சனி, 15 ஜனவரி, 2011

music sense is basic sense

தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள் என்னும் ஆசிரியரின் அறிவுரையை அனைவரும் பின்பற்றினால் நாடு நலம் பெறும்! வளம் பெறும்! ஆனால், தமிழ் நாட்டில் பிற மொழிக்கல்விக்குத் தரும் ஊக்கம் தாய்த்தமிழுக்கு இல்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கீத ரசனை இந்தியரின் அடிப்படை உணர்வு: 
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்

சென்னை, டிச. 14: சங்கீத ரசனை இந்தியர்களின் அடிப்படை உணர்வு என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.  ஹம்ஸத்வனி அமைப்பின் 21-வது ஆண்டு இசை, நாடக விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவைத் தொடக்கி வைத்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது: உலகில் வேறு எந்த நாட்டுக்கும், பகுதிக்கும் இல்லாத பெருமை சென்னைக்கு உண்டு. ஆண்டின் 365 நாள்களும் - இலக்கியம், கலை, நாடகம், ஆன்மிகம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சி தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நடத்தப்பட்டு வரும் பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.  உலகில் பல்வேறு இனங்கள் உள்ளன. அந்தந்த இனங்களுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. சில இனங்கள் செல்வத்துக்கு முன்னுரிமை அளிக்கும். நாடுகளைப் பிடிப்பதிலும் மதத்தைப் பரப்புவதிலும் வேறு சில இனங்கள் ஆர்வம் காட்டும். ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என காட்டுவதுதான் நம் இனத்தின் தலையாய பண்பு.  "ஈதலும் இசைபட வாழ்தலும்' தான் நமது இனத்தின் சிறப்பு, தனித்தன்மை. நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்வது, இசையோடு இயைந்து வாழுவது என்பதுதான் இதன் பொருள்.  இசையோடு ஏன் வாழ வேண்டும்? இசை இல்லாவிட்டால் இரக்கம் இருக்காது; இரக்கம் இல்லாவிட்டால் மனிதாபிமானம் இருக்காது; மனிதாபிமானம் இல்லாவிட்டால் மானுடனாக இருப்பதற்கே அர்த்தம் இருக்காது.  இன்றைய காலகட்டத்தில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப கிராமங்களிலிருந்து அவசர கதியில் இயங்கும் நகர்ப்புறங்களை நோக்கி மனிதர்கள் இடம்பெயருகிறார்கள். அலுவலகங்களில் இருப்பதைவிட அலுவலகங்களுக்குப் போய் விட்டு வருவதே மக்களுக்கு மிகப் பெரிய "டென்ஷன்' ஆக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஒன்று போதும், மனஅழுத்தத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஒருசேர அதிகரிக்க.  அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த இறுக்கமான சூழ்நிலை தொடருகிறது. தொலைக்காட்சி, சினிமா, ஏன் பத்திரிகைகள் என எதை எடுத்தாலும் நமது அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றன. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இசைதான். அதற்கு இதுபோன்ற சபாக்கள்தான் உதவுகின்றன.  நாகரிக மாற்றங்களில் பல, நம்மை பாதித்துக்கொண்டே இருப்பதால் நமது அடித்தளம் அசைக்கப்படுகிறது. நமது நாகரிகம், கலாசாரம், பண்பாடு இவையெல்லாம் உலகமயம் என்ற சூழலில் தகர்ந்து கொண்டிருக்கிறது.  நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள். மனிதனின் அடிப்படை பயம் நிலையாமைதான். நிலையாமை உள்ளவரை இறையுணர்வும் இருக்கும் என்பதை உணர்ந்ததால்தான் மொழியையும், சமயத்தையும் இணைத்தார்கள். மொழியை சமயமும், இறையுணர்வை மொழியும், ஒன்றையொன்று பாதுகாக்கும் என்று கணித்தனர்.  இன்று பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும்கூட உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாக சம்ஸ்கிருதம் தொடர்வதற்குக் காரணம் அந்த மொழி இறையுணர்வுடன் பிணைந்திருப்பதுதான்.  அதுமட்டுமல்ல, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் என்று கலைகளையும் சமயத்துடன் இணைத்தார்கள் நம் முன்னோர்கள். இந்தக் கலைகள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நமது பண்புகள், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் மொழியைக் காப்பாற்ற வேண்டும். தமிழோ, தெலுங்கோ, ஹிந்தியோ, பஞ்சாபியோ, தயவு செய்து தாய்மொழியில் பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள்.  மொழியை மறக்கும்போது நமது கலாசாரம், பண்பாடு போன்றவற்றை நாளைய சமுதாயம் இழந்துவிடும்.  சங்கீத ரசனை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படையிலேயே உள்ளது. இல்லாவிட்டால் இசையைப் பிரதானப்படுத்தி வெளியான எத்தனையோ திரைப்படங்கள், அவை வேறு மொழியாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா?  கொஞ்சும் சலங்கையும், தில்லானா மோகனாம்பாளும், சலங்கை ஒலியும், சங்கராபரணமும், சிந்து பைரவியும் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், பாமரர்களுக்கும் இசையுணர்வு இருக்கிறது என்பதால்தானே?  ஒரு மனிதன் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்தாலும் இசைதான் மிகப் பெரிய அமைதியைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இசையின் வளர்ச்சிக்காக ஹம்ஸத்வனி அமைப்பு சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் தினமணி ஆசிரியர்.  விழாவில் ஹம்ஸத்வனி அமைப்பின் துணைத் தலைவர் சீனிவாசன் தேவய்யா, செயலாளர்கள் ஆர்.சுந்தர், டி.ஆர்.கோபாலன், சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன், புல்லாங்குழல் இசை மேதை என்.ரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   

thai month is the begining of the year: தைப்பொங்கல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாகும்!

தைப்பொங்கல் தினமே

தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

images
தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!
“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.
பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் – என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.
தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(A Social History of the Tamils-Part 1)
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில்FONKARA – FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க – பொங்கஅரிசித் தவிடு பொங்க – பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.
இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.
இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.
“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? – தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .
- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!
“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”
பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!
இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.
பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.
அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.
இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.
அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் – எதையும் – எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.
முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு – மலேசியச் சிறப்பு மலர், தமிழர் – யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.
சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.
- சபேசன் (மெல்பேர்ண் – அவுஸ்திரேலியா)
}

pogal greettings by dinamalar:தினமலரின் பொங்கல்வாழ்த்து

india helps to ilangai (military): இலங்கைக்கு இந்தியா துயர்துடைப்பு உதவி

முன்னர் அனுப்பிய உதவிப் பொருள்கள் யாவும் சிங்களப்படைமுகாம்களுக்குத்தான் தரப்பட்டன.  (தமிழ்) மக்களுக்கு உதவி என்ற  போர்வையில் மீண்டும் படை முகாம்களுக்கு இந்திய உதவி. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest+News&artid=361652&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%u0bb8%u0bcd%u0b9f%u0bbe%u0bb2%u0bbf%u0ba9%u0bcd+%u0baa%u0bca%u0b99%u0bcd%u0b95%u0bb2%u0bcd+%u0bb5%u0bbe%u0bb4%u0bcd%u0ba4%u0bcd%u0ba4%u0bc1
கொழும்பு, ஜன.14- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் இந்தியத் தூதர் இன்று ஒப்படைத்தார்.கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இந்த நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.உணவு, உடை உட்பட இந்தியா அனுப்பிய 25 டன் நிவாரணப் பொருட்களை இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை பொருளதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் விமான நிலைய நிகழ்ச்சியில் நேரில் ஒப்படைத்தார். அப்போது, இந்தியாவுக்கு பசில் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

pongal greettings by stalin: (இஃச்)தாலின் பொங்கல் வாழ்த்து

துணை முதல்வரின் முதல்வராகும் கனவு நனவாக வாழ்த்துகள்! ஆனால் அக்கனவு நனவாக உலகத்தமிழர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்! தமிழும் தமிழரும் முதன்மை பெற்றுத் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன.14- துணை முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எல்லாத் திசைகளிலும் நம்பிக்கை ஒளியைப் பரவச்செய்கிறது புத்தாண்டு சூரியன்.  இது தமிழ்ப் புத்தாண்டு. தமிழர்களின் புத்தாண்டு. திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனைத் திருநாள்தான். மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள் தமிழக மக்கள்.தமிழ் மகளாம் தை மகளை வரவேற்கும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு நாளில் இல்லங்கள்தோறும் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடவேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர். ஒவ்வொரு இல்லத்திலும் ஒளிப்பூக்கள் பூத்துக் குலுங்கின என்கிற அளவுக்கு மாநிலமெங்கும் ஒளிரட்டும் புத்தாண்டு விளக்குகள். சூரியன் இல்லாமல் பகல் இல்லை, பொழுது  இல்லை, விடியல் இல்லை என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. தமிழர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். சூரியக் கதிர்களின் துணையுடன்தான் புத்தாண்டும் புலர்கிறது. அந்த வெளிச்சம் என்றென்றும் வாழ்வில் நிலைப்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும்  மாலைவேளையில் இல்லங்கள்தோறும் ஒளிவிளக்குகள் பூத்துக் குலுங்கட்டும். முதல்வரின் வேண்டுகோளை ஆணையாக ஏற்போம். ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகும் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நிறைவேற்றவுள்ள அரிய பல திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் கட்டியம் கூறும் வகையில் ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும், கூடத்திலும், மாடத்திலும் ஒளிரட்டும் விளக்குகள். அகல் விளக்கு, குழல் விளக்கு, வண்ணவண்ண ஒளி விளக்கு  என வகைவகையான விளக்குகளால் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம். நம்பிக்கை ஒளி பெருகட்டும் !நம் தலைவரின் சாதனைகள் தொடரட்டும் !!இனிய புத்தாண்டு-பொங்கல் நல்வாழ்த்துகள் !!!இவ்வாறு ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

தொண்டர்கள் பொங்கிட வாழ்த்துகள் வழங்கிடும் கட்சிகள் பொங்கினால் எப்படி இருக்கும்..?ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை ... அடுக்கு மொழி அடுப்பில் ஒரு ரூபாய் அரிசியுடன் வார்த்தைஜால வெல்லம் கலந்து இலவச நெய் ஊற்றி `கை`பார்த்து இறக்கினால் தி மு க பொங்கல் கணக்கு கேட்டு கனன்ற அடுப்பில் எம் ஜி ஆர் பானை ஏற்றி அம்மா களைந்த அரிசியுடன் அதிரடி வெல்லம் கொட்டி கொஞ்சம் ஆன்மிக ஜோதிட நெய் கலந்தால் ஆச்சு ...அ தி மு க பொங்கல் கதிர் அறுவாள் கொண்டறுத்த வெண்மணி அரிசியுடன் கைசுத்தி வென்றெடுத்த வியர்வையை வெல்லமாக்கி நெய்யற்று நீரற்று வறண்ட போராட்ட அடுப்பில் எழும் சிவந்த தழல் மேலே பொங்கி பொங்கி எழுந்தால் அது காம்ரேட்களின் கம்யூனிஸ்ட் பொங்கல் நேரு குடும்ப அடுப்பில் காந்தி பெயரிட்ட பானையில் மதசார்பற்ற நெல் குத்தியெடுத்த மைனாரிட்டி அரிசியுடன் கூட்டணி வெல்லம் கொட்டி கோஷ்டி மார்க் நெய் ஊற்ற எமர்ஜென்சி மறந்து பொங்கும் காங்கிரஸ் பொங்கல் அகிம்சை அரிசியுடன் சத்திய சர்க்கரை கலந்து எளிமை நெய் ஊற்றி இறக்கினால் பாவ்ம் யாரும் சாப்பிட விரும்பாத காந்தி பொங்கல்
By வல்லம் தமிழ்
1/14/2011 10:37:00 PM
அரண்மனையில் வசிக்கும் அழகிரி, கனிமொழி, தயாநிதி மற்றும் கருணா குடும்பத்திற்கு திமுக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனைத் திருநாள்தான்! மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ... ... ... நினைவு கூர்கிறார்கள் தமிழக மக்கள். விலைவாசி உயரவிடாமல், மின்வெட்டு இல்லாமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், தமிழக உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் அடகு வைக்காமல், ஈழத் தமிழர்களுக்கு சிறுபாதிப்பு கூட நேர விடாமல் தமிழக மக்களின் உழைப்பை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்காது காத்துவருவதால், ஆறாவது முறையாகவும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகும் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நிறைவேற்றவுள்ள அரிய பல திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் கட்டியம் கூறும் வகையில் ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும், கூடத்திலும், மாடத்திலும் ஒளிரட்டும் விளக்குகள். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பங்குபெறாத கட்சிக்காரர்கள் ஒதுங்கிஉள்ளதால் 'முதல்வரின் வேண்டுகோளை ஆணையாக ஏற்போம்' என பொதுமக்களிடம் கூறுகிறார் துணை முதல்வர்!
By பொன்மலை ராஜா
1/14/2011 9:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

vegetable sales center: காய்கறி விற்பனை மையங்கள் தொடங்க அரசு முடிவு

எதிர்பார்த்த நல்ல முடிவு. ஆனால் இதற்கு முன்பு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்பெற்ற காய்கனிகள் வாடி வதங்கி விலை குறைக்கப்படாமல் வீணான நேர்வுகள் உள்ளன. எனவே, முதல் நாள் காய்கனிப் பட்டியல் அளித்தால் அதற்கேற்ப மறுநாள் காய்கனி விற்கப்படும் என்னும் கூடுதல் வசதியை ஏற்படுத்தித்தந்தால் இதனைச் சமாளிக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காய்கறி விற்பனை மையங்கள் தொடங்க அரசு முடிவு

சென்னை, ஜன.14: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய தலைமைச்செயலகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அப்போது எடுக்கப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும் நடவடிக்கை.சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்குச் சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை.நியாய விலைக்கடைகள் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற்றும் மளிகைப் பொருட்கள் போதிய அளவு இருப்பு வைத்து, எந்த தட்டுப்பாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை.சர்க்கரை விலையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க, முன்பேர வர்த்தகத்திலிருந்து சர்க்கரையைத் தவிர்க்க மத்திய நிதியமைச்சருக்கு உடனடியாகக் கடிதம்.நீண்டகாலத் திட்டமாக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை.நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலும், உழவர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காய்கறிகளைப் பயிரிட வாய்ப்புள்ள கிராமங்களைக் கண்டறிந்து, தரமான விதைகளை வழங்குதல் மற்றும் பல்வேறு வேளாண் யுக்திகளை விவசாயிகளிடம் பரப்பி, காய்கறி  சாகுபடி பரப்பளவையும், உற்பத்தியையும் பெருக்கிட தீவிர நடவடிக்கை.வரும்காலங்களில் விவசாயப் பொருள்களின் விற்பனை மையங்களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்களைத் தீட்டி  செயல்படுத்தப்பட வேண்டும்.விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பிற துல்லிய பண்ணை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்ப்பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.முக்கியப் பயிர்களான நெல் போன்றவற்றின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆராய்ந்து, திட்டம் வகுத்து, அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இது நல்ல முடிவாக இருந்தாலும் இன்றைய காய்கறி விற்பனையாளர்களை கட்டுபடுத்த முடியாத கையாலாகதனத்தை தான் இந்த முடிவு காட்டுகிறது!
By ஸ்ரீனி ம
1/14/2011 10:52:00 PM
இராசாவிடம் கூறி, தேர்தல் வரை எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை இலவச விநியோகம் செய்யலாமே!
By பொன்மலை ராஜா
1/14/2011 7:18:00 PM
இந்த திட்டங்கள் எல்லாமே நகர்ப்புற மக்களின் வசதியை கருத்தில் கொண்டவையே. மானியத்தில் 24 மணி நேர வீட்டு மின்சாரம், மானிய LPG, பஞ்சப்படி, ஊதிய உயர்வு, குறைந்த விலையில் பால், உணவுப்பொருள்கள், காய்-பழங்கள் எல்லாம் இந்த நகர்ப்புற ஒட்டுண்ணிகளுக்கு வேண்டும். வங்கி வசதிகளும் இவர்களுக்கே. கிராமங்களில் ஒழுங்கான மின் வசதி இல்லை. பயிர் செய்ய பாசன வசதி இல்லை. கந்து வட்டியை விட்டால் விவசாயிக்கு வேறு கதி இல்லை. கட்டுபடியாகும் விலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயியின் கடன் உங்களுக்கு பணி செய்து மடிவதுதானா? மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கெல்லாம் கிடையவே கிடையாதா! சேற்றில் கைவைப்பவர்களைப்பற்றி சோற்றில் கை வைக்கும் பொது நினைத்துப்பாருங்கள்.
By திண்டல் சங்கர நாராயணன்
1/14/2011 5:58:00 PM
VAO- க்கள் இப்போது அவர்கள் ஏரியாவில் என்ன பயிர்கள், எவ்வளவு விளைச்சல், தோராய விலை + கொள்முதல் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்புகிறார்களா? இயலவில்லை எனில், வேளாண்மைதுறை மூலம் எடுக்க முடிவு செய்யப்பட்டதா? கிராம, வட்ட, மாவட்ட, மாநில நிலைகளில் தகவல் சேகரிப்பு மையங்கள் இருக்கின்றனவா? உடனுக்குடன் தகவலை கம்ப்யுடர் வழியே தலைமை செயலகத்திற்கு அப்லிங்க் செய்ய வழி உள்ளதா? இதுமுதல் பணி.இதனை வைத்தே மற்றவை எல்லாம்.
By ASHWIN
1/14/2011 4:14:00 PM
GOOD! I WELCOME THIS SCHEME AND IT SHOULD BE DONE AS EARLY AS POSSIBLE.
By Tamilan from Thailand
1/14/2011 3:39:00 PM
வரவேற்கத்தக்க முடிவு... இந்த நடவடிக்கையால் மக்களுக்கு நியாமான முறையில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமாயின் இது நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை போன்று நல்ல வரவேற்பை பெறும். மாறாக இதிலும் எவனாவது ஊழல் செய்தால் தமழக மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது நல்ல முயற்சி....இதனை உடனே செயல்படுத்தினால் சில வாரங்களிலே கூட நல்ல பலன் கிடைக்கும்... மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியவாசியப்போருட்கள் தங்கு தடையில்லாமல் ...அவர்கள் பொருளாதார நிலைமைக்கேற்றாவாறு கிடைக்க வேண்டும்... அதனை செய்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும்
By samy
1/14/2011 2:53:00 PM
If govt participates in production of vegetables, in agriculture the rates may come down to a great extent. Let the Govt think about production , then distribution and sale through its outlets. Agriculture is so neglected in our country. No one wants to do agriculture. There is loss in doing it. Let the farmers produce and give it FREE to Karunanidhi so that he can give free to all. The market is open and buy it ....allow the goods to flow to other states so that farmers get their due for their produce.
By A.Natarajan
1/14/2011 2:25:00 PM
வரவேற்கத்தக்க முடிவு... இந்த நடவடிக்கையால் மக்களுக்கு நியாமான முறையில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமாயின் இது நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை போன்று நல்ல வரவேற்பை பெறும். மாறாக இதிலும் எவனாவது ஊழல் செய்தால் தமழக மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது..!
By நரேன்
1/14/2011 2:07:00 PM
நல்ல முயற்சி....இதனை உடனே செயல்படுத்தினால் சில வாரங்களிலே கூட நல்ல பலன் கிடைக்கும்... மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியவாசியப்போருட்கள் தங்கு தடையில்லாமல் ...அவர்கள் பொருளாதார நிலைமைக்கேற்றாவாறு கிடைக்க வேண்டும்... அதனை செய்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும்...
By R.Parthiban
1/14/2011 1:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


Kalaignar about jaya with cong. : காங்கி. கூட்டணி நம்பிக்கையை இழந்துவிட்டார் செயலலிதா: கருணாநிதி

உண்மைதான். ஆனால், இதனால் அவருக்கு மட்டும்தான் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். மாறாகக் கொலைகாரக் காங்.கின் கையைக் கெடடியாகத் தி.மு.க. பிடித்திருப்பதால் உலகத் தமிழர்களுக்கே அல்லவா ஏமாற்றம் ஏற்படுகிறது. இருவரும் சேர்ந்தேனும் காங்.ஐ ஓட ஓட விரட்டி அடித்து இருக்க வேண்டாமா? தமிழால் தமிழுக்காக - தமிழருக்காக- ஒன்று படாதக் கட்சிகள் பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும்  ஒன்றுபடுகின்றனவே!  
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


காங்கிரஸýடன் கூட்டணி நம்பிக்கையை இழந்துவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி

சென்னை, ஜன.14: காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி நம்பிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இழந்துவிட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளது இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான்.  பிரதமர் மன்மோகன் சிங் சென்னை பயணத்தின்போது நான் அவரைச் சந்தித்தப் பிறகு, நிலைமை மாறிவிட்டது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.  உண்மையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா எந்த அளவிற்கு முயற்சி செய்தார், யார் மூலமாக முயற்சி செய்தார் என்பது தெரியும். ராசாவை கைது செய்தால் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்றெல்லாம் சொன்னார்.  அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கூட, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதியாக்கி விடுவேன் என்பதைப் போல சவால் விட்டுப் பேசினார். நல்ல செய்தியை விரைவில் எதிர்பாருங்கள் என்றார்.  ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தி.மு.க.வோடு கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்த பிறகு, ஜெயலலிதாவின் "குட்டு' அம்பலமாகிவிட்டது. உடனே அடுத்த நிமிடமே மத்திய அரசைத் தாக்குகிற முயற்சியிலே ஈடுபடத் தொடங்கிவிட்டார்.  தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள கபில் சிபலை தனது அறிக்கையில் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை அறிந்துதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரது உறவைத் திரும்பிப் பார்க்காமல் ஒதுக்கியிருக்கிறது.  காங்கிரஸ் கட்சியோடு எப்படியும் உறவு ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதா, அந்த நம்பிக்கையை இழந்து பரிதாபகரமாக இப்போதுதான் மற்றக் கட்சிகளை குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.  மீனவர் பிரச்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்ற விவகாரம் தொடர்பாக, இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மருத்துவ நுழைவுத் தேர்வு: பொது நுழைவுத் தேர்வு கூடாது, அதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. மீண்டும் நுழைவுத் தேர்வு வந்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கூட இந்தத் தேர்வுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  சீனிவாசபுரத்தில் குடிசைப் பகுதி மக்கள் வாழும் நிலத்தை ரியல் எஸ்டேட் நடத்தும் சிலருக்கு கொடுக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக பத்திரிகையில் வந்துள்ள செய்தி உண்மைக்கு மாறானது. அடிப்படை இல்லாத தவறான தகவல்.

encouragement for solar system: மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

நல்ல முயற்சி ! பாராட்டுகள்! சூரிய ஆற்றலைக் கொண்டு நம் நாடு மின்னாற்றல் பயன்பாட்டைக்  குறைத்து அதே நேரம் மிகுதியான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.  ஆனால், தொடர்புடைய துறையினர் மாணாக்கர்களுக்கு ஊக்கம் தருவதில்லை. இதில் அரசு கருத்து செலுத்த வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஜன.14: தமிழகத்தில் வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தி (சோலார்) மின் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசியது:  சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே தமிழகத்தில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையில் சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை வீட்டு மொட்டை மாடிகளில் வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஊக்கப்படுத்த உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே 30 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 43 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு ஆகும் என்றார்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் டேவிதார் பேசியது:  வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.  வீடுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும்போது, நுகர்வோர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும். உபரி மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கலாம். இது தொடர்பாக பொது கொள்கை உருவாக்கப்படும் என்றார்.  இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.  புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கான கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் ரூ.2 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறும்.  அமெரிக்க துணை தூதர் ஆன்ட்ரூ டி.சிம்கின், பிரிட்டன் தூதரக அதிகாரி மைக் நிதாவ்ரியானகிஸ், சிங்கப்பூர் தூதர் அஜீத்சிங், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் குத்சியா காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.     

Sudden transfer for sincere duty: கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்த மதுரை மாவட்ட அதிகாரி திடீர் மாற்றம்

நல்ல பரிசு!கடமை  பொங்கப்  பணியாற்றியமைக்கான  பொங்கற் பரிசு! சட்டம் என்பது யாவர்க்கும் சமம் என அறியாமையால் நினைத்தமைக்கான புத்தாண்டுப் பரிசு! நேர்மையான பணிக்கு வழங்கப் பெற்ற திருவள்ளுவர் திருநாள் பரிசு! மக்கள் தேர்தலில் பரிசு வழங்கினால் என்ன ஆகும்? 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்த மதுரை மாவட்ட அதிகாரி திடீர் மாற்றம்

மதுரை, ஜன.14: மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 1 கோடி மதிப்புள்ள கடத்தல் ரேஷன் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரி, அரசியல் பின்னணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்ட வழங்கல் அலுவலராக கடந்த ஓராண்டுக்குமுன் எஸ்.முருகையா பொறுப்பேற்றார். அப்போதுமுதல் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கடத்துவோர் மீது தீவிர நடவடிக்கை எடுத்தார்.  அவரது உத்தரவின்பேரில், மதுரையில் உள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு நெருக்கமான அரிசி ஆலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, மதுரை அனுப்பானடி, கீரைத்துறை, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த அரிசி ஆலைகளில் அவர் அதிரடிச் சோதனை நடத்தினார்.  கடந்தாண்டு ஜூலையில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 39 டன் நெல் மூட்டைகள், ஒரு அரிசி ஆலையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அலங்காநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலி பெட்ரோல் பங்க் இயங்கி வந்ததையும் எஸ். முருகையா தலைமையில் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த அரசியல் எதிர்ப்புக்கிடையே இச்சோதனையில் வழக்குப் பதிவு செய்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள டீசல், மண்ணெண்ணெய், லாரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதும் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இவரது பணிக்காலமான கடந்த ஓராண்டு, 5 மாதங்களில் உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸôர் உதவியுடன் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள், 250 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதையெல்லாம்விட ரேஷன் கார்டுகள் தணிக்கைப் பணியில் தீவிர கவனம் செலுத்தி மதுரை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்ததும் ஆளும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.  இந்நிலையில்தான் ஜனவரி 12-ம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.முருகையாவுக்கு, உசிலம்பட்டி கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வருவதற்கு முதல்நாள் (ஜனவரி 11) மதுரையில் ஒரு சம்பவம். மதுரை திருநகர் 4-வது ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல்  கிடைத்தது.  இதையடுத்து முருகையா தலைமையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை விற்பனையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.  இச்சம்பவத்தில் நடவடிக்கையைத் தவிர்த்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி மதுரை மாநகர் முக்கிய ஆளும் கட்சிப் பிரமுகர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை தொடர்ந்ததால் எஸ்.முருகையா மீது ஆளும் கட்சியனருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  உசிலம்பட்டி பகுதியில் ஆளும் கட்சியினருக்கு அதிகமான எண்ணிக்கையில் கல் குவாரிகள் உள்ளன. இவர் இப்பகுதிக்கு கோட்டாட்சியராகப் பொறுப்பேற்றால் "ஒத்துப்போகமாட்டார்' என ஆளும் கட்சித் தரப்பினர் மேல் மட்டத்துக்கு "பிரஷர்' கொடுத்ததால் ஜனவரி 13-ம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்ட அரசு உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், எஸ்.முருகையாவுக்கு கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மாவட்டங்களில் ஏதாவது ஒரு துறைக்குப் பணிமாற்றம் கிடைக்கலாம் என விவரம் அறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நேர்மையாகப் பணியாற்றிய ஒரு அதிகாரி மீது ஆளும்கட்சி பிரமுகர்களால் பாய்ந்துள்ள இந்த நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

why worship sun? பொங்கல் அன்று சூரியனை வழிபடுவது ஏன்?

சூரியனில் இருந்து பூமி உருவான அறிவியல் உண்மையை நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்தனர். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இவ்வுண்மையைக் கொண்டே ஆதியாகிய பகவனைக் கொண்டு உலகம் பிறந்தது எனத் தம் முதல் குறளில் ஆதிபகவன் முதற்றே உலகு என்றார். காலத்தைப் பகுப்பதால்  சூரியனுக்குப் பகவன் என்று பெயர்.(http://www.natpu.in/natpu/Pakudhikal/Kural/11.php ) நம் முன்னோரை வணங்கும் பண்புடைய நம் தமிழ் மக்கள் பூமிக்கு முன்னோடியாக விளங்கும் ஆற்றல் நிறைந்த சூரியனை வழிபடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இறை மறுப்புக் கொள்கையரும் ஏற்கும் இயற்கை வழிபாடு இது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


"தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருபவன் சூரியன்' என்று நயமாகப் பாடியுள்ளார் கவியரசு கண்ணதாசன். இது மாபெரும் உண்மை. ஆதவனின் சாரமாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்... ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன.மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், "சூரியனின் பெருமைகள்' கூறப்பட்டுள்ளன.பாரதத்தில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், "மகர சங்ராந்தி'யாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே "பொங்கல் திருநாள்' ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது பாரதத்துக்கான கோடையின் தொடக்கமாகும்.  கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த "மகர சங்கரமணம்' என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக  சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக "உழவர் திருநாள்' கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன. நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல  பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது. கிரேக்க நாட்டினர் சூரியனை, "இவ்வுலகைப் படைத்தவர்' எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல... கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர். வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, "சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்' என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை "ஹோரஸ்' என்றும், நண்பகல் சூரியனை "ஆமென்ரர்' என்றும், மாலைச் சூரியனை "ஓசிரில்' என்றும் அழைத்தனர். "டைஃபோ' என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து, மாலையில் "ஓசிரிலை' விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் "ஹோரஸ்' அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.எனவே நாளது பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீச, சூரிய பகவான் திருவருள் பொழிவார்.


Pongal festival: பொங்கல் பண்டிகை: ஏன்? எதற்கு?

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து
பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி
வசியும்      வளனும்             சுரந்து            வாழியர்
வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க
உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும்
பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க
எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே.

                                செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்
       (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
உலகில் அமைதி திகழ்ந்து இன்பம் பொங்கவும்
அனைவர் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கவும்
தமிழ்ஈழத் தனியரசு அமைந்து உரிமை பொங்கவும்
                 புத்தாண்டு வாழ்த்துகள்!
                 பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
                திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்!

தோழமையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
01.01.2042 (15.01.2011)


"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.போகி பண்டிகை"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.பொங்கல் பண்டிகை ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!மாட்டுப் பொங்கல் கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை. அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.திருவள்ளுவர் தினம் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார். திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை. "உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.காணும்பொங்கல்பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்."காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய "சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!
கருத்துகள்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்
By வாதிரியார் - பாட்னாவிலிருந்து
1/14/2011 10:18:00 PM
அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்
By gkay
1/14/2011 9:07:00 PM
மிக்க நல்ல கருத்துக்கள்.நல்ல கட்டுரை. அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.
By S Raj
1/14/2011 5:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 14 ஜனவரி, 2011

open letter to suki.sivam

இனப்பகைவர்கள், உயிர்கள்நேயமற்றவர்கள், கைக்கூலிகள், அரசியல் வணிகர்கள் ஆகியோர் உரைகளைப் புறக்கணியுங்கள். இனி்இவரதுஉரை நிகழ்ச்சிக்கு விளம்பரம் தர வேண்டா என விளம்பரதாரர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம். ஒரு பொருள் விளக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். வெட்டி வேலை என்றால்  இவர்கருதும் பொருளல்ல. பணத்தை ஊதியமாகப் பெற்றுப் பார்ப்பது வேலை. பொருளை ஊதியமாகப் பெற்றுப் பார்ப்பது வெட்டி. உழைப்பைக் கொடையாகக் கொடுத்துப் பார்க்கும் வேலை அமிஞ்சி. அவ்வாறு கட்டப்பட்ட கரைதான் சென்னையில் உள்ள அமிஞ்சிக்கரை. தமிழ்ஈழத் தனியரசு விரைவில்  அமைய வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=458


அதிர்வுக் குழுவினரே! என்ன அது காமன்சு?
உங்கள் கருத்தினைப் பெற்றோம். ஆசிரியர் இசைவிற்குப்பின்னர் வெளியாகும் எனத் தமிழில் குறிப்பிடலாமே!
அயல் எழுத்துகளையும் அயற்சொற்களையும் அகற்றி அன்னைத்தமிழைக் காக்க வேண்டுகின்றேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

Pongal Greettings: பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து

தினமணியின் அனைத்துப் பிரிவுப்பணியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இணையக் கருத்தாளர்களுக்கும் படிக்குநருக்கும் பொங்கும் மங்கலம் என்றும் தங்கிடப் பொங்கல் வாழ்த்துகள்! அயல் எழுத்துகளையும் அயற்சொற்களையும் அகற்றி அன்னைத் தமிழைக்காத்திட புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழ்ஈழத்தனியரசு அமைய திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! உயிர்கள் அனைத்தையும் போ்றறிட மாட்டுப் பொங்கலை முன்னிட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜன.14: பொங்கல் திருநாளையொட்டி அதிமுக பொதுச்செயலர் ஜெயலிதா, காஙகிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு,  மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



anbarasu about vaiko: வைகோவை கைது செய்ய வேண்டும்: முன்னாள் எம்.பி. அன்பரசு

காங.நேர்மையாகவும் உண்மையாகவும் நாணயமாகவும் தூய்மையாகவும் சிறப்பாகவும் மனித நேயத்துடனும் அனைத்துத்  தேசிய இனங்களையும் ஒடுக்காமலும் நடந்து கொண்டால் எந்தக் குறுந்தகடு குறித்தும் அஞ்சவேண்டியதில்லையே! வைக்கோ உருவாக்கியுள்ளதாகக் கூறப்படும் குறுந்தகட்டில் கற்பனைச் செய்தியோ பொய்யுரையோ புனைந்துரையோ மிகையுரையோ இடம் பெற வாய்ப்பில்லையே! பிற ஊடகங்களில் வந்ததைத்தானே தொகுத்திருப்பார். பின் ஏன் அச்சம்?  தேர்தலை நேர்மையாகக் கையாளாமல் அரட்டல் உருட்டல் மிரட்டல் கைது சிறைவைப்பு முதலானவற்றைப் பின்பற்றினால் கிடைக்கும் வாக்குகள்கூடக் கிடைக்காமல் போய்விடும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



வைகோவை கைது செய்ய வேண்டும்: முன்னாள் எம்.பி. அன்பரசு
First Published : 14 Jan 2011 03:03:28 PM IST

Last Updated : 14 Jan 2011 03:06:57 PM IST
சென்னை, ஜன.14- மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குறுந்தகடு ஒன்றை தயாரித்துள்ளார் என்றும், எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்துள்ள குறுந்தகடுகளை (சி.டி.) கைப்பற்ற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வைகோவை கைது செய்ய வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும்.இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறிவருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.வைகோவின் ஆலோசனையால் தான் பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்பட்டார். இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை மற்றும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.