சொல்கிறார்கள்
"இரசனையிருந்தால் மரப் பிசினும் மூலப்பொருள் தான்!'
மரப் பிசின் மூலம், பேஷன் நகைகள் செய்யும்
ஜீனத்: குடும்ப சூழ்நிலை காரணமாக, என்னால், சரியாக படிக்க முடியாமல் போய்
விட்டது. மரப் பிசினில் நகைகள் செய்வது, எங்கள் குடும்பத் தொழில் என்பதால்,
அதை கற்றுக் கொண்டேன்.பீகார் காடுகளில், ஒருவகை மரம் உள்ளது. அந்த
மரத்தில் வடியும், கறுப்பு நிற பிசின் தான், என் தயாரிப்புகளுக்கான மூலப்
பொருள்.
அந்தப் பிசினை சூடாக்கும் போது, உருகி ஓடாதபடி, பதமாகவும், நெகிழ்வாகவும் காய்ச்ச
வேண்டும். அடுத்து, நாம் விரும்பும் நிறம் சேர்த்து விதவிதமான வடிவங்களில், வளையல், கம்மல், நெக்லஸ் என, பேன்சி நகைகள், கைவினைப் பொருட்கள் என்று, எது
வேண்டுமானாலும், செய்யலாம்.ஏறக்குறைய, களிமண்ணில் சொப்புச் சாமான்கள் செய்வது போலத் தான் இது. சூடு குறையாமல், வேக வேகமாக, அதே நேரம் ரசனையுடன், செய்ய வேண்டும். அப்போது தான் பொருட்கள் அழகாக வரும்.ஏழு ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். கணவர் கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்துக் கொள்ள, நான் நகை தயாரிப்பில் ஈடுபடுவேன்.வாடிக்கையாளர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதிரிகளை காட்டி விட்டு, அவர்கள் அணிந்திருக்கும் உடையின், டிசைனிற்கு ஏற்ப நகை செய்து கொடுத்து விடுவேன்.
தக்கை போல், எடைக் குறைவாக இருப்பதால், அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.
என்னுடைய இந்த தயாரிப்புகள், நம்ம ஊர் மக்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும், நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.மரப்பிசின் மூலம், தயாரிக்கப்படும் நகைகளை பராமரிப்பதும் மிகவும் எளிதானது தான். அழுக்குப் படிந்தால், கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். கீழே விழுந்தால் உடைந்து விடும் என்பதால், கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக