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இணைய மாநாட்டில் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம் மாநாட்டில் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இணைய மாநாட்டின் சிறப்பு மலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். முகப்பரங்கில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உணவுக் கூடங்களில் மாநாடு நடைபெற்ற 5 நாள்களிலும் 4 லட்சம் பேருக்கு ரூ.30 சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிலிருந்து 2 ஆயிரத்து 605 விருந்தினர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு 92 ஹோட்டல்களில் 1,242 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.   ஜூன் 24 முதல் 27 வரை நடைபெற்ற ஆய்வரங்குகளில் 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமர்வரங்குகளில் 50 நாடுகளில் இருந்து 840 பேர் வருகை தந்தனர். இதில் 152 பேர் கட்டுரை சமர்ப்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா (4), கனடா (11), சீனா (1), செக்கோஸ்லோவியா (1), பின்லாந்து (1), பிரான்ஸ் (1), ஜெர்மனி (5), கிரீஸ் (10), இத்தாலி (10), ஜப்பான் (2), ம
லேசியா (23), மொரீசியஸ் (3), நெதர்லாந்து (3), நியூசிலாந்து (1), ஓமன் (1), ஹாங்காங் (10), ரஷியா (1), சிங்கப்பூர் (22), தென்ஆப்பிரிக்கா (3), தென் கொரியா (38) இலங்கை (38), தாய்லாந்து (2), ஐக்கிய அரபு நாடுகள் (1), இங்கிலாந்து (9), அமெரிக்கா (14) ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர் என்றார் முதல்வர்.25 போலீஸôருக்கு வெகுமதிஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீஸôருக்கு வெகுமதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடனே நகர் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. உளவுத் துறை போலீஸôர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். பீளமேடு பகுதியில் மாநாட்டுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்த 4 பேரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், மாநாட்டு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட முயன்றது, மாநாட்டுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 9 பேரை போலீஸôர் கைது செய்தனர்.மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களை சேகரித்துக் கொடுத்த உளவுத் துறை போலீஸôருக்கும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க உறுதுணையாகச் செயல்பட்ட போலீஸôருக்கும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுப் பாதுகாப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 25 போலீஸôருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டது. வெகுமதியைப் பெற்றவர்களுக்கு டிஜிபி லத்திகா சரண் வாழ்த்து தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற, அரிய கண்காட்சியைக் காணத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாரம் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.செம்மொழி மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற "இனியவை நாற்பது' அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மேலும் ஒரு வாரம் கொடிசியா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திங்கள்கிழமை ஆர்வத்துடன் பார்த்து மகிழும் பள்ளி மாணவர்கள்.கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள செப்பேடுகளை திங்கள்கிழமை பார்வையிடும் பள்ளி மாணவர்கள்.
கருத்துக்கள்


மக்கள் நெரிசலைச் சமாளிதது ஒழுங்குபடுத்திய காவல்துறையினர் உண்மையிலேயே பாராட்டிற்குரியவர்கள். (பொதுக் கண்காடசிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். எப்பொழுது பார்த்தாலும் மக்கள் அலைதான் வாசலில் தென்பட்டது.) அதே நேரம், தங்களின் நோக்கம் வன்முறையல்ல என்பதைச் செயலில் காட்டிய தமிழ் உணர்வாளர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். எனவே, சுவரொட்டி ஒட்டியமை போன்ற காரணங்களுக்காகத் தளையிடப்பட்ட அனைவர்களையும் மாநாட்டு வெற்றியை முன்னிட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தமிழறிஞர்களை பாதுகாத்தால்தான் தமிழ் வளரும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்சென்னை, ஜூன் 28: தமிழறிஞர்கள்,எழுத்தாளர்களைப் பாதுகாத்தால்தான் தமிழ் வளரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழருவி மணியனை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், தமிழறிஞருமான தமிழருவி மணியன் மாநில திட்டக் குழு உறுப்பினராக 2006-ல் நியமிக்கப்பட்டார்.அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.ஆனால், வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளின் படி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி, அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று செப்டம்பர் 23, 2009-ல் உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழருவி மணியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் எனக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் சரியாகப் பின்பற்றி வருகிறேன்.இந்த நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதால் வெளியேற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.நோட்டீûஸ பார்த்த பிறகுதான் அதுபோன்ற விதி இருப்பதே தெரியவந்தது. எங்கள் குடியிருப்பில் உள்ள வேறு யாரிடமும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்தவில்லை.வார இதழ்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால் என்னையும், குடும்பத்தினரையும் அவமானப்படுத்தவே வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எங்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமாறு எந்த நோட்டீஸýம் அளிக்காமல் திடீரென்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மனுதாரரைப் போன்றே வீடு ஒதுக்கப்பட்ட மற்றவர்கள், ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம் வலியுறுத்தவில்லை.மனுதாரரிடமும் இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அரசுக்கு எதிராக எழுதியதால் அவரை வெளியேற்றுவதற்காக இந்தக் காரணம் கண்டறியப்பட்டுள்ளது.தமிழருவி மணியன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும் அவருக்கு என்று சொந்த வீடு இல்லை என்ற அவரது வழக்கறிஞரின் வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.தமிழறிஞர்களைக் காப்பாற்ற வேண்டும்: வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களைக் காப்பாற்ற வேண்டும்.கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக் கூடாது. அதன் பிறகே, தமிழ் வாழ்க என்ற கோஷம் மேலும் ஒளிரும்,  அந்த நம்பிக்கையும் நடைமுறைக்கு வரும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


சரியான தீர்ப்பு. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும் தம்மைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தானே பதவிகளும் பட்டங்களும் வசதிகளும் அளிப்பர்.அவர்கள் நிறம் மாறினால் கொடுக்கப்பட்டவை பிடுங்கப்படும் என்பதுதானே நம் அரசியல் ஒழுகலாறு. அவ்வாறிருக்க எவ்வாறு தமிழறிஞர்கள் என்று முதன்மை அளித்து நோக்குவர்? தமிழறிஞர்களை மதிப்பதாக இருந்தால் முதலில் தமிழ் அமைப்புகளில் இருந்து தமிழறிஞர் அல்லாவதர்களை நீக்குதல் வேண்டும். தமிழாய்ந்த தமிழர்களையே தமிழ் சார் பதவிகளில் அமர்த்த வேண்டும். இதையும் ஏ‌தேனும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு அரசிற்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *