சனி, 19 அக்டோபர், 2013

பழங்குடியின மக்களின் போராளி!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82983420131019003519.jpg

பழங்குடியின
மக்களின் போராளி!
கூடலுார் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, 30 ஆண்டுகளாக ப் போராடிய, இந்திராணி: நான், திருநெல்வேலியை சேர்ந்தவள். கணவருக்கு, நீலகிரியின் கூடலுார் மலைபகுதிக்கு, ஆசிரியர் பணி மாறுதல் கிடைத்தது. புதுமண தம்பதியாக இங்கு குடியேறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மலைவாழ் மக்களோடு தான் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள பழங்குடி இன மக்கள், வெளியுலகம் தெரியாமல், மூட நம்பிக்கைகளுக்கும், மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தனர். படிப்பறிவு இல்லாததால், பெண்கள், தேயிலை தோட்ட வேலை செய்தும், ஆண்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதுடன், அதையே தொடர்ந்து குடித்தும் வந்தனர். இதனால், கள்ளச்சாராய சாவுகள் அதிகமாயின. பெண்களை ஒன்றிணைத்து, கள்ளச்சாராய கடைகளை மூடச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். பயனில்லாததால், போலீஸ் துணையுடன் சாராய கடைகளை இழுத்து மூடியதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுத்தேன். கூடலுார், கேரள மாநிலம் அருகில் இருந்ததால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர், இவர்களின் படிப்பறிவின்மையை தவறாக பயன்படுத்தி, குறைந்த பணத்திற்கு அதிக நிலங்களை குத்தகை எடுத்தனர். மேலும், குறைந்த ஊதியத்தில் இவர்களையே தேயிலை தோட்ட வேலை பார்க்க வைத்தனர்.
பல கட்ட போராட்டங்களுக்கு பின், அரசு உதவியுடன் நிலங்களை மீட்டோம். சின்ன சின்ன பிரச்னைக்கும், தற்கொலை செய்யும் பழக்கம், இப்பழங்குடி இனத்தவரிடம் இருந்தது. நான் கற்ற கல்வியை வைத்து, ஏன் இந்த மக்களுக்காக, பல வகைகளில் உதவக் கூடாது என, எண்ணினேன். எனவே, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திடவும், தமிழில் வாசிக்கவும் கற்றுத் தந்தேன். படிப்பின் முக்கியத்துவம் பெரியவர்களுக்கு புரிந்ததால், பெண் குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி, படிக்க வைத்தனர்.
பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற, 2000ம் ஆண்டு, பெண்கள் சுயஉதவிக்குழு ஆரம்பித்தேன். இதனால், பெண்கள் வங்கி கடன் பெற்று, சுய தொழில் செய்து
வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக