புதன், 24 அக்டோபர், 2012

தாய் இழந்த குழந்தையை ச் சுமந்த தந்தை; மிதிஇழுவை த் தொழிலாளி துயரத்தில் அரசு பங்கு

தாய் இழந்த குழந்தையை ச் சுமந்த தந்தை;  ிிஇழவை த் தொழிலாளி துயரத்தில் அரசு பங்கு 

ஜெய்ப்பூர்: பிறந்த போதே தாயை இழந்த பச்சிளம் குழந்தையை தானே சுமந்து பராமரித்து வந்த ரிக்ஷா தொழிலாளியின் துயரத்தை கண்டு மனம் இரங்கிய மாநில அரசு அவரது குழந்தையின் நலத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பராமரிக்கும் முழுச்செலவையும் அரசு ஏற்றுக்கொண்டது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் ரிக்ஷா தொழிலாளி பாபு. இவரது மனைவிகக்கு கடந்த செப் மாதத்தில் ஒரு குழந்தை பிறந்தது. பருவம் முழுமை அடைவதற்கு முன்னதாக குழந்தை பிறந்ததுடன் பிரசவ நேரத்தில் தாய் உயிரும் பிரிந்தது. இதனால் சோகமுற்ற பாபு தனது செல்லக்குழந்தையை எந்த நேரமும் தன்னை பிரியாமல் பார்த்துக்கொள்ள முடிவு செய்தார். காரணம் இந்தக்குழந்தை மிக பலவீனமாக இருந்தது. இதனால் குழந்தைக்கு கயிறு மற்றும் துணி மூலம் ஒரு தொட்டில் அமைத்தார். இதனை தனது கழுத்தில் தொங்க விட்டபடி ரிக்சா ஓட்ட கிளம்பிவிடுவார். சவாரியை ஏற்றிக்கொண்டு ஒரு கையினால் குழந்தையை தாங்கி கொண்டும் , ஒரு கையினால் சைக்கிளை ஓட்டியும் வந்தார்.

மிக அனிமிக்காக குழந்தை :


இந்த துயரக்காட்சியை கண்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு பல வழிகளில் உதவி வந்தனர். இந்த நேரத்தில் குழந்தையின் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டதும், அருகில் உள்ள மிக குழந்தைகள் நல டாக்டர் அவரது நிலை குறித்து மாவட்ட கலெக்டருக்கு உதவிக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து மீடியாக்கள் படம் பிடித்து காட்டின. தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரகாஷ் சுக்லா அந்த குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டார். இதன்படி குழந்தை ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில் ; குழந்யை முறையாக பராமரிக்காததால் மிக அனிமிக்காக இருக்கிறது. உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வென்டிலேட்டரில் வைத்துள்ளோம். தொடர்ந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்றனர்.

ரோட்டில் தண்ணீர் இருக்கும் இடத்தில்:

தாயை இழந்த குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாததால் நானே புட்டிப்பாலுடன் ரிக்சா ஓட்ட கிளம்பி விடுவேன். கழுத்தில் தொங்க விட்டபடி செல்லும் போது குழந்தை சிறுநீர், மற்றும் மலம் போய் விடும் . ரோட்டில் தண்ணீர் இருக்கும் இடத்தில் கழுவி விடுவேன். பால் கொடுப்பதும், கவனித்து கொள்வதும் மிக சிரமமாக இருந்தாலும் , எனது புள்ளைக்கு யார் செய்வார் என்று கண்ணீருடன் கலங்கினார் ரிக்சா தொழிலாளி பாபு.

தற்போது இந்த குழந்தையின் முழுச்செலவையும் ஏற்றுள்ள அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக