செவ்வாய், 15 அக்டோபர், 2013

திருவள்ளூர் அகழ்வைப்பக வளாகத்தில் தொழில் பழங்காலக் காட்சியகம்

திருவள்ளூர் அகழ்வைப்பக வளாகத்தில் தொழில் பழங்கால ப் பூங்கா


திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூண்டிக்கு அருகிலுள்ள கொற்றலையாற்றுப் பள்ளதாக்குப் பகுதியிலும், அதனை அடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.  இதனைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் பூண்டியில் தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தின் பழங்காலத்தை விளக்கும் வகையில் ‘தொல் பழங்கால அகழ்வைப்பகம்’ ஒன்று 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இவ்வகழ்வைப்பகத்தில் `பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலயியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அகழ்வைப்பக வளாகத்தில்  20 லட்சம் ரூபாய் செலவில் “தொழில் பழங்கால பூங்கா” ஒன்றினை அமைக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பூங்காவில்  தொல் பழங்கால வாழ்க்கை முறையினை அறியும் வகையில் பெரிய அளவிலான உருவங்கள், இக்கற்கால பகுதியில் காணப்பட்ட நீல்காய், குதிரை, காட்டு எருமை  ஆகிய விலங்குகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல்,  இவைகளுடன் யானை, டைனோசரஸ், காட்டுப் பூனை, காண்டா மிருகம் ஆகிய விலங்குகள் மற்றும் அழிந்த பறவைகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல், பழங்கால மனிதன் கல் ஆயுதங்களைக் கொண்டு காட்டு எருமையை வேட்டையாடுதல் மற்றும் இழுத்தல், கிழித்தல் போன்றவற்றை பெரிய வடிவங்களாக அமைத்தல், குகை மாதிரி அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக