சனி, 11 ஜூலை, 2009

தமிழர் முகாம்கள் குறித்த இலங்கை அரசின் தகவல்கள்...


தற்போதைய முடிவுகள்

நம்பகமானவை 9.677%
நம்பகமற்றவை 90.32%
கருத்து இல்லை 0%தங்கதுரை
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம். 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: * ''கனம் நீதிபதி அவர்களே! ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது. நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம். எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு. வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல. இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம். இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர். இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்? பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு. இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்? பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று. இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர். எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை. எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள். ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர். வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள். உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே. இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன. விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ''இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?'' என்றார். ''எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது. நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா? மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸôரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம். * நாம் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர் - தங்கதுரை (வெளியீடு: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்). நாளை: நீதிமன்றம் மெüனமானது!
கருத்துக்கள்

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாககாணத்தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை அதற்க்கு காரணமான இந்திய அரசியல்வாதிகளையும் , தமிழக அரசியல் சகடைகளையும் , காலம் காறிஉமிழும் நாள் வரும். முத்துகுமாரின் மரணத்தை வாக்குகளாக்கி விற்ற வியாபரிகளே ...ஈன பிறவிகளே ஏன் நீங்கள் உங்கள் ..களை விற்பனை செய்து பிழைக்க கூடாது..?

By Alanganallur Rajangaboopathy
7/11/2009 4:00:00 AM

Good morning Dinamani You are Tamils friend VALLGA DINMANI

By Henry
7/11/2009 12:09:00 AM
தலையங்கம்:
வாளாவிருத்தல் நியாயமில்லை!சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி! அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது. மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்? பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன? வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்? உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும். முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை. நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல! நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?
கருத்துக்கள்

சிறந்த ஆசிரியருரைக்கு விருதுகள் வழங்குவதாயின் இவ்வுரைக்குத்தான் இவ்வாண்டு வழங்கப்பட வேண்டும். 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்பனவற்றை வெற்று முழக்கமாகக் கொள்ளாமல் இலக்காகக் கொண்டு இவ்வுரை அமைந்துள்ளது. ஆசிரியவுரையே தன்னிறைவாக உள்ள போது, ஊடகத் தரகர்கள் பற்றி நான் வேறு எழுத வேண்டிய தேவையில்லை. ஆனாலும தூங்குவது போல் நடிக்கும் இந்திய, தமிழக அரசுகள் கேளாக் காதினராகத்தான் இருக்கும். மக்கள்தாம் விழித்து எழுந்து அவர்களின் செவிகளில் விழச் செய்ய் வேண்டும். அல்லது அவர்களை வீழச் செய்ய் வேண்டும். மக்கள் எழுச்சியால் வீழாத அரசு எதுவும் உண்டா? ''சொந்த நாட்டில் பரர்க்கு அடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்!'' என வாழும் தமிழ் மக்களை நாளும் அழிக்கும் அரசுகள் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக மக்களே தினமணி உரையை உணர்ந்து எழுச்சி கொள்வீர்! வாழ்க மனித நேயம்! வெல்க தமிழ்ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/11/2009 4:02:00 AM

heartly thanks for dinamani to publish srilankan tamil issue

By kannan
7/11/2009 3:41:00 AM

HEART IS BURSTING. OH MOTHER NATURE KINDLY SHOW YOUR LOVE AND PEACE FOR THE POOR SUFFERING SL TAMILS OR ANY ONE SUFFERING SUCH GENOCIDE IN THE WORLD. WHY IS THIS SUFFERING FOR SL INNOCENT TAMILS.

By tamizhan
7/11/2009 3:34:00 AM

பொய்ச் செய்திகள் போட்டு தனது அரிப்பை வெளிப்படுத்திய இந்து ராம் ஒரு முற்போக்குவாதியாம்? சீனசார்பு மார்க்ஸ்சிஸ்ட் எனச் சொல்கிறார்கள். சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்குவது போலவே சீனாவுக்கும் வக்காலத்து வாங்குவது இந்து ராமின் முழுநேரத் தொழில். இதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது. தமிழர்கள் கொட்டிய குருதி மகிந்த வடித்த கண்ணீர் இராசபக்சேயின் கைகளில் மட்டுமல்ல அவரோடு விருந்துண்டு மகிழ்ந்த இந்து ராம் கைகளிலும் தாராளமாகப் பூசப்பட்டிருக்கிறது. தமிழக தமிழர்கள் இந்து ராமுக்கு தக்க பாடம் படிப்பிக்கிறார்கள் இல்லையென்பதுதான் எமது ஆதங்கம். இப்படியான ஒரு எட்டப்பனை புறங்கட்டாது எப்படி விட்டு வைத்துள்ளார்கள்?

By Keeran
7/11/2009 3:04:00 AM

26-12-2004 அன்று வீசிய சுனாமி யின்போது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மானும் பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றும் ஒரு பரபரப்பான செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது. பிரபா கரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று தமிழ்ப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இந்து இதழ் கூறியது. அதுமட்டுமல்ல இலங்கைக் கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார். முன் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்ந்த இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளி யிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்து வெளியிட்டது. பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்து இதழுக்கு இருக்கவில்லை. இவ்வாறெல்லாம் பிரபாகரனை மாத்தையா சுட்டுவிட்டார். அவரது சடலம் ஊர்வலாமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பொய்ச் செய்திகள் போட்டு த

By Keeran
7/11/2009 3:02:00 AM

உங்கள் தலையங்கத்துக்கு எமது பாராட்டுக்கள். ஆனால் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்? யார் காதில் போடப்போகிறார்கள்? தமிழக முதல்வரே எந்த வெட்கமோ துக்கமோ இன்றி சிங்களவனுக்கு கோபம் வராத வகையில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று திருவாய்மலர்ந்துள்ளாரே? இந்து இராம் கடந்த பத்து ஆண்டுகளாக வி.புலிகளைக் கொச்சைப் படுத்துவதையே தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவர். ஒருமுறைக்கு இருமுறை உயிரோடு பிரபாகரனைச் சாகடித்த பெருமையும் அவரைத்தான் சாரும். 25-7-89 அன்று ஒரு திடுக்கிடும் செய்தியை இந்து வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்ப தாகவும் இந்து சொல்லியது. வடக்கு கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், பிரபாகரன் இறந்த செய்தியை உறுதிசெய்தார்.ஆனால் 2 நாட்களில் இச்செய்தி யில் கொஞ்சம் கூட உண்மையில்லை – பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பது

By Keeran
7/11/2009 2:59:00 AM

very very thanks for your editorial.Only medias can turn the leaders on innocent Tamils' 'HORRIBLE' lives in tortured Nazi's concentration camps in Vanni.People in Vanni never sent back visitors without giving food and milks, even Jaffna Tamils can't afford to do this.Unfortunately, Todays message is very sad that cooked food contractors refused to give the foods because government did not paid their expenditure so they spent it.Look like 300 thoousan people now in hungry and thirsty.Only reason They only born as Tamils and They speak only Tamil and They follow Tamil cultures.Still are we living in 21 th cetury?? Used to be king now dishwasher

By Thamilan
7/11/2009 2:24:00 AM

TO WHOEM YOU ARE TELLIN HIS?EVRYTHING IN SL IS BEING DONE BY INDIAN ADVICE,AFTER ALL TAMILS NADU SLAVES ARE PREPARE TO SELL THEM FOR MONEY INCLUDING THE LEADERS.LET THE TAMILS DIE QUIETLY,LET THE ITALINA MONSTER BE HAPPY,LET THE BILLION SHEEPS WORDHIP HER.BUT ONE THING IS CLEAR THIS TEARS OF TAMILS WILL ONE DAY DESTROY INDIA.

By DANDY
7/11/2009 2:23:00 AM

Yaru enna sonnalum ethum nadakka povathu illai.Ingu america-il oru nayai-i(dog) kondratharkku,oru varudam jail thandanai kodukkirarkal.Anal eelathilo tamilanai kondral,tamil pennai tharugirarkal.. Tamilan endru sollada,,thalai kuninthu nillada.LTTE eelathil potta sandayai,chennai-il pottu irunthal,vidivu kidaithurukkum

By Anbu
7/11/2009 2:21:00 AM
பயிற்சி மருத்துவர் போராட்டத்தை
முறியடிக்க அவசர ஆலோசனைசென்னை, ஜூலை 10: தமிழ்நாட்டில் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தத்தை முறியடிக்க, தலைமைச் செயலர் ஸ்ரீபதி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.4,500-லிருந்து ரூ.6,000, பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு ரூ.8,500-லிருந்து ரூ.13,000 என பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவித் தொகையை ரூ.16,000 வரை உயர்த்தி முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் இந்த உயர்வு போதாது என்று கூறி பயிற்சி டாக்டர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தாங்கள் கோரியபடி ஊதியத் தொகை உயர்வு அளிப்பதை (உதாரணம்: பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.10,000 அளிக்க வேண்டும்.) அரசு உறுதி செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்ப முடியும் என அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் (10 ஏ 1 விதிப்படி) தாற்காலிக அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் தீவிரப்படுத்தினால், அவர்களைக் கைது செய்வது, நீதிமன்றக் காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்துபடியாக எடுக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
கருத்துக்கள்

பயிற்சி மருத்துவர் போராட்டத்தை அரசு எளிதில் முறியடித்து விடலாம். ஆம். மக்களின் உடல நலத்தையும் உள்ள நலத்தையும் பேணி அதன மூலம் நாட்டு வளத்திற்கு அடிப்படையாக உள்ள மருத்துவர்கள் கோரும் பயிற்சி உதவித் தொகையை அரசு அளிக்க முன்வந்தால் போராட்டம் உடனே நின்று விடும். அவ்வறிருக்க முந்தைய ஆட்சியில் பயன்படுத்திப் பாழ்பட்டுப்போன முறையைப் பயன்படுத்த எண்ணுவது வேறு பகைவர் இலலாமல் அரசு தானே அழிவதற்கு வழி வகுக்கும். ஒப்பந்த அடிப்படையில் இப்போதைய பயிற்சிஉதவித்தொகை அளவு கொடுப்பதாக இருந்தால் யாரும் வரப்போவதில்லை. கூடுதலாகக் கொடுக்கத் திட்டமிட்டு இருந்தால், அத் தொகையைப் பயிற்சி மருத்துவருக்கு அளிக்கலாமே! எனவே, அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல் இணக்கமான முறையில் போராட்டத்தைக் கைவிடச் செய்ய உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நாம் கையைச் சுட்டு்க் கொண்டுதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. முந்தைய ஆட்சியனர் பெற்ற பாடத்தை உணர்ந்து அடாவடி வழியில் இறங்காமல் நீதி வழங்கட்டும் அரசு!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/11/2009 3:36:00 AM

It is unfortunate that the govt plans to resort to this kind of tactics to bring the strike to an end. This itself proofs that these doctors are needed for the healthy functioning of the Govt health institutions. Insted of appointing new doctors on 10A1 temporary basis, the Govt could talk with the doctors & come to an amikable settlement. Arresting the doctors & putting them behind bars are wrong aptitude & dictatorial tactics & are to be condemmed outright. I hope sane sense prevails over the Govt for a better result--G.Padmanabhan, Kallidaikurichi

By Dr.G.Padmanabhan
7/11/2009 12:25:00 AM

வெள்ளி, 10 ஜூலை, 2009


ஜூலை 10, 1946 - இலங்கைப் பிரச்சனை: நேரு எச்சரிக்கைமுழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில்
  • இலங்கை சர்க்கார் போக்கு ஆத்திரமூட்டத்தான் செய்கிறது: சின்னபுத்திக் கொள்கையை கைவிட நேரு வேண்டுகோள்
  • "அரசியல் நிர்ணய சபையை பிரிட்டன் ஆட்டிவைக்க விடமாட்டோம்"
  • புதிய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் ராஜாஜி, சரத் சந்திரபோஸ்
  • சென்னை கிராமப் புனருத்தாரண திட்டத்துக்கு ரூ. 3 கோடி
  • தென்னாப்பிரிக்காவில் இந்தியர் சத்தியாக்கிரகம்
முழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில்


கருத்துக்கள்

இணையம் வளர்ச்சி யடைந்துள்ள இக்காலக் கட்டத்தில் பழைய இதழ்களைப் பட வடிவிலாவது வெளியிடலாமே எனப் பலமுறை - பலமுறை என்பதை விட அன்றாடம் என்பது பொருத்தமாக இருக்கும் - எண்ணி வருகிறேன். பலரிடம் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னைப் போன்ற கருத்துடைய எண்ணற்ற வாசகர்கள் மகிழும் வண்ணம் பழைய பதிவுகளைக் கொண்டு வரும் தினமணிக்குப் பாராட்டுகள். நேரு காலத்திலிருந்தே இருக்கும் சிங்கள அரசின் - சிங்கள மக்களின் - சின்ன புத்தியை உலகம் புரிந்து கொள்வது எப்பொழுது என்றுதான் தெரியவில்லை? புரிந்து கொண்டவர்களும் 'சிங்களர்கள் சீறக்கூடாது' என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர, தம் மக்கள் நலன் குறித்துத்தான் நாளும் பொழுதும் எண்ணுகிறார்களே தவிர, அன்றாடம் மடியும் தமிழ் மக்கள் குறித்துக் கவலைப்படுவதில்லையே என்பதுதான் பேரவலத்தினும் பெரு்ந்துன்பமாக உள்ளது. இவர்களை உணர்த்தித் திருத்தும் ஒரு படையாய் இளையவர்களேனும் புறப்படட்டும்! வாழ்க தினமணியின் தமிழ்த் தொண்டு! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன் ---------

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 5:26:00 PM

this is not a paper like as bond. nehru thirkatharisanam this words.nowadays some poltiticians not now this matter.

By venkatesh
7/10/2009 4:25:00 PM

‘1,400 dying each week in

Manik Farm camp’

– The Times

Manik Farm camp’ – The Times
[TamilNet, Friday, 10 July 2009, 03:37 GMT]
About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times. The shocking toll lends credence to allegations that the Government, which has termed the internment sites “welfare villages”, has actually constructed concentration camps to house 300,000 people, the paper said. Most of the deaths are the result of water-borne diseases, particularly diarrhoea, a senior relief worker told The Times on condition of anonymity.

The death toll will add to concerns that the Sri Lankan Government has failed to halt a humanitarian catastrophe after announcing victory over the Tamil Tigers, the paper said.

The Manik Farm camp was set up to house the largest number of the 300,000 mainly Tamil civilians forced to flee the northeast as army forces mounted a brutal offensive against the Tigers.

Aid workers and the British Government have warned that conditions at the site are inadequate.

Witness testimonies obtained by The Times in May described long queues for food and inadequate water supplies inside Manik Farm.

Women, children and the elderly were shoved aside in the scramble for supplies. Aid agencies are being given only intermittent access to the camp. The Red Cross was not being allowed in Thursday, the paper said.

In late June, the Colombo based NGO Sarvodaya Shramadana Sangamaya said tens of thousands of Tamil children were malnourished with many acutely malnourished.

“About thirty thousand to thirty five thousand children are sheltered in Manik Farm. Many of them are suffering from diseases and some still suffer from injuries sustained in the military operations. Fifteen to twenty percent of them are also suffering from acute malnutrition,” media reports in Colombo said quoting Dr. Vinya Ariyaratne, the executive director of the NGO said.

“The international standard is for 20 people to use one toilet, but in Manik Farm about 70 people are sharing one toilet,” he also said.

In mid-June the international charity World Vision warned that more impending monsoon rains could spread diseases if sanitation and drainage were not improved quickly.

When the rains come in two weeks or so, I can't imagine what conditions will be like due to the lack of any proper drainage and toilet system," Suresh Bartlett, World Vision's country director was quoted as saying.

News of the horrific death rate at Manik Farm came as the International Committee of the Red Cross (ICRC) was asked to scale down its operations by the Sri Lankan authorities.

Thursday night, the Red Cross was closing two offices, The Times reported.

One of these is in Trincomalee, which had helped to provide medical care to about 30,000 injured civilians evacuated by sea from the conflict zone in the north east.

The other is in Batticaloa, where the Red Cross had been providing “protection services”.

This involves following up allegations of abductions and extrajudicial killings, practices that human rights organisations say have become recurring motifs of the Sri Lankan Government, The Times pointed out.

Meanwhile, Mangala Samaraweera, a former Foreign Minister and now an opposition MP, told The Times that the government of President Mahinda Rajapakse is deliberately seeking to efface the Tamil identity of the north.

“There are allegations that the Government is attempting to change the ethnic balance of the area. Influential people close to the Government have argued for such a solution,” he said.இலங்கை முகாம்களில் வாரம் 1400 பேர் உயிரிழப்புகொழும்பு, ஜூலை 10- இலங்கையில் போரில் இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாரந்தோறும் 1400 பேர் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் உயிரிழப்பதாக லண்டனில் இருந்து வெளிவரும் 'டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு இலங்கையில் உள்ள மாணிக் பண்ணை முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு போதிய வசதிகள் இல்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முகாம்களில் உள்ள மக்கள் உயிரிழப்பதன் மூலம் மக்கள் தொகையில் நிலவும் சமநிலை விகிதத்தை மாற்றுவதற்கு அரசு முயற்சி செய்வதையே இது காட்டுகிறது. அரசுடன் நெருக்கமாக உள்ள ஆதிக்க நபர்கள் இத்தகைய தீர்வை வலியுறுத்தி உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதால், அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடத்தல் மற்றும் கொலைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் புகார் எழுப்பி வருவது அரசுக்கு பிரச்னையாக உள்ளதால் மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக 'டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும், போர் நேரத்தில் வன்னி பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த 5 மருத்துவர்கள் தற்போது தங்கள் கருத்தை திரும்பப் பெற்றுள்ளனர். 750 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக தற்போது அவர்கள் கூறியுள்ளனர். மேலும், புலிகளின் வலியுறுத்தல் காரணமாக முந்தையத் தகவலை தெரிவித்ததாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். தற்போது அந்த மருத்துவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சமீபத்திய போரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தனது புலனாய்வு செய்தியில் 'டைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.

கருத்துக்கள்

சிங்கள அரசும் இந்திய காங்.அரசும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதைப் பாராட்டாமல் செய்தி வெளியிடக் கூடாது. நில உலகில் துன்புற்று நாளும் மடியக் கூடாது என்பதற்காக அவரவர் விருப்பத்திற்கேற்ப, 'சிவலோகப் பதவியோ' வைகுண்டப் பதவியோ' மேலுலகில் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் மேற்கொள்ளும் செயல்பாடற்ற செயல்பாட்டினை நாம் பாராட்டாவிட்டாலும் எமதூதர்களைக் குறை கூறாமலாவது இருக்கலாம் அலலவா? பெரும்பான்மைத் தமிழர்களை எப்படியோ சிறுபான்மையராக ஆக்கியாகி விட்டது. இனி அவர்களை இன்மைக்கணக்கில் காட்டவேண்டாவா? 'யுத்த நெறியே புத்த நெறி' என்னும் கொள்கையைக் கொண்டுள்ள சிங்களம் உணவின்றி மருந்தின்றி மடிய விடும் மறைமுகமான ஆயுதமற்ற போரினை மேற் கொள்வதற்கு ஒத்துழைக்கும் இந்திய/தமிழக அரசுகளின் பேரினப் படுகொலை வெற்றிக்கு வழி வகுத்து மாலை சூடிய நாம் இப்பொழுது அவர்களைப் பழிக்கலாமா?

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 5:49:00 PM

true

By gkv
7/10/2009 5:46:00 PM

What happened to the innocent 20 fishermans,no news about them

By Ajay
7/10/2009 5:42:00 PM

How stupid our tamils to select the same government , its really bad that no one is here to help our tamil people .

By Ajay
7/10/2009 5:40:00 PM

These all things all due to The cong party and leader Sonia .I hate to add gandhi.Then our great tamil ina thanai thalaivar MK .I hope mk will think about his help in killing many tamil people and in wipe out one independant struggle for more than 50 years.He will not sleep if he got tamil spirit and tamil ena unarvu....

By rajan
7/10/2009 5:38:00 PM

அடிவருடி ஹிந்து ராம், தடுப்பு முகாமை பற்றி ஆஹா பிரமாதம் என்று சொன்னானே.

By Kumaran
7/10/2009 5:35:00 PM

வன்னி மக்களை வதைமுகாம்களில் முடக்கிய இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தங்கள் தவறினை இனியாவது உணர்ந்து மக்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது இன்னியும் புலிப்பாட்டு பாடுவார்களா? இந்தியா ஒவ்வொரு ஈழத்தமிழன் முதுகிலும் குத்திவிட்டது.

By Patrick
7/10/2009 5:10:00 PM

இந்த செய்திக்கு ஒரு ஐரோப்பிய ஈழத்தமிழன் ஜெர்மானியின் ஹிட்லர் யூத அழிப்பு போல் இருக்கிரது என்று எழுதி உள்ளான். இந்த செய்தி எவ்வளவு உண்மை என்று தெரியாது. ஆனால் தமிழினம் இவ்வளவு கேடு கெட்டு ,ஈனமானது ரொம்ப வெட்கப்பட வேண்டியது. சுமார் ஒரு கோடி இருக்கும் சிங்களர்கள் ஏழு கோடி தமிழர்களை சீன்டுவதும், அதை கையாலாகமல் பார்துக்கொண்டிருப்பதும் சே.. என்ன சொல்லுவது. அந்த ஐரோப்ப ஈழ தமிழன் எழுதியதை கீழே கொடுத்துள்ளேன்.A priest in Natzi-Germany said.."they came for the communists, I said nothing; they came for the trade unionists, I said nothing; they came for the Jews, I said nothing; then they came for me and there was nobody left to speak out" All those leaders who talk of human rights - speak out now!

By Appan
7/10/2009 4:58:00 PM

விடுதலைப்புலிகளை முன் குறைக்கூறியவர்கள் உலக வரலாற்றில் இன அழிப்பு கறும்பக்கங்களை திருப்பிப்பார்க்க வேண்டும். இலங்கையில் தற்ப்போது நடைபெறுவது Genocide.

By ராமநாதன்
7/10/2009 4:41:00 PM

Hi the red cross doctors well trained by rajapakshe brosthers!!!! still they doing bloody fool the world now they need the money from world.hay helping countries dont give the money to srilanka govt.if you want to help plese use the power to go direct access the those in the open jail and save them.If the helping countries never do at this time after srilankan millitry will never release the tamils from open jail until the last tamil will die.IF THEY WANT TO GIVE EQUALITY AND RIGHTS NO NEED TO TAKE WAR,NO NEED TO KILL 20,000 PEOPLE WITH IN ONE WEEK,THE COWARDS THINK HIDING INSIDE RAJAPAKSHE BROS HEART

By s.srinivasan
7/10/2009 4:36:00 PM