சனி, 12 பிப்ரவரி, 2011

P.M.says :Indian writers should shine international level? இந்திய மொழி எழுத்தாளர்கள பன்னாட்டு அளவில் ஒளிவிட வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

கேரளாவிற்கே சென்று ஞான பீட விருதுவழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் தலைமை அமைச்சர், தமிழாய்வாளர்களுக்கான செம்மொழி விருதுகளை வழங்காதிருப்பது ஏன்? வங்காளத்திற்கும் மலையாளத்திற்கும் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டதாயும் விரைவில் அறிவிக்க இருப்பதாயும் அடுத்து அசாமி முதலான பிற மொழிகளுக்கும் அறிவிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர். செம்மொழிக்காலத்தைக் கி.மு.  என்று இல்லாமல்  ௧௫௦௦ ஆண்டு எனக் குறைத்த சதியால் இவ்வாறு அறிவிக்கப்படுகின்றன. நீதிமன்றத் தடைஇருக்கும் பொழுதே மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதன் காரணம், தமிழுக்கான செம்மொழி ஏற்பினைப் பொறுத்துக் கொள்ள  இயலாமைதான். இத்தகையோர் ஆட்சி நமக்குத் தேவையா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 12 Feb 2011 02:22:37 AM IST


திருவனந்தபுரம்,பிப்.11: இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. விழாவில் பிரபல மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய மொழிகளின் இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாளம் உள்ளது. இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருகாலத்தில் சர்வதேச அளவில் இந்திய எழுத்தாளர்கள் பிரகாசிப்பது அபூர்வமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல.இந்தியாவில் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. இதைப்போல, இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.இந்திய மொழிப் படைப்புகளின் தனிச்சிறப்பையும், மேன்மையையும் உலகத்தார் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம்.இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும். இந்தப் பணியை சாகித்ய அகாதமி செய்து வருவது போற்றத்தக்கது. இப்போது ஞானபீட விருது பெற்றுள்ள கவிஞர் ஓ.என்.வி. குருப்பு மலையாளத்தில் சிறப்பான படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளை மராத்தி, வங்க மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும்-அச்சுதானந்தன்: இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் அவர் பேசியது: தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.கேரளத்தில் உள்ள மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தியை மாணவர்கள் பயில்வது கட்டாயமாகவுள்ளது. ஆனால் மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தைப் பயில்வது கட்டாயமில்லை. இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அச்சுதானந்தன்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

elangovan comments about veera porali muthukumar

வீரப்போராளி முத்துக்குமாரின் உயிர்க்கொடை குறித்த கோவனின் பேச்சு கொழுப்பெடுத்த பேச்சு. கடந்த முறை போட்டியி்ட்டு மண்ணைக் கவ்வியவர் இந்த முறைபோட்டியிடவும்  வாய்ப்பில்லாமல் மண்ணைத் தின்பார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

SC awards one year rigorous imprisonment to former Kerala minister Balakrishnan: கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருட்டிண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

௨ கோடி ஆதாய இழப்பிற்கே ஓராண்டுச் சிறைத் தண்டனை என்றால் . . . . . ?  ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அதிகாரிகள் அனைவரையும் உள்ளே தள்ளலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 
ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாலகிருஷ்ண பிள்ளை
புது தில்லி, பிப்.10: கேரள மாநில முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதின்றம் தீர்ப்பளித்தது.இடமலையார் அணையில் நீர்மின்திட்டப் பணிக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததால் ரூ. 2 கோடி அளவுக்கு மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தொடர்ந்தார்.இந்த வழக்கில் குற்றமற்றவர் என கே. பாலகிருஷ்ண பிள்ளையை மாநில உயர்நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், பி.எஸ். செüகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி  பாலகிருஷ்ண பிள்ளை, மேலும் இருவருக்கு தண்டனை அளித்தனர்.பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சராயிருந்தபோது ஒப்பந்ததாரர் பெüலோஸýக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளித்துள்ளார். சுரங்கம் அமைப்பது, ஷாப்ட் அமைப்பது உள்ளிட்ட பணிக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் ஆதாரங்களை சரிவர பரிசீலிக்காமல் மிகப் பெரிய தவறை செய்து விட்டது என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றும் அச்சுதானந்தன் குறிப்பிட்டிருந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள், ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் முடிவில்லாமல் தொடர்கிறது. மேலும் இந்த வழக்கு 1982-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஆனால் விசாரணை 1991-ம் ஆண்டுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு தொடர்பு இருப்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. மின்வாரியம் என்பது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாகும். அது அரசின் கட்டுப்பாட்டில் வராது. ஆனால் அதில் பாலகிருஷ்ண பிள்ளையின் குறுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நாட்டில் எங்கெல்லாம் ஊழல் வழக்குகள் நடைபெறுகின்றனவோ அவற்றை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். காலாண்டுக்கு ஒரு முறை இதுகுறித்து மாநில உயர்நீதிமன்றங்கள் அறிக்கைகளைப் பெற்று எந்த அளவுக்கு வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை சிறப்பு நீதிமன்றமே விடுவித்திருந்தது.  மற்ற இருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.ஆனால் உயர்நீதிமன்றமோ பாலகிருஷ்ண பிள்ளையுடன் மற்ற இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் இதை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் மனு தாக்கல் செய்தார்.ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என்று பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாலகிருஷ்ண பிள்ளையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி, ஓராண்டு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினர்.தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது: பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் எவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். ஊழல் புரிய நினைப்பவர்களுக்கு இது எச்சரிக்கையாக அமையும் என்று அவர் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தீர்ப்புக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டதாக அவர் மேலும் கூறினார்.கேரள மாநிலத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் அச்சுதானந்தன். இந்த வழக்கில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.சரணடைய முடிவு: இதனிடையே இந்த வழக்கின் சம்மன் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சரணைடய முடிவு செய்துள்ளதாக பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டார். மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுமக்களுக்காக பணியாற்றியதற்கு கிடைத்துள்ள பரிசு என்று விரக்தியுடன் குறிப்பிட்டார் பாலகிருஷ்ண பிள்ளை.

foreign tamils welfare board: தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்

பாராட்டுகள். எனினும்  இந்த வாரியம் ஈமச் சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் அமைப்பாக இல்லாமல், அயல்வாழ் தமிழர்கள் முழு உரிமையுடன் வாழவும் வாழ்விட ஆட்சியால் கொடுங்கோன்மைக்கு ஆளாகும் பொழுது காப்பாற்றி உதவவும் தமிழ்க்கல்வி பெறவும் தமிழர் தமிழராகத் தலைநிமிர்ந்து வாழவும் வழி வகை செய்ய வேண்டும். எடு பிடிகளுக்கு வாரியப் பொறுப்புகளைக் கொடுக்காமல்  கட்சி வேறுபாடின்றித் தமிழ் நலம் பேணுநருக்குப்  பொறுப்புகள் வழங்க வேண்டும். பிற வாரிய விதிகளை அப்படியே பின்பற்றியிருப்பதும்  இதற்குப் பொருந்தாது. அகவை வரமபும் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்


சென்னை, பிப். 10: தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனுக்காக ""தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம்'' தொடங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த இந்த வாரியம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அவசியம் பற்றி மசோதாவில் தெரிவித்துள்ள தகவல் :தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள், வேலையில் இருக்கும்போதும், அதன்பின்பும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்னைகளையும் சட்ட பிரச்னைகளையும் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.தமிழகத்தில் குறைந்த வருவாய் பெற்று வந்து, வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை விட்டு, வேலை நாடி செல்வோர் பல பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர்.அவற்றிற்கு தாங்களே தீர்வு கண்டு, மீண்டும் நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறார்கள்.எனவே, தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டியது முக்கியமாகும்.தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் இறந்தால், அவர்களது உடல்களைத் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதியுதவி வழங்குவதோடு, அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தலும், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும்.எனவே இந்த வாரியம் தொடங்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசிப்போர், வெளிநாடுகளில் வசிப்போர் என இரு பிரிவாக இந்த வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம். வெளிநாடுகளில் வாழ்வோர் மாதம் ரூ.300-ம்,வெளி மாநிலங்களில் வாழ்வோர் மாதம் ரூ.100-ம் இந்த வாரியத்துக்குச் செலுத்த வேண்டும்.இந்த இரு பிரிவினரும் திரும்ப தமிழகத்திற்கு வந்துவிட்டால் பிறகு மாதம் ரூ.50 செலுத்த வேண்டும்.வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், இறப்பின் பேரில் குடும்ப ஓய்வூதியம், உடல் ஊனமுற்றால் உதவித் தொகை, நோயுற்றால் நிதி உதவி, பெண் உறுப்பினர்களின் மகள்களுக்கு திருமண உதவி, பெண் உறுப்பினருக்கு பேறுகாலச் சலுகை, வீடு கட்ட, வீடு பராமரிக்க, கல்விக் கடன் முன்பணம் போன்ற உதவிகள், சுயவேலை வாய்ப்பைத் தேட உதவி போன்ற திட்டங்கள் இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் உறுப்பினராகச் சேர பதிவுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்த, 55 வயது நிறைவடையாதோர் இதில் உறுப்பினராகச் சேரலாம்.இந்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா நிறைவேறியது.சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன. பீட்டர் அல்போன்ஸ்: வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்லும் தமிழர்கள் மரணம் அடையும் சமயங்களில் அவர்களின் சடலங்களைக் கொண்டு வருவதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளவும், இறப்புக்கான பணத்தை நிறுவனங்கள் அளிக்கத் தேவையான சட்ட உதவியை வழங்கவும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாமக கொறடா வேல்முருகனும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, வளைகுடா நாட்டில் மரணம் அடைந்த பாஸ்கரனின் குடும்பத்துக்கு உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

A.D.M.K. will form govt. : கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும்: ஓ. பன்னீர்செல்வம்

யார் மீது தினமணிக்குச் சினம்? படத்தை மாற்றிப் போடப்பட்டுள்ளதே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும்: ஓ. பன்னீர்செல்வம்


சென்னை, பிப். 10: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை முடித்து வைத்து அவர் பேசியது:அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.  இப்போது மின்வெட்டால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் அதிமுக ஆட்சியை குறை கூறுகிறீர்கள். 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் இதையே சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.மின் பற்றாக்குறையை இந்த அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? ரூ. 1 லட்சம் கோடி கடன் வாங்கியது போல மின்சாரத்தையும் கடன் வாங்கி சமாளிக்கப் போகிறீர்களா? மின் உற்பத்தி திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்? மின் பற்றாக்குறையால் விவசாய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் உற்பத்தி குறைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி தெரிவித்தார். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்தால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், உற்பத்தியாகும் இடத்தில் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத் தரகர்கள்தான் பயனடைகின்றனர்.2 ஏக்கர் நிலம் என்ன ஆனது?நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிலங்களைக் கண்டறிந்து ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்குமாறு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே குடும்பத்தில் பலருக்கும், ஏற்கெனவே பட்டா பெற்றவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடம்பவனம் என்ற ஹோட்டல் உரிமையாளர், அருகில் உள்ள ரூ. 10 கோடி சந்தை மதிப்புள்ள 12.41 ஏக்கர் நிலத்தை ரூ. 36 லட்சத்துக்கு பட்டா வழங்குமாறு அரசுக்கு கோரியுள்ளார். சந்தை மதிப்பைவிட குறைவாக அடிமாட்டு விலைக்கு நிலங்களை வழங்கக் கூடாது.வரி இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கை என்கிறீர்கள். ஆனால், நிதித் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோலியப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரிகளின் மூலமும், வரி வசூலில் காட்டிய அக்கறையின் மூலமும் அரசின் வருவாய் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசு விதிக்கும் விற்பனை வரி குறைக்கப்படவில்லை. அதாவது மறைமுகமாக மக்களிடம் வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், வரி இல்லாத நிதிநிலை அறிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள்: தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடன் வாங்கி கட்டுமானப் பணிகள் போன்ற மூலதனச் செலவுகளை செய்ததாக நிதி அமைச்சர் கூறுகிறார். வரி வருவாயை ஆடம்பரச் செலவுகளுக்கு பயன்படுத்தி கடன் வாங்கி மூலதனச் செலவுகள் செய்வதை எப்படி ஏற்க முடியும்? இலவச கலர் டிவி வழங்க சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது என்ன சமூக பாதுகாப்புத் திட்டமா?ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனையும் கடன்காரனாக்கி விட்டது இந்த அரசு. கடன் வாங்கியதுதான் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனை.  ரூ. 1 லட்சம் கோடி கடன் பற்றி கேட்டால் கடன்தான் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று அனுபவம் வாயந்த நிதி அமைச்சர் அன்பழகன் கூறுகிறார். இது சரியா?டாஸ்மாக் பார்கள் ஆளும்கட்சியினரின் அட்சயப் பாத்திரமாகப் பார்க்கப்படுகிறது. கடை மூடியபிறகும் மதுபானங்கள் அதுவும் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். குழந்தைகள் கடத்தல் அன்றாட நிகழ்வாகிவிட்டது. காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மாறிவிட்டது. மாணவர்களும், படித்த இளைஞர்களும் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர்.இலவச திட்டங்களால் தவறுகளை மறைக்க நினைக்கும் உங்கள் எண்ணம் நிறைவேறாது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

Spectrum corruption- kalaignar T.V.explanation:அலைக்கற்றை ஊழலில் பங்கு- கலைஞர் தெலைக்காட்சிவிளக்கம்

சொந்த  நிதி ஆதாரம்  இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய ஓராண்டிற்குள் பங்குத் தொகை உரூ ௨௧௪ (214 )கோடியை வட்டித் தொகை உரூ ௩௧ (31)உடன் சேர்த்துத் திருப்பித் தரும் அளவிற்கு உயர்த்திய (!)செயல்திறனுக்குப் பாராட்டுகள்.ஆதாயத் தொகையில்  (௪௨௦௦ கோடி - ௧௫௩௭ கோடி = ௨௬௬௩ கோடி) ௧௨.௩௦ (12 .30) பங்கு பெற்றதைக் கடனாகக் காட்டியிருந்தால்  அறிவுத்திறனுக்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஸ்பெக்ட்ரம்: கலைஞர் டி.வி. விளக்கம்

First Published : 11 Feb 2011 01:55:53 AM IST


சென்னை, பிப்.10: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டிற்கும், கலைஞர் டி.வி. கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:2007-08 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும், 2009-ல் கலைஞர் டி.வி. மற்றும் சினியுக் நிறுவனம் இடையே நடைபெற்ற கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.கலைஞர் டி.வி.க்கு, சினியுக் நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக 2009-ல் முன் பணம் கொடுத்திருந்தது. ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்போது பெறப்பட்ட முன்பணத்தை கடனாகக் கருதி மொத்தப் பணமும் கலைஞர் டி.வி. நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டது.அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உள்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகம் ஆகும்.

Saraswathi vijabaskar expired: 'சரசுவதி' விசயபாசுகரன் காலமானார்


கோவை, பிப். 10: முதுபெரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான "சரஸ்வதி' வ.விஜயபாஸ்கரன் (85) கோவையில் புதன்கிழமை இரவு காலமானார்.இவர் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி வடிவேல் பிள்ளையின் மகன். பள்ளிக் கல்வியை தாராபுரத்திலும், கல்லூரிக் கல்வியை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பின்போது அகில இந்திய மாணவர் பெருமன்றச் செயலராக பொறுப்பேற்று மாணவர் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். இதன் காரணமாகவே அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பின்னர் தினத்தந்தி, நவஇந்தியா, ஹனுமான், அணில், சக்தி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். சமரன், விடிவெள்ளி ஆகிய அரசியல் இதழ்களிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கரன்.தமிழக இலக்கிய உலகில் தனிமுத்திரையைப் பதித்த முற்போக்கு இலக்கியப் பத்திரிகையான "சரஸ்வதி'-யைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். இப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் அவரோடு, மூத்த எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், எஸ்ஆர்கே என அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி, ஆர்.கே.கண்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.ஐம்பதுகளில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், கு. சின்னப்ப பாரதி போன்ற தமிழகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டிய சரஸ்வதியில் எஸ்.பொ., கணேசலிங்கன், அ.முத்துலிங்கம் போன்ற இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களும் அறிமுகமாயினர்.மணிக்கொடி இதழுக்குப் பின் முழுவீச்சோடு வலம் வந்த இலக்கிய இதழ் சரஸ்வதி. விஜயபாஸ்கரன் மார்க்சிய அணுகு முறை கொண்டவராக இருந்தபோதிலும் அதற்கு மாறுபட்ட கருத்து கொண்ட எழுத்தாளர்களின் கதைகளும் அதன் இலக்கியத் தரத்துக்காக அதில் பிரசுரமாயின. எல்லா தரப்பு எழுத்தாளர்களையும் "சரஸ்வதி' ஆட்கொண்டாள்.வடஇந்திய எழுத்தாளர்கள் பிரேம்சந்த், கிஷன் சந்தர் உள்ளிட்ட பலரது படைப்புகளை தமிழாக்கம் செய்து சரஸ்வதியில் வெளியிட்டவர் விஜயபாஸ்கரன். சோவியத் நாடு பத்திரிகையின் தென்னக வெளியீடுகளில் 25 ஆண்டுகள் இணை ஆசிரியராகப் பணியாற்றினார்.இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன்கள் ரவீந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர். கோவையை அடுத்த வடவள்ளி ஐஓபி காலனியில், தனது மகன்களுடன் வசித்து வந்த விஜயபாஸ்கரன் புதன்கிழமை இரவு காலமானார்.கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ-வும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.ஆறுமுகம், கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் கோவை ஞானி, சி.ஆர்.ரவீந்திரன், ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர் சுப்பிரமணியம், கவிஞர் கவிதாசன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட பலர் விஜயபாஸ்கரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

dinamalar picture message


corruption by scientific method: தலையங்கம்:அறிவியல் முறையில் ஓர் ஊழல்!

பிற நாட்டுத் தூதரகங்கள் அவர்கள் நாட்டைப்பற்றிய செய்திகள் ஊடகங்களில் வந்தால்  மொழி பெயர்த்துத் தங்கள் அரசிற்கு அனுப்புகிறார்கள். அத்தகைய பணியை மத்திய அரசின் கள விளம்பரத் துறை ஆற்ற வேண்டும். ஆனால் அவ்வாறு அது நடந்து கொள்ளுமா எனத் தெரியவில்லை. எனவே, தினமணியே இதனை ஆங்கிலத்தில மொழிபெயரத்து  விண்வெளி ஆய்வுக் கழகத்திற்கும் தலைமை அமைச்சருக்கும் அனுப்புதல் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தலையங்கம்: விஞ்ஞான ரீதியில் ஓர் ஊழல்!


இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல் கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து. இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும், பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும் செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும் ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில்  70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில் இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க முடியும்?எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை, டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி, இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள் ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம் போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின் ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும் அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார். எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம் இருக்கிறது."இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி.  பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம் என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010 ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர் அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள், பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா இருப்பார்கள்? இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித் தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள் தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப் பரவிவிட்டிருக்கிறது.  இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பதவிக்கு உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய "கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக் காரணம். விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள் அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?

புதன், 9 பிப்ரவரி, 2011

propoganda against cong. - Seeman: காங்கிரசு போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப்பரப்புரை: ஊட்டியில் சீமான்

தொடரட்டும் சீமானின் பணி!.
தோற்கட்டும்  கொலைகாரக் காங்.!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப் பிரசாரம்: ஊட்டியில் சீமான்


ஊட்டி, பிப்.8: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளதாக ஊட்டியில் நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கூறினார்.ஊட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட ஊழல்களின் சிக்கியவர்களை ஒன்றும் செய்யாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசாவை மட்டும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் உள்நோக்கம் உள்ளது என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
கருத்துகள்


Before entering into such an important issue, please take a stock of electorate of tamilnadu who are after freebies and also fully under the crazy of cine field. Electorate of tamilnadu appeared to be not bothered about lankan tamils butchering, fishermen killing/torturing and even now Lanka try to have Lion faction against fishermen etc. Not only congress, ruling party who are hand in gloves should also be shown door. I Pray the Almighty the God, not only Congress Dravidian parties should close their shop and elect only Independent candidates who are having clean image free from any kind of corruption and no sympathiser or binami of Dravidian parties, if such things happen, certainly tamilnadu will return prior to1967 status. Anyway, my best wishes for your endeavour. Please do it in such a manner that either congress or DMK smelt rat.
By V Gopalan
2/8/2011 4:05:00 PM

murder by embassy officer - america stops the pak.programme: தூதரக அதிகாரி விவகாரம்: பாக். நிகழ்ச்சிகளை அமெரி்க்கா நிறுத்திவைப்பு

தன் நாட்டுக் குடிமகன் கொலைக் குற்றம் செய்தாலும் அவன் பக்கம் நிற்கிறது அமெரிக்க அரசாங்கம். அப்படியானால் ௧௦௦ ஆயிரக்கணக்கான படுகொலைகள் புரிந்த துடன் தமிழ் மீனவர்கள் படுகொலைகள் புரிகின்ற சிங்களர்களுக்குச் சார்பாக  இந்திய அரசும் நிற்கிறது. அப்படியானால் இந்திய அரசு என்பது சிங்களவர்களுக்கானது என்பது நன்கு புரிகின்றது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தூதரக அதிகாரி விவகாரம்: பாக். நிகழ்ச்சிகளை அமெரி்க்கா நிறுத்திவைப்பு


இஸ்லாமாபாத், பிப்.8- பாகிஸ்தானில் இருவரை சுட்டுக் கொன்ற தூதரக அதிகாரியை விடுதலை செய்யும் வரை அந்நாட்டுடனான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்த முடிவால், பாக். அதிபர் ஜர்தாரியின் அமெரிக்கப் பயணம், அமெரிக்கா-பாக். இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, பாக்.-ஆப்கன்-அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவை பாதிக்கப்படும்.ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இரு பாகிஸ்தானியர்களை அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து, அவரை பாக். போலீஸார் கைது செய்தனர்.ஆனால், அவர் தூதரக பாஸ்போர்ட் உடையவர் என்பதால் ரேமண்டை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை எங்கள் நாட்டின் சட்டப்படி தான் விசாரிப்போம் என்று பதில் தெரிவித்தது.அமெரிக்க அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனிடையே, ரேமண்ட் டேவிஸ் மற்றும் 3 அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், தூதரக அதிகாரி விடுதலை செய்யப்படும் வரை பாகிஸ்தானுடனான நிகழ்வுகளை ரத்து செய்வதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

i.d.card through on line for eezham on exile govt. :இணையதளம் மூலம் அடையாள அட்டை: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

தொடரட்டும் முயற்சிகள்! மலரட்டும் தமிழ் ஈழம்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இணையதளம் மூலம் அடையாள அட்டை: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு


கொழும்பு, பிப்.8- தமிழ் ஈழ மக்கள் தங்களின் அடையாள அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவித்துள்ளது.www.tgte-us.org என்ற இணையதளம் மூலம் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம் என்றும், அதற்கான கட்டணமாக 15 டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு சில வாரங்களில் அவர்களது முகவரிக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு செய்வதற்கான இணையத் தொடர்பு: http://www.tgteelection2010.com/idcard/Register.html

Marxist request to permanent the hon.lecturers: மதிப்பு நிலை விரிவுரையாளர்களைப் பணி நிலைப்பு செய்ய மார்க்சிசுட் கோரிக்கை

இப்படிப்பட்ட பணியிடங்களில் உள்ளோர் பெரும்பாலும் விதிமுறைகளுக்கு இணங்க நியமிக்கப்படாமல், குறுக்கு வழிகளில் நியமிக்கப்படுபவர்களாகவும்  பின்னர் இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் முறையான பணி அமர்த்தம்  பெறுபவர்களாகவும் இவற்றால் முறையான வேலை வாய்ப்பு பதிவு பெற்றவர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கவும்   இட ஒதுக்கீட்டு வாய்ப்பை இழக்கவும் வழி வகுப்பதாகவே  உள்ளது. மேலோட்டமாக வேலை வாய்ப்பு உறுதி என்பது பார்க்கப்படுவதால்  தொடர்ச்சியான பணி அமர்த்த  ஊழல் தொடருகிறது. ஆராய்ந்து பார்க்காமல் எதையும் ஆதரிக்காதீர்

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை


சென்னை, பிப்.8- அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அதன் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2006 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இன்னமும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி நடத்த முற்பட்டபோது, அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை அவர்களை கைது செய்தது. இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், திமுக அளித்த வாக்குறுதியின்படி, அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும்,  இதுகுறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

house allotment - C.M.explanation : வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு: கருணாநிதி விளக்கம்


இத்தகைய ஒதுக்கீட்டு முறை தவறல்ல. ஆனால், இப்படியொரு  அரசு விருப்புரிமை பிரிவு உள்ளதாகப் பொதுமக்களுக்கு  அறிவித்து உரிய பிரிவுகளின்படி அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு  வழங்காமல் ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் வீடுகள் அல்லது மனைகளை ஒதுக்கியுள்ளமை எல்லாஆட்சியின் தவறும் ஆகும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு: கருணாநிதி விளக்கம்

First Published : 08 Feb 2011 01:51:42 PM IST


சென்னை, பிப்.8: வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமியின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார்.இதுதொடர்பாக விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அவர் அறிக்கை வாசித்தார்.அதன் விவரம்: தமிழக  வீட்டு  வசதி  வாரிய மனைகள்  ஒதுக்கீட்டில்  விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில்  முறைகேடுகள்  நடைபெற்றதாகக் கூறி   முதல்வர் ஆகிய என் மீது  வழக்குத் தொடர  தமிழக ஆளுநரிடம்  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று  அனுமதி கோரியுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சத விகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு  குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதும்,    மீதியுள்ள  15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு  செய்யப்படுவதும்,  எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும்  முறை.  அரசு தனது விருப்புரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்த வீடுகளிலே முறைகேடு நடைபெற்று விட்டதாக சுப்பிரமணிய சுவாமி சொல்லியிருக்கிறார்.அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது  தி.மு.க  ஆட்சியிலே மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சியல்ல.  கடந்த  பல ஆண்டுகளாகவே,  நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும்,  தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் இப்போது போலவே விருப்புரிமை ஒதுக்கீடு என்பது  நடைமுறையில் இருந்து வரும் ஒன்று.  அரசு தனது  விருப்புரிமை ஒதுக்கீடான  15 சதவிகித இடங்களை  திருமணம் ஆகாத பெண்கள்,  கணவனால் கைவிடப்பட்டோர்,  கணவனை இழந்தோர்,  மாற்றுத் திறனாளிகள்,  சமூக சேவகர்கள்,  சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர்,  தனியாக வசிக்கும்  முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில்  பணி புரிவோர்,  மத்திய அரசு மற்றும்  மத்திய அரசு சார்ந்த  நிறுவனங்களில் பணி புரிவோர்,  பத்திரிகையாளர்கள்,  தேசியமயமாக ஆக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிவோர்,  தேசியமயமாக ஆக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில்  பணி புரிவோர்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில்  (தமிழ்நாடு  வீட்டு  வசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர்,  உள்ளாட்சி நிறுவனங்கள்  மற்றும்  நகராட்சிகளில் பணிபுரிவோர்,  ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள்,  மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற  அரசு ஊழியர்  ஆகியோர்க்கு,  விண்ணப்பங்கள்  -  கைவசம் உள்ள  மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்  தமிழக அரசால்  விருப்புரிமையைப் பயன்படுத்தி  ஒதுக்கீடு  செய்யப்பட்டு வருகிறது.அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ்  தரப்படும்  வீடுகள்  அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குலுக்கல் முறையிலே விற்பவர்களிடம் பெறப்படும் தொகையை விட குறைவானத் தொகைக்கும் தரப்படவில்லை.  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - குடியிருப்புகளுக்கு அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்பொழுது;  வாரியம் நடைமுறையில் கடைபிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயம் செய்கிறது.   அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிற்கும், வாரிய ஒதுக்கீட்டிற்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.    தற்போது   இந்த அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில்  மனை பெற்றோர்,  அந்தத் தொகை  மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து,  அந்த மனையையே  திரும்ப ஒப்படைக்கின்ற நிலைமையும்  உள்ளது என்பதிலிருந்தே இதில் எந்தச் சலுகையும் செய்யப் படவில்லை என்பதை அறியலாம்.மேலும், ஒதுக்கீடு பெறுவோர், வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தரும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ, வீட்டுவசதி வாரியத்திற்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை.  எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே மாதிரியான நடைமுறைகள், விதிமுறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.  விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்தி விஷமத்தனமானது.  விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும்.  விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் -  குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் -  அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்’என்று 7.12.2010 அன்றே செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  விளக்கியுள்ளார்.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போல வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன.   அ.திமு.க.  ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ். க்கு  1993ஆம் ஆண்டு 4115 சதுர அடி;  முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ்.  கார்த்தீசன் என்பவருக்கு  பெசண்ட் நகர்  பகுதியில்  1995ஆம் ஆண்டு  4535 சதுர அடி;  முன்னாள் அமைச்சர்  நாகூர் மீரான் துணைவியார்  நூர் ஜமிலாவுக்கு  கொட்டிவாக்கத்தில்  1993ஆம் ஆண்டு  2559 சதுர அடி;   நாடாளுமன்ற உறுப்பினர்  தம்பிதுரை மனைவி  டாக்டர் பானுமதிக்கு  அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம்;  அ.தி.மு.க.வின்  தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில்  3 கிரவுண்ட் நிலம்;  அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர்  எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில்  1993ஆம் ஆண்டு  வீடு,  2004ஆம் ஆண்டு  தேவாரம், ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார், ஐ.பி.எஸ்.,  ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்.,  உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கு சோளிங்கநல்லூரில்  தலா  4800 சதுர அடி;  நீதியரசர்  எஸ்.ஆர். சிங்கார வேலு அவர்களுக்கு 2005ஆம்  ஆண்டு  சோளிங்கநல்லூரில்  இரண்டு  மனைகள்,   சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ் என்பவருக்கு  1994ஆம் ஆண்டு கொட்டிவாக்கத்தில்  2692 சதுர அடி,  முன்னாள் முதல்வரிடம்  துணைச் செயலாளராக இருந்த டி. நடராஜன், ஐ.ஏ.எஸ்.க்கு 1995ஆம் ஆண்டு  திருவான்மியூரில் 6784 சதுர அடி;  ஆதி. ராஜாராமுக்கு  1995இல்  3101  சதுர அடி., 1993இல்  சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த  சரஸ்வதிக்கு  அண்ணா நகரில்  880 சதுர அடி;  சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு  அண்ணா நகரில்  950 சதுர அடி;  எம்.ஜி.ஆருடைய  ஓட்டுநர்  பூபதிக்கு  நந்தனத்தில்  3600 சதுர அடி;  எஸ். ஆண்டித் தேவரின் மனைவி  பிலோமினாவுக்கு  1994இல்  மதுரையில்  1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.   2005ஆம் ஆண்டு பலருக்கு  இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உண்டு.  தமிழகத்திலே  அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில்  இது போல  விரும்புவோருக்கு  வீடுகளை, மனைகளை அரசு வழங்கலாம் என்ற முடிவே  அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டு,  அதற்கான அரசாணை  25-1-1979 இல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   முதன் முதலில் இதைத் தொடங்கிய போது  10 சதவீத  வீடுகள் அல்லது மனைகள் என்பதற்கு மாறாக  1991-1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்  15 சதவீத  வீடுகளை அல்லது மனைகளை அரசு தனது விருப்புரிமை  அடிப்படையிலே வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.    உண்மை இவ்வாறிருக்க, சுப்பிரமணியன் சுவாமி  இந்த செய்தியைத் திரித்து வெளியிட்டிருப்பது உள்ளபடியே வருந்தத்தக்கது; நடவடிக்கைக்கு உரியது என்பதை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி வாசித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


ஆகா என்ன அற்புதமான விளக்கம் முதல்வர் என்றால் இப்படிதன் விளக்கம் கொடுக்க வேண்டும். திமுக தொண்டர்களே உடனே இவரை போற்றி கண்ணியகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் இவருக்கும் சிலை வைத்துவிடுங்கள்.
By manik
2/8/2011 4:02:00 PM

நாமெல்லாம் சுப்பிரமணி சாமியை வரவேற்கிறோம். ஆனால் நம் மக்கள் 1996 தேர்தலில் மதுரை தொகுதியில் அவரை தோற்கடித்து ஒன்றுக்கும் ஆகாத தமாக உறுப்பினரை தேர்ந்து எடுத்தோம். இது போன்ற மனிதர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். தேர்தலிலும் அவர்களுக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். சுவாமிக்கு முன்னால் கருணாநிதியின் அரசியல் எடுபடவில்லை. நாம் தான் புத்திசாலி என்ற நினைப்பு பொழப்பை கெடுக்க போகிறது. சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பியவர் அவர் பேட்டியை வெளியிட்ட ஊடகங்களுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை. அது தானே முறை. ஆகா மொத்தத்தில் இது பயத்தினால் ஏற்ப்பட்ட விளைவு. கருணாநிதி தன்னை புத்திசாலிதனத்தில் மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் தன் 60 ஆண்டு கால அரசியல் வாழ்வின் இறுதியில் இப்படி ஒரு சிக்கலுக்கு ஆளாகமாடோம் என்று நினைத்துக்கோடா பார்த்திருக்க மாட்டார். ஆரம்பத்தில் சர்க்காரியாவில் தப்பித்தவர் இறுதியில் 2G யில் மாட்டிக்கொண்டார்.
By அன்பு
2/8/2011 3:16:00 PM

அவங்க காலத்துல கொடுத்ததைப் பத்திமட்டும் விலா வாரியா சொல்றீங்களே, சரியான ஆம்பிளையா இருந்த உங்க ஆட்சி காலத்துல யார் யாருக்கு எந்த அடிப்படையில் இடம் கொடுத்தீங்கன்னு முழுசா சொல்லுங்க.!ஜெ கொடுத்தது தப்புன்னா அஞ்சு வருஷமா ஏன் நடவடிக்கை எடுக்கல? நீங்க டாக்டர் பட்டம் வாங்கினது சப்பைக்கட்டு கட்டும் ஆராய்ச்சியிலேயா ?
By சீனு
2/8/2011 3:13:00 PM
சரி அதிமுக செய்த தவறுகளை நானும் செய்வேன் எனக்கூறி தேர்தல் பிரச்சாரம் செய்யத்தயாரா?என்ன சொல்ல வருகிறார்?.அதிமுக போட்ட விதிகளை எங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டோமென்றா? அவர்கள் சில லட்சம், ஒரு கோடி என சம்பாதித்தார்கள். ஆனால்என்னை நம்பி மூணு குடும்பம், டஜன் கணக்கில் பேரப் பிள்ளைகள் என இருப்பதால் நான் லட்சம் கோடிக்குமேல் சம்பாதித்தேன் எனக் கூறுகிறாரோ?ஆட்டயப் போடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? உங்களுக்கு சாதகமான தீ..பு வாங்க தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உதவியாளருக்கு (ஒரு நாளும் அரசு ஊழியராக இருந்ததில்லை) அப்பழுக்கற்ற அரசு ஊழியர் கோட்டாவின் இரண்டு பிளாட்டுகள் ஒதுக்கியது சரியா? அதுவும் விதிப்படி ஒருவருக்கு ஒன்று மட்டுமே என உள்ளபோது!கவர்னர் பர்னாலாவே மருத்துவப் பல்கலைக் கழக நியமன ஊழலில் சம்மந்தப்பட்டுள்ளபோது, மஞ்சத்துண்டு மேல் வழக்குப்போட அவர் சம்மதம் வேறு வேண்டுமா?உங்களைப் பத்தி நீதிபதி சர்க்காரியா கொடுத்த சர்ட்டிபிகேட்டே போதும்!
By மணி வி
2/8/2011 2:55:00 PM

சரி அதிமுக செய்த தவறுகளை நானும் செய்வேன் எனக்கூறி தேர்தல் பிரச்சாரம் செய்யத்தயாரா?என்ன சொல்ல வருகிறார்?.அதிமுக போட்ட விதிகளை எங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டோமென்றா? அவர்கள் சில லட்சம், ஒரு கோடி என சம்பாதித்தார்கள். ஆனால்என்னை நம்பி மூணு குடும்பம், டஜன் கணக்கில் பேரப் பிள்ளைகள் என இருப்பதால் நான் லட்சம் கோடிக்குமேல் சம்பாதித்தேன் எனக் கூறுகிறாரோ?ஆட்டயப் போடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? உங்களுக்கு சாதகமான தீ..பு வாங்க தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உதவியாளருக்கு (ஒரு நாளும் அரசு ஊழியராக இருந்ததில்லை) அப்பழுக்கற்ற அரசு ஊழியர் கோட்டாவின் இரண்டு பிளாட்டுகள் ஒதுக்கியது சரியா? அதுவும் விதிப்படி ஒருவருக்கு ஒன்று மட்டுமே என உள்ளபோது!கவர்னர் பர்னாலாவே மருத்துவப் பல்கலைக் கழக நியமன ஊழலில் சம்மந்தப்பட்டுள்ளபோது, மஞ்சத்துண்டு மேல் வழக்குப்போட அவர் சம்மதம் வேறு வேண்டுமா?உங்களைப் பத்தி நீதிபதி சர்க்காரியா கொடுத்த சர்ட்டிபிகேட்டே போதும்!
By மணி வி
2/8/2011 2:52:00 PM
திருடும் போது சேந்து திருடுவது. மாட்டிகிட்ட நான் இல்லை அவன்தாங்க. எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை நான் உத்தமன் என அறிக்கை விடுவது.
By சதீஷ்
2/8/2011 2:35:00 PM

Mr.Subramaniaswamy is only handpin and the actual master behind the activities belongs to Ms.Jayalalitha and she is trying in all sorts of methods to capture the power. Nobody i against capturing the power but what she has done during her 10 year mis rule of Tamilnadu. Corruption should be rooted out and no second thought about it. Ms.jayalalitha is one of the noted corruptionist of Indian politics. mr.Subramania Swamy is trying to book Mr.karunanidhi under various scams but one has to rember that the present Chief minister has brought Tamilnadu to one of the foremost developed state of India. It is very unforuntae by vaious media and editors of various journals including Dinamani to equate Mr.Karunanidhi with Ms.jayalalitha who brought down Tamilnadu to the bottom line of development. If both are corrupted then one should choose one with corruption and development and not the one with zero development and corruption.
By M.Thangarajan
2/8/2011 2:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இந்தியா வல்லரசாக வளர்கிறதா?

கொலைவெறிமிக்க இந்திய அரசு நல்லரசும்  ஆகாது; வல்லரசும் ஆகாது என்பதை உதயை நன்றாகத் தெரிவித்துள்ளார். தன் நாட்டு மக்களையே காவு கொடுத்து அண்டை நாட்டின் கைக்கூலியாக நடந்து கொள்ளும் ஓர் அரசை எந்த நாட்டு மக்களும் நல்லரசாகவோ வல்லரவாகவோ எக்காலததிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


Tuesday, February 08, 2011 7:26 AM IST


இந்தியா வல்லரசாக வளர்கிறதா?


அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.  ÷எந்த ஒரு துறையிலும் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்; மற்றவர்களை விடக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி காண வேண்டும்; எல்லாத் துறையிலும் நம்முடைய கட்டமைப்பே தலைசிறந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  ÷இதிலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?  ÷இந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?  ÷""2020-ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல; இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குகூட அல்ல; அது ஒரு பணி இலக்கு. இதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவோம்; வெற்றி காண்போம்...'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறார்.  ÷இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.  ÷அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை; ஆண்டானுக்கு அடிமையின் பணிவிடைபோல் இருக்கிறதே என்று கேட்கத் தோன்றியது.  ÷ஆனால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?  ÷அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள திரிவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முடியும் வரை மாணவர்களின் நடமாட்டத்தை அறிவதற்காக அவர்களின் காலில் ரேடியோ அதிர்வலை கொண்ட கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு ஏற்பட்டதும் இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.  ÷""போலி விசாவில் தங்கிப் படித்த மாணவர்களை முறைப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கருவி பொருத்தப்பட்டது...'' என்று ஹைதராபாதில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜூலியட் உர் குறிப்பிட்டுள்ளார்.  ÷இவ்வாறு இந்தியர்களை அவமானப்படுத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அந்த நாட்டில் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டபோது, மக்கள் ஆத்திரப்பட்டனர்; ஆனால் அரசு அமைதி காத்தது. இதேபோல அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களை இந்தியா சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா அதைச் சகித்துக் கொள்ளுமா?  ÷அப்போதே இதுபற்றிப் பேசி முடிவெடுத்திருக்க வேண்டாமா? அப்படிச் செய்திருந்தால் இந்த அவமதிப்பும், அவமானமும் தொடருமா?  ÷அண்மையில் மறுபடியும் இரண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரால் அவமதிக்கப்பட்டனர். ஐ.நா.வில் இந்தியாவில் நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கும் ஹர்தீப் சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர், தாம் ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக மதிப்புப் பெற்றவர் என்று எடுத்துக் கூறியும் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.  ÷இதையடுத்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மிஸிஸிப்பி விமான நிலையத்தில் சேலை கட்டியிருந்த காரணத்துக்காக சேலையை அவிழ்த்துக் காட்டும்படி கேட்டுள்ளனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்டு கேவலப்படுத்தியுள்ளதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?  ÷அண்மையில் பாகிஸ்தான் லாகூரில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தொழில்நுட்ப அதிகாரி டேவிஸ், தன்னை வழிமறித்தவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டதால் 3 பேர் இறந்துள்ளனர். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், இச்செயல் வியன்னா தீர்மானத்தை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.  ÷இதே அமெரிக்காவின் அடியொற்றிவரும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இளைஞர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். 2010 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வே அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர்.  ÷அப்போது நமது வெளியுறவுத் துறை என்ன செய்தது தெரியுமா? ஆஸ்திரேலிய அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கே அறிவுரை கூறியது.  ÷""ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு நாடுகளில் உள்ள பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்...'' என்று நமது வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கூறினார்.  ÷இப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? வளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.  ÷இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ÷இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.  ÷ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.  ÷இங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?  ÷இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.  ÷1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.  ÷பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.