சனி, 30 அக்டோபர், 2010

சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா? 30.10.10

பேரன்புசால் நண்பர்களே!

வணக்கம்.
                 சங்கப்பலகை நிகழ்ச்சிகளைப் பார்த்து ஒத்த உணர்வை வெளிப்படுத்துவதற்கு நன்றி. வரும் 30.10. 10  சனி இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்  கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் உரையாடுகிறார் .
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html

இட்லரின் ஆட்சியை இலங்கை அரசு பின்பற்றுகிறது: மங்கள சமரவீர

இட்லரின் ஆட்சியை இலங்கை அரசு பின்பற்றுகிறது: மங்கள சமரவீர


கொழும்பு, அக்.30- ஹிட்லரின் ஆட்சிமுறையை இலங்கை அரசு பின்பற்றுகிறது என்று இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நவம்பர் 8-ம் தேதி ஜனநாயக உரிமைகளை மீட்பதற்காக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ம் தேதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மங்கள சமரவீர கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தவறு! தவறு! இட்லரை மிஞ்சி விட்டார்கள். என்ன செய்வது? எல்லா அரசுகளும் தனக்கு ஒரு நீதி. அடுத்தவருக்கு ஒரு நீதி என்றல்லவா வாய்மூடி உள்ளனர். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 7:19:00 PM
sinhalese are doing big sin by killing Tamils innocent workers. Tamils are mainly developed sriLanka to big manner GOD howlong Tamils will suffer like this?God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!God should punish them !!!
By Ungaa Aaththaa Tamiludaa..,
10/30/2010 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English
தாய்லாந்தில் இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது


பாங்காக், அக்.30- தாய்லாந்து நாட்டில் இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசா காலம் முடிந்த பின்னர் தங்கியிருந்தது, உரிய ஆவணங்கள் இல்லாதது, சட்டவிரோதமாக தங்கியிருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாங்லா மாகாணத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 53 பேர் முறைப்படி அனுமதி பெற்று வந்ததற்கான ஆவணங்களை காட்டியதால் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துக்கள்

இதனை விதிகளின் அடிப்படையில் கையாளாமல் மனித நேய அடிப்படையில் கையாள வேண்டும். எரியுண்டும் புதையுண்டும் போவதில் இருந்து தப்பி வந்தவர்கள் அல்லது மீள அங்குச் சென்று வதைமுகாம்களில் உயிர் விடும் நிலையில் இருந்து தப்பிப்பதற்காக இருப்பவர்கள் ஆகியோருக்கு ஏதும் சிறப்பு நுழைவுரிமை கொடுத்து உரிமையுள்ள குடிமக்களாக நடத்த வேண்டும். எல்லா நாட்டினரும் இவ்வாறு கையாள வேண்டும். நம் நலம் நாடு அரரசு இருந்தால் தூரதரகங்கள் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கும். அடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்கு அந்நல்வாய்ப்பு இல்லாததால் தனிப்பரிவு காட்ட மனிக உரிமை ஆர்வலர்களும் மனித நேய ஆர்வலர்களும் முயன்று வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 7:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு


இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

மறக்கவியலாத ‘முஸல்(மான்) வேட்டை’யை ‘விவாதிக்கும்’ சமயம் கண்டிப்பாக இதுவல்ல. எனவே இந்தப் பதிவு. மக்கள் தொலைக்காட்சியின் (15/2/2009) ‘சங்கப்பலகை’யில் , மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் திரு புரூஸ் ஃபெயினுடன் தோழர் தியாகு நடத்திய உரையாடல். அந்த அமெரிக்கர் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘ம.தொ.கா’ தந்த தமிழாக்கத்தைப் பதிகிறேன். தகவல் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்துகிறேன். நன்றி.
**
brucefein_4wp
இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு
தியாகு : சங்கப்பலகை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரு புரூஸ் ஃபெய்ன் அவர்களே !
புரூஸ் ஃபெய்ன் : என்னை அழைத்தமைக்காக மிகவும் நன்றி!
சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் எதிராக நீங்கள் தொடுக்க எண்ணியிருந்த இனக் கொலை வழக்கு பற்றி எங்கள் நேயர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். தமிழர்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்து நாம் பேச வேண்டும். நீங்கள் விடைதர வேண்டிய முதல்வினா , சட்டவகையிலும் அரசியல் வகையிலும் ‘இனக்கொலை’ என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் இலக்கணம் அல்லது வரையறை என்ன?
இனக்கொலை என்றால் என்ன என்பதை சட்டவகையில் விளக்குவதற்கு இரு ஆவணங்கள் உள்ளன. முதலாவதாக , 1948ஆம் ஆண்டின் இனக்கொலை தொடர்பான உடன்படிக்கை. அது ஒரு ஒப்பந்தம். 1994ல் அமெரிக்கா இதற்கு…  இஸ்ரேல் ஸ்ரீலங்கா ஆகிய அரசுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இதில் இனக்கொலை என்பதற்கான பொது இலக்கணம் உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி ஒவ்வொருநாடும் இனப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும். இனக்கொலையை தண்டிக்க வேண்டும். கோத்தபய, பொன்சேகா ஆகியோரை கூண்டிலேற்றும்படி நாம் அமெரிக்க அரசைக் கூறுகிறோம் என்பதால் அமெரிக்க நாட்டின் சட்ட நடைமுறையை தெரிந்து கொள்வோம். இனக்கொலை என்பது ஒரு மக்கள் இனத்தை அம்மக்களின் இனம், இனக்குழு, மதம் அல்லது தேசீய இனத்தைக் காரணமாக வைத்து முழுமையாகவோ பெருமளவிலோ அழிக்க முயல்வதாகும். இதற்காகவே நீதியியலுக்கு புறம்பாக கொலை செய்தல், சித்திரவதை, காணமல் போகச் செய்தல் ஆகிய வழிகளிலோ பட்டினி போடுதல் , மருந்து கிடைக்காமல் செய்தல் , உறைவிடம் கிடைக்காமல் செய்தல் , ஓயாமல் புலம்பெயரச் செய்தல் , தலைக்குமேல் கூரையின்றி திறந்தவெளியிலும் மரத்தடியிலும் வசிக்கச் செய்தல் போன்றவழிகளிலோ மக்களைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்ட முயல்வதாகும். இனக்கொலை என்பதற்கான இந்த விளக்கத்தின் அடிப்படையில் கால வரிசைப்படியான ஒரு நிகழ்ச்சித் தொகுப்பை வரைந்துள்ளோம். இலங்கையில் 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சே வகையறா ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றை இதில் பட்டியலிட்டுள்ளோம். இந்தக்  காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முதல் 6 பேர்வரை கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது காணாமல் போயுள்ளார்கள். அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனக்கொலை நடைபெறாத நாளே இல்லையெனலாம். இந்த கொலைபாதகச் செயல்களுக்கும் தமிழ்ப் புலிகளுடன் நடைபெறும் போருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். இவ்வாறு கொல்லப்படுபவர்களெல்லாம் எப்படிப் பார்த்தாலும் போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட சாமான்ய குடிமக்களே. வகுப்பறைகளிலும் தேவாலயங்களிலும் கோயில்களிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலைகளை எதை தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையென்று விளக்க வழியில்லை.
இவ்வகையிலான கொலைகளை போர்நடத்துவதன் ஒரு பகுதியென்று சொல்ல முடியாதா?
முடியவே முடியாது.  வேறு ஒரு நாட்டில் நடந்த இனக்கொலை பற்றிச் சொல்வதானால் சூடான் நாட்டின் அதிபர் பஷீர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனக்கொலை குற்றம் சுமத்தப்பட்டபொழுது அவர் இப்படித்தான் தன்னைக் காத்துக் கொள்ள வாதிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே போர்புரிவதாக அவர் சொன்னார். வழக்கு தொடுத்தவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு என்று சாக்கு சொல்லி இனக்கொலை செய்வதே உண்மையான உள்நோக்கம் என்று எடுத்துக் காட்டினார்கள். பயங்கரவாதம் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இது ஒரு சிறந்த முன்னுதாரணம். நான் தொடுக்கிற வழக்கிலும் இந்த வாதம் , இந்த சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஊதியாக நம்புகிறோம்.
இந்த வழக்கிற்கு முன்னுதாரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனக்கொலை பொறுப்புச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் முதல்வழக்காக நம் வழக்கு அமையும். இனக்கொலை என்பது அன்றாடம் நிகழக்கூடிய வாடிக்கையான குற்றமன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மிகச்சிலரே இக்குற்றம் புரிய வாய்ப்புள்ளது. மிகச்சிலரே இந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கின்றனர். இனம், மதம் போன்ற காரணங்களுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படும்போதே இந்த வழக்கிற்கான தேவை வருகின்றது. நாம் தொடுக்கவிருக்கின்ற வழக்கு ஒரு முன்னோடியாக அமையும். கோத்தபய ராஜபக்சே ஒரு அமெரிக்க குடிமகன். சரத் பொன்சேகா அமெரிக்காவின் ‘பச்சை அட்டை’ வைத்திருப்பவர். அமெரிக்க குடிமக்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறையாக இருக்கும். அமெரிக்க நீதிமன்றங்களின் மேலுரிமைக்கு இவர்களை உட்பட்டவர்களாக்குவது இதுவே. ஸ்ரீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சேயும் இனக்கொலை குற்றவாளிதான் என்று கருதுகிறோம். ஆனால் இப்போதைக்கு நாம் அவர்மீது வழக்குத் தொடர விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அமெரிக்க குடிமகன் அல்லர். செய்நுட்ப வகையில் அவர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும் என்றாலும் கூட அவருக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்பதால் விட்டுவிடுகிறோம்.
இந்த வழக்குகளின் தனித்துவம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை இருவகைகளில் வேறுபட்டதாகும். முதலாவதாக மற்றநாடுகளில் இனப்படுகொலை என்பது வழக்கத்திற்கு மாறான வழக்கத்திற்கு மாறான ஒரு பிறழ்வாகவே நடைபெற்று வருகிறது. அது காலத்தின் பொதுவான போக்கிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஹிட்லருக்கு முந்திய ஜெர்மனியில் யூதர்கள் மற்றநாடுகளைக் காட்டிலும் சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்திருந்தார்கள். ஆகவே 60 லட்சம் யூதர்கள் ஜெர்மனியில் இனப்படுகொலைக்கு ஆளானது ஒரு விதிவிலக்காக நிகழ்ந்தது. ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இனப்படுகொலை வித்துக்கள் பொதிந்திருப்பதை நாம் கண்டுபிடித்தோம். ஸ்ரீலங்கா என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் மகாவம்சத்தின் கதைகளும் தர்மபாலாவின் போதனைகளும் இனக்கொலைக்கே வழிகாட்டுபவையாக உள்ளன. சிங்கள பௌத்தர்களின் இயேசு கிருஸ்துவும் மோசஸ¤ம் நபிகள் நாயகமும் எல்லாமே இந்த தர்மபாலாதான். அவரது கருத்துக்கள் இலங்கைத்தீவின் இனத்தூய்மையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருநாளும் பௌத்த பிக்குகள் மக்களிடையே சிங்கள பௌத்த வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். இவ்வாறு , இனப்படுகொலை வழிபாட்டுக்கு உரியதாக்கப் படுகிறது. ஆகவேதான் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவதற்கு ஒருவகையில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் பங்காளியாக ஆகிறார்கள். இது முதலாவது தனித்தன்மை. இரண்டாவதாக , இதற்கு முன் நடைபெற்றுள்ள இனப்படுகொலைகளைப் பார்த்தால் மிகக் குறுகிற காலத்திற்குள்  பெருந்தொகையினர் கொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.  ஜெர்மனியில் குறுகியகாலத்திற்குள் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இங்கே இனப்படுகொலை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஐந்தாறு பேர் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இப்படியே பல்லாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. 1982, 1983ல் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் பத்தாயிரக்கணக்கான இல்லங்களும் கடைகளும் அழிக்கப்பட்டதுமான நிகழ்வுகளும் உண்டு. இந்த நீண்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் ராஜபக்சே அரசாங்கத்தின் இனக்கொலை குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுதான் இப்போது நடைபெறும் இனப்படுகொலையின் பின்னணி .  இந்த ஆட்சியின் கடந்த மூன்றாண்டு காலத்தில் கொலை , சித்திரவதை , ஆள்கடத்தல் போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிகளோடு வந்து சுட்டுத் தள்ளுவதும் வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்வதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்விதம் கடத்திச் செல்லப்படுபவர்கள் திரும்பி வருவதே இல்லை. இது புதுவிதமான இனப்படுகொலை. ஆனால் கொடுமையில் மற்ற இனப்படுகொலைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல. இதுவும் கொடிய குற்றமே. குறிப்பாகச் சொன்னால் இது பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நீட்டித்து விடுகிறது.
நீங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர என்ணியுள்ளீர்கள். இதற்கு உறுதியான சான்றுகள் தேவைப்படுமே..நீங்கள் எவ்வாறு அவற்றை திரட்டப் போகிறீர்கள்?
உண்மைதான். வழக்கு விசாரணை என்று வரும்போது முழுமையான சான்றுகள் தேவைப்படும். நாம் இன்னும் அந்தக் கட்டத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு நாம் தொகுத்துள்ள சான்றுகளிலேயே சில வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக , ராஜபக்சே, பொன்சேகா படையினரால் திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தகப்பனார் அளித்துள்ள வாக்குமூலம் நம்மிடம் உண்டு. அவர் இப்போது இலங்கையில் உள்ளார். இனப்படுகொலை வழக்கிற்கான அறிக்கையை அடுத்தவாரம் வெளியிடுவோம். மேலும் பலர் சாட்சியமளிப்பதற்கு முன்வருமாறு ஊக்கப்படுத்துவோம். ராஜபக்சே அரசாங்கத்தின் அத்துமீறலை கண்டித்துப் பேசுகின்றவர்கள் யாரானாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையம் ஆனாலும் , படையினரை குற்றம் சொல்கின்றவர் ஆனாலும்…. எல்லாவற்றையும் மறுதலிப்பதும் திருப்பி அடிப்பதும்தான்  ராஜபக்சேயின் வழக்கமாக உள்ளது. எல்லோரையும் அவர்கள் புலிகள் என்கிறார்கள். நாங்களெல்லாம் வெள்ளைப் புலிகளாம். அவரது பரப்புரை எவ்வளவு நச்சுத்தன்மை கொண்டது என்பதை அறிந்துள்ளோம். சாட்சியம் அளிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது என்பதும் புரிகிறது. என்றாலும் அவர்களையெல்லாம் அமெரிக்கா வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்படி ஊக்கப்படுத்துவோம். கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்றவர் ஆனாலும் இதே தமிழ்நாட்டில் அகதி முகாமில் இருப்பவரானாலும் வேறு இடங்களின் வாழ்ந்து வருகின்றவர் ஆனாலும் அவர்கள் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இனக்கொலை குற்றவாளிகள் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களையெல்லாம் கொன்று போடுவோம் என்ற அச்சுறுத்தல் நிலைதான் உள்ளது. சட்டத்தில் சுற்றுச் சான்று என்ற ஒன்று உள்ளது. அந்த அடிப்படையிலும் இனக்கொலை குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியும். நேரடிச் சான்று கிடைக்காதபோது சுற்றுச்சான்றை அடிப்படையாக வைத்து குற்றத்தீர்ப்பை வழங்கலாம். சாட்சிகள் கொல்லப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லி விளக்கமளிக்க முடிந்தால் சுற்றுச் சான்றே முக்கியமானதாகிவிடும். ஏனென்றால் நமக்குத் தெரிந்ததுதான் , இலங்கையில் எல்லாச் செய்திகளும் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. தமிழ் பகுதிகளிலிருந்து உண்மை அறிய வழியேதுமில்லை. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் , அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் , மனிதாபிமான உதவி அமைப்புகள் எதுவும் இப்பொழுது அங்கே இல்லை. எல்லாவற்றையும் அரசு வெளியே அனுப்பி விட்டது. கண்காணிப்புக் குழு எதுவும் இல்லாத நிலையில் அங்கே நடக்கிற உண்மை நிலைகளை அறிய வழியில்லை. எல்லா தகவல் வழிகளையும் அடைத்துவிட்டு அரசு அங்கே என்ன செய்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏதோ கெட்டது நடக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு உங்களுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று நினைக்கிறேன். அல்லது அரசியலால் வழக்கு தொடர வேண்டும்.
வேறு பல நாடுகளைப் போலவே அமெரிக்காவில் கூட அரசுதான் குற்றவழக்கு தொடரமுடியும். ஆகவே நாங்கள் அரசின் நீதித்துறையிடமிருந்தும் அயலுறவு துறையிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டியிருக்கும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊக்கமும்கூட தேவைப்படுகிறது. இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அமெரிக்க குடிமகன் மீது நடவடிக்கை எடுக்க அரசின் ஒத்துழைப்பைப் பெற்றாக வேண்டும். ஸ்லோபோதான் மிலோஸ்விக் (Slobodan Milosevic) , பஷீர்  …  போன்றவர்கள் மீது  இனக்கொலைக் குற்றத்திற்கான வழக்கு தொடுக்கிறோம். ஆனால் குற்றவாளி அமெரிக்க குடிமகனாக இருக்கும்போது அலட்சியமாக இருந்து விடுகிறோம். அமெரிக்காவில் இன்னொரு வழியிலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்டவர்கள், திரிகோணமலையில் கொல்லப்பட்ட ஐவரின் குடும்பத்தினர் அல்லது, பாதிக்கப்பட்ட  எவரும் இழப்பீடு கூறி உரிமையியல் வழக்கு தொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் இல்லையென்றாலும் குற்றம் புரிந்தவர் அமெரிக்கராக இல்லாத போதும் கொடுமை நிகழ்ந்த இடம் அமெரிக்காவில் இல்லையென்றாலும் இவ்வாறு உரிமையியல் வழக்கு தொடர முடியும். இதற்கு அரசிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.  நாம் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம். முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யலாம். ராஜபக்சே மீதும் பொன்சேகா மீதும் வழக்கு தொடரலாம். கலிபோர்னியாவில் இருக்கும் அவர்கள் வீட்டை விட்டு இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கலாம்.
ஆகவே இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறீர்கள். குற்றவியல், உரிமையியல் இருவகையிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படித்தானே?
ஆமாம், அப்படித்தான்.
நீங்கள் இதற்காக நீண்ட நாட்களாய் உழைத்துள்ளீர்கள். அரும்பாடுபட்டு ஏராளமான ஆவணங்களைச் சேகரித்து உள்ளீர்கள். ஆயிரம் பக்கத்திற்கு மேல் வரக்கூடிய இந்த ஆவணங்களை எப்போது அரசிடம் தரப்போகிறீர்கள்? அல்லது ஏற்கனவே தந்து விட்டீர்களா?
அடுத்த வாரம் தந்து விடுவோம். அதனை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இதனை மூன்று நான்கு மாதங்களாக தயாரித்து வருகிறோம். இனக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை நீட்டிப்பதற்கான மிக விரிவான சான்றாக அது அமையும். இது 1948லிருந்து ஆரம்பமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமை குறைப்பு, குடியுரிமை குறைப்பு ஆகியவற்றிலிருந்து இது ஆரம்பமாகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் சட்டக் கண்ணோட்டத்திலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு இது மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அமையும் என்று நம்புகிறோம். இன அழிப்புக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு தமிழனின் கையிலும் இந்த ஆவணம் இருக்க வேண்டும்.
இனப்படுகொலைக்கு அடிப்படையான இனச்சிக்கல் தீர்வதற்கு உங்கள் முயற்சி எவ்வகையில் பயன்படும் என்று நினைக்கிறீர்கள்?
இவ்வழக்கு தொடுப்பது மட்டுமே இனச்சிக்கலுக்கு தீர்வாகி விடாது என்பதை நன்கு அறிவோம். இதனால் அவர்கள் எதையும் கைவிடப் போவதில்லை. உண்மை நிலவரத்துக்கு ஏற்ப செயலுக்கு உகந்த ஒரு இலக்கையே  நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். சர்வதேசிய சமுதாயத்தையோ வேறு ஒரு நாட்டையோ ஐநா அமைப்பையோ அணுகுவதால் இப்போது எந்தப் பயனுமில்லை. எத்தனையோ ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்கள் இந்த துயரத்தை உலகுக்கு உணர்த்துவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். அது எவர் செவியையும் எட்டவில்லை.  ஆகவே இந்த இனக்கொலை வழக்கை மக்களுக்கு அறிவூட்டும் கல்விப்பணியாகவும் கருதுகிறோம். கோத்தபய ,ராஜபக்சே , பொன்சேகா ஆகிய மூவரையும் தண்டிப்பதற்காக மட்டுமே நாம் இதைச் செய்யவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் சிங்கள பவுத்த இனவெறி மனப்போக்கு எப்படி இயங்குகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இந்த இனக்கொலை வழக்கு துணை செய்யும். இந்தோனேஷியவிலிருந்து கிழக்கு திமோரும் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியாவும் செர்பியாவிலிருந்து கொசோவாவும் பிரிந்து சென்றது போன்ற ஒரு தீர்வு ஏன் தேவைப்படுகிறது என்பதை இது விளங்கச் செய்வதற்கான அடித்தளமாக இவ்வழக்கு அமையும். இவையெல்லாம் அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவை. இங்கு ஓயாமல் நிகழும் இனப்படுகொலையைப் பார்த்து இதயம் வெடிக்கிறது. கொத்து குண்டுகள் வீசப்படுகின்றன. தினமும் பத்து பதினைந்து பேர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாம்களின் மீது குண்டு வீசப்படுகின்றன. அதே நேரத்தில் நாம் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் உடனே நின்று விடப்போவதில்லை. இலங்கையிடம் பெட்ரோல் இல்லை. அணு ஆயுதங்களும் இல்லை. அமெரிக்காவின் கவனத்தைக் கவரக்கூடிய எதுவும் இல்லை. அதன் கவனமெல்லாம் இப்போது காஸாவிலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளது. யுரேனியம் அணு ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதற்குக் கவலை. ஈராக், ஆ·ப்கானிஸ்தான் அதற்கு முக்கியம். எப்படியானாலும் ஸ்ரீலங்காவிற்கு அதனால் முதல் முக்கியத்துவம் தர முடியாது. ஆகவேதான் நமது பணியை செய்வதற்கு ஒரு ஆயத்த காலம் தேவைப்படுகிறது. இந்த முயற்சியிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.
தியாகு : நன்றி திரு ·பெய்ன் அவர்களே! எங்களுக்கு நீங்கள் தந்த அறிவு வெளிச்சத்திற்காக நன்றி. கோத்தபய, பொன்சேகா ஆகியோரை இனக்கொலை குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி அவர்களின் உண்மை நோக்கத்தை உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட நீங்கள் மேற்கொண்ட பாடுகளுக்காக உலகத் தமிழர் சார்பில் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டதிற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். நன்றி.
புரூஸ் ·பெய்ன்: நன்றி!
***
நன்றி : மக்கள் தொ.கா, தியாகு, திரு. புரூஸ் ·பெய்ன்
ராஜபட்ச வெற்றியை எதிர்க்கும் பொன்சேகாவின் மனு தள்ளுபடி


கொழும்பு, அக். 29: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.  இலங்கையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபட்ச அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால், வாக்குப் பதிவில் முறைகேடுகள் செய்து அவர் வெற்றி பெற்று விட்டதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதனை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேகா சிறையில் உள்ளார். அவரது ராணுவ அந்தஸ்து, பதக்கங்கள் ஆகியவையும் பறிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

பொன்சேகா வெற்றி பெற்றிருந்து பக்சே வழக்கு தொடுத்திருந்தாலும் இதே நிலைதான் இருந்திருக்கும். கொடுங்கோலர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாளட்டும்! கடவுள் அப்படித்தான் தண்டிப்பார்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வெள்ளி, 29 அக்டோபர், 2010

வெடிபொருள் வாங்க விடுதலைப் புலிகளுக்கு ராஜரத்னம் உதவினார்?

கொழும்பு, அக்.29- விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெடிபொருட்கள் வாங்குவதற்காக அமெரி்ககாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜ் ராஜரத்னம் நிதியுதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எஃப்.பி.ஐ. புலனாய்வு போலீஸார் நடத்திய விசாரணையில், பிரதீபன் என்னும் புலிகள் ஆதரவாளரின் கணினியில் இருந்து இத்தகவல் கிடைத்துள்ளதாக "திவயின" பத்திரிகை தகவலை மேற்கொள் காட்டி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ராஜரத்னத்தின் நிதியுதவி மூலம், சுமார் 205 டன் வெடிபொருட்களை விடுதலைப் புலிகள் வாங்கினர் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ராஜ் ராஜரத்னம் ஏற்கெனவே அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்திய விடுதலைக்கு உதவியவர்களை ஆங்கிலேயர்கள் குற்றவாளிகளாக 
நடத்தினார்கள். 
அதுபோல்தான் இதுவும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English
இலங்கையில் பழைமையான தமிழ் கல்வெட்டு மாயம்?

கொழும்பு, அக்.29- இலங்கையில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான தமிழ் கல்வெட்டு காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திசமஹாராம பகுதியில் ஜெர்மனி அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டு திடீரென காணாமல் போயுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அம்பாந்தோட்டையில் பழங்கால துறைமுகத்துடன் தமிழர்களுக்கு இருந்த தொடர்புக்கு, காணாமல் போன கல்வெட்டு முக்கிய ஆதாரமாக இருந்தது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

மக்களையே மாயமாக்கும் இலங்கை - கூடடு நாடுகளுக்குக் கல்வெட்டுகளை மாயமாக்குவது ஒரு பெரிய வேலையா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:25:00 PM
கல்வெட்டு மட்டுமா?
By gk
10/29/2010 3:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ராஜீவ் காந்தி கொலை: அன்றே எழுதப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் ?
28 October, 2010 by admin
போபால் விஷவாயுக் கசிவு: நாம் அனைவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்களும் நிறையவே உள்ளது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன், மற்றும் ராஜீவ் காந்தியின் கூட்டுச் சதியே இந்த போபால் விஷவாயு தாக்கிய பல சம்பவங்களை மறைத்தது என்றால் ஆச்சரியமாக இல்லையா. இந்தியாவில் போபால் என்ற இடத்தில் யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்றை நிறுவியிருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் என்றாலும் அக் கிராமத்தில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள் என அனைவரும் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அன்று டிசம்பர் 3ம் திகதி 1984, யூனியன் காபைட் தொழிற்சாலை கொள்கலனில் இருந்து திடீரென நச்சுவாயு கசிந்தது. அதனால் பலர் தூக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துபோனார்கள்.தொழிற்சாலையில் இருந்து மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வாயு கசிந்ததில் 2,259 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8௦௦ பேர் இறந்தனர். ஆகமொத்தத்தில் 3,059 பேர் அல்லது அதற்கும் கூடுதலான அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர் என்பதே உண்மை. அந்த நேரத்தில், நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக தாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததாக ராஜீவ் காந்தி தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் மகளோ, புதல்வரோ, இல்லை அம்மையார் சோனியா காந்தியோ இது குறித்து அதிகம் பேசியது கிடையாது. அப்போது யூனியன் காபைட் உரிமையாளராக வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் இருந்தார்.

வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இச் சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் இந்தியா வந்திருந்தார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவருக்கு பாதுகாப்பு வழங்கி தனி விமானத்தில் டெல்லி கூட்டிச் சென்றது ராஜீவ் அரசு. அங்கு அவருக்கு விருந்துபசாரம் ஒன்றையும் கொடுத்து பின்னர் பத்திரமாக நீயூயோர்க் அனுப்பி வைத்ததும் ராஜீவ் அரசுதான். அவர் கைதுசெய்யப்படவில்லை, அவர் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக தப்பிச்செல்ல உதவியதும் ராஜீவ் அரசாங்கமே !

போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவர், இல்லையேல் லாபம் ஈட்டும் நோக்கில் குறைந்த பாதுகாப்பு கருவிகளோடு நச்சுவாயுக் கொள்கலன்களை கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும் அதில் ஒரு ஞாயம் இருக்கிறது ! ஆனால் எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ளமுடியுமா ? அந்த வெட்கக்கேடான செயலே சோனியா விடையத்தில் தற்போதும் நடக்கிறது.

ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார் ராஜீவ், போதாக்குறைக்கு தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என அடியோடு மறுக்கிறார். வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். “ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டதாம் அப்போது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன, அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார் என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ஆக மொத்தத்தில் இவர்கள் இருவருமே ராஜீவுக்கு இவ்விடயம் தெரியும் என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றனர்.

“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுகி விட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.

ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன. இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. (CIA) ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

3000 யிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொனண்ற கொலையாளிக்கு உதவியது இந்திய பீனல் கோட் சட்டப்படி மாபெரும் தவறாகும். குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பதும் ஏன் குற்றவாளியை மறைத்து வைத்திருப்பதும் கூட கடுமையான குற்றமே. இவ் வகையில் வாரன் அன்டர்சனை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பியோட உதவிய ராஜீவ் காந்தியும் ஒரு கொலைக் குற்றவாளியே ! அவர் முறைப்படி நீதி மன்றில் நிறுத்தப்பட்டிருந்தால் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும், ஆனால் அவர் ஆட்சிபீடத்தில் இருந்தால் தப்பித்துக் கொண்டார், தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள் ! அவர் உயிர் பறிக்கப்பட்டது. இதற்காக வருந்துவோர் முதலில் இந்தியாவில் இறந்த 3000 உயிர்களுக்கு பதில் கூறட்டும். ஈழத்தில் இந்திய அமைதிகாக்கும் படையால் இறந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.இதோ இங்கு இணைத்திருக்கிறோமே ஒரு புகைப்படம், மாவொயிஸ்ட் பெண்போராளியை இந்திய ராணுவம் கொண்டுசெல்வதைப் பார்க்கலாம். இது இந்திய இராணுவத்தின் அட்டூழியப் படம். ஈழத்தில் இன்னும் சில இடங்களில் குர்க்கா இனத்திற்கும் தமிழச்சிகளுக்கும் பிறந்த சீனர் போன்ற தோற்றமுடைய பிள்ளைகள் இருப்பதை அரிதாகக் மாவொயிஸ்ட் பெண்போராளியை இந்திய ராணுவம் கொண்டுசெல்வதைப் பார்க்கலாம். , தற்போதுதான் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்துவிட்டதே, மரபணுப் பரிசோதனை மூலம் சொல்லிவிடலாம், இந்திய குர்க்காப் படையினரால் கற்பழிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் யார் என்று. இத்தனை கொடுமைகளைப் புரிந்த ராஜீவ் என்னும் கொடுங்கோலன் இறப்பு என்பது தமிழரைப் பொறுத்தவரை ஏன் இந்தியர்களைக் பொறுத்தவரை கூட ஒரு விடிவு காலம் என்றே கூறவேண்டும் !அதிர்வின் ஆசிரியபீடம்.
தலையங்கம்: பிரிவினைவாதம் ஏற்புடையதல்ல!
First Published : 29 Oct 2010 02:12:58 AM IST

காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் இம்மாதம் 21-ம் தேதி காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி தந்துவிட்டு, அதில் பேசிய பேச்சுகளைப் பிரசுரிக்கவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதித்துவிட்டு அதன் பிறகு பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.  காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் சுதந்திரம் கேட்கிறார்கள், இதைப் பல்லாண்டுகளாகக் கேட்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, இதற்காக அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும், ஆதரவு தர நான் தயார் என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். பொறுப்பான எழுத்தாளர்களும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் விளம்பரத்துக்காக தேசநலனுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் சுதந்திரம் என்கிற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டுமா என்கிற கேள்வி நிச்சயம் எழுகிறது.  பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது.  காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை. காஷ்மீர் மக்கள் நிஜமாகவே பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் கடந்த ஜனவரி 2009-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும், தடையையும் மீறி வாக்களிக்கவே வந்திருக்கக்கூடாதே? தேர்தலை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை என்பதை உலகமே பார்த்து வியந்ததே?  அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த அத்தனை சமஸ்தானங்களும், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 1947, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தானிய அதிபர் முகம்மது அலி ஜின்னா, பலுஜிஸ்தான் அரசர் கலாட் கான் ஆகியோர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தப்படி ஒரே ஒரு விதிவிலக்காக பலுஜிஸ்தான் மட்டும் 1876-ல் இருந்ததுபோல ஒரு சுதந்திர நாடாக இயங்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1948 ஜனவரியில் கலாட் கான் கராச்சிக்கு வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் பலுஜிஸ்தானை இணைக்க கையொப்பமிடச் செய்தனர். அன்றுமுதல் இன்றுவரை பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்?  இந்தியாவுக்கு வருவோம். 1947-ல் வேறு எந்த சமஸ்தானத்துக்கும் இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ தரப்படாத சிறப்பு அந்தஸ்தைக் காஷ்மீருக்கு அளிக்க நாம் வாக்குறுதி அளித்ததன் பேரில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசப்படுத்த சற்றும் எதிர்பாராதவிதமாக ராணுவத்தினரை ஊடுருவச் செய்தபோது இந்தியப் படைகள் அவர்களைப் புறமுதுகிட்டு ஓட விரட்டியது. லடாக், புஞ்ச் பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடித்து முஜபராபாத்தை நெருங்கும்போது, ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார்.  பண்டித நேருவின் பெருந்தன்மை, அந்த மாமனிதரின் நல்லெண்ணம் இப்போது பாஜகவினரால் விமர்சிக்கப்படும்போது வேதனையாக இருக்கிறது. தனது நல்லெண்ணம் ஒரு தீராப்பழியைத் தேடித்தரும் என்று அந்த ஆசிய ஜோதி நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அப்போது மட்டும், பண்டித நேரு ராணுவத்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் இன்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஊடுருவச் செய்ய பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் பகுதியே இருந்திருக்காது. பண்டித நேரு மட்டும், பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்ட சிந்திகளையும், பஞ்சாபிகளையும் காஷ்மீரில் குடியேற்றி இருந்தால் இன்று "காஷ்மீரியாட்' பற்றி யாரும் பேசியே இருக்க முடியாது.  பண்டித நேரு என்ன இலங்கை அதிபர் ராஜபட்சவா, சிறுநரித்தனமாகச் செயல்பட? கடந்த 63 ஆண்டுகளில் காஷ்மீர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்க இந்தியா எப்போதாவது, ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா? இலங்கையில் தமிழர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு, சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதுபோல ஒரு நிலைமையை இந்தியா காஷ்மீரத்தில் உருவாக்கி இருக்கிறதா? காஷ்மீர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், கல்வி இவையெல்லாம் மறுக்கப்பட்டு இலங்கையில் ஈழத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்ததுபோல நாம் நடந்து கொண்டதுண்டா?  பிரிவினைவாதம் என்பது பெருவாரியானவர்களின் கோரிக்கை அல்ல. பஞ்சாபில் "காலிஸ்தான்' கேட்டபோது அதை இன்னொரு காஷ்மீர் என்று வர்ணித்தார்களே, இப்போது பஞ்சாபில் பிரிவினைவாதம் எங்கே போயிற்று? ஒருசில கலகக்காரர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, பெருவாரியான பொதுஜனம் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருப்பது இயல்பு. நான்கு பேர் வன்முறையில் ஈடுபடும்போது நானூறு பேர் அவர்களுடன் இணைவதும் இயல்பு. இதற்குப் பயந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓடிவிட முடியாது. அடக்கத்தான் வேண்டும்.  காஷ்மீரில் தனிநாடு கேட்கிறார்கள் என்று காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கேட்கிறார்கள் என்று அந்த மாநிலங்கள் பிரிந்து போகட்டும் என்று நாம் விட்டுவிட்டால், மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேயும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும், ஏன், வன்னிய நாடு கோரிக்கையுடன் நமது டாக்டர் ராமதாசும்கூடத்தான் தனிநாடு கேட்பார்கள். எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா?  இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், இதற்கான தீர்வுகள் தேசியத் தீர்வுகள். 2020-ல் உலக வல்லரசு என்று நாம் காணும் கனவு நனவாக வேண்டுமானால் இந்தியா ஒரு யூனியனாக ஒன்றுபட்டு இருந்தாக வேண்டும். இதில் பிரச்னைகள் இருக்கலாம். தவறுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டுமே தவிர, பிரிவினை அல்ல தீர்வு. மனித உரிமை மீறல் காஷ்மீரில் இல்லையா? இருக்கிறது. அதைவிட அதிகமான மனித உரிமை மீறல் இலங்கையில் தமிழர்கள்மீது தொடுக்கப்படுகிறது. பலுஜிஸ்தானில் கொடூரமான அடக்குமுறையும் மனித உரிமை மீறலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அருந்ததி ராய்கள் அங்கே போய் ஏன் பேசுவதில்லை? காரணம், இங்கே சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது. அதற்காக வாய்க்கு வந்ததைப் பேசி விடுவதா?  காஷ்மீரைப் பிரச்னையாக்கி இந்தியாவிலிருந்து பிரித்து மேற்கு நாடுகளின் ராணுவத் தளமாக்க வேண்டும் என்கிற முயற்சியின் ஒரு பகுதிதான், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது. இலங்கையைத் தனது நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி, காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கத் தூண்டுகிறது.  முதல்வர் ஒமர் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவி மெகபூபா முஃப்தியும் தங்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். போதாக்குறைக்கு, தீவிரவாதத் தலைவர்களும் அவர்களை ஆதரித்து விளம்பரம் தேடிக்கொள்ள முயலும் அருந்ததி ராய்களும்... இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகத் துடிக்கிறார்களே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.  காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. சுயவிளம்பரத்துக்காக தேசநலனைக் கைகழுவும் போக்கும்தான்!  
கருத்துக்கள்

''எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா'' இது அறியாமை. ஆப்பிரிக்கா எந்தக் காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. அது ஒரு கண்டம்.
By அழகு
10/29/2010 3:21:00 AM
படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 3:05:00 AM
சரி. ஆனாலும் சரியல்ல. பிளவுபட்டுப் போவது யாருக்கும் நல்லதல்ல. தனித்திருந்து பாக். படையெடுப்பால்தான் காசுமீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டது. அதே நேரம், இந்தியா கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற் வில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு. தேசிய இனங்களின் கூட்டரசாக நம் நாடு மாற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சியும் வலிமையும் ஏற்படும்.நடைமுறையில் ஒற்றையாட்சி முறை ல்மக்களின் அறியாமையைப் 
பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக ஊழல் கட்சிகள் ஆட்சி புரிந்து இனப்படுகொலைகளைச் செய்து மூடி மறைத்துத் தங்கள் நலனை மட்டும் பெருக்கிக் கொள்கிறார்கள். உரிமைப்பகுதிகள ்இணைந்த கூட்டரசு என்னும பொழுது் எந்தச சிக்கலும் இல்லை. படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டு
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கருத்துக்கள்

திரு பேன்சி அருந்ததிராய்அவர்களின் பேச்சுகளைக் குறிப்பிட்டுள்ளார். தினமணி அவரது முழு்ப்பேச்சையும் வெளியிட்டு அதன் மூலம் நடுநிலையுடன் நடந்து கொண்டு வாசகர்கள் உண்மை நிலையை அறிய உதவ வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:18:00 PM
படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:05:00 AM மீள்பதிவு
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:16:00 PM
சரி. ஆனாலும் சரியல்ல. பிளவுபட்டுப் போவது யாருக்கும் நல்லதல்ல. தனித்திருந்து பாக். படையெடுப்பால்தான் காசுமீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டது. அதே நேரம், இந்தியா கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற் வில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு. தேசிய இனங்களின் கூட்டரசாக நம் நாடு மாற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சியும் வலிமையும் ஏற்படும்.நடைமுறையில் ஒற்றையாட்சி முறை ல்மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக ஊழல் கட்சிகள் ஆட்சி புரிந்து இனப்படுகொலைகளைச் செய்து மூடி மறைத்துத் தங்கள் நலனை மட்டும் பெருக்கிக் கொள்கிறார்கள். உரிமைப்பகுதிகள் இணைந்த கூட்டரசு என்னும பொழுது் எந்தச சிக்கலும் இல்லை அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:03:00 AM மீள்பதிவு
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:15:00 PM
குடியிருப்பு பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்
By fancy
10/29/2010 3:47:00 PM
சிறையிலடைக்கப்படக்கூடாது அல்லது தாங்கள் இந்தியர்கள் என்று கட்டாயப்படுத்திக் கூறுவதற்காக அவர்களது விரல் நகங்கள் பிடுங்கப்படக்கூடாது என்ற விருப்பத்திலிருந்து வந்தது அந்த பேச்சு. மதவாத கொலைக்காரர்கள், நிறுவனங்களின் ஊழல் புரிந்தவர்கள், கற்பழிப்புகாரர்கள், கொள்ளைக்காரர்கள், ஏழைகளை கொல்பவர்கள் போன்றவர்களெல்லாம் சுதந்திரமாக சுற்றித்திரிகிறபோது, நீதி கேட்பவர்களை சிறையில் அடைக்கவேண்டிய தேவை கொண்ட இந்த தேசத்திற்காக நான் பரிதாபப்படுகிறேன்" என்று அதில் மேலும் கூறியுள்ளார் ராய். ராய் தனது நிலையை தெளிவுப்படுத்திவிட்டார். எனவே உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்தும் அதனை புரியாதது போன்று "so called " தேச பக்தி என்ற பெயரில் பா.ஜனதா போன்ற கட்சிகள் கூறுகிறதே என்பதற்காக, ராயை மத்திய அரசு கைது செய்தால், எது சர்வதேச பிரச்சனையாகி விடக்கூடாது என்று பொத்தி பொத்தி வைக்கப்பட்டதோ, அது உலகம் முழுவதும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக உருவெடுத்துவிடும். எனவே நிலைமையை அந்த அளவுக்கு போகவிடாமல், பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை வாபஸ் பெறுவது, குடியிருப்பு பகுதிகளிலிருந்
By fancy
10/29/2010 3:42:00 PM
சிறையிலடைக்கப்படக்கூடாது அல்லது தாங்கள் இந்தியர்கள் என்று கட்டாயப்படுத்திக் கூறுவதற்காக அவர்களது விரல் நகங்கள் பிடுங்கப்படக்கூடாது என்ற விருப்பத்திலிருந்து வந்தது அந்த பேச்சு. மதவாத கொலைக்காரர்கள், நிறுவனங்களின் ஊழல் புரிந்தவர்கள், கற்பழிப்புகாரர்கள், கொள்ளைக்காரர்கள், ஏழைகளை கொல்பவர்கள் போன்றவர்களெல்லாம் சுதந்திரமாக சுற்றித்திரிகிறபோது, நீதி கேட்பவர்களை சிறையில் அடைக்கவேண்டிய தேவை கொண்ட இந்த தேசத்திற்காக நான் பரிதாபப்படுகிறேன்" என்று அதில் மேலும் கூறியுள்ளார் ராய். ராய் தனது நிலையை தெளிவுப்படுத்திவிட்டார். எனவே உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்தும் அதனை புரியாதது போன்று "so called " தேச பக்தி என்ற பெயரில் பா.ஜனதா போன்ற கட்சிகள் கூறுகிறதே என்பதற்காக, ராயை மத்திய அரசு கைது செய்தால், எது சர்வதேச பிரச்சனையாகி விடக்கூடாது என்று பொத்தி பொத்தி வைக்கப்பட்டதோ, அது உலகம் முழுவதும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக உருவெடுத்துவிடும். எனவே நிலைமையை அந்த அளவுக்கு போகவிடாமல், பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை வாபஸ் பெறுவது, குடியிருப்பு பகுதிகளிலிருந்
By fancy
10/29/2010 3:42:00 PM
தற்போது காஷ்மீரில் இருக்கும் அவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நீதி கேட்பவர்களை சிறைக்கு அனுப்பும் இந்த தேசத்தை பார்த்து நான் இரக்கப்படுகிறேன்" என்று அதில் கூறியுள்ளார். " ஸ்ரீநகரிலிருந்து இதை நான் எழுதுகிறேன்.காஷ்மீரில் சமீபத்தில் நான் பேசிய பேச்சுக்காக பிரிவினைவாத குற்றச்சாற்றில் நான் கைது செய்யப்படலாம் என்று காலை நாளிதழ்களில் கூறப்பட்டுள்ளது. (காஷ்மீரில் ) லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் என்னக் கூறுகிறார்களோ அதைத்தான் நான் பேசியுள்ளேன். பல ஆண்டு காலமாக மற்ற விமர்சகர்கள் என்ன எழுதி வந்தார்களோ அதைத்தான் நான் இப்போது கூறியுள்ளேன்.எனது பேச்சுக்களை கவனமாக படிக்கும் யாருமே, அவை அடிப்படையில் ஒரு நியாயத்திற்கான அழைப்பு என்பதை காண முடியும். உலகின் மிக மோசமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கான நியாயத்திற்காக நான் பேசினேன். இந்தியா உடைய வேண்டும் என்று நான் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதாக நாளிதழ்களில் சிலர் என்னை குற்றம் சாற்றியுள்ளனர். ஆனால் அன்பு மற்றும் மனிதாபிமானத்துடன்தான் நான் அவ்வாறு கூறினேன்.மக்கள் கொல்லப்படக் கூடாது, கற்பழிக்கப்படக்கூடது,
By fancy
10/29/2010 3:41:00 PM
Well deserved editorial.
By rc jayakumar
10/29/2010 3:24:00 PM
ஓ. ரொம்ப நல்லா இருக்கு, ஐயா!? வாழ்க ஜனனாயகம்!?
By Chozan
10/29/2010 3:11:00 PM
AT THE TIME OF INDEPENDENCE OF INDIA NEHRU, PATEL, AND OTHER LEADERS MADE AN AGREEMENT WITH THE MAHARAJA OF KASHMIR THAT FOR THE TIME BEING KASHMIR SHOULD JOIN WITH INDIAN UNION AND IN DUE COURSE A REFERENDUM SHALL BE CONDUCTED WHETHER KASHMIR SHALL REMAIN WITH INDIA OR PAKISTAN OR REMAIN AS A SEPARATE COUNTRY. BUT SO FAR NO REFERENDUM WAS CONDUCTED. VELUPILLAI PRABAKARAN WAS KEPT UNDER HOUSE ARREST AT ASHOKA HOTEL AT NEW DELHI AND WAS COMPELLED TO SIGN A TREATY OF PEACE BY THE THEN PM RAJEEVE GANDHI CAN WE FORGET IT HOW CAN WE EXPECT A REVOLUTIONARY LEADER TO RESPECT SUCH A COMPELLED AGREEMENT.THERE WILL BE NO PEACE IN KASHMIR UNLESS WE RECOGNIZE THE FEELINGS AND RIGHTS OF THE KASHMIRI PEOPLE.
By M. Annamalai
10/29/2010 2:51:00 PM
இந்தியா என்பது ஒரு மாயை. பிரிடிஷ்காரன் வருவதர்க்கு முன்பு இந்தியா என்னும் நாடு இல்லை. ப்ய் ஜெகன் இது ஒரு தாயோலி கருத்துது
By indhu
10/29/2010 2:45:00 PM
காஷ்மிரில் 1947 க்கு முன் 64% ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் விரட்டப்பட்ட அவர்களை குடியமர்த்து இல்லவிடில் எங்க முசுலிம் பெருக்கததல் பிரிக்க வேன்டிவரும்
By veera hindu
10/29/2010 2:41:00 PM
Dinamani is again showing the racist face again.......Dear Dinamani, please understand that a nation exists only if people of the land recognise it as it's nation....In Kashmir, people , consider them selves as Independant nation and India as their Invader....People participated in the election to elect their local representatives to administer civil functions...
By ravi
10/29/2010 2:34:00 PM
தினமணி தன்னுடைய தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது. நூற்றுக்கு நூறு சரியான கட்டுரை. இந்தியாவின் கண்ணோட்டத்தின் ஸ்தூலம் ( ELECTRO MAGNET FIELD OF THINKINGS) இக்கட்டுரையை படிக்கும் பொது பக்கத்திலேயே வெகு அருகில் உள்ளது. மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரரும் இதிலுள்ள கருத்தை புரிந்து கொள்வார். மற்றபடி காஷ்மீர் இந்தியாவிலுள்ள அனைவருக்கும் சொந்தம். ஜெய்ஹிந்த்.
By madhurai muthu m
10/29/2010 2:25:00 PM
இந்தியா என்பது ஒரு மாயை. பிரிடிஷ்காரன் வருவதர்க்கு முன்பு இந்தியா என்னும் நாடு இல்லை.
By Jegan
10/29/2010 2:18:00 PM
SUPERB. COMPARISON BETWEEN TAMIL ELLAM AND KASHMIR PROBLEM IS REALLY TRUE WHICH IS ALWAYS PROPAGANDA BY TAMILNADU CONGRESS IN THE NAME OF NATIONAL SOVEREIGNTY.
By b.yani
10/29/2010 2:16:00 PM
சரியான் கருத்து தான் ஆனால் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பது தான் தவறு இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று சொல்லுகிறீர்கள் ஆனால் அப்பாவி பெண்கள் இந்திய இரானுவத்தினரின் காம பசிக்கு ஆளாவதும் அடித்து கொ்ல்வதும் ஏன் இந்திய தினமனிக்கு தெரியவில்லை அருந்ததிராயை கண்டிக்கும் தினமனி இந்த இழிச்செயலை ஏன் கண்டிப்பதில்லை பாதிக்கப்படுவது முஸ்லீம்தான் என்ற எண்னமா?
By mohamed ali
10/29/2010 12:22:00 PM
Ilyas Karai, you posted your comment here that means you are a tamilian and you support the separatists ? u r a disgrace to your community and you are a disgrace to the nation. You will not find heaven anywhere for sure no matter how many times you pray because you just hate the country that you belong to. Very sad
By Rajarajan
10/29/2010 12:11:00 PM
but now we have to be single country
By vallinayagam
10/29/2010 11:21:00 AM
india also never been single country before 1947 Mr. Azhagu
By vallinayagam
10/29/2010 11:19:00 AM
india also never been single country before 1947 Mr. Azhagu
By vallinayagam
10/29/2010 11:19:00 AM
தேர்தலில் கலந்துகொன்டர்கல் என்ர காரனத்திற்க்காக அவற்களுக்கு சுதந்திரம் வேண்டாம் எண்ட்ரு அர்த்தம் இல்லை, அருந்த்ததி ராய்க்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை அவரைபட்றீ அனைவரும் அறிவர் சாதகமாக பேசினாள் ஒரு கட்டுரயும் பதகமக பேசினாளொரு கட்டுரயும் டினமனிக்கு அழகு அல்ல
By ilyas karai
10/29/2010 11:14:00 AM
what is this ? if anybody will talk like this from Tamil Nadu they will arrest by poda rules,every body have freedom to talk about country outplacements not comments its like a direct support for Pakistan always they can do something against of Tamil Nadu peoples (nedumaran,vaico) Please make rules same to all jai hind sathiya maldives
By sathiya
10/29/2010 10:56:00 AM
இந்த் அருந்த்தி ராய் தன் பெயரை மக்கள் மறக்ககூடாது என்பதற்காக எல்லா விசயங்களிலும் குறுக்குசால் ஓட்டக்கூடாது.ஜிலானி பாக் கிடம் பரிசு (சன்மானம்=லஞ்சம்)வாங்கிக்கொண்டு ஏதொ உளறுகிறார். இவர்களை தேசியபாதுகாப்புசட்டம் ஒன்றும் செய்யாதா?தண்ணி கேட்பவனையும்,செத்துக்கிட்டு இருப்பவனை காப்பத்த சொல்றவனையும் மட்டும் எப்படி தேசியபாதுகாப்புசட்டம் தேடிப் போகிறது?
By POTHU JANAM
10/29/2010 10:24:00 AM
நேரு சீனர்களால் புகழப்படுபவன். அவனை மாமனிதன் என்பது தினமணியின் தெளிவற்ற சிந்தனையை தெரிவிக்கிறது.
By Anti terrorist
10/29/2010 10:08:00 AM
தேவை கடுமையான சட்ட திட்டங்கள். உலகில் எங்குமிலாத அளவு இஷ்ட்டத்துக்கு பேசும் உரிமை இருப்பதனால் இப்படி மனம் போன படி பேச முடிகிறது.
By Anti terrorist
10/29/2010 10:07:00 AM
பண்டித நேரு அவர்களைப்பற்றி எழுதும்போது, த ஹிமாயலயன் பிளன்டர் என்ற நூலை பற்றி ஏன் குறிப்பிடவில்லை?இன்றைய சீன/பாக்/காஷ்மீர் பிரச்சனைகளுக்கு நேருவின் தவறான வெளிநாடு கொள்கையே காரணம்.
By தஞ்சை ராஜு
10/29/2010 9:47:00 AM
என் தாகத்தை "தினமணி' தலையஙம் மட்டுமெ திர்த்து வைத்தது. பல கோடி நன்றிகள்.
By J.Venkat
10/29/2010 9:43:00 AM
காஷ்மீரில் பிரச்சனை என்பதுமட்டும்தான் இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.ஆகவே முன்னாள் ஆசிரியர் A.N். சிவராமன் அவர்கள் பிரச்சனைகு உரிய இடத்தின் வரலாறு, பிரச்சனை தோன்றியவிதம் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு எளிமையாக புரிந்து கொள்வதற்கு வசதியாக கட்டுரை பகுதியில் விளக்க கட்டுரைகளும் எழுதிக்கொண்டு வருவார்.அதைப்போல் இன்றைய ஆசிரியரும் எழுதினால் வாசகர்களூக்கு பிரச்சனையயை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
By A.Kumar
10/29/2010 9:31:00 AM
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி.
By Ramlaks
10/29/2010 9:28:00 AM
ஒரு நல்ல தலையங்கம். நம் நாட்டில் சுதந்திரத்தைப் பற்றி ஒரு தவரான கருத்து இருப்பது ஒரு துரதிர்ஷ்டமே. கடமை, நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு என்பதை காற்றில் பரக்கவிட்டு தனி மனித ஆதாயம் ஒன்றே குறிக்கோளாக பேச்சு சுதந்திரம் வளர்க்கப்பட்டுவிட்டது. இதைப்பற்றி விமர்சனம் செய்யவும் எவர்க்கும் துணிவில்லை. தினமணிக்கு என் பாராட்டுக்கள்.
By Ramakrishnan
10/29/2010 9:20:00 AM
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல.பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்?பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது நன்ரி "தினமணி murugiah
By murugiah
10/29/2010 9:13:00 AM
Sir, Excellent and bold editorial. Only Dinamani can do this. The problems like seditious speeches originate from the Article 370 of the Constitution which gives special status to the J&K State. The same should be scrapped. It can be done even without the approval of the J&K State Assembly. The President of India and the Indian Parliament can repeal it. The special status given to Jammu and Kashmir is an insult to the people of all other states in the country. Our Constitution gives equal rights to all citizens but this right does not exist in Jammu and Kashmir. This article specifies that except for Defense, Foreign Affairs, Finance and Communications, the Indian Parliament needs the State Government's approval for applying all other laws of the country. Thus, the state's (J&K) residents live under an independent set of laws, including ownership of property, citizenship, and fundamental rights, as compared to Indians. It is this article 370 which encourages and nourishes seditious
By J.Venkat
10/29/2010 9:07:00 AM
1972 ல் இந்திரா புடோவுடன் ஒப்பந்தம் செய்ய தவறினார். அதனால் காஷ்மீர் பிரச்சினை இன்றளவும் தொடர்கிறது. ஒரே தீர்வு ,நம் காஷ்மீர் நம்முடனும் , POK என்னும் காஷ்மீர் பாக் உ டனும் அமைவதுதான் ஒரு ஒப்புக்கொள்ள படும் தீர்வாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள அரசியல் வாதிகள் , இத் தீர்வுக்கு ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே. நேரு எப்படி காஷ்மீர் பிரச்சினையை உண்டாக்கினாரோ ,அதே போல் இந்திராவும் பிரச்சினையை தீர்க்க வழி வந்தும் ,செய்யாமல் விட்டார். இப்போது ஓமர் போன்றவர்களுக்கு மக்களிடம் மதிப்பு இல்லை.
By WILLIAMS R
10/29/2010 9:01:00 AM
தலையங்கதில் சொன்ன நேரு பற்றிய கருத்து தவறு. காஷ்மீர் பிரச்சினையை அவர் இனாவுக்கு எடுத்து சென்றது மாபெரும் தவறு. இன்றளவும் நாம் அதற்கு துன்பம் காண்கிறோம்.
By S Raj
10/29/2010 8:52:00 AM
உடலுக்கு ஒவ்வாதவற்றை உணவாகவோ பானமாகவோ எடுத்துக்கொள்வதால் இரத்தம் கெட்டபின், அந்த இரத்தம் நிறைந்த உடலால் நல்லவிதமாகச் செயல்பட முடியாது தானே? அதுபோல், பிரிவினைச் சிந்தனை என்னும் அழிவு உணர்வைப் பலர் பலமாகப் பிரச்சாரம் செய்தும் அன்னியர்களைக் கொண்டுவந்து குடியேற்றியும் மத ரீதியாகப் பிளந்தும் தேசிய உணர்வுகளை மழுங்கடித்தும் மக்கள் மனங்களை மாற்றிவிட்டால், பின்னர் பிரிவினை சுலபம் தானே? எப்படியோ ! 'தினமணி' பிரிவினைவாதத்தைப் பிரச்சாரம் செய்வதுகூடத் தடுக்கப்பட வேண்டிய, தண்டனைக்குரிய செயலாகத்தான் கருதப்பட வேண்டும் எனும் ரீதியில் எழுதியிருப்பது நல்லது. கருத்துச் சுதந்திரம் தேசப்பிரிவினையை ஆதரித்து வளர்ப்பதாக இருந்தால், அதைப் பிரசுரிப்பதும் கடும் சட்டங்களால் ஒடுக்கப்பட வேண்டும். இந்த நாடு தற்போது உள்ள எல்லைகளைக் குறைத்துக்கொண்டு எந்த ச்மாதானமும் செய்துகொண்டால், பின்னர் பல்வேறு காரணங்களால் இந்தியாவே காணாமல் போய்விடும். இதை உண்மையான இந்தியர் எவரும் விரும்பமாட்டார்கள்.
By s.radhakrishnan
10/29/2010 7:53:00 AM
தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தினமணி இன் இன்றைய தலையங்கம் பாராட்டுக்குரியது.மனித உரிமை என்ற பெயரில் தேச விரோதம் தலை தூக்குகிறது.தேச பிரிவினையை ஆதரிப்பவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடபடவேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும்.உண்டு உறங்குவது பாரதத்தில் ஆனால் தொண்டும் தொழுகையும் பாகிஸ்தானுக்கு என்றால் அனுமதிக்க முடியாது.இந்த தலையங்கத்திற்கு எதிராக கருத்து எழுதுபவர்களும் தேச துரோகிகளே. வந்தே மாதரம் ....
By வீர ஹிந்து முத்துபேட்டை
10/29/2010 7:08:00 AM
1948 ல் ஷேக் அப்துல்லா சென்னையின் வார இதழான ஸ்வத்ந்திராவுக்கு அளித்த ஒரு கட்டுரையில் காஷ்மீரை இந்தியாவின் பிரிக்கமுடியாத உறுப்பு என்றும் தென்னகமும் காஷ்மீரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவை என்றும் உணர்ச்சிகரமாக கடிதம் எழுதினார் ஷேக் அப்துல்லாவின் மனக்கசப்பும் பிரிவினைக்கோரிக்கையும் காங்கிரஸ் அரசின் தவறுகளில் இருந்து, நேருவுடனான மனக்கசப்புகளில் இருந்து, 1952க்குப் பிற்பாடு உருவம் கொண்டவையே.
By வீர ஹிந்து முத்துபேட்டை
10/29/2010 6:52:00 AM
பிரிவினைவாதம்-ஏற்புடையதல்லகாஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. I welcome this article
By pandiyan
10/29/2010 6:37:00 AM
கடந்த இருபதாண்டுகாலமாக காஷ்மீரின் வரலாற்றின் திரிக்கப்பட்ட ஒரு சித்திரத்தையே நம்முடைய ‘கலக’ அறிவுஜீவிகள் முன்வைத்து வருகிறார்கள். . அதாவது காஷ்மீரின் பிரச்சினை எந்தத் தரப்பாலும் எளிமையாக ஒற்றைப்படையாகச் சொல்லத்தக்கதல்ல. இந்திய சுதந்திரத்தின்போது பிரிட்டிஷார் உருவாக்கிய விதிகளின்படி மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய சம்மதிக்கிறார், ஆகவே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அந்று காஷ்மீர் மக்களின் தலைவராக இருந்தவர் ஹேக் அப்துல்லா. அவரும் அந்த இணைப்புக்குச் சம்மதிக்கிறார். அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் பழங்குடிகளை தூண்டிவிட்டு காஷ்மீர் மீது ஒரு படை எடுப்பை நிகழ்த்துகிறது, அது பாதி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் ஒரு பகுதி எஞ்சிவிட்டது. ஷேக் அப்துல்லா காஷ்மீருக்கு தன்னாட்சி கேட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் அதற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள். ஆக மன்னர் மற்றும் மக்களின் ஆதரவுடன் தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீரின் தன்னாட்சி பிரச்சினை பின்னர் மத அடிப்படையில் பாகிஸ்தானின் உதவியுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. வந்தே மாதரம் ....
By வீர ஹிந்து முத்துபேட்டை .
10/29/2010 6:34:00 AM
வாய்க்கு வந்ததைப் பேசி விடும் இத்தகைய வீணர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும். மக்களைப் பிரித்துக் கொண்டிருக்கும் கபட அரசியல்வாதிகளை அடக்க வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும். கையாலாகாத அரசு அகற்றப்பட வேண்டும். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு தூக்கியெறியப்பட வேண்டும். பலரின் உயிர் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை தன் சுயநலத்திற்காக அழிக்க நினைப்பவர்கள் எவராயினும், அவர்கள் வேரோடு அழிக்கப்பட வேண்டியவர்களே!
By SIRAKU
10/29/2010 5:02:00 AM
iam posted in army at jk state,at1992 to1995.the useless tamil people dont understand real problem in jk. 100% lazy people are jk.in tamilnadu you get only 2 or 3 kg suguar or kerosine in ration shop but in jk you get what you need.no road tax. no electric charge. all road mainted by army depat which is called biocon.in tamil nadu dont allow for military canteen.but jk all civilion people allowed militar canteen and they purchased all items which was prohibited for civil people.they never acepet we are indian. because their religion and their reliative are in pok. number one lazy people in world is jk.if you give fredom to jk after 3 or 4 years the lazy kashmiries know or find how india help kashmir. for examble any person in recurit army from any were in india they did not get advance payment. but in jammu kashmir recurit any youth india paid advance pay for, the useless youth . they never think india. they think only for pakistan and binladen or jerusallam or afganithan.
By indian
10/29/2010 4:59:00 AM
''எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா'' இது அறியாமை. ஆப்பிரிக்கா எந்தக் காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. அது ஒரு கண்டம்.
By அழகு
10/29/2010 3:21:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இணையப் பொறுப்பாளர்களே!என்ன அளவுகோல் வைத்துக கருத்துகளை வெட்டுகிறீர்கள். நடுநிலை தவறாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:33:00 AM
திரு பேன்சி அருந்ததிராய்அவர்களின் பேச்சுகளைக் குறிப்பிட்டுள்ளார். தினமணி அவரது முழு்ப்பேச்சையும் வெளியிட்டு அதன் மூலம் நடுநிலையுடன் நடந்து கொண்டு வாசகர்கள் உண்மை நிலையை அறிய உதவ வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:18:00 PM meel padhivu
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:30:00 AM
படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:05:00 AM மீள்பதிவு By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:16:00 PM 3aam padhivu
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:29:00 AM
சரி. ஆனாலும் சரியல்ல. பிளவுபட்டுப் போவது யாருக்கும் நல்லதல்ல. தனித்திருந்து பாக். படையெடுப்பால்தான் காசுமீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டது. அதே நேரம், இந்தியா கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற் வில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு. தேசிய இனங்களின் கூட்டரசாக நம் நாடு மாற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சியும் வலிமையும் ஏற்படும்.நடைமுறையில் ஒற்றையாட்சி முறை ல்மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக ஊழல் கட்சிகள் ஆட்சி புரிந்து இனப்படுகொலைகளைச் செய்து மூடி மறைத்துத் தங்கள் நலனை மட்டும் பெருக்கிக் கொள்கிறார்கள். உரிமைப்பகுதிகள் இணைந்த கூட்டரசு என்னும பொழுது் எந்தச சிக்கலும் இல்லை அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:03:00 AM மீள்பதிவுBy Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:15:00 PM 3ஆம் பதிவு
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:28:00 AM
They may live in kashmir, but they do not belong to our country. they are only invaders from other land. when they invaded us, they came with swords, guns and cannons, but not with any land. they can not claim any thing that does not belong to them. remove article 370 and allow people from other parts to live there, as in other states of india. the problem will be solved quickly. some will say this will disturb the identity of kashmir.the identity was lost on the day, the invasion occured.
By sreenathan.c.s
10/30/2010 1:43:00 AM
Nehru done a greate mistake to took the Kashmir issue to the United Nations thro V.K.Krishnamenon. He might have been ordered our forces to liminate our enemy instead of discussion in the United Nations. speaches like Arunthatirroy should be banned and punished.
By Pa.Tha.Velan
10/29/2010 11:28:00 PM
கொள்ளிக்கட்டை நம் வீட்டை சேர்ந்தது என்பதற்க்காக அதை முதுகு சொறிய பயன்படுத்த முடியாது. பிரிவினையை எதிர்த்து பேசுவது மட்டு தான் தேசிய கடமையாக தினமணி கருதுகிறதா? ஒருவர் ஒரு கருத்தை எதிர்த்தால் அதை மற்றறெருவர் ஆதரிப்பதில் என்ன தவறு? காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை என்றால் தினமணி அந்த உண்மைகளை ஏன் வெறியிடவில்லை? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்றால் நாம் அங்கு குடியேற முடியுமா? முடியாது என்றால் இன்னும் இணையவில்லை என்று தானே பொருள்! எத்தனை கோடிகள் இந்திய மக்களின் வரிப்பணம் அவர்கள் சொந்தம் என்று தைரியமாக கூறிக்கொள்ள முடியாத நிலப்பரப்பிற்க்கு செலவிடப்படுகிறது? அப்படியானால் காஷ்மீர் மக்களை முழு இந்தியர்களாக உணரவைக்க தவறியது யார்? நீண்ட காலமாக ஆட்சிசெய்த நேரு குடும்பம் தானே? தமிழன் இந்தியன் இல்லை தமிழ் நாடு இந்தியாவுக்கு சொந்தம் என்றபது தானே இந்திய அரசின் நிலை? அதே நிலைதான காஷ்மீருக்கும் பொருந்துமா? ”தினமணி ஏன் கருத்துகளை நீக்குகிறது?”
By Unmai
10/29/2010 11:24:00 PM
Our country should be divided into eight states as likeusa and also chngw the name as"UNITED STATES OF INDIA.We learn alession from the past that Freedom should be limited to medias and also to the socalled social activities. If it is not done we shoud become VALLARASU in 2020.
By Pa.Tha.Velan
10/29/2010 11:17:00 PM
தமிழீழப் படுகொலைகள், காஷ்மிரைப்பற்றி சிந்திக்க மறுக்க வைக்கிறது.
By நாடோடி
10/29/2010 11:00:00 PM
காஷ்மீரில் பண்டிட்டுகளின் பூமியை காப்பாற்றவே, தமிழர்களின் தமிழ் ஈழம் தாரை வார்க்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது. காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு சேரப் பெற வல்லமையுள்ள தலைமை இந்தியாவுக்கு கிடைக்குமா? இல்லை, தமிழர்கள் தனித்தியங்கியே ஈழத்தை பெற வேண்டுமா?. தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. தமிழர்கள் ஒற்றுமை நீங்கிடில் தமிழர்கள் அனைவருக்கும் தாழ்வு. தமிழீழப் படுகொலை, காஷ்மிரைப்பற்றி சிந்திக்க மறுக்கிறது.
By நாடோடி
10/29/2010 10:57:00 PM
ராணுவ பகுதிகளில் மக்கள் அல்லல் படுவதை பாதிக்கப்படும் மக்கள் மட்டுமே உணர முடியும். ஆதரித்து ஒரு கருத்து இருக்குமாயின் எதிரான கருத்து இருப்பதை ஏன் தினமணி எதிரக்கிறது? அந்த கருத்து தவறாயின் அதை மறுப்பது மட்டுமே நியாயம்! எதிராக கருத்து கூடாது என்பது சர்வதிகாரமே!
By Unmai
10/29/2010 10:44:00 PM
Hates off to the Congratulation.Editorial'Partition is not acceptable' deserves appriciation.Genarosity of Pandit Nehru was misunderstood and critisized by BJP is well mentioned inthe editorial. Ado of peoples like Arunthathi Rai is an attempt to gain cheap popularity.Let the editorial make them to wake up from their fools' paradise
By M.Sankaralingam
10/29/2010 9:58:00 PM
Print media like Dinamani is continued to give preaching. Country's resources are drained for nothing but enjoying by J&K with 370 article but at the same time other state citizens are barred to engage any business,buying movable/immovable property. Finding falt with Nehru,Indira are nothing but wasting time. Already 60 years passed. Either repeal 370 or give up Kashmir so that country will develop. For the sake of false prestige do not preach. Let Union of India conduct referendum and Kashmiris decide and leave rest of India to get free from burden of saving and dynasty rule of Abdullahs. Advise Practically what is to be done to get relieved from Kashmir issue and not required preaching. Enough is enough. See one of the Army men how Kashmiris enjoy at our cost.
By V Gopalan
10/29/2010 9:54:00 PM
Wonderful article.Shabhas Dinamani.
By kamal
10/29/2010 8:56:00 PM
kasmir bharatha thaeen thalai pakuthi. thalai illatha bharathama?ninaithu parkakavai mudiathu arunthathi rai sudanthiram entra urimail kasmir patti pasiathu erpudaithu alla.
By mayakannan
10/29/2010 7:20:00 PM
Ind!an அவர்களே, பாம்பிருக்குல்லையா பாம்பு அதற்க்கு என்ன தான் தடவி கொடுத்தாலும், தடவி கொடுத்த கையை கொத்தாமல் விடாதாம்.. ஆனாலும் தங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்..
By Anniyan
10/29/2010 6:45:00 PM
குடியிருப்பு பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட காஷ்மீர் மக்களின் "நியாயமான கோரிக்கைகளை" உடனடியாக பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்! அவர்களும் என் சகொதரர்களே!
By Ind!an
10/29/2010 6:39:00 PM
ஒவ்வொரு குடும்பதிலும் சட்டாம் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், யாருக்கும் அடங்காமல். அவர்களை கண்டிப்பதும் தண்டிப்பதும் குடும்பதலைவர் கையில்தான் இருக்கிறது.குடும்பதலைவர் நடவடிக்கை எடுத்தே ஆகவென்டும். இல்லாவிடால் குடும்பம் கெடுவது நிச்சயம்..
By chandru
10/29/2010 6:29:00 PM
மதம் மதம் என்று சில நன்றி கெட்ட நாய்கள் என்ன தான் எலும்புத் துண்டுகள் போட்டாலும் கொலைத்துக் கொண்டே தான் இருக்கும்.. அதற்க்கு செவி சாய்த்து நாம் பட்ட பாடுகள் போதும்.. மத வெறிப் பிடித்த நாய்கள்.. பி ஜே பி யை இந்திய மக்கள் அனைவரும் ஒரு மனதாக அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்..
By Anniyan
10/29/2010 6:16:00 PM
என் இதயத்தில் குமுறிக் கொண்டிருந்ததை அழகாக கட்டுரையாக தந்து அனைவரின் வாயை பிளக்கவும் அடைக்கவும் வைத்த எனது தினமணிக்கு எனது மன பூர்வமான வாழ்த்துக்கள்..
By Anniyan
10/29/2010 6:14:00 PM
பாரத முனால் பிரதமர் நேரு நாட்டின் நலத்தை விட தனது இஸ் ஸ்டேட் மென் இமஜெய் காப்பாற்றி கொள்ளவே பாடுபட்டு வந்துள்ளார். பாஜாக நேருவை விமர்சிப்பது முற்றிலும் செர்றியே. 370 ஷறுத் இன்றளவும் இருப்பது திரு நேரு அவர்களின் நாட்டை தாரைவார்க்கும் தாராளமய செயலால் ஏற்பட்ட ஒன்று. அது இன்றளவும் இருந்து பல பிரிவினைவாத பிரச்சனைகளுக்கு உந்துகோலாக இருந்து வருகிறது. ஆசிய ஜோதி! ஆயா கூ%^%^%^ ! என்றெல்லாம் அவரை போற்றி புகழ்ந்தாலும் தனது பெயரும் புகழுகுகாக நாட்டின் நலத்தை பணயம் வைத்தவன் என்று தான் விஷயம் தெரிந்தவர்கள் கூறுவார்கள். காஷ்மீரில் முஸ்லிம் பெண்கள் கற்பழிகபடுகிரார்கள் என்பது பச்சை பொய். இன்று ஊடங்களின் கழுகு பார்வையில் இருந்து எந்த ஒரு குற்றமும் மறைக்க பட முடியாது. முஸ்லிம்கள் பெரிதும் அபிமானம் வைத்திருக்கும் அல்ஜழீர தொலைக்காட்சியே இதுவரை ஒருமுறை கூட கற்பழிப்பு நடந்தாக செய்தி வெளியிடவில்லை.
By தமிழ் கிறுக்கன்
10/29/2010 4:27:00 PM