ஞாயிறு, 13 அக்டோபர், 2013

யானைகளுடன் பேசும் 'வனமங்கைச்' சிறுமி


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825395.jpg

யானைகளுடன் பேசும் 'டார்சான்' பெண்


ஜார்க்கண்ட் மாநில, மலைப்பிரதேசமான சிங்கர்ஜோர் கர்வாடோலி என்ற மலை கிராமத்தில் வசிப்பவர் நிர்மலா, 16. இவர் காட்டு யானைகளுடன், மலைவாழ் பழங்குடியினரின் மொழியான முண்டாரி மொழியில், பேசுவதைக் கேட்கும் யானைகள் பதிலுக்கு பிளிறுகின்றன. இவரது கட்டளையைக் கேட்கும், காட்டு யானைகள், திரும்பி காட்டுக்குள் சென்று விடுகின்றன. இதனால், நிர்மலாவை, 'டார்ஜான் கேர்ள்' என, உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். காட்டு யானைகளுடன் பேசி, அவற்றைத் திருப்பி அனுப்பும், நிர்மலா குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், குடியிருப்புகளில் புகும் காட்டு யானைகளை விரட்டும் பணியை, அவரிடம் ஒப்படைத்துள்ளனர். 'சிறுவயதில், எங்கள் குடும்பம் வசித்த பகுதியில், காட்டு யானைகள் தாக்கின. அதனால், ஏற்பட்ட பெரும் சேதத்தையும், ஒருவர் உயிரிழந்ததையும் நேரில் கண்ட நிர்மலா, யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பொருளாதார வசதியில்லாததால், அவரை படிக்கவைக்க முடியவில்லை' என, நிர்மலாவின் தாயார் சலோனி டோப்போ கூறியுள்ளார்.

கடந்த மாதம், ரூர்கேலாவில் உள்ள பிர்சா மைதானத்திற்கு அருகே, காட்டு யானைக் கூட்டம் முற்றுகையிட்ட தகவலை, இரவு 11:00 மணிக்கு, வனத்துறையினர் நிர்மலாவுக்குத் தெரிவித்தனர். உடனே, நிர்மலா தைரியத்துடன் சென்று, காட்டு யானைகளுடன் பேசி, அங்கிருந்து காட்டுக்குள் வெற்றிகரமாக விரட்டினார். ஆனால், சில யானைகள் விரட்டியதில், நிர்மலாவின் காலில் காயம் ஏற்பட்டது. ரூர்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்மலா, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். இவரது மருத்துவச் செலவு முழுவதையும், வனத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக