சனி, 27 அக்டோபர், 2012

மரபார்ந்த கலைப் பொருட்களை வாங்குவோம்!'

சொல்கிறார்கள்
"பாரம்பரிய கலைப் பொருட்களை வாங்குவோம்!'

கலை நயமிக்க பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ்ப்ரியா: சிறு வயது முதலே, கலை மற்றும் பாரம்பரியமான பொருட்கள் மேல், எனக்கு நிறைய ஈர்ப்பு.பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கலை நயமிக்க பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தேன். கல்லூரிப் படிப்பு, திருமணம், குழந்தைகள் என, அடுத்தடுத்த நிலைக்கு சென்றாலும், இந்த குணம் என்னை விட்டு அகலவில்லை.இந்த ரசனையை வியாபாரமாக்கும் எண்ணம், அப்போது என்னிடம் இல்லை. என் அப்பாவுடன், முதல் முறை டில்லி சென்ற போது, அங்குள்ள சுற்றுலாத் துறையின் கைவினைப் பொருள் மையத்தைப் பார்த்து, பிரமித்தேன்.

அப்போது தான் எனக்கு, பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஊர் திரும்பியதும், சில மாதங்கள், பிசினஸ் செய்வது பற்றி யோசித்தேன்.விற்பனைக்கு வாங்கப்படும் ஒவ்வொரு பொருளும், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருந்தேன்.இந்தியா முழுவதும் சென்று, கலைநயமிக்க பொருட்களை, அதை தயாரிப்பவர்களிடம் இருந்தே, வாங்கி வந்தேன்.

நான் சேகரித்த பொருட்களை எல்லாம் வைத்து, அத்திப்பூ என்ற அங்காடியை துவக்கினேன். நான் சேகரித்த பொருட்களை வாடிக்கையாளர்கள், பாராட்டி வாங்கும் போது, நான் பட்ட கஷ்டமெல்லாம் காணாமல் போய்விடும்.தமிழகத்தைப் பொறுத்த வரை, தெற்குப் பக்கம் பனை ஓலையில் செய்யப்படும் சின்னக் கூடைகள், கிலுகிலுப்பைகள் கிடைக்கும். ஆனால், இந்தத் தொழில் அழிந்து கொண்டு வருவது பெரிய வருத்தம்.ஒரிஜினல் தஞ்சை தலையாட்டி பொம்மைகளும், இப்போது கிடைப்பதில்லை. இந்தத் தொழிலில் நிரந்தர வருமானமோ, வளர்ச்சியோ இல்லாததால், கூலி வேலை, ஆட்டோ ஓட்டுவது என, வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அழிந்து வரும், கலைப் பொருட்களை காப்பாற்றவாவது, மக்கள் அதை வாங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக