விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த
புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்
சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி பொறியியல் மாணவரின் உடல்
உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த
புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு
இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு,
வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக்
கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை
அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும்
முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள்
தெரிவித்தனர்.
இதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், ""இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக