செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

விவேகானந்தர் இல்ல குத்தகை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டிப்பு



சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் ​(ஐஸ் அவுஸ்).
சென்னை, ​​ பிப்.1: சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்துக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.​ இந்த இல்லம் வேறு பயன்பாட்டுக்கு தரப்படலாம் என்று "தினமணி'யில் 2008 ஏப்ரல் 22-ல் செய்தி வெளியானது.​ அதன் அடிப்படையில் அரசியல்,​​ ஆன்மிக,​​ சமூகத் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.​ இப்போது இந்த இட குத்தகையை ராமகிருஷ்ண மடத்துக்கே மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு கொடுத்துள்ளது.​ சென்னை காமராஜர் சாலையில் ​(கடற்கரைச் சாலை)​ சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லம் உள்ளது.​ தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்குப் பெற்று நிர்வகித்து வருகிறது.​ 1842-ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் ஆங்கிலேயர்களால் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டது.​ இதனால் இது "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது.​ அதன் பிறகு இந்தக் கட்டடத்தை சுவாமி விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார் வாங்கி "கெர்னான் கேசல்' என்று பெயரிட்டார்.​ 1897-ம் ஆண்டு சென்னை வந்த விவேகானந்தர் பிப்ரவரி 6 முதல் 14-ம் தேதி வரை 9 நாள்கள் இங்கு தங்கினார்.​ அப்போதுதான் அவர் புகழ்பெற்ற 6 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.​ 1897-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டடத்தில்தான் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை,​​ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கினார்.​ 1906 வரை 10 ஆண்டுகள் மடம் இங்குதான் இயங்கியது.​ மடம் இங்கு இயங்கியபோது ராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர்,​​ நிரஞ்சனானந்தர்,​​ திரிகுணாதீதானந்தர்,​​ அபேதானந்தர் ஆகியோர் வருகை தந்தனர்.​ இவர்கள் தவிர சகோதரி நிவேதிதாவும் இங்கு வருகை தந்துள்ளார்.​ 1963-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தக் கட்டடத்துக்கு "விவேகானந்தர் இல்லம்' என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.​ 1902 ஜூலை 4-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் மகா சமாதி அடைந்தார்.​ அதற்கு அடுத்த ஆண்டு 1903-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக இந்தக் கட்டடத்தில்தான் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.​ இன்று தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமியின் ஜெயந்தி விழா இங்குதான் தொடங்கியது.​ 1906-ம் ஆண்டு இந்த இல்லத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த அங்கிதம் வெங்கட ஜக்கையா ராவ் ஏலத்தில் எடுத்தார்.​ சில மாதங்கள் அங்கு வசித்தார்.​ அதன் பிறகு பல ஆண்டுகள் பூட்டப்பட்டு இருந்தது.​ 1917-ம் ஆண்டு ஜக்கையா ராவிடம் இருந்து ரூ.​ 79,944-க்கு இல்லத்தை ஆங்கில அரசு வாங்கி "மெரைன் மேன்சன்' என்று பெயரிட்டது.​ பிறகு அந்த இல்லத்தை சகோதரி சுப்புலட்சுமி எஎன்பவருக்கு ஆங்கில அரசு வாடகைக்கு விட்டது.​ அவர் அங்கு இளம் விதவைப் பெண்களுக்கான சேவை இல்லத்தையும்,​​ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.​ இங்குதான் அவர் சாரதா ஆஸ்ரமத்தையும் தொடங்கினார்.​ இடப்பற்றாக்குறை காரணமாக சாரதா ஆஸ்ரமம் வேறு இடத்துக்குச் சென்றதும் அருகில் இருந்த வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியுடன் இந்த இல்லம் இணைக்கப்பட்டது.​ 1941 முதல் 1993 வரை அங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி இயங்கியது.​ குத்தகைக்குவிட கோரிக்கை:​ சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவாற்றிவிட்டு தாயகம் திரும்பியதன் நூற்றாண்டு விழா 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.​ அந்த சமயத்தில் இந்த இல்லத்தை குத்தகைக்கு தருமாறு சென்னை ராமகிருஷ்ண மடம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.​ அதனை ஏற்று 27,546 சதுர அடி பரப்பளவு கொùண்ட இல்லத்தை 1997 டிசம்பர் 24-ம் தேதி,​​ ஆண்டுக்கு ரூ.​ 1,000 வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு ராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டது.​ அதன்பிறகு,​​ இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி அருகில் இருந்த 8 கிரவுண்ட் 1928 சதுர அடி இடத்தை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்கு கேட்டது.​ அதனை ஏற்று 90 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 1998 ஜூன் 10-ம் தேதி,​​ ​ சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.​ 2000-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.​ அதன் பிறகு ராமகிருஷ்ண மடம் அந்த இல்லத்தைப் புதுப்பித்து சுவாமி விவேகானந்தர் பற்றிய நிரந்தரக் கண்காட்சி கூடத்தை அமைத்தது.​ புதுப்பிக்கப்பட்ட இல்லத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
"தினமணி' செய்தி எதிரொலி:​ உலகத் தமிழ்ச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அமைக்க இருப்பதால் விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு ராமகிருஷ்ண மடத்துக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்பட்டது.​ இது பற்றி 2008 ஏப்ரல் மாதம் "தினமணி'யில் விரிவாக செய்தி வெளியானது.​ அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட ​ தலைவர்கள் விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயல்வதாக தமிழக அரசு மீது குற்றம்சாட்டினார்கள்.​ இது குறித்து 2008 ஏப்ரல் 24}ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.​ அதன் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,​​ ""விவேகானந்தர் இல்லத்தைத் தமிழக அரசு அபகரிக்க முயலவில்லை.​ அதனை இடிக்கவும் விரும்பவில்லை.​ அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.​ ஏதேதோ கதை கட்டி எங்களை சாமியார்களுடன் மோதவிடுகிறார்கள்'' என்றார்.​ அதன்பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.​ குத்தகைக் காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:​ 2010 ஜனவரி 28-ம் தேதியோடு விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலம் முடிந்தது.​ இந்நிலையில் இல்லத்தின் குத்தகைக் காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.​ தமிழக அரசின் முடிவை சென்னை ராமகிருஷ்ண மடம் வரவேற்றுள்ளது.​ இது குறித்து மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரிடம் கேட்டபோது,​​ அவர் கூறியதாவது:​ குத்தகைக் காலம் முடிவடைவதால் இல்லம் மீண்டும் கிடைக்குமா என்கிற கவலை எங்களுக்கு இருந்தது.​ அந்தக் கவலை முதல்வர் கருணாநிதி மூலம் நீங்கியுள்ளது.​ அதற்காக அவரை சில நாள்களில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன்.​ மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம் எங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்பட்டுள்ளது.​ இப்போது வேத காலம் முதல் சுவாமி விவேகானந்தர் காலம் வரையிலான நமது கலாசாரம் பற்றிய கண்காட்சி இடம்பெற்றுள்ளது.​ அடுத்த கட்டமாக மத்திய அரசு மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி பெற்று நமது பண்பாடு கலாசாரம் பற்றிய முழுமையான கண்காட்சியை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

இராமகிருட்டிணா மடம் பணக்கார மடம்தான். எனவே, இத்தகைய நேர்வுகளில் அங்காடி விலைக்குத்தான் குத்தகை விடப்பட வேண்டும். குறைந்த வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்பட்டுத் தமிழக வருவாய் சுரண்டப்பட இடம் தரக் கூடாது.சமற்கிருதத்தைவிடத் தமிழே தொன்மையானது;உயர்ந்தது; தமிழ்ப்பண்பாடே சிறந்தது;தமிழர் நாகரிகமே இந்திய நாகரிகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தது என முழங்கிய விவேகானந்தர் புகழ் ஓங்குக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:31:00 AM

பாராட்டுவோம். ஆனால் இவ்வாறு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காக இருந்தாலும் அவர்கள் மாநிலததில் தமிழ் அறிஞர்கள், திருமுறைப் புலவர்கள் பெயரில் நினைவகம் அல்லது ஆராய்ச்சியகம் வைக்க அவர்கள் மாநிலத்தில் இடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பது ஒன்றும் தவறல்ல. குமரியில் பெருமளவு நிலப்பரப்பு விவகோனந்தர் அமைப்பின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மால் (பாரதியின் பெயரிலான சாலை தவிர) (அம்மாநிலத்தவரால் நடத்தப்படும்) கல்கத்தா தமிழ்ச சங்கத்திற்குக் கூடத் தகுந்த இடம் வாங்க முடியவி்லை. உலகப் புலவர் திருவள்ளுவர் சிலை திறப்பு கூடத் தடைசெய்யப்பட்டுப் பேரம் பேசி மாற்றுச் சிலை தரப்பின் அடிப்படையில்தான் திறந்து வைக்கப்ப்ட்டது. மேலும், இராமகிருட்டிணா மடம் பணக்கார மடம்தான். எனவே, இத்தகைய நேர்வுகளில் அங்காடி விலைக்குத்தான் குத்தகை விடப்பட வேண்டும். குறைந்த வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்பட்டுத் தமிழக வருவாய் சுரண்டப்பட இடம் தரக் கூடாது.சமற்கிருதத்தைவிடத் தமிழே தொன்மையானது;உயர்ந்தது; தமிழ்ப்பண்பாடே சிறந்தது;தமிழர் நாகரிகமே இந்திய நாகரிகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தது என முழங்கிய விவேகானந்தர் பு

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
விவேகானந்தர் இல்லம் என்பது கட்டடத்தின் பெயர். அந்தக் கட்டடத்தின் பெயரை மாற்றினால் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் உள்ளது. குத்தகை என்பது வணிகம் சார்ந்தது. இராமகிருட்டிணா மடம் இயஙகுவதற்குத் தடை விதித்தாலும எதிர்ப்பதில் நியாயம் உள்ளது. பணக்கார மடம் தனது குத்தகை முடிந்ததும் நீட்டிக்கக் கேட்பதும் ஏற்கப்படுவதும் மறுக்கப்படுவதும் வணிகம் சார்ந்தது. இதில் தலையிட்டு உணர்ச்சி வயப்படட்டு முன்பு தினமணி குத்தகை முடிவை எதிர்ததது மிகப் பெரும் தவறு. இது போன்ற தமிழ்த்தேச நலனுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தவும் பிற மாநிலத்தவர்க்காக வாதிடவும் இனியேனும் தினமணி முயலாதிருப்பதாக. குத்தகைக்காரர்களுக்கும் உடைமையாளர்களுக்கும் இடையே உள்ள தரகர்கள் போல் தினமணி புரியாமல் அப்பொழுது நடந்துகொண்டது மிகப் பெரும் தவறு.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:53:00 AM
+++++++++++++++++++++++++++++++++++++

நண்பர்கள் என் கருத்ததுகளை முழுமையாகப்படிக்காமல் ஏதோ குறிப்பிட்டுள்ளார்கள். விவேகானந்த அடிகள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதால்தான் அவரை வாழ்த்தியும் குறிப்பு எழுதியுள்ளேன். ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்துவோருக்குத் தமிழ் நாட்டில் சலுகை காட்ட வேண்டும் என்று சொல்வது எந்த அளவில் நியாயம்? மடததிற்கும் அரசிற்கும் இடையே உள்ள குத்தகையை விவகோனந்த அடிகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாமே. வரி ஏய்பிற்காகத் தாங்கள் இந்துக்கள் அல்ல; சிறுபான்மைச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய இராமகிருட்டிணா மடத்திற்குச் சலுகை காட்ட வேண்டிய தேவை யில்லை என்பதுதான் நடுநிலையோர் கருத்தாக இருக்க முடியும். அதே நேரம் அடிகளைப் பற்றி எழுதுவோர் அவர் வழியில் விழிமின் எழுமின் என வேண்டுகிறேன். அடிகள் புகழ் ஓங்குக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 7:20:00 PM

Tamils have broad mind than any one. You cannot sing devaram in Maatti meet but we hear abang in music fetival in Chennai. Tamil are proud to say they can sing abang, Maratti fellows give damm about devaram or an tamil songs. Vivekanada tried to teach the broader mind of Tamils to all so let us have his glory preserved in Chennai

By Partha
2/2/2010 5:40:00 PM

"CHANGE"....What happened to Mr.I.Thiruvalluvan? There are only very few individuals who have CROSSED the BARRIER of Region,Religion,Language and even NATION! Swamy Vivekaananda is One such Gifted Individual.Indians,especially Tamilians should be proud that TAMIL Nadu and Tamilian,especially SETHUPATHY Maharaja have done yeoman service to the WORLD RENOWENED SAGE. Actually the Government of Tamil Nadu,instead of giving iot for lease ,should DECLARE this MONUMENT as the MEMORIAL dedicated to the one of the GREAT SON of INDIA,and make it as a PILGRIMAGE for the LOVERS of HUMANITY!...Please Contact us in

By "Five Men Army"("Vaanchi Naathan,Rajaguru,Sugadev,Bagad Singh,Nethaji")
2/2/2010 1:58:00 PM

I strongly condemn Mr. Thiruvalluvan. it should not be told that as " This building ". it has got own significance. This will give the memory of Swami Vivekananda"s stay to the followers of him. He gave the stand to India in the World Gallery. This continues till date. We tamilians just give the shape to the language which is not visible. We spend the crores of the amount for it. You should see the India as whole nation. the ideology of Swami Vivekananda, Sri Ramakrishna, Mother Sarada Devi's teachings make every one spiritual and to lead a good, peaceful, happy life. YOu should have broader outlook

By Kanagarajan
2/2/2010 6:12:00 AM


1 கருத்து: