வெள்ளி, 4 அக்டோபர், 2019

கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30

அகரமுதல

புரட்டாசி 17, 2050 / 4.10.2019 இரவு 10.00
புரட்டாசி 18, 2050 / 5.10.2019 முற்பகல் 9.30

வணக்கம் தமிழன் நிகழ்ச்சி
புரட்டாசி 18, 2050 / 6.10.2019 இரவு 10.00
புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30
கீழடி குறித்து உரை:
திரு இலக்குவனார் திருவள்ளுவன்
 நெறியாளர் திரு பாண்டியன்
தமிழன் குரல் நிகழ்ச்சி
வணக்கம் தமிழன்
தமிழன் தொலைக்காட்சி

இலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்

அகரமுதல

புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019 
மாலை 5.00
குவிகம் இல்லம்
ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர்,
சென்னை 600 017
இலக்கிய அமுதம் – கோமல் சுவாமிநாதனும் அவரது சுபமங்களாவும் : இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

அகரமுதல

புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019 

பிற்பகல் 3.30

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

புதன், 2 அக்டோபர், 2019

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் குறும்புதினம் திண்டுக்கல்லில் வெளியிடப்பட்டது

அகரமுதல

கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’ சிறுவர் குறும்புதினம் வெளியீட்டு விழா திண்டுக்கல் பிச்சாண்டி அரங்கில் புரட்டாசி 12, 2050 / 29.09.2019 நடைபெற்றது.
திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகத்தின் 15-ஆம் ஆண்டு விழா,
இலக்கியக் கூடல் 50-ஆவது நிகழ்வு, நூல்கள் வெளியீட்டு விழா என
முப்பெரு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கலை ஆய்வாளர் இந்திரன் தலைமையேற்றார். வெற்றிமொழி
வெளியீட்டகப் பொறுப்பாளர் விண்ணரசி அனைவரையும் வரவேற்றார்.
கவிஞரும் ஓவியருமான திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் முன்னிலை வகித்தார்.
கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’
சிறுவர் குறும்புதினத்தைக் கலை ஆய்வாளர் இந்திரன் வெளியிட, கவிஞர்
இரா.தங்கப்பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
விழாவில், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, மா.கமலவேலன், ஆங்கரை பைரவி,
கவிஞர்கள் யவனிகா சிரீராம், அமிர்தம் சூர்யா, இரா.எட்வின், பொன்.குமார் முதலான
ஏராளமானோர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசுக்கு நினைவுப்
பரிசும் பொன்னாடையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
நிறைவாக, வெற்றிமொழி வெளியீட்டகத்தின் நிறுவனர் இரா.தமிழ்த்தாசன் நன்றி கூறினார்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!

அகரமுதல

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார்.
அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு உதவியது போல் பிரான்சு மாநாட்டிற்கும் உதவுவோம்” என்றார். அனைவரும் மகிழ்ந்து வரவேற்றனர்.
இதுகுறித்து திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர்கள் சிலரிடம் பேசியபோது,
“நிகழ்ச்சி நிரலில் பெயர் இல்லாத பொழுதும் நிறைவு விழாவிற்கு வந்தது, அமைச்சரின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவர் பேச்சிலே ஆர்வம் தொனித்தது, உண்மையாக உதவ எண்ணுகிறார் என்பதைக் காட்டுகிறது. காலையில் மாநாட்டுக்கு வந்து யுனெசுகோ இயக்குநரைச் சந்தித்துக் கீழடி குறித்துப் பேசியதுடன் திருக்குறள் நூலை உலகப் பொதுநூலாக அறிவிக்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார். மீண்டும் மாலையிலும் வந்துள்ளார். ஆகவே, திருக்குறள் மாநாட்டில் ஆர்வம் காட்டுகிறார் என்பது தெளிவாகிறது. அமைச்சர் நிதியுதவி குறித்து முன்னதாகவே அறிவித்தது மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு (ஃபெட்னா) உதவியது போல் உதவுவோம் என்றதும் மகிழ்ச்சி பறந்தோடி விட்டது. அந்த மாநாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செல்லத்தானே அரசு உதவியது. அவர்களும் கருத்தரங்கம் முடிந்த பின் சென்று சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். அதைப் போல் அல்லாமல் திருக்குறள் நாட்டுக்கும், ஆக்கபூர்வமான தமிழர்களுக்கும், தமிழுக்கும் பயன்படுவது போன்ற உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்” என்கிறார்கள்.
மின்னம்பலம் 29.09.2019