இராசபட்சேவை மட்டுமில்லாமல் இனப் படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வலியுறுத்தும் இவ்வேண்டுகோளைத் தனிப்பட்ட சீமானின்அறிக்கையாகக் கருதக் கூடாது.உலக மனித நேயர்களின் கட்டளையாகக் கருத வேண்டும். பேரினப் படுகொலையாளிகள் தண்டிக்கப்படும் நாளே உலகில் மனித நேயம் மிக்க மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் நாளாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 23 Jan 2011 07:53:52 PM IST
சென்னை, ஜன.23- இலங்கை அதிபர் ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகின் எந்த நாட்டிலும் நடமாட முடியாதபடி இலங்கை அதிபர் ராஜபட்சவை விரட்டி அடிக்கும் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. பல நாடுகளிடமிருந்தும் ஆயுதம் வாங்கி, ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்தவர் ராஜபட்ச. இன்று அவரால் எந்த நாட்டுக்கும் போகமுடியாத நிலை. லண்டனிலிருந்து அமெரிக்கா வரை, ராஜபட்சவை ஒரு விரும்பத்தகாத விருந்தாளியாகக் கருதும் அளவுக்கு ஒன்றரை ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு வலுவான போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்திருக்கும் புலம்பெயர் சொந்தங்கள் ஒவ்வொருவரையும் வரலாறு வாழ்த்தும்.லண்டனில், கொட்டுகிற பனியில் நனைந்தபடி ராஜபட்சவை விரட்ட ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், உலகெங்குமுள்ள தமிழ்ச் சொந்தங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். ஒன்று சேர்ந்து உறுதியுடன் நின்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததோடு, 'ராஜபட்சே ஒரு நாட்டின் அதிபரல்ல, ஓர் இனத்தைப் படுகொலை செய்த கொலைவெறியன்' என்பதை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியும் உள்ளார்கள்.ராஜபட்சேவை மட்டுமில்லாமல் இனப் படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்காது. இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By சேகர்
1/23/2011 9:36:00 PM
1/23/2011 9:36:00 PM


By V Gopalan
1/23/2011 8:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *1/23/2011 8:41:00 PM