ஐ.நா.சபையில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
மாலை மலர் Chennai
புதன்கிழமை,
அக்டோபர் 24,
3:21 PM IST
சென்னை, அக் 24-
திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வருகிற நவம்பர் 1-ந்தேதி பூகோளகால மீளாய்வுக் கூட்டம் தொடங்குகிறது. இதில் இலங்கை அரசு சமர்ப்பித்த அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக்குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
இதனால் இலங்கை நெருக்கடிகளை எதிர் நோக்கி உள்ளது. வருகிற 5-ந்தேதி தீர்மானத்தின் போது வாக்கெடுப்பு நடக்கிறது. மற்ற நாடுகள் கேள்விகள் வாயிலாக மனித நேயம், மனித உரிமை காப்பு உணர்வு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற் கொள்ளும் போது ஈழத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டை உள்ளடக்கி ஆளும் மத்திய அரசு இத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
இதற்காக நாம் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் எடுத்துக் கூறி தீர்மானத்தை எதிர்க்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக