செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டவர்களை நேரில் பார்த்த ஊடகவியலாளர் சிறிலங்காவால் கைது

பதிந்தவர்_கனி on February 1, 2010
பிரிவு: செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது பிரிவினர் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதனைஅடுத்து, குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் அவரை கடந்த வெள்ளியன்று இரவு கைது செய்துள்ளனர். அரசதலைவர் மகிந்தவின் ஆட்சியை இராணுவ புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்க திட்டமிட்ட பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக கடமையாற்றும் பொறுப்பு பொன்சேகா தரப்பினரால் இந்த ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் 58 பிரிவு படையினரிடம் வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன், நடேசன் அவர்களின் மனைவி உட்பட பலர் படுகோலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர் நேரில் கண்டதாகவும் சரணடைவதற்கு வரும் விடுதலை புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று பிரிவின் தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொலைபேசியில் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 36 times, 36 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக