பொதுநலமாநாட்டில் பங்கேற்பா? கருணாநிதிக்கு மன்மோகன் மடல்
சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை
எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
""இலங்கையில்,
அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர்,
தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது
தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர்
மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன்
சிங், தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுவது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய நல்ல முடிவை எடுப்போம், தியாகுவின் உண்ணாவிரத்தை கைவிட, அவரை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக