முன்பு அடிமையாக இருந்ததை யாரும் பெருமை பேச மாட்டார்கள். ஆனால், முன்னாள் அடிமையர் அமைப்புதான் பொதுநல ஆயம். இப்படி ஓர் அமைப்பு செயல்படும் பொழுது அதன் தலைமைப் பொறுப்பு இனப் படுகொலை நாட்டின் தலைமையிடம் இருக்கக்கூடாது என்பதே இயற்கை அறம்.இனப்படுகொலையாளியே தலைமை தாங்கினால் அதன் உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக - மனித நேயத்திற்கு எதிராக-ச் செயல்படும் நிலையே வரும். எனவே, இம் மாநாடு சிங்கள மண்ணில் நடக்கக்கூடாது என்பது முற்றிலும் சரியே. ஈழத்தில் பேசப்படும் பேச்சு அச்சத்தினாலும் , அரசால் தெரிவிக்ப்படும் முறையாலும் வெளி வருவனவே. எனவே இவற்றின் அடிப்படையில் பொல்லாக் கருத்தை வெளிப்படுத்துவது திட்டமிட்ட சதியேயாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Visit : http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_5814.html
பதிலளிநீக்குபார்த்தேன். நன்றி.
நீக்கு