வெள்ளி, 18 அக்டோபர், 2013

தரைத்துப்புரவுக் கருவி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82903420131018023259.jpg
தரையை சுத்தப்படுத்தும் தானியங்கி கருவி!
மனித உதவியின்றி, தரையை, தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் கருவியை க் கண்டுபிடித்துள்ள, தீபக்: நான், மதுரையில் உள்ள, வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவன். இந்த நவீன உலகிலும், வீடு, அலுவலகம், பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களின் தரையை சுத்தப்படுத்த, பல புதிய கருவிகள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை மனிதர்கள் தள்ளிச் சென்றே சுத்தப்படுத்த முடியும்.
எனவே, முழுவதும் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய தரையை சுத்தப்படுத்தும், 'ஆட்டோமேடிக் புளோர் கிளீனிங் மிஷின்' கண்டுபிடித்தேன். 12 வோல்ட் பேட்டரியால் இயங்கக் கூடிய இந்த தானியங்கி இயந்திரத்தை, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலமும் கட்டுப்படுத்தலாம்.
இக்கருவியின் அடிபாகத்தில், தரையை சுத்தப் படுத்தும், 'பிரஷ்'ஷும் அதற்கு அடியில், காற்றாடியும் அமைக்கப்பட்டுள்ளது. கருவியின் சேமிப்பு கலனில், சோப் மற்றும் நீர் கலந்த கலவையை ஊற்றிக் கொள்ளலாம். கருவி இயங்கத் துவங்கியதும், சேமிப்பு கலனில் உள்ள சோப் மற்றும் நீர் கலந்த கலவை பிரஷ்ஷுக்கு சென்று, தரையை சுத்தப்படுத்த துவங்கும். பின், ஈரமான தரை, காற்றாடி மூலம் உடனடியாக காய வைக்கப்படும். பிரஷ்ஷின் இதழ்களுக்கு இடையில், இடைவெளி அதிகமாக இருப்பதால், அழுக்குகள் மீண்டும் தரையில் படியாமல், பிரஷ்ஷினுள் தங்கிவிடும். வேலை முடிந்ததும், பிரஷ்ஷை தனியாக எடுத்து சுத்தப்படுத்தலாம். 10 கிலோ எடை கொண்ட இந்த இயந்திரத்தை உருவாக்க, 7,300 ரூபாய் செலவானது.
'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளதால், மனிதர்களோ, வீட்டு உபயோக பொருட்களோ இருந்தால், இயந்திரம் தானாக திரும்பிக் கொள்ளும். டில்லி, ஐ.ஐ.டி., யில், சி.ஐ.ஐ., சார்பில், 650 போட்டியாளர்கள் பங்கு பெற்ற போட்டியில், எங்கள் கண்டுபிடிப்பு, இறுதி சுற்று வரை சென்றது. தற்போது இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளோம்.
தொடர்புக்கு: 99521 99565.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக