தில்லி மருத்துவமனையில் 5 வருடங்களில் 10 ஆயிரம் குழந்தைகள் இறப்பு
First Published : 21 October 2012 05:59 PM IST
தில்லியில் உள்ள கலாவதி சரண் அரசு மருத்துவமனையில்
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரம் குழந்தைகள் பலியானதாக தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, இந்த
மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக தேசிய மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய மனித உரிமை கவுசில் மூலம் இது குறித்த புகார் எழுப்பப் பட்டுள்ளது
என்றும், நாளை திங்கள் கிழமை இது குறித்து ஆணையம் நிச்சயம் நடவடிக்கை
எடுக்க கேட்டுக் கொள்ளும் என்றும் அதன் இணை பதிவாளர் ஏ.கே.பராஷர்
கூறியுள்ளார். தில்லியைச் சேர்ந்த ராஜன்ஸ் பன்சால் என்பவர் தகவல் உரிமைச்
சட்டம் மூலம் கேட்ட கேள்வியின் மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவமனை அளித்த தகவலில் கந்த 5 வருடங்களில் 10,081 குழந்தைகள் இந்த
மருத்துவமனையில் இறந்து போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
இறப்புக்கான காரணத்தை அந்த நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக