புதன், 16 அக்டோபர், 2013

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலைத் தானம் செய்த மனைவி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82757820131016001605.jpg

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலை த் தானம் செய்த மனைவி
மதுரை : கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, மாரடைப்பால் இறந்த கணவரின் கண்களை, திண்டுக்கல் மருத்துவமனையிலும், உடலை பெங்களூரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தானம் செய்தார் மனைவி.

பெங்களூர் சாமந்த்நகரை ச் சேர்ந்தவர் உமேசுகுமார் ராவ், 53. விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இவரது மனைவி சிரீலதா, ஆசிரியை. குடும்பத்துடன் நேற்று முன்தினம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு, உமேஷ் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

அழுது புரண்ட குடும்பத்தினர், அந்த இக்கட்டான நேரத்திலும், இறந்தவரின் கண்களை தானம் செய்ய விரும்பினர். இறந்த, 6:00 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான வசதியுள்ள மருத்துவமனை குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு, திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக இறந்த உடலுடன், திண்டுக்கல் சென்றனர். அங்கு அவகாச நேரத்திற்கு, அரைமணி நேரத்திற்கு முன், அவரது கண்கள் தானம் பெறப்பட்டன. இதன்பின் உடலுடன் பெங்களூரு சென்றனர். உடலை பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ததாக, அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.
Click Here

2 கருத்துகள்:

  1. அன்பினிய அய்யா, வணக்கம்.
    சும்மா கொலை-கொள்ளை பாலியல் வன்கொடுமை என எதிர்க்குணச் செய்திகளாகவே வெளியிடும் பத்திரிகைச் செய்திகளை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இதுபோலும் நன்மனச் செய்திகளை எடுத்துக் காட்டுவதன் மூலமாகவே இளைஞர்களையும், மாணவர்களையும் நல்வழிப்படுத்த முடியும். தங்களுக்கு நன்றியும், தங்கள் செய்தியை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர் அரசெழிலற்கு நன்றியும் தெரிவித்து எனது வலைப்பக்கத்தில் எடுத்து எழுதியிருக்கிறேன் . தங்களுக்கு நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.
    வணக்கம். தங்கள், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.
    http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தங்கள் நல்லுணர்வும் தொண்டும் தொடர வாழ்த்துகள். அறிமுகப்படுத்திய அரசெழிலன் அவர்களுக்கும் நன்றி.
      அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

      நீக்கு