சென்னை, ஜன. 2: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக ஹரீஷ் எல். மேத்தா (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பர்னாலா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மேத்தா 3 ஆண்டுகாலம் வரை சிண்டிகேட் உறுப்பினராகச் செயல்படுவார். தொழிலதிபரான இவர் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியின் செயலாளராவார். மேலும் சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆளுமைக்குழு உறுப்பினராகவும் இப்போது செயல்பட்டு வருகிறார் மேத்தா.
கருத்துக்கள்
தலைப்பைப் பாரத்துவிட்டுக் கவிஞர் மு.மேத்தாவிற்குத்தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எண்ணி மகிழ்ந்தேன். ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
2/3/2010 3:01:00 AM