சனி, 6 பிப்ரவரி, 2010

இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டு



கொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.
கருத்துக்கள்

கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வெல்க தமிழ் ஈழம் என வாழ்த்தும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:18:00 AM

மாவீரன் என்று வெறும் பெயரளிவிலே மட்டும் வீரனாயிருந்த பிரபாகரன் எங்கே, விஜயபாகு படையணி எங்கே? தீவிரவாதிகளை அழித்தொழித்த படையணிக்கு வாழ்துகள். தமிழனின் வீரத்தை கொச்சை படுத்திய பிரபாகரன் தமிழரின் வீர வரலாற்றில் ஒரு இழுக்கை ஏற்படுத்திய கோழை, தன இன மக்களையே கொன்று தான் வாழ ஆசை பட்ட ஒரு சுயநலவாதி, நூற்றுகணக்கான மக்கள் போரில் சாக தானும் தன குடும்பம் மட்டும் கடைசிவரை உயிரோடிருந்து சரணடைந்த உலக மகா கோழை.

By Thiru
2/6/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக