வியாழன், 17 அக்டோபர், 2013

பரம்பரை மா வகைகளை ப் பாதுகாக்கிறேன்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82849520131017002724.jpg

பாரம்பரிய மா வகைகளை ப் பாதுகாக்கிறேன்!
தமிழகத்தின் பாரம்பரிய மா ரகங்களை பாதுகாப்பதுடன், 'ராஜு-1' என்ற புதிய மா ரகத்தை கண்டுபிடித்த, செகன்னாத இராசா: நான், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவன். கடந்த, 17 ஆண்டுகளாக, 'நர்சரி கார்டன்' நடத்தி வருவதுடன், பாரம்பரிய முறையில் பல வகை மரக்கன்றுகளை, 'ஒட்டு கட்டும்' முறையில், உற்பத்தி செய்து வருகிறேன். இந்தியாவில், 800க்கும் மேற்பட்ட, மா ரகங்கள் இருக்கின்றன. ஒரு மாங்காயின் சராசரி எடையே, 4 கிலோ இருக்கும், வாழைப்பூ ரகம் என்னிடம் உள்ளது. ஆனால், இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்த முடியாது. வர்த்தக ரீதியாக, 20 வகை மா ரகங்களே வளர்க்கப்படுகின்றன. வேரிலிருந்து தண்டு வரை ஒரு செடியிலிருந்தும், தண்டுலிருந்து பூக்கள் பூக்கும் பகுதி, மற்றொரு செடியிலிருந்தும் பெறப்படுவதே, பாரம்பரிய ஒட்டு கட்டும் முறை.ஒட்டு கட்டி உருவாக்கப்பட்ட கன்று களில் காய்க்கும் பழங்களின் தன்மை, மேலிருக்கும் செடியின் ரகத்தை போலவே இருக்கும். இப்படி செய்யும் போது, மகரந்த சேர்க்கை மற்றும் ஒட்டு கட்டியதில் ஏற்பட்ட மாற்றத்தால், புதிய மா ரகம் தோன்றியது. தோட்டக்கலைத் துறை உதவியுடன் இதற்கு, 'ராஜு-1' என, பெயரிட்டுள்ளேன். இப்புதிய மா ரகத்திற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளேன்.இதன் காய், 250 முதல், 300 கிராம் எடை இருப்பதுடன், நீளமாகவும், தோலின் தடிமன் மிகவும் குறைவாகவும் இருக்கும். பழம் பழுத்தாலும், மஞ்சள் நிறத்திற்கு பதில், பச்சை நிறமாகவே இருப்பதால், அழுத்தி பார்த்தே கண்டுபிடிக்க முடியும். மேலும், சதைப்பகுதி கூழ்போல் இருப்பதால், தோலில் சிறிய துளையிட்டு, பழத்தை உறிஞ்சி குடிக்கலாம். இம்மரத்தின் காய்கள், கொத்து கொத்தாகவே காய்க்கும்.அழிந்து போன ரகம் என அறியப்பட்ட, பனங்கருப்பட்டி, மோகன் தாஸ் எனும், 'புளியடி' ரக மாமரமும், என்னிடம் உள்ளது. இப்படி, 100க்கும் மேற்பட்ட அரிய வகை மா மரங்களை, பாரம்பரிய முறையில் ஒட்டு கட்டி பாதுகாக்கிறேன். தொடர்புக்கு: 94420 57077.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக