அரசு வேலை பெற மலையாளம் அவசியம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த
அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி,
10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு
சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு
வேலையில் சேர தகுதி படைத்தவர்களாவர். அதே நேரத்தில், தமிழ் மற்றும் கன்னடம்
மொழி படித்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் பின்பற்ற வேண்டிய முடிவு.
பதிலளிநீக்கு