சனி, 30 மே, 2020

குவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020

அகரமுதல

வைகாசி 18, 2051 ஞாயிறு 31.05.2020

மாலை 6.30 மணி

மொழிபெயர்ப்பு என்னும் இலக்கியப் பயணம் – திருமதி கெளரி கிருபானந்தன்


 கூட்ட எண் 735 1284 9450              கடவுச்சொல்  kuvikam315

வியாழன், 28 மே, 2020

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்

அகரமுதல

வைகாசி 16, 2051 / 29.05.2020
மாலை 5.00

கூடலுரை – முனைவர் தனசுபா :

தமிழும் கணிதமும்

தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்!


வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!

த.தே.பே. தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051  / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை.செயபால், க. முருகன், முழுநிலவன் முதலான தலைமைச் செயற்குழுத் தோழர்களும், குடந்தை தீந்தமிழன், தமிழ்த்தேசியன், தஞ்சை இலெ. இராமசாமி, பூதலூர் தென்னவன், திருச்சி வே.க. இலக்குவன், மதுரை அருணா, சிவா, கதிர்நிலவன், கோவை இராசேந்திரன், ஓசூர் ப. செம்பரிதி, சுப்பிரமணியன், சென்னை வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், இளங்குமரன், சிதம்பரம் சிவா, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு, புதுச்சேரி இரா. வேல்சாமி, மகளிர் ஆயம் தோழர்கள் அருணா, மேரி முதலான தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்றனர்.
முன்னதாக, அண்மையில் மறைவுற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி செயல்பாட்டாளர் தோழர் மதியழகன், பொதுக்குழு தோழர் குபேரன் அவர்களின் தந்தை புலவர் ஆதிமூலம், குடந்தை தோழர் வளவன் அவர்களின் தாயார் திருவாட்டி கோ. அம்சவல்லி, தஞ்சை ஓவிய ஆசிரியர் இளங்கோ ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!
தீர்மானம் – 2
வெளிமாநிலத் தொழிலாளிகளை
நிலையாக வெளியேற்ற வேண்டும்
தீர்மானம் – 3
தமிழ்நாடு உரிமை பறிபோவதைத்
தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்க வேண்டும்!
தீர்மானம் – 4
அரசு மதுக் கடைகளை மூடுக!