sarath ponseka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sarath ponseka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மே, 2012

“சரத் பொன்சேகா ஒரு திறந்தவெளிக் கைதியே” – சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா

“சரத் பொன்சேகா ஒரு திறந்தவெளிக் கைதியே” – சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா

sarath_n_silva
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒரு திறந்தவெளிக் கைதியே என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள விடுதலை பொதுமன்னிப்பின் அடிப்படையிலானது அல்ல.
அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளி என்று கருதப்பட்டு அளிக்கப்பட்ட தண்டனை, அதனால் ஏற்படும் தகுதி நீக்கம் ஆகிய அனைத்தும் நீக்கப்படும்.
ஆனால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழான பொதுமன்னிப்பு அல்ல.
அரசியலமைப்பின் 34-1 (டி) வது பிரிவின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ சிறிலங்கா அதிபர் நிறுத்தி வைக்கலாம்.
இதன் அடிப்படையில் வெள்ளைக்கொடி வழக்கில், உயர்நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய தண்டனையை சிறிலங்கா அதிபர் முற்றாக நிறுத்தி வைத்துள்ளார்.
சரத் பொன்சேகா குற்றவாளி என்று, நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு காலச் சிறைத் தண்டனையை சிறிலங்கா அதிபர் நிறுத்தி வைத்துள்ளாரே தவிர, அவர் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு அப்படியே உள்ளது.
இந்த விடயத்தில் அவருக்கு மன்னிப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
அதேவேளை, சிறிலங்கா இராணுவத்துக்கு கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விவகாரத்தில் அவர் இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலான தண்டனையின் ஒரு பகுதியைத் தான் சிறிலங்கா அதிபர் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த இரு வழக்குகளிலும் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இராணுவ நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின் காரணமாகவே சரத் பொன்சேகா குடியியல் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அந்த வழக்கில் இராணுவ நீதிமன்றம் அவருக்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய சலுகையை வழங்க முடியாது என்று சட்டமாஅதிபர் திணைக்களம் கருத்துக் கூறியதாக அறிய முடிகிறது.
இருந்தபோதிலும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தண்டனைக் காலத்தை சிறிலங்கா அதிபர் குறைத்துள்ளார்.
அத்துடன் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டுள்ள போதும், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குடியியல் உரிமைகள் மீள வழங்கப்படவில்லை.
இதன் மூலம் அவர் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
என்றாலும், சரத் பொன்சேகாவுக்கு ஏனைய அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமை உள்ளிட்ட உரிமை உள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா குற்றவாளி எனத் தீர்ப்பு: 36 மாதம் சிறைத்தண்டனை


வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பு: 
36 மாதம் சிறைத்தண்டனை

First Published : 18 Nov 2011 02:06:57 PM IST


கொழும்பு, நவ.18: வெள்ளைக் கொடி வழக்கில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.நீதிபதி தீபாலி விஜேசுந்திர தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தது.இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபட்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பெஞ்ச், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.இதற்கு முன்னர் ராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

சனி, 1 ஜனவரி, 2011

no new year under rajapakshe regime: இராசபட்ச ஆட்சியில் இலங்கைக்குப் புத்தாண்டே கிடையாது: பொன்சேகா

இராசபக்சே ஆட்சியில் இருக்கும் வரை  இலங்கையில் புத்தாண்டே கிடையாது என்பதுபோல் சிங்களரின் ஆட்சியில்  இருக்கும் வரை இலங்கைத் தமிழர்களுக்கும் புத்தாண்டே கிடையாது. தமிழ் ஈழம் மலரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டாகும். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்



ராஜபட்ச ஆட்சியில் இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது: பொன்சேகா

First Published : 01 Jan 2011 04:44:36 PM IST

Last Updated : 01 Jan 2011 04:50:55 PM IST

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் இருந்து அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published : 01 Jan 2011 04:44:36 PM IST

Last Updated : 01 Jan 2011 04:50:55 PM IST

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் இருந்து அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 30 அக்டோபர், 2010

ராஜபட்ச வெற்றியை எதிர்க்கும் பொன்சேகாவின் மனு தள்ளுபடி


கொழும்பு, அக். 29: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.  இலங்கையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபட்ச அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால், வாக்குப் பதிவில் முறைகேடுகள் செய்து அவர் வெற்றி பெற்று விட்டதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதனை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேகா சிறையில் உள்ளார். அவரது ராணுவ அந்தஸ்து, பதக்கங்கள் ஆகியவையும் பறிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

பொன்சேகா வெற்றி பெற்றிருந்து பக்சே வழக்கு தொடுத்திருந்தாலும் இதே நிலைதான் இருந்திருக்கும். கொடுங்கோலர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாளட்டும்! கடவுள் அப்படித்தான் தண்டிப்பார்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

சனி, 16 அக்டோபர், 2010

எதிர்க்கட்சிகள் விடுவிக்க வலியுறுத்துவதால் சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிப்பு: ராஜபக்சே முடிவு
கொழும்பு, அக். 14-
 
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 30 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
 
சரத் பொன்சேகாவை விடுவிக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக புத்த மதக்குருக்களும் கூறியுள்ளனர். இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு சிங்களர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.
 
இது இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன் சேகாவை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு உருவாகி வருகிறது.
 
இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த ராஜபக்சே ஆலோ சித்து வருகிறார். சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குடியுரிமையைப் பறித்தால், அடுத்து வரும் 7 ஆண்டுகளுக்கு பொன்சேகாவால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
 
அப்படி செய்வதால் அரசியலில் தனக்கு எதிரியாக திகழும் பொன்சேகாவை ஒழித்து விட முடியும் என்று நினைக்கிறார். மேலும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரும் பிரச்சி னையை திசை திருப்பவும் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
 
ஜனாதிபதியாக விரைவில் பதவி பிரமாணம் எடுக்க ராஜபக்சே ஏற்பாடு செய்துள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை பலகோடி ரூபாய் செலவழித்து கொண்டாட அவர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் எதிர்த்து கேள்வி கேட்பாரே இல்லாததால் ராஜபக்சே இப்படி ஆணவத்துடன் ஆட்டம் போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
 
கருத்து 
Saturday, October 16,2010 02:24 PM,
Ilakkuvanar Thiruvalluvan said:
இப்படிப்பட்ட தவறுகளையும் குற்றங்களையும் பக்சே செய்வது நல்லது. வினை விதைத்த அவ்ன வினை அறுக்கப்போகிறான். அதனை இவை விரைவு படுத்தும். முன்பு வினை விதைத்த பொன்சேகோ இப்பொழுது வினை அறுக்கின்றான். தமிழினப் படுகொலையாளிகள் விரைவில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழியட்டும். மனித நேயர்கள் பெருகட்டும். தமிழ் ஈழம் மலரட்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, October 14,2010 04:30 PM, karuna said:
ராஜபக்ச sayvathu சரி tamil ஹிந்து payankaravathikai alithavar
Thursday, October 14,2010 11:31 AM, இரா. ஜா. செ said:
இந்த மாதிரி கேடுகெட்ட செயல்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே நடக்கும். குடியுரிமை பறிப்பு, தேர்தலில் போட்டியிட தடை, ஒட்டு போடும் உரிமை பறிப்பு என்பதெல்லாம் உலகமே இந்தியாவிடம் கற்றுக்கொண்ட பாடம். பால் தாக்கரே தான் முதல் பலி இதில். ஐந்து வருடம் அவருக்கு ஒட்டு போட தடை விதித்து தங்கள் ஆட்சியை மராட்டியத்தில் தக்கவைத்துக்கொண்டது காங்கிரஸ். அதை பின்பற்றுகிறான் ராஜ பக்ஷே, இந்தியா வாழ்க
On Thursday, October 14,2010 02:48 PM, நடுநிலையாளன் said :
பால் தாக்கரேவின் ஓட்டுரிமையை பறித்தல்தால் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. பால் தாக்கரேவும் நம் ஊர் மருத்துவர் ஐயா டாக்டர் ராமதாசும் ஒரே ஜாதி.
On Thursday, October 14,2010 07:52 PM, Maniyan said :
மருத்துவர் ஐயா பற்றி என்ன தெரியும் உங்களுக்கு
On Thursday, October 14,2010 10:53 PM, நடுநிலையாளன் said :
எனக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மருத்துவர் ஐயாவைப்பற்றி மிக நன்றாக தெரியும்.
On Thursday, October 14,2010 11:47 PM, saravanan said :
ஸ்டாப் யுவர் கம்மண்ட்ஸ் ராமதாஸ்
On Thursday, October 14,2010 11:55 PM, balaji said :
நீ ஒரு அர குற
 

திங்கள், 4 அக்டோபர், 2010

சிறைக் கொட்டடியில் பொன்சேகா!

கொழும்பு, அக்.3: இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்துப்  போரிட்டு இலங்கை அரசுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்த ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா (59) இப்போது கொழும்பு நகரில் வெலிக்கடை சிறையில் சாதாரணக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.மருமகன் பெயரிலான நிறுவனத்திடமிருந்து இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்தததாகவும் அதில் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற வகையில் அதிபர் மகிந்த ராஜபட்ச அவருடைய தண்டனையை இரண்டரை ஆண்டுகளாகக் குறைத்து கருணை காட்டியிருக்கிறார்.கடந்த வியாழக்கிழமை இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததும் வெலிக்கடை சிறைக்குக் கூட்டிவந்து சாதாரணக் கைதிகளுடன் அவரையும் தனி அறையில் அடைத்துவிட்டனர். சிறையில் அவருக்கு 0/22032 என்ற எண் தரப்பட்டிருக்கிறது. அதுவரை இலங்கையின் தேசிய உடை அணிந்திருந்த அவருக்கு அவற்றைக் களையச் செய்தனர். ஏனைய கைதிகளைப் போல அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத  பனியன் போன்ற சட்டையையும் பொன்சேகா அணிந்துகொண்டார். சிமென்ட் தரையில் சாதாரண விரிப்பு ஒன்றை விரித்து அதில் படுத்து தூங்கினார். போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு தலையணையும் தரப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஆழ்ந்த  தூக்கத்திலிருந்த அவரையும் பிற கைதிகளைப் போல வார்டன் எழுப்பிவிட்டார். அவருடைய அறையிலேயே கழிப்பறை இருந்தும் அதில் தண்ணீர் வடியாமல் துர்நாற்றத்துடன் இருந்தது. எனவே வெளியில் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கு கிணற்றிலிருந்து தண்ணீரை அவரே இழுத்து இரும்பு பக்கெட்டில் நிரப்பி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவுதான் வெலிக்கடை சிறையின் எஸ் வார்டில் அவரை அடைத்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையே எழுப்பிவிட்டனர். இதனால் சற்று சோர்வாகவே அவர் இருந்தார்.பிறகு இரும்புக் குவளையையும் தட்டையும் கொடுத்து மற்ற கைதிகளுடன் வரிசையில் நின்று தேத் தண்ணீரையும் சிற்றுண்டியையும் வாங்கிச் சாப்பிடுமாறு கூறினர்.பிறகு சிறை டாக்டர் அவரைப் பரிசோதித்தார். சிறையில் இடும் வேலையைச்  செய்ய அவருக்கு உடல் வலுவுடன் இருக்கிறதா என்று பார்த்து அவர் உறுதி செய்தார். பிறகு சிறை அதிகாரிகள் அவரிடம் என்னென்ன வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறினர்.பிறகு சிறை தையல்காரர் வந்து அவருடைய மார்பளவு, இடுப்பளவு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டார். சிறையில் முதலில் தந்திருந்த உடை தொளதொளவென்று இருந்தது.பிறகு மதிய சாப்பாட்டையும் அதே போல இரும்புத் தட்டு டம்ளருடன் வரிசையில் வந்து வாங்கிக்கொண்டார். அரிசிச் சாதம், பூசணிக்காய் கூட்டு,வேகவைத்த பருப்பு, ஊறுகாய், தேங்காய் துருவலுடன் கூடிய கீரைக்கறி, கொஞ்சம் மீன், கிரேவி என்று எளிதான உணவு தரப்பட்டது. பிறகு உண்ட மயக்கம் தீர பகல் 12 மணி வரையில் சிறை அறையில் போய் ஓய்வெடுக்கக் கூறினர். பிறகு மீண்டும் வெளியே அழைத்து சிறையிலேயே வேறு சில வேலைகளைச் செய்யச் சொல்லி அவரை வேலை வாங்கினர். இரவு சாப்பாடு கொடுத்துவிட்டு 7 மணிக்கெல்லாம் அறையின் விளக்கை அணைத்துவிட்டு தூங்கச் சொன்னார்கள். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வார்டன் வந்து எழுப்பும்வரை அவர் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்க வாய்ப்பாக நீண்ட இரவுகள் அவருக்கு வாய்த்திருக்கின்றன.கடந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதல்கள் முற்றுப் பெற்றபோது அதிபர் மகிந்த ராஜபட்சவைவிட நாட்டின் கதாநாயகனாக, கடவுளாகக் கருதப்பட்டபொன்சேகா, தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டதால் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார். அரசியலிலேயே ஊறியவர்களைப் பதவிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அவர்களைப் போலவே குறுக்கு வழியில் சிந்திப்பதுடன் துணிந்து செயல்படவும் வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தலைமைத் தளபதியாக இருந்து என்ன பயன், சாதாரண ஊழல் வழக்கிலேயே சிக்க வைத்து உள்ளே தள்ளிவிட்டார்களே என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கருத்துக்கள்

பக்சேக்களும் கொட்டடியில் அடைக்கப்படும் நாள் விரைவில் வருவதாக! 
எதிர்பார்ப்புடன் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2010 4:45:00 AM
 

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பத்திரிகை ஆசிரியர் கொலையில் பொன்சேகாவுக்கு தொடர்பு: அமைச்சர்


கொழும்பு, செப்.24- இலங்கையில் வெளியாகும் "சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், மேர்வின் சில்வா நாடாளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், உபாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகிய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் மேர்வின் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்து பக்சே யார் யார் கொலைகளில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதைப் பொன்சேகா தரப்பு தெரிவிக்கட்டும். அடுத்துப் போர்க் குற்றங்களில் இருவர் பங்களிப்பையும் மாறி மாறி வெளிப்படுத்தட்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும். இப்பொழுதேனும் அறம் வெல்லட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 6:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 6 ஜூலை, 2010

பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்



கொழும்பு, ஜூலை 6- சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது." என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அதுதான் தண்டனை என்றால் உடன், பக்சே முதலான அனைத்துச் சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கொலைவெறியில் தாண்டவமாடிய படைவீரர்களையும் உறுதுணை புரிந்த பன்னாட்டு அதிகாரிகள் தலைவர்களையும் புத்தர் கொள்கையைக் கொன்று புதைத்து வெறியாட்டம் ஆடும் போலிச்சாமியார்களையும் புதைக்க வேண்டும். அனைவரையும் தண்டிக்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 4:03:00 PM
Buddha if he is alive he will ashamed about these Buddhists scoundrels of Lanka.
By Theravada
7/6/2010 3:39:00 PM
பொன்சேகாவிற்கு உயிருடன் புதைக்க மானம் தேவை என்றால்....சிங்கள நாய்களுக்கும்,அப்பாவி தமிழர்களை கொல்ல உதவி செய்தி " அத்தனை" பன்றிகளுக்கும் ...உயிருடன் கொல்லி தானடா போடவேண்டும்...அதுவும் சிக்கிரமே ...நடக்கும்
By Selva
7/6/2010 3:25:00 PM
அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மிக பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே மினிஸ்டர் லால்பகதூர் சாஸ்திரி தன் பதவியை துறந்தார் . அது போல் லட்சகணக்கான தமிழர்கள் சாகும் போது, முதல்வராக இருந்த கலைஞரை தார்மீக பொறுப்பு ஏற்று , பதவியை ராஜினாமா செய்ய சொலுங்கள் அம்மா அவர்களே .
By ....
7/6/2010 3:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 19 மார்ச், 2010

பொன்சேகாவை எளிதில் மன்னிக்க மாட்டேன்: ராஜபட்ச



கோலாலம்பூர், மார்ச் 18: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டவட்டமாகக் கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சரத் பொன்சேகா.தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனே அவர் கைது செய்யப்பட்டார். ராணுவப் பணியில் இருக்கும்போதே அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், பொன்சேகாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ராஜபட்ச. அவரை முட்டாள் என்றும் வர்ணித்துள்ளார். "கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில், இந்த இடத்தில் வலது பக்கம் அவர் அமர்ந்திருந்தார். அப்போது நான் அவரிடம், அதிபர் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்டேன். இல்லை. அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெறுவற்கு கடைசி நாள் கூட அவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக என்னிடம் சொல்லவில்லை' என்று ஆதங்கப்பட்டார் ராஜபட்ச.சிங்கப்பூர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.அரசியல் வேறு, ராணுவம் வேறு என்று நான் பொன்சேகாவுக்கு அறிவுரை கூறினேன். ராணுவத்தில் உங்கள் உத்தரவை அப்படியே ஏற்றுச் செயல்படுவார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல. நீங்கள் ஒரு உத்தரவைப் போட்டால் அவர்கள் வேறொரு வகையில் செயல்படுவார்கள் என்று கூறினேன். நீங்கள் என்ன முடிவு செய்திருந்தாலும் சரி. ஆனால் அரசியல் விளையாட்டு எனக்கு அத்துபடி. எதிரி யாராக இருந்தாலும் இந்த விளையாட்டில் (தேர்தல்) வெற்றி பெறப் போவது நான் தான் என்பதை அவருக்குத் தெளிவாகக் கூறினேன் என்றார் ராஜபட்ச.ஓய்வு பெறுவதற்கு பொன்சேகாவுக்கு அனுமதி கொடுக்காமல், அவர் தேர்தலில் போட்டியிடுவதை என்னால் தடுத்திருக்க முடியும். ஏனெனில் நான் அனுமதி கொடுக்கும் வரை அவரால் ஓய்வு பெற முடியாது. வேட்புமனு தாக்கல் முடியும் வரை அவரது ஓய்வு விண்ணப்பத்தை நிறுத்தி வைத்திருக்க முடியும். பொன்சேகாவை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது. அவருக்கு மன்னிப்பு வழங்கினால் ராணுவ ஒழுக்க நெறி என்னாவது?. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய விதி. அதை நான் மாற்றி அமைக்க முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலும் பிரிட்டிஷாரின் சட்டங்கள்தான் இன்னும் நடைமுறையில் உள்ளன என்றார்.ராணுவ நீதிமன்ற விசாரணையில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பொன்சேகாவுக்கு மன்னிப்பு கொடுத்தால் மற்றவர்கள் கேள்வி கேட்கமாட்டார்களா என்றார் அவர்.சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் ராஜபட்ச கூறினார்.
கருத்துக்கள்

நாளைக்கு உமக்கும் இந்த நிலை வரும். அப்பொழுது நீர் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் சரி. ஆனால், பொன்சேகா முட்டாள்தான். கொலைகாரக் கூட்டணியின் மூளையான வஞ்சக இந்தியாவின் உதவியால் பெற்ற வெற்றியைத் தன் வெற்றி என எண்ணியதும் பேரினப் படுகொலை முதலான வஞ்சகச் செயல் திட்டங்கள் வெளிவராமல் இருக்க இராசபக்சேவே வெற்றி பெற்றதுபோல் காட்ட இந்தியம் உதவும் என எண்ணாமலும் தான் வெற்றி வாகை சூடுவோம் எனக் கனவு கண்டதால் சேகா முட்டாள்தான். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அரசியல் யுத்தத்தை எதிர்கொள்ள தயார்!​​: சரத் பொன்சேகா



கொழும்பு, ​​ பிப்.8: எனக்கு எதிரான அரசியல் யுத்தத்தை சந்திக்க தயாராக உள்ளதாக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.​ ​​ அண்மையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள நன்றி அறிவிப்பு வாசகத்தில் இவை இடம்பெற்றுள்ளன.​ ​​ மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:​ என் மீதான அரசியல் யுத்தம்,​​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ​போன்றதாகும்.​ புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி அவ்வளவு எளிதாக ​கிடைத்திடவில்லை.​ ​ அதைபோலவே எனக்கு எதிரான அரசியல் யுத்தமும் ​அவ்வளவு எளிதாக முடிந்து விடாது என கருதுகிறேன்.​ இத்தகைய யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.​ ​​ ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததாலேயே என் மீது நெருக்குதல்கள் தொடர்கின்றன.​ எனது சகாக்களும்,​​ ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ இருந்தாலும் இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சபோவதில்லை.​ ​ இலங்கையில் ஜனநாயகமும்,​​ நீதியும் கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

சரிதான்.இன்று பொன்சேகாவிற்கு ஏற்படும்அழிவு நாளை பக்சேவிற்கும் காத்திருக்கிறது.இவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் படையிலும் பிளவை ஏற்படுத்தி அவர்களிடையேயும் அழிவை உண்டாக்கும். ஆனால், பின்னணியில் இயக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கப் போவது யார்? திருந்தாப் பிறவிகளை வருந்தச செய்வது யார்? பேரினப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர்களையும் அவற்றுக்கு உதவி செய்தவர்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் வீண்தத்துவத்தை வறட்டுத்தனமாகக் கத்திக் கொ்ணடிருந்தவர்களையும் தண்டிப்பது யாரோ? பேரழிவுகளை உருவாக்கியவர்கள் குடும்பத்தினருடன் சிறு அழிவையாவது சந்திப்பதுதானே முறை எனக் கருதும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:06:00 AM

அரசியல்வாதிகளிடம் நன்கு பாடம் படித்துள்ளார். எனவேதான் நள்ளிரவில் கைது செய்துள்ளார். ஆனால், பொன்சேகா ஐயோ கொல்றாங்களே கொள்றாங்களே எனக் கத்தி ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நடத்த வேண்டும் எனப் பாடம் படிக்கவில்லை போலும். நெருநல் ஒருவன் இன்றில்லை என்றால் நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்பதை மட்டும் குறிப்பதில்லை. நேற்றுப்பதவியில் இரு்நதவன் இன்றைக்கு அப்பதவியில் இல்லை என்பது போன்ற நிலையாமையைக் குறிக்கும் என விளக்கியுள்ளார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். இதற்கு மற்றோர் எடுத்துக்காட்டே ஆர்ப்பாட்ட அழிவுகார சேகோ சந்திக்கும் இவ்வவலங்கள். பக்சே வாழ்விலும் இது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. தற்போதைய நிலைப்பாடு கண்டு பின்னணியில் உள்ளோர் பெருமை கொள்வதிலும் நிலையாமை உணர்ந்து இனியேனும் திருந்தினால் அவர்களுக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:05:00 AM

..NOW THE WIND IS IN SL TAMILS SIDE..WHO HAVE REJECTED THE RECENT PRESIDENTIAL ELECTION BY 70% AND ANOTHER 30% VOTED FOR OPPOSITION CANDIDATE....SO SO SL SINHALA MODAYA ARMY WILL SOON SPLIT.THIS IS A GREAT VICTORY FOR TAMILS....WITH A WEAK SINHALA ARMY SINHALA GOVT.IS POWERLESS...WHAT NEXT BLOOD BATH IN SINHALA SRI LANKA....FONSEKA HAS 40 YEARS EXPERIENCE IN THE ARMY...JOKER RAJAPAKSE HAS GOT ARMY SECURITY BECAUSE OF CONSTITUTION...SINHALA PUBLIC IS DIVIDED,,SINHALA MILITARY IS DIVIDED....EVEN SINHALEASE HATE INDIA NOW..HE..HE.HE DIRTY ,POVERTY INDIA WILL LOOSE ITS KOVANAM SOON....TO DAY SOME SINHALA MINISTERS ARE RUSHING TO GENEVE TO BEG THE HGH COMMISSIONER FOR HUMAN RIGHTS WHO IS A TAMIL...ALSO EX.WAR CRIME TRIBULA JUDGE...HE..HE..HE WAIT FOT FIRE WORKS

By KOOPU
2/9/2010 1:30:00 AM

ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது செய்தித்தொடர்பு உதவியாளர் சேனகா டி சில்வாவும் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவ காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இராணுவ பேச்சாளர் ப்ரசாத் சமரசிங்கே இதை உறுதிப்படுத்தியுள்ளார்.இருவரையும் இராணுவ காவற்துறை கைது செய்து கொண்டு செல்வதை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களின் கேமரா மெமரி சிப்களை இராணுவத்தினர் பறித்துச்சென்றுள்ளனர்.சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளிக்கத் தான் தயார் என்று இன்று சண்டேலீடர் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது பொன்சேகா கூறியிருந்தார். போர்க்குற்றங்களில் தாம் ஈடுபடவில்லை என்று சொல்வதற்காக மகிந்த சமரசிங்க ஜெனீவா சென்றிருக்கும் நிலையில் சரத் இவ்வாறான ஒரு பேட்டியை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய (பல நாய் பிரிவுகள்) புலனாய்வு பிரிவான றோவின் ஆலோசனையின் பேரிலேயே மகிந்தவால் சரத் கைதுசெய்யப்பட்டுள்தாக சிங்கள வார இதழ் தெரிவிக்கிறது

By eelavan
2/9/2010 1:16:00 AM

..HE..HE..HE RAJAPKSE WAS DRAGGED FROM HIS SEAT TO THE MILITARY JEEP...HE..HE..HE REMEMBER HOW THIS LIVING CORPSE WAS DRAGGED BY POLICE FEW YEARS AGO WHEN JAYALALITHA WAS IN POWER..HOW THIS LIVING CORPSE CRIED..WHILE HIS VESTI WAS LOOSING FROM HIS BODY....HE DESRVED THIS..WHAT IS NEXT..INDIA..BY HOOK OR CROOK INSTALLED A THUG,ROWDY RAJAPAKSE BY A FRAUD ELECTION...NOW EVIDENCE ARE BEING COMING DAILY HOW THIS ROWDY GOT 1.8 MILLION VOTES BY RIGGING.....SINHALESEA ARE TASTING THEIR OWN MEDICINE...WHAT NEXT...POVERTY DIRTY INDIA HAS PROMISED MLITARY INVASION IN THE CASE OF ANY MILITARY COUP...WHAT CHINA WILL DO..WHAT US WILL DO..HE..HE..HE SL TAMIL ISSUE NOW MAKE MANY TWIST..SOON INDIAN LEADERS WILL EAT THEIR OWN SHIT..SL TAMILS SUPPORT GREAT CHINA....NOT TO CARDBORAD SOOOPER POWER INDIA...

By KOOPU
2/9/2010 1:11:00 AM

Like this time will come and that culprits Rajabaksa also should punished and we are waiting such times It will happen as many innocent peoples souls will speak one day - sure

By velan
2/9/2010 12:56:00 AM

முன்னாள் இராணுவத் தளபதி தற்பொழுது இராணுவச் சிறையில் !!!!!!!!!!!!!

By Yoga
2/9/2010 12:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *