செவ்வாய், 23 அக்டோபர், 2012

மூளை ,காச, நோயாளிகளுக்குப் புதிய பண்டுவம்: நவீன முறையில் சில்லாங் மருத்துவர்கள்அறுவை

மூளை டி.பி., நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை:நவீன முறையில் ஷில்லாங் டாக்டர்கள் ஆபரேஷன்
மூளையில் ஏற்பட்ட டி.பி., நோயால், அதில் உற்பத்தியாகும் திரவங்கள், உடலின் பிற பாகங்களுக்கு செல்லாமல் தடுக்கப்படும் ஆபத்தை, ஷில்லாங் மருத்துவமனை டாக்டர்கள், புதுமையான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துள்ளனர்.மூளையில், டி.பி., நோய் ஏற்படுவதன் மூலம், "ஹைட்ரோசெபலஸ்' என்ற, உயிருக்கு மிகவும் ஆபத்தான பாதிப்பு
ஏற்படுகிறது. மூளையில் சுரக்கும் திரவங்கள், உடலின் பிற பாகங்களுக்குச் செல்லாமல் தடுக்கப்படுவதால், உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது.

இதைத் தவிர்க்க, மூளையிலிருந்து தனியே, குழாய் மூலம் திரவங்கள், "பெரிடோனியம்' என்ற, அடிவயிற்று பகுதிக்கு கொண்டு வரும், அறுவைசிகிச்சையை, 1956ல், டாக்டர் யார்சாகாரே என்பவர் மேற்கொண்டார். அதில், சில குறைபாடுகள் இருந்ததால், அதை யாரும் பரவலாகப் பயன்படுத்தவில்லை. டி.பி., நோயால், பெரிடோனியமும் பாதிக்கப்படும் சூழ்நிலையில், இந்தச் சிகிச்சையை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஷில்லாங், தனியார் மருத்துவமனையில் பணியாற்றும், மூளை நரம்பியல் வல்லுனர், டாக்டர் பெர்னார்ட் டிரெஞ்ச் லிங்டோ, 41, மற்றும், வயிற்றுக் கோளாறுகளுக்கான, அறுவை சிகிச்சை வல்லுனர், டாக்டர் முகமது ஷாம்சுல் இஸ்லாம், 58, யார்சாகாரே முறையில், சிறிய மாற்றத்தை மேற்கொண்டனர்.

மூளையிலிருந்து நேரடியாக, தனி குழாயை, அடிவயிற்றுக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அந்தத் திரவத்தை, தலையிலிருந்து, இருதயத்திற்குச் செல்லும், ஆக்சிஜன் அல்லாத ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்பில் சேர்த்தனர். இதற்காக, அறுவை சிகிச்சை செய்தனர். மேலும், நுரையீரல் மற்றும் நுரையீரல் சுற்றுச்சுவரின் இடைப்பட்ட இடத்திலும், சிறுநீரகக் குழாயிலும் சேர்த்து விட்டனர்.இறுதியில், இந்தக் குழாய், பித்தப்பையில் முடிவடையும் வகையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறையில், 11 மற்றும் எட்டு வயது, சிறுமிகள் இருவருக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 20011ல், அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது; இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.இந்த வெற்றிகர அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர்களின் பெயரில், அந்த அறுவை சிகிச்சைக்கு, "வி.சி.ஷன்ட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முறையை, ஐரோப்பிய நாடுகளின், மூளை நரம்பியல் இதழான, "அக்டா நியூரோசிரர்ஜிகா' அங்கீகரித்து, இதழில் வெளியிட்டுள்ளது

.-நமது கவுகாத்தி செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக